அட்ரா சக்க சி.பி பேட்டியின் இரண்டாம் பாகம் இது. இந்த பாகத்தில் வலையுலக நண்பர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சி.பி யின் பதில்களும் தொகுக்கப்பட்டுள்ளது. என்னன்ன கேள்விகள் கேட்டிருக்காங்கன்னு பார்போமா?
கவிதை வீதி சௌந்தர்:
1.வலைப்பூவில் தாங்கள் அடைய விரும்பும் எல்லை எது?
அப்படி எந்த விதமான துரத்தல்களும் எனக்கு இல்லை.. வலை உலகைப் பொறுத்தவரை ஜாக்கிசேகரும், கேபிள் சங்கரும் கமல் ரஜினி போல களத்தில் இருக்கிறார்கள்.. இருவருக்கும் 4 வருடங்களூக்கும் அதிகமான அனுபவம்.. 3 வது இடத்தில் உண்மைத்தமிழன் உள்ளார்.. தமிழ்மண ரேங்க்கை வைத்து சிலர் நான் தான் நெம்பர் ஒன் என தவறாக நினைக்கிறார்கள்.. நான் நெம்பர் 4 தான்.. போதும்.. இதே நிலைமை..
2. காபி டூ பேஸ்ட் பதிவர் என்பதில் தங்களுக்கு ஏதாவது சங்கடம் உண்டா?
ஹா ஹா ஹா உண்மையை, ஆமா உண்மைன்னு ஒத்துக்க எதுக்கு சங்கடம்?
3. தங்களை அதிகம் கலாய்க்கும் மனோவை என்ன செய்யலாம்?
கலாய்ப்பதால் தான் அவர் நெருங்கிய நண்பர்.. ஆமாம் சாமி ஜால்ரா அடிச்சா 10 ஓடு 11..
4. பதிவுலகில் ஏதவாது ஒரு பிளாக்கில் பதிவிடச் சொன்னால் யாருடைய பிளாக்கை தேர்ந்தெடுப்பீர்?
என்னால் யாருக்கும் கெட்ட பெயர் வர வேணாம்னு நானே இன்னொரு பிளாக் ஓப்பன் பண்ணி அதுல பதிவு போடுவேன்.. ஹி ஹி
5. குடும்பம்-பதிவுலகம்-அலுவலகம்-சென்னிமலை-உறவினர்-பள்ளி நண்பர்கள்-பிள்ளைகள்-சினிமா-விளையாட்டு: இவைகளை வரிசைப்படுத்துங்கள்...
1. அலுவலகம்
2. பதிவுலகம்
3. குடும்பம்
4. சினிமா
5. சென்னிமலை
6. பிள்ளைகள்
7. பள்ளி நண்பர்கள்
8. உறவினர்
9. விளையாட்டு
உணவுலகம் - சங்கரலிங்கம்:
அய்யா சின்ன பிள்ள, ஆப்பரேசன் முடிஞ்சு இத்தனை நாள் ஆச்சே, இன்னும் ஏன் கறுப்பு கண்ணாடியைக் கழட்டல?
அண்ணே. கண்ணாடியை கழட்டிட்டா கூட்டத்துல யாரைப் பார்க்கறோம், எங்கே பார்க்கறோம்னு கரெக்ட்டா தெரிஞ்சிடுது ஹி ஹி - சின்ன வயசுப்புள்ள.
செங்கோவி:
1. போஸ்டரை வைத்தே பிட்டுப் படத்தில் சீன் உண்டா, இல்லையா என்று கண்டுபிடிக்க முடியுமா? அல்லது அதற்கு வேறு ஏதேனும் நல்ல வழிகள் உள்ளனவா?
அது ரொம்ப சிரமம்னே, ஆனா ஒண்ணு செய்யலாம், தியேட்டர் பைக் பாஸ் போடறவன் கிட்டே கேட்டா தெரிஞ்சுடும், அல்லது படம் விட்டு வெளில வர்ற ரசிகர்கள் கிட்டே ரிசல்ட் கேட்டா தெரிஞ்சிடும். உங்களூக்குத் தெரியாததில்லை.
2. ஷகீலா படப் போஸ்டரை மாடுகள் தின்பதனால் சமூகத்திற்கு விளையும் நன்மை-தீமைகள் என்ன?
சாரி.. அண்ணே. நாங்க எப்பாவோ ஹன்சிகா மோத்வானி ரசிகர் ஆகிட்டோம். யூத்துய்யா .. நீங்க இன்னும் ஷ்கீலா ஆண்ட்டியையே கட்டிட்டு அழுதா..?
3. விகடனை மட்டும் பதிவிடும் நீங்கள், உங்களது படைப்புகளாக விருந்து/மருதம்/பாக்யாவில் வெளிவந்தவற்றை பதிவிட மறுப்பது ஏன்?
விகடன்ல தான் ஆன்லைன் ல மேட்டர் வருது. டைப் பண்ற வேலை இல்லை. மற்ற புக் மேட்டர்னா டைப் பண்ணனும்.. - பை நோகாம நோம்பி கும்பிடும் தமிழன்.
4. அருமையாக அரசியல் பதிவுகள் எழுதும் ஆற்றல் இருந்தும் பதிவுலக பாக்கியராஜாக மட்டுமே இருக்க நீங்கள் ஆசைப்படுவது ஏன்?
முருங்கைக்காய் சாம்பார் வாரம் ஒரு தடவை சாப்பிடுவேன்கறதுக்காக ஏன் அண்ணே அவர் பேரை கெடுக்கறீங்க? அரசியல் பதிவு எழுத தான் 1000 பேர் இருக்காங்களே.. என் நோக்கம் சிரிக்க வைப்பது சிந்திக்க வைப்பது அல்ல. ஹி ஹி.
வம்பை வெலைக்கு வாங்குவோம்ல - நா. மணிவண்ணன்
1 . செருப்படி அல்லது வெளக்கமாத்து பூசை வாங்கிய அனுபவம் பற்றி விளக்குக ?( இல்லை அப்படியெல்லாம் இதுவரைக்கும் நடந்ததில்லை என்று பூசி மொளுகினால் அது போன்ற சம்பவம் பல முறை நடந்ததாகவே எடுத்து கொள்ளப்படும் )
யோவ் மணி, உனக்கு ரொம்ப லொள்ளுய்யா.. நெல்லைல கூட பார்த்தே இல்லை.. 37 பேர் கும்முனாங்க.. யாராவது செருப்பால அடிச்சாங்களா? டீசண்ட்டா இருக்கறவன் டீசண்ட்டாத்தான் உதை வாங்குவான். ஹி ஹி
2 . முதலிரவில் முதலில் என்ன செய்ய வேண்டும் ?( விளக்கை அணைக்க வேண்டுமென்று சினிமா முதலிரவில் காட்சியில் காட்டுவதை கூறக்கூடாது )
முதல்ல கொஞ்ச நேரம் பேசனும். வேற எதுவும் "செய்யக் கூடாது"
M. காதர்அலி:
1.அண்ணே, நீங்க ஏன்? உயிர் வாழ்றிங்க?
இயற்கை படைப்பினில் நான் ஒரு மனிதனாகப் பிறந்ததால்.. வாழும் வரை இந்த சமூகத்திற்கு என்னால் ஏதாவது பயன் தர முடியும் என்ற நம்பிக்கையால்..
2 .கில்மா விமர்சனம் எழுத ஷகிலா அக்காட்ட எவ்வளவு வாங்குவிங்க?
சாரி. 19 வயசு தாண்டுனா அந்த ஃபிகர் அத்தை மகளே ஆனாலும் நான் கண்டுக்கறதில்லை.. அதுக்காக எனக்கு என்ன வயசுன்னு கேட்கக்கூடாது,, விதி விலக்குகள் எனக்கு மட்டும் ஹி ஹி
3 .ஒரு வாரத்துக்கு எத்தனை copy -paste பண்ணுவீங்க?
சனி, ஞாயிறு தலா 3 வீதம் 6 போஸ்ட் , அது போக சூடான அரசியல் நியூஸ் வாரம் 1 அல்லது 2 ..
கவி அழகன்:
எனது கேள்வி என்ன்னவென்றால் சி.பி தனியே வலை தளம் எழுதுகிறாரா அல்லது அவரது குடும்ம்பமே எழுதுகின்றதா ( ஆன்மிகம் சமையல் எண்டேல்லாம் படைப்புகள் வரும் போது இவரது பாட்டி மனைவி எல்லாரும் வலைபதிவில் எழுதுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது )
ஹா ஹா .. ஹா நான் என்ன கலைஞரா? குடும்ப அரசியலோ, குடும்ப பதிவோ நடத்த? ஒன் மேன் ஆர்மி தான், ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான மேட்டர்ஸை ஒரு தேனி போல சேகரித்து கொடுக்கும் கமர்ஷியல் கலைஞன்.
நேசன்:
1. அதிகமாகவும் அசத்தலாகவும் பதிவு போடுவது உங்களின் தனித்தன்மை எப்படி உங்களால் பதிவு எழுதும் போது இப்படித்தான் வார்த்தைகளை கையாளனும் என்று தீர்மானிக்கிறீர்கள்?
ஹா ஹா வார்த்தைகளை நான் கையாளுவதில்லை.. அவை தான் என்னை கையாளுகிரது.. ஒரு சினிமா பார்க்கும்போதே என்னால் முழுமையாக படத்தை ரசிக்க முடிவதில்லை.. படம் திரையில் ஓடும்போதே விமர்சனம் என் மனத்திரையில் ஓடுகிறது எல்லாம் பயிற்சி தான் காரணம்..
2. என் போன்றவர்களின் (புதியவர்களின்) பதிவுகளை எப்படி முயன்றும் ஒரு குறிப்பிட்ட நண்பர்களைத் தாண்டி பலரிடம் சேர்க்க முடியாமல் இருக்கிறது இதனை எவ்வாறு தீர்க்கலாம்?
நல்ல படைப்புகள் கண்டிப்பாக அனைவரையும் சென்றடையும்.. காலம் தீர்மானிக்கும். ஆனால் குறுக்கு வழி ஒன்று உள்ளது.. நீங்கள் 50 பேர் பிளாக் போய் கமெண்ட், ஓட்டு போட்டால் பாதிப்பேராவது வருவாங்க, உங்க பதிவு ஹிட் ஆகிடும்.. ஆனால் இது நிலைக்காது.
"கற்றது தமிழ்" துஷ்யந்தன்-பிரான்ஸ் :
உங்களுக்கு பிடித்த மிக சிறப்பாக எழுதுகிறார் என்று நினைக்கும் சக பதிவர் யார் ???
கேள்வி கஷ்டம் தான், ஆனா பதில் ஈசி. இலங்கை அலப்பரை மன்னன் நிரூபன்.
சேட்டைக்காரன்:
எல்லாருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். உங்களுக்கு எவ்வளவு மணி நேரம்?
சேட்டை அண்னே.. எனக்கு உறவினர்களுடன், நண்பர்களுடன் டைம் செலவழிக்கும் பழக்கம் கிடையாது.. ஆஃபீஸ் டைம் 10 மணி நேரம், தூங்கும் டைம் 7 மணி நேரம் போக மீதி 7 மணி நேரத்தில் 5 மணி நேரம் படைப்புக்கள் படைப்பதில் செலவிடுகிறேன்.. சினிமாவுக்கு போனால் கூட முழுசாக படம் பார்ப்பதில்லை.. படத்தில் மொக்கை சீன் ஓடும்போது.. எஸ் எம் எஸ் இல் ஜோக்குகள் டைப் பண்ணி டிராஃப்ட்டில் ஸ்டோர் பண்ணி வைப்பேன்.. எல்லாம் உங்களைப் போன்ற உழைப்பாளிகளீன் அட்வைஸ் படி..
தொடரும்...
75 கருத்துரைகள்:
சென்னிமலை வடை எனக்கே.
கேள்வி எங்களுது..
பதிலு சிபியோடது..
ஆனா பதிவு மட்டும் உங்களுதா?
வீட்டு ஓனர் ’வீட்டுக்காரர்’ ஆன கதையால்ல இருக்கு..
@செங்கோவி
கேள்வி எங்களுது..
பதிலு சிபியோடது..
ஆனா பதிவு மட்டும் உங்களுதா?>>>>
ப்ளாக் ஓனர் நாந்தானே.... உங்க கேள்வியையும், அவர் பதிலையும் இணைச்சு போடறதுக்குள்ள ரெண்டு பதிவு எழுதிரலாம்.
என்னமா அசராம அண்ணன் சிபி வெளுத்து வாங்குதாரு..நல்ல எக்ஸ்பீரியன்ஸ் தான்.
//ஒரு சினிமா பார்க்கும்போதே என்னால் முழுமையாக படத்தை ரசிக்க முடிவதில்லை..//
ஆமாண்ணே..கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு.
// நல்ல படைப்புகள் கண்டிப்பாக அனைவரையும் சென்றடையும்.. காலம் தீர்மானிக்கும். ஆனால் குறுக்கு வழி ஒன்று உள்ளது.. நீங்கள் 50 பேர் பிளாக் போய் கமெண்ட், ஓட்டு போட்டால் பாதிப்பேராவது வருவாங்க, உங்க பதிவு ஹிட் ஆகிடும்.. ஆனால் இது நிலைக்காது. //
உண்மை..உண்மை.
சிபி அடிச்சி ஆடி இருக்காரு, நம்ம கேள்விகள் மட்டும் வரட்டும்... அப்புறம் இருக்கு...!
//////அண்ணே. கண்ணாடியை கழட்டிட்டா கூட்டத்துல யாரைப் பார்க்கறோம், எங்கே பார்க்கறோம்னு கரெக்ட்டா தெரிஞ்சிடுது ஹி ஹி - சின்ன வயசுப்புள்ள.//////
கூட்டத்துல அப்படி யாரைண்ணே பாக்குறீங்க?
@பன்னிக்குட்டி ராம்சாமி
சிபி அடிச்சி ஆடி இருக்காரு, நம்ம கேள்விகள் மட்டும் வரட்டும்... அப்புறம் இருக்கு...!>>>
நெசமாலுமே அடிச்சு ஆடியிருக்காரு உங்க கேள்விக்கும்...
/////1. போஸ்டரை வைத்தே பிட்டுப் படத்தில் சீன் உண்டா, இல்லையா என்று கண்டுபிடிக்க முடியுமா? அல்லது அதற்கு வேறு ஏதேனும் நல்ல வழிகள் உள்ளனவா?
அது ரொம்ப சிரமம்னே, ஆனா ஒண்ணு செய்யலாம், தியேட்டர் பைக் பாஸ் போடறவன் கிட்டே கேட்டா தெரிஞ்சுடும், அல்லது படம் விட்டு வெளில வர்ற ரசிகர்கள் கிட்டே ரிசல்ட் கேட்டா தெரிஞ்சிடும். உங்களூக்குத் தெரியாததில்லை.///////
கண்டுபுடிக்க முடியும்னு சில நிபுணர்கள் சொல்றாங்க....!
////சாரி.. அண்ணே. நாங்க எப்பாவோ ஹன்சிகா மோத்வானி ரசிகர் ஆகிட்டோம். யூத்துய்யா .. நீங்க இன்னும் ஷ்கீலா ஆண்ட்டியையே கட்டிட்டு அழுதா..?///////
சிபியா இப்படிச் சொன்னது...?
ராம்சாமிண்ணே..உங்களைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன்..இன்னைக்கு என் பதிவுல ஒரு தப்புப் பண்ணிட்டேன்..இங்க முடிச்சுட்டு அங்க வந்து பாருங்க:
http://sengovi.blogspot.com/2011/07/blog-post_21.html
தமிழ்வாசியும் பன்னிக்குட்டியும் வச்சிருந்த நடிகைகள் (நானா யோசிச்சேன்)
///////3. விகடனை மட்டும் பதிவிடும் நீங்கள், உங்களது படைப்புகளாக விருந்து/மருதம்/பாக்யாவில் வெளிவந்தவற்றை பதிவிட மறுப்பது ஏன்?
விகடன்ல தான் ஆன்லைன் ல மேட்டர் வருது. டைப் பண்ற வேலை இல்லை. மற்ற புக் மேட்டர்னா டைப் பண்ணனும்.. - பை நோகாம நோம்பி கும்பிடும் தமிழன்.
///////
சரோஜாதேவி ஆன்லைன்ல வருது வேணுமா? (அது சரி சிபிக்கு தெரியாமையா ஒருக்கும்? ஒரு வேள அங்க இவரும் ஒரு ஆசிரியரா இருக்க போவுது)
////தமிழ்வாசி - Prakash said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
சிபி அடிச்சி ஆடி இருக்காரு, நம்ம கேள்விகள் மட்டும் வரட்டும்... அப்புறம் இருக்கு...!>>>
நெசமாலுமே அடிச்சு ஆடியிருக்காரு உங்க கேள்விக்கும்...
//////
ம்ம் கேள்விப்பட்டேன்... வரட்டும் வரட்டும்.....!
// படம் விட்டு வெளில வர்ற ரசிகர்கள் கிட்டே ரிசல்ட் கேட்டா தெரிஞ்சிடும்.// எப்படி? மைக்கை நீட்டி பிட்டு இருக்கா-ன்னு கேட்கவா?
//// நீங்க இன்னும் ஷ்கீலா ஆண்ட்டியையே கட்டிட்டு அழுதா..?// என்ன வார்த்தை சொல்லீட்டீங்கண்ணே..முடிகிற காரியமா அது?
// முருங்கைக்காய் சாம்பார் வாரம் ஒரு தடவை சாப்பிடுவேன்கறதுக்காக ஏன் அண்ணே அவர் பேரை கெடுக்கறீங்க?// யோவ், அவர்கிட்ட ட்ரெய்னிங் எடுத்த ஆளு தானே நீங்க?
// அரசியல் பதிவு எழுத தான் 1000 பேர் இருக்காங்களே.. என் நோக்கம் சிரிக்க வைப்பது சிந்திக்க வைப்பது அல்ல. ஹி ஹி.// இது என்னை சிந்திக்க வைக்கிறதே.
////செங்கோவி said...
ராம்சாமிண்ணே..உங்களைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன்..இன்னைக்கு என் பதிவுல ஒரு தப்புப் பண்ணிட்டேன்..இங்க முடிச்சுட்டு அங்க வந்து பாருங்க:
http://sengovi.blogspot.com/2011/07/blog-post_21.html
தமிழ்வாசியும் பன்னிக்குட்டியும் வச்சிருந்த நடிகைகள் (நானா யோசிச்சேன்)
///////
அடங்கொன்னியா.... இருல வர்ரேன்...!
//வம்பை வெலைக்கு வாங்குவோம்ல - நா. மணிவண்ணன்
2 . முதலிரவில் முதலில் என்ன செய்ய வேண்டும் ?//
தம்பிக்கு முதல்ல பொண்ணு பாருங்கப்பா!
@செங்கோவி
ராம்சாமிண்ணே..உங்களைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன்..இன்னைக்கு என் பதிவுல ஒரு தப்புப் பண்ணிட்டேன்..இங்க முடிச்சுட்டு அங்க வந்து பாருங்க:>>>>
விளம்பர கட்டணம் ரூபாய் ஐயாயிரம் கொடுக்கவும்.
//////2 . முதலிரவில் முதலில் என்ன செய்ய வேண்டும் ?( விளக்கை அணைக்க வேண்டுமென்று சினிமா முதலிரவில் காட்சியில் காட்டுவதை கூறக்கூடாது )
முதல்ல கொஞ்ச நேரம் பேசனும். வேற எதுவும் "செய்யக் கூடாது"//////
அப்போ சேலத்துக்குத்தான் போகனும், நம்ம வைத்தியர பாக்க....
////ஒரு சினிமா பார்க்கும்போதே என்னால் முழுமையாக படத்தை ரசிக்க முடிவதில்லை.. படம் திரையில் ஓடும்போதே விமர்சனம் என் மனத்திரையில் ஓடுகிறது எல்லாம் பயிற்சி தான் காரணம்.. ///////
அப்போ பிட்டுப்படம் பாக்கும் போதும் இந்த நெலமதானா?
@செங்கோவி
இது என்னை சிந்திக்க வைக்கிறதே.>>>
நானா சிந்திச்சென்னு ஒரு பதிவு போட்ராதிங்க.... நாங்க பாவம்யா
/////சினிமாவுக்கு போனால் கூட முழுசாக படம் பார்ப்பதில்லை.. படத்தில் மொக்கை சீன் ஓடும்போது.. எஸ் எம் எஸ் இல் ஜோக்குகள் டைப் பண்ணி டிராஃப்ட்டில் ஸ்டோர் பண்ணி வைப்பேன்.. ///////
அடப்பாவி..... கக்கூஸ்லயாவது ஃப்ரீயா கக்கா போவீங்களா இல்ல அங்கேயும் நெட் கனெக்சன் கொடுத்தாச்சா?
/////அடுத்த பாகத்தில் பண்ணிக்குட்டி, நிரூபன் கேள்விகள்....//////
அது மட்டும் வரட்டும்.. பாவம் சிபி....
ஐயா நான் காட்டான் வந்திருக்கேன்.. பிரான்சில் ஒரு பழமொழி இருக்கையா பழைய சட்டியில் ருசியான சூப் தயாரிக்கலாமெண்டு... என்ர கனவுக்கன்னிய நீங்க அன்ரி என்று அழைக்கலாமா மனசு என்னமோ செய்யுதையா..!
காட்டான் குழ போட்டுட்டான்..
பன்னிக்குட்டி ராம்சாமி
தமிழ்வாசி - Prakash
செங்கோவி
உங்க கேமிஸ்ட்ரி நல்லா இருக்குது.....
என்னா கொலைவெறி....
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............
சாரி.. அண்ணே. நாங்க எப்பாவோ ஹன்சிகா மோத்வானி ரசிகர் ஆகிட்டோம். யூத்துய்யா .. நீங்க இன்னும் ஷ்கீலா ஆண்ட்டியையே கட்டிட்டு அழுதா..?
அடன்கொய்யால அப்ப நாங்க என்ன செய்யுறது....நீங்க யூத் எண்ணா நாங்க சின்னபிள்ளங்க,,,,,,,,,,,
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............
எனக்கும் கேள்வி கேட்க ஆசை என்ன செய்யணும்?
அருமையான பேட்டி அடுத்த பேட்டியில் சிந்திப்போம்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.....
///ஹா ஹா .. ஹா நான் என்ன கலைஞரா? குடும்ப அரசியலோ, குடும்ப பதிவோ நடத்த?// அது சரி தான் )))
அடுத்த பாகத்துக்கு வெயிட்டின்க்
பரவால்லப்பா = சிபி கலக்கறாப்ல -கேள்விகளும் பதில்களூமா - சூப்பர் - மணி உனக்கு கேள்வி கேக்க வேற ஆள கிடைக்கலியா ? ஒண்ணும் செய்யக் கூடாதாமே !
அருமை.
//1. அலுவலகம்
2. பதிவுலகம்
3. குடும்பம்//
இதை வன்மையாக கண்டிக்கும் அதேவேளை வரவேற்கிறேன் சி பி அண்ணே!
/ நாங்க எப்பாவோ ஹன்சிகா மோத்வானி ரசிகர் ஆகிட்டோம். யூத்துய்யா .. //
எல்லாம் ஓட்டவடை ஊர்ல இல்லைங்கிற தைரியம் தானே!!
//படம் திரையில் ஓடும்போதே விமர்சனம் என் மனத்திரையில் ஓடுகிறது எல்லாம் பயிற்சி தான் காரணம்.. //
எந்த ஸ்கூல் பாஸ்'??சொன்னீங்கன்னா நாமளும் போயி படிக்கலாமே!
கேள்விகளுக்கும் பதில்களுக்கும் பாராட்டுக்கள்.
நல்ல சமூக சேவை !!
>>செங்கோவி said... 2 Best Blogger Tips [Reply To This Comment]
கேள்வி எங்களுது..
பதிலு சிபியோடது..
ஆனா பதிவு மட்டும் உங்களுதா?
வீட்டு ஓனர் ’வீட்டுக்காரர்’ ஆன கதையால்ல இருக்கு..
அண்ணன் செங்கோவி டபுள் மீனிங்க்ல கமெண்ட் போட்டுட்டார் .. நியாயம் கேட்கறவங்க கேட்கலாம் ஹி ஹி
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////1. போஸ்டரை வைத்தே பிட்டுப் படத்தில் சீன் உண்டா, இல்லையா என்று கண்டுபிடிக்க முடியுமா? அல்லது அதற்கு வேறு ஏதேனும் நல்ல வழிகள் உள்ளனவா?
அது ரொம்ப சிரமம்னே, ஆனா ஒண்ணு செய்யலாம், தியேட்டர் பைக் பாஸ் போடறவன் கிட்டே கேட்டா தெரிஞ்சுடும், அல்லது படம் விட்டு வெளில வர்ற ரசிகர்கள் கிட்டே ரிசல்ட் கேட்டா தெரிஞ்சிடும். உங்களூக்குத் தெரியாததில்லை.///////
கண்டுபுடிக்க முடியும்னு சில நிபுணர்கள் சொல்றாங்க....!
ஆமா அந்த நிபுணர் ஒரு டாக்டர்னும் அவர் இந்தியாவுல இல்லைன்னும் சொல்றாங்க..
//
சாரி. 19 வயசு தாண்டுனா அந்த ஃபிகர் அத்தை மகளே ஆனாலும் நான் கண்டுக்கறதில்லை..
//
அருமையான தத்துவம்
1. அலுவலகம்
2. பதிவுலகம்
3. குடும்பம்
4. சினிமா
5. சென்னிமலை
6. பிள்ளைகள்
7. பள்ளி நண்பர்கள்
8. உறவினர்
9. விளையாட்டு//
என்ன சிபி உங்க மானேஜர் பதிவுலகத்துல திரியிறாரா.!? இந்த ஒண்ணுமே தெரியாத போல ரியாக்ஷ்ன் கொடுக்க எங்க கத்துகிட்டீரு.?
நல்லாத்தான் போயிட்டிருக்கு ....
எதார்த்தமான பதில்கள்..
அவரது பாணியில்...
அப்ப நான்தான் அதிக கேள்வி கேட்டிருக்கேனா....
நன்றி பிரகாஸ் என்னையும் இனைத்துக் கொண்டதற்கு சி.பி யின் இன்னொரு திறமையை வெளிப்படுத்திய கலக்கல் பதிவு !
அவர் எல்லாம் யூத் என்றாள் நாங்கள் பசங்கள்!
பிரகாஷ் எப்படியாவது சிபிய மாட்டி விடணும்னு கங்கணம் கட்டி கொண்டு அலஞ்சு பேட்டி எடுத்த சிபி ஒன்னும் திராவிட் கிடையாது நீ போடுற பந்துகேல்லாம் மட்டை போட சிபி சேவாக் போல நீ போடும் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கு விரட்டி அடிசிருக்காறு பாரு....
இப்பவாவது புரிஞ்சிக்க எங்க சிங்கத்தை ஒன்னும் செய்ய முடியாதுன்னு நீ ஏமாத்துறதுக்கு சசி கரூன் யாராவது சின்ன பசங்க இருப்பாங்க அவுங்கள் போய் ஏமாத்து உன் பாட்ஷா இங்க பலிக்காது ஹி ஹி
nice man, good idea this!
///முதல்ல கொஞ்ச நேரம் பேசனும். வேற எதுவும் "செய்யக் கூடாது"///
என்ன டாக்டர் ரேஞ்சுக்கு பதில் சொல்லிருக்காரு ,இவரு சொல்றபடி பாத்தா சமுதாயம் எப்படி டெவலப் ஆகும்
செங்கோவி said
//வம்பை வெலைக்கு வாங்குவோம்ல - நா. மணிவண்ணன்
2 . முதலிரவில் முதலில் என்ன செய்ய வேண்டும் ?//
தம்பிக்கு முதல்ல பொண்ணு பாருங்கப்பா!
ஆமனே நல்ல பொண்ணா பாருங்க ரொம்ப கஷ்டமா இருக்கு
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////2 . முதலிரவில் முதலில் என்ன செய்ய வேண்டும் ?( விளக்கை அணைக்க வேண்டுமென்று சினிமா முதலிரவில் காட்சியில் காட்டுவதை கூறக்கூடாது )
முதல்ல கொஞ்ச நேரம் பேசனும். வேற எதுவும் "செய்யக் கூடாது"//////
அப்போ சேலத்துக்குத்தான் போகனும், நம்ம வைத்தியர பாக்க....///
அண்ணே அந்தாளு போலி டாக்டர்னே,அப்பறம் உள்ளது போச்சு நொள்ள கண்ணான்னு ஆய்டும்
//அய்யா சின்ன பிள்ள, ஆப்பரேசன் முடிஞ்சு இத்தனை நாள் ஆச்சே, இன்னும் ஏன் கறுப்பு கண்ணாடியைக் கழட்டல?
அண்ணே. கண்ணாடியை கழட்டிட்டா கூட்டத்துல யாரைப் பார்க்கறோம், எங்கே பார்க்கறோம்னு கரெக்ட்டா தெரிஞ்சிடுது ஹி ஹி - சின்ன வயசுப்புள்ள.//
இது போன்ற ஒவ்வொரு கலாய்ப்பான பேட்டியை பார்க்கும்போது தானாகவே உதடுகள் பிரிந்து பற்கள் தெரியுது...
கலக்கலான ஒரு எண்டர்டைன்மெண்ட்
///////நா.மணிவண்ணன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////2 . முதலிரவில் முதலில் என்ன செய்ய வேண்டும் ?( விளக்கை அணைக்க வேண்டுமென்று சினிமா முதலிரவில் காட்சியில் காட்டுவதை கூறக்கூடாது )
முதல்ல கொஞ்ச நேரம் பேசனும். வேற எதுவும் "செய்யக் கூடாது"//////
அப்போ சேலத்துக்குத்தான் போகனும், நம்ம வைத்தியர பாக்க....///
அண்ணே அந்தாளு போலி டாக்டர்னே,அப்பறம் உள்ளது போச்சு நொள்ள கண்ணான்னு ஆய்டும்
/////////
ஏற்கனவே ஆய்டுச்சி போல....?
பன்னிக்குட்டி ராம்சாமி said... 56 Best Blogger Tips [Reply To This Comment]
///////நா.மணிவண்ணன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////2 . முதலிரவில் முதலில் என்ன செய்ய வேண்டும் ?( விளக்கை அணைக்க வேண்டுமென்று சினிமா முதலிரவில் காட்சியில் காட்டுவதை கூறக்கூடாது )
முதல்ல கொஞ்ச நேரம் பேசனும். வேற எதுவும் "செய்யக் கூடாது"//////
அப்போ சேலத்துக்குத்தான் போகனும், நம்ம வைத்தியர பாக்க....///
அண்ணே அந்தாளு போலி டாக்டர்னே,அப்பறம் உள்ளது போச்சு நொள்ள கண்ணான்னு ஆய்டும்
/////////
ஏற்கனவே ஆய்டுச்சி போல....?///
அண்ணே என்னனே மறைக்கிறீங்க நீங்க அந்தாளு பாக்குறதுக்கு ஹோட்டலுக்கு பதுங்கி பதுங்கி வந்தீங்களே , நான் இதுவரைக்கும் யாரு கிட்டையாவது சொல்லிருப்பேனா
நண்பா பேஸ்ட் பண்ணினதுக்கு அப்புறம் காபி குடிப்பீங்களா , அல்லது காபி குடிச்சதுக்கு அப்புறம் பேஸ்ட் பண்ணுவீங்களா . ஹி ஹி
இல்ல காப்பி டு பேஸ்ட் பதிவர்-ன்னு சொன்னா அர்த்தம் தெரியல அதான் .
ஹி ஹி
அடுத்த பாகத்தில் பண்ணிக்குட்டி கேள்விகள்....
வேற என்ன எடக்கு மடக்கான கேள்விதான் .
ஹா ஹா ஹா
சபாஷ் சரியான கேள்விகள்..
அசத்தலான பதில்கள்..
நண்பரே!
பதிலும் கேள்வியும்
அருமையோ அருமை-அதை
பதிவாக்கி வெளியிட்டது
பெருமையோ பெருமை!!
புலவர் சா இராமாநுசம்
அருமை...
சூடான கேள்விகளும் சுவையான பதில்களும் அருமை. பாராட்டுக்கள்.
வணக்கம், வந்தனம், நமஸ்தே!
1.வலைப்பூவில் தாங்கள் அடைய விரும்பும் எல்லை எது?//
ஆகா...ஏதோ சௌந்தர் ஓட்டப் போட்டி வைக்கிற மாதிரியும், சிபி ஓடிப் போய்த் தொடுற மாதிரியும் எல்லேய் இருக்கு.
ஹா...ஹா...ஓவர் குசும்பு.
காபி டூ பேஸ்ட் பதிவர் என்பதில் தங்களுக்கு ஏதாவது சங்கடம் உண்டா?
ஹா ஹா ஹா உண்மையை, ஆமா உண்மைன்னு ஒத்துக்க எதுக்கு சங்கடம்//
ஆகா...இது தான் சமயோசிதமான பதில்.
3. தங்களை அதிகம் கலாய்க்கும் மனோவை என்ன செய்யலாம்?//
குளிக்காமல் இருப்பதால், குளிக்கப் பண்ணலாம்.
இப்படிச் சொல்லியிருக்கலாம், ஆனால் சிபிக்கு உள்ளூரப் பயம். எங்கே மனோ தனக்கு ஆப்படிப்பானோ என்று.
பதிவுலகில் ஏதவாது ஒரு பிளாக்கில் பதிவிடச் சொன்னால் யாருடைய பிளாக்கை தேர்ந்தெடுப்பீர்?
என்னால் யாருக்கும் கெட்ட பெயர் வர வேணாம்னு நானே இன்னொரு பிளாக் ஓப்பன் பண்ணி அதுல பதிவு போடுவேன்.. ஹி ஹி//
என்னா கில்மாப் ப்ளாக் தானே ஓப்பன் பண்ணுவீங்க.
ஷகீலா படப் போஸ்டரை மாடுகள் தின்பதனால் சமூகத்திற்கு விளையும் நன்மை-தீமைகள் என்ன?//
கேட்கிறார் பாருங்க கேள்வி. என்ன ஒரு கொலை வெறி நிரம்பிய கேள்வி.
சமூகத்திற்கு நன்மை: மாடுகளின் இனப்பெருக்கம் அதிகமாக நிகழும்.
தீமை: நிறையச் சாணி வரும்.
உங்களுக்கு பிடித்த மிக சிறப்பாக எழுதுகிறார் என்று நினைக்கும் சக பதிவர் யார் ???
கேள்வி கஷ்டம் தான், ஆனா பதில் ஈசி. இலங்கை அலப்பரை மன்னன் நிரூபன்.//
பாஸ், உங்கள் வாயால், என் படைப்புக்களைப் பற்றிய பார்வையின் மகோன்னதத்தை அறியும் போது, எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா.
நன்றி பாஸ்.
அசத்தலான கேள்விகளும், சிபியின் சமயோசிதமான டைம்மிங் காமெடிகளும் பேட்டியினை அலங்கரித்துள்ளது.
அருமையான பகிர்வு.
எந்தக்கேள்விப் பந்து எந்தப்பக்கமிருந்து வந்தாலும் இறங்கி சிக்ஸர் அடிக்கும் சிபி சாரின் ஒவ்வொரு ஓவரும் அற்புதம். அடுத்த ஓவரின் ரன்மழைக்காக காத்திருக்கிறோம்.
வந்தாச்சு.... படிச்சாச்சு..
////பை நோகாம நோம்பி கும்பிடும் தமிழன்./////
சீபி இஞ்சையும் சொல்றேன் உங்கட இந்த திறந்த மனசு தான் எப்பவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்...
கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தைத் தவற விட்டு விட்டேன் மன்னியுங்கள் இனியும் கேட்கலாம் என்றால் தயவு செய்து அறித் தாருங்கள் கேட்க ஆவலாயிருக்கிறேன்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சாருவின் ஆபாச அரட்டை உண்மையா? பொய்யா? ஆதார பதிவு
உழைப்பு, ஈடுபாடு இவையிரண்டும் எல்லா விஷயங்களிலும் மிக அவசியம் என்று சி.பி.எஸ் நம்புவதை அவரது வலைப்பதிவைப் பார்த்தாலே புரியும்; அதை தனது பதில்கள் மூலம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். அவரது வெற்றிப்பயணம் தங்குதடையின்றி மேலும் தொடரட்டும்!
எனது கேள்வியையும், அதற்கான சி.பி.எஸ்-சின் பதிலையும் இங்கு அளித்தமைக்கு மிக்க நன்றி!