விமானத்தில் பயணிக்கும் போது மொபைல்களை பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும் என புதிய ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளார்கள்.
மொபைல்களில் உள்ள மைக்ரோ அலைகள் விமானத்தில் உள்ள மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை பழுதடைய செய்வதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்த விமான விபத்துகளை ஆராய்ந்ததில் 75 விமான விபத்துக்கள் மொபைல்களால் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது யாரேனும் மொபைலில் பேசினால் விமானத்தில் முக்கிய சாதனங்கள் அனைத்தும் மின்னணுவால் இயங்குபவை என்பதால் அவை பெரும் பாதிப்பு ஏற்படும்.இதனால் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு முதலில் துண்டிக்கப்படும் எனவும் இதனால் தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் ஐபாட், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல்கள் போன்று சில உயர் ரக போன்கள் பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியன. இவை போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்களில் உள்ள விமான ஓட்டிகள் அமரும் கேபின் பகுதிகளில் ஜி.பி.எஸ்.கருவி உள்ளதால் முதலில் அவைகளைத்தான் தாக்கும்.
இவை ஓடுதளத்திலிருந்து உயர பறப்பதற்கு முன்பே தனது சிக்கனல்களை துண்டித்துவிடும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே விமானத்தில் பயணிப்போர் முதலில் தங்கள் மொபைல்களை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். இதனால் விமானத்தில் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்படுவது குறையும். விபத்துகளும் குறையும்.
இன்றைய மற்றொரு பதிவு:
இன்றைய மற்றொரு பதிவு:
16 கருத்துரைகள்:
இதுல மனோ எங்கிருந்து வந்தார்?
அந்த ஆள கொஞ்சம் நிம்மதியா ஊருக்கு வந்து சேர விடுங்கய்யா ......
இவை ஓடுதளத்திலிருந்து உயர பறப்பதற்கு முன்பே தனது சிக்கனல்களை துண்டித்துவிடும்//
Useful post.
Rocket la vararam mano
மனோ செல்லை சுவிட்ச் ஆஃப் செய்யாமல் பேசிக்கிட்டே வந்தாரோ ப்ரகாஷ்.:)
நீ இன்னும் மனோவை விடலையா...
ஹிஹி மனோ இல்லாட்டி இவனுகள் போட்டு தாக்குறாங்க...மக்கா அருவா அருவாளோட தான் வருவார் பாருங்க!
விமானத் தொடர்பாடலுக்கு மொபைல் போன் கதிர் வீச்சினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய குறிப்பினைப் பகிர்ந்திருக்கிறீங்க, நன்றி சகோ.
மனோ பத்திரமா வந்து சேர்ந்து,ஃபோன்ல பேசிட்டாருங்கோ!
மிகவும் பயனுள்ள பதிவு.
அனைவரும் இதை உணர வேண்டும்.
இது சில மரமண்யைகளுக்கும் அதிமேதாவிகளுக்கும் விளங்க மாட்டேங்குதுங்க...... எவ்வலவு சொன்னாலும் அலைபேசியை பயன்படுதி மற்றவருக்கு பீதிய கிளப்புரானுவோ.
பகிர்வுக்கு நன்றிங்க.
டைட்டில்ல மனோவை இழுத்தது நல்ல மார்க்கெட்டிங்க் உத்தி
இந்த விஷயத்தை எல்லாருமே
கவனத்தில் கொள் வது நல்லது.
இதெல்லாம் ரொம்ப பழைய மேட்டராச்சே? ஃப்ளைட்டில் மொபைல் பயன்படுத்தக் கூடாதுன்னு 6-7 வருசத்துக்கு முன்னாடில இருந்து பாத்துட்டு இருக்கேன் (ஒரு வேள அதுக்கு முன்னாடியும் இருந்திருக்கலாம்). இருந்தாலும் இது நிறைய பேருக்கு புரியல....... சும்மா மொபைல போட்டு குடைஞ்சுக்கிட்டு இருப்பானுங்க....... பகிர்வுக்கு நன்றி!
மனோவுக்கு மொதல்ல மொபைல எப்படி ஆஃப் பண்ணனும்னு சொல்லிக் கொடுங்கய்யா...... பாவம், ஏற்கனவே லேப்டாப் வேற ஷட் டவுன் பண்ணாம கெடக்கு......!
அன்பின் பிரகாஷ்
இன்று ஒரு தகவல் என்று ஏதேனும் ஒரு சேவை ஆரம்பிக்க்லாமே ! தென் கச்சி சுவாமி நாதன் ஸ்டைலில் - பல் அரிய பயனுள்ள தகவல்கள் அவ்வப்ப்போது இடுகைகளாக எழுதுகிறாயே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா