அட்ரா சக்க சி.பி பேட்டியின் மூன்றாம் பாகம் இது. இந்த பாகத்தில் வலையுலக நண்பர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சி.பி யின் பதில்களும் தொகுக்கப்பட்டுள்ளது. என்னன்ன கேள்விகள் கேட்டிருக்காங்கன்னு பார்போமா?
பண்ணிக்குட்டி ராமசாமி:
1. உங்க பாசுக்கு (ஆபீஸ்) நீங்க பண்ணிட்டு இருக்கறது தெரியுமா? தெரிஞ்சா என்ன செய்வீங்க?
ஹி ஹி யோவ் ராஸ்கல் ராம்சாமி.. நான் என்ன கொள்ளை கொலையா பண்றேன்.. ரவுசு..?!கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போறதுதானே?ஃபீல்டு ஒர்க்கர்ஸ் செய்யாததையா நான் செஞ்சுட்டேன்?ஆனாலும் தெரிஞ்சா சங்குதான் ஹி ஹி ஆஃபீஸ் மேனேஜர் ஃபோன் நெம்பர் கேட்ட்ராதேயும் அடுத்த கேள்வியா.. ஹி ஹி
2. உங்க ஸ்கூல் டைம் கேர்ள்பிரண்டை [அதான் முன்னாள் (இப்பவும் முன்னாள்தானே?) காதலி] இப்போ திடீர்னு பார்க்கும் போது, ஏன்டா சிபி இன்னும் நீ திருந்தலியான்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?
ஹி ஹி ஹி ஹி அப்டீம்பேன்.....(இதான் சாக்குன்னு டேய்!!! ம் ம் )
3. பிட்டுப்படம் பார்த்துட்டு இருக்கும் போது பார்க்கக் கூடாத ஆளை எதிரும் புதிருமா சந்திச்சு வழிஞ்ச அனுபவம் இருக்கா? அப்போ எப்படி சமாளிச்சீங்க?
10ஆம் கிளாஸ் படிக்கறப்ப எங்க கிளாஸ் கணக்கு வாத்தியார் அந்த படத்துக்கு வந்துட்டார்.. அவர் பால்கனில நான் பெஞ்ச்ல... என்னை பார்த்துட்டார்னு தான் நினைக்கறேன் ஹி ஹி சமாளீக்க தெரியலை..
4. நீங்க இப்படி வாராவாரம் வெள்ளிக்கெழமைன்னா பிட்டுப்படம் பார்க்கறது வீட்ல தெரியுமா?
ஹி ஹி ஹி தெரியாது.. (யோவ்,.. நானும் பொறுமையா பதில் சொல்லிட்டே இருக்கேன், எகனை மொகனை கேள்வியா கேட்டா எப்படி?)
5. திடீர்னு நமீதாவை சந்திக்க நேர்ந்தால் என்ன பேசுவீங்க?
எதுக்கு பேசனும்? ஹி ஹி (அதாவது நடிகைங்க கூட எல்லாம் பேச்சு எதுக்கு? ந்னு அர்த்தம்)
6. நீங்க கிழி கிழின்னு விமர்சனத்துல கிழிச்ச படத்தோட டைரக்டரை சந்திக்க நேர்ந்தால் உங்கள் ரியாக்சன்?
சித்து + 2 பட விமர்சனத்துல கே பாக்யராஜ் சாரை நக்கல் அடிச்சிருந்தேன்.. 18 வருஷமா அவர் பத்திரிக்கைல ஜோக் எழுதிட்டு இப்படி கவுத்துட்டானே என உதவி ஆசிரியரிடம் வருத்தப்பட்டதா எனக்கு தகவல் வந்தது.. ஆனா நேரடியா என் கிட்டே எதுவும் கேட்கல..
7.ஹிட்ஸ், ரேங் எல்லாத்தையும் திடீர்னு தூக்கிட்டா உங்களிடம் என்ன மாற்றங்கள் இருக்கும்?
பெரிசா ஒண்ணூம் மாற்றம் வராது.ஹிட்ஸூக்காக நான் அலையறதில்லை.பத்திரிக்கைகளூக்கு ஜோக் எழுதும்போதே மற்றவர்களை விட நாம் தனிச்சு தெரியனும்னு நினைப்பேன்.. எல்லாரும் வாரம் 5 ஜோக் அனுப்பும்போதே நான் 100 ஜோக் அனுப்புனவன்.. அதனால ஹிட்ஸ்,ரேங்க் அதுக்கும், என் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்மணம் மக்கர் பண்ணூன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது. இருக்கும்..
8. என்னைப் போன்றவர்கள் உங்களை கலாய்க்கும் போது சமய்ங்களில் ஓவராகவும் போய்விடுகின்றது. எப்பொழுதாவது வருத்தப்படும்படி நேர்ந்ததுண்டா?
ஹா ஹா குட் கேள்வி.. நான் செம ஜாலி டைப்.. எதையும் ஜாலியா எடுத்துக்குவேன்.. இருந்தாலும் சில சமயங்களீல் நண்பர்களே இப்படி கலாய்க்கறாங்களேன்னு மனம் வருத்தப்படுவேன்.. அவங்களூக்கு பதிலடி குடுக்கலாம்னு நினைப்பேன்.. அப்போ என் மனசாட்சி வந்து தடுத்துடும்.. உன் சுயநலம் முக்கியமா? நட்பு முக்கியமா?ன்னு கேட்கும்.. அதனால நம்ம மனசு புண்பட்டாலும் அடுத்தவங்க மனசு புண்படக்கூடாதுன்னு நினைச்சுக்குவேன்..
9. நெல்லை பதிவர் சந்திப்புக்கப்புறம் ஏன் திருந்திட்டீங்க.. இல்ல இல்ல திருந்திட்டேன்னு சொல்றீங்க? இதுக்கு முன்னாடி யாருமே இதுவரை உங்களை திருந்தச் சொல்லலியா?
யோவ்.. விளையாடறீங்களா/ மொத்தம் 37 பேரு.. ஹாலை சாத்திட்டாங்க.. மாத்தி மாத்தி.. 4 மணி நேரம்.. திணறத்த்திணற.. ஹி ஹி அந்த எஃபக்ட் கொஞ்ச நாளாவது இருக்காதா?
10. பதிவு எழுதி அதுனால அடிவாங்கி இருக்கீங்களா? இல்ல வேற தொந்தரவுகள் ஏதாவது வந்திருக்கா?
கனிமொழி - ராசா கிண்டல் அடிச்சு ஒரு ஜோக் போட்டிருந்தேன்.. ஈரோடு தாதா என் கே கே பி ராஜா வோட அடிப்பொடி ஒருவர் ஃபோன் பண்ணி அந்த ஜோக்கை எடுத்துடுன்னாரு,... சரிங்க.. நான் ஆஃபீஸ்ல இருக்கேன்,.. மாலைல வந்து எடுத்துடறேன்னேன்.. ஆனா அவங்க 10 அடியாளுங்களை வீட்டுக்கு அனுப்பி அதை எரேச் பண்னாத்தான் போவோம்னாங்க.. அப்புறம் வேற வழி இல்லாம நெட் செண்ட்டர் போய் அந்த ஜோக்கை எரேஸ் பண்ணேன்..
11. திரைத்துறையில் நுழைவதற்கு முயற்சி செஞ்சிருக்கீங்களா? இல்ல இனிமே செய்வீங்களா? என்ன பண்ண போறீங்க?
சினிமாத்துறை லட்சியம்.. சின்னத்திரை நிச்சயம்./.... நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கலந்துக்க ஆசை.. ஆனா அதுல கலந்துக்க 10 படம் எடுக்கனும்.. ஒரு படம் எடுக்க 30,000 செலவு ஆகும், மொத்தம் 3 லட்சம் ஆகும்.. அதுக்கு ஸ்பான்சர் கிடைக்காது கைக்காசு தான் போடனும்.. அதான் திங்க்கிங்க்.. அது போக.. ஏற்கனவே காமெடி ஸ்கிரிப்ட் 3 புது இயக்குநர்களுக்கு எழுதிக்கொடுத்து இருக்கேன்.. ஏமாந்தும் இருக்கேன்.. லெட் சீ.. நாளைய தினம் நமக்காக விடியும் என்று ஏங்கிக்கிடப்பதுதானே படைப்பாளனின் கடமை?
நாற்று - நிரூபன்:
சிபி அவர்களிடம் இரு வேறுபட்ட கேள்விகளை முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.
1. நாடறிந்த, சிறந்த ஒரு நகைச்சுவைப் படைப்பாளியாக பத்திரிகை, சஞ்சிகைகள் வாயிலாக இந்தியாவில் மட்டு மன்றி, ஈழத்தின் தமிழக சஞ்சிகை வாசிப்பு வட்ட்டாரத்திற்கும் அறிமுகமான நீங்கள், அப் பத்திரிக்கைத் துறையினை விட்டு, வலைப் பதிவிற்குள் நுழைந்தமைக்கான காரணம் என்ன? ஏன் வலைப் பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் கருக் கொண்டது? இதனைப் பகிர முடியுமா?
1. நாடறிந்த, சிறந்த ஒரு நகைச்சுவைப் படைப்பாளியாக பத்திரிகை, சஞ்சிகைகள் வாயிலாக இந்தியாவில் மட்டு மன்றி, ஈழத்தின் தமிழக சஞ்சிகை வாசிப்பு வட்ட்டாரத்திற்கும் அறிமுகமான நீங்கள், அப் பத்திரிக்கைத் துறையினை விட்டு, வலைப் பதிவிற்குள் நுழைந்தமைக்கான காரணம் என்ன? ஏன் வலைப் பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் கருக் கொண்டது? இதனைப் பகிர முடியுமா?
அடுத்த கட்டம் என்ற ஒரு சுவராஸ்யம் தான்.. இதற்கு அடுத்த கட்டம் என்று ஒன்று இருந்தே தீரும்.. காலத்தின் கைகளில் அந்த மாற்றம் நடந்தே தீரும்..
2. முது பெரும் நகைச்சுவைப் படைப்பாளி என்ற அடிப்படையிலும், உங்களின் அனுபவத்தினை அடிப்படையாக வைத்தும் நான் உங்களிடன் எழுப்பும் வினா,
வலைப் பதிவினூடாக ஆக்க இலக்கியங்கள் அல்லது படைப்பிலக்கியங்களின் வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் எப்படி இருக்கும்? தமிழக இலக்கிய சஞ்சிகைகளுக்கு நிகரான வளர்ச்சியினை இவ் வலைப் பதிவுகளும் எட்டக் கூடிய அல்லது பரந்து பட்ட அளவில் வாசகர்களிடம் சென்று சேரக் கூடிய வழி முறைகள் உருவாகுவது எதிர்காலத்தில் சாத்தியமாகுமா?
இப்போதே அதன் தாக்கம் அதிகமே.. ஃபிஷர்மேன் ட்வீட் ஏற்படுத்திய தாக்கம் பிரமாதம்.. முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனால் அதன் ரிசல்ட் தெரிய 7 நாட்கள் ஆகும், ஆனால் இப்போது நெட்டில் வரும் விமர்சனங்களால் படம் ரிலீஸ் ஆகி 4 மணி நேரத்தில் ரிசல்ட் தெரிகிரது. பட தயாரிப்பாளர்கள் இணைய எழுத்தாளர்கலை மதிக்கிறார்கள்..
இணைய வாசகர்கள் இப்போது சராசரியாக 10000 பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.. இது பல மடங்கு உயரும்,உயரனும்..
ஜோஸ்பின் பாபா:
நண்பா, உங்கள் நகைச்சுவை உணர்வின் பின் புலன் என்ன?
ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் சோக சம்பவங்கள் இருக்கும். சிலர் அந்த சோகங்களை மனசுக்குள் வைத்துப்பூட்டிக்கொண்டு மறுகுகிறார்கள்.. சிலர் அதை மறக்க நகைச்சுவை எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள்.. தானும் சிரிக்க மற்ரவர்களை சிரிக்க வைப்பது ஒரு கலை.. அந்த கலையை நான் 12 வது படிக்கும் நிலையிலிருந்து ஆரம்பித்து விட்டேன்..
சார்லி சாப்ளின் கவிதை ஒன்று நினைவு வருது..
"நான் மழையில் நனைய விரும்ப காரணம்
என் கண்ணீர் யாருக்கும் தெரியாமலே போகட்டும் என்று தான்"
நான் நகைச்சுவை மழையில் நனைவதும் மற்றவர்களை நனைய வைப்பதற்கும் அதுவே காரணம்.
1.வணக்கம் சீபி நேரே கேட்பதற்கு மன்னிக்கவும்.
போட்டிகள் பொறாமைகள் நிறைந்த இந்தப் பதிவுலகத்தில் தலைக்கனம் இல்லாத ஒரு மனிதனாக வலம் வரகிறீர்கள். இப்படியான நிலையில் தங்களைச் சுற்றி போடப்பட்ட சதிவலை தங்களை எந்தளவு பாதித்தது ?
2.தங்கள் கருத்துப்படி ஒரு பதிவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் ?
2. அந்த நோக்கத்தை அடையும் திசையில் உங்கள் பயணம் தொடர்கிறதா?
மதிசுதா
1.வணக்கம் சீபி நேரே கேட்பதற்கு மன்னிக்கவும்.
போட்டிகள் பொறாமைகள் நிறைந்த இந்தப் பதிவுலகத்தில் தலைக்கனம் இல்லாத ஒரு மனிதனாக வலம் வரகிறீர்கள். இப்படியான நிலையில் தங்களைச் சுற்றி போடப்பட்ட சதிவலை தங்களை எந்தளவு பாதித்தது ?
ஹா ஹா நேரே கேட்காமல் சைட்ல நின்னா கேக்க முடியும் ( SIDE NOT SIGHT)
ஹெட் வெயிட் எனக்கு இல்லாததற்குக் காரணம் நிஜமாகவே என் வீடு சுடுகாட்டின் அருகே தினம் தினம் பிணங்கள் போகும் பாதையில் வீடு அமையப் பெற்ற ஒருவன் வாழ்க்கையின் நிலையில்லாத் தன்மையை எளிதில் புரிந்து கொள்வான்.
அதுவும் இல்லாம நான் ஹேர் கட் மாதம் ஒரு முறை பண்ணிக்குவேன் சோ நோ சான்ஸ் டூ தலைக்கனம். சதி வலைன்னு சொல்ல முடியாது ஆற்றாமை, பொறாமை காரணமாக எழுந்த எதிர்ப்புகள்னு சொல்லலாம். அவற்றை பொறுமை, சகிப்புத்தன்மை என்ற 2 ஆயுதங்கள் மூலம் சமாளீத்தேன்.
மனிதனாக இருக்க வேண்டும். தன்னால் யாருக்கும் கெடுதல் வரக்கூடாது. ஏதாவது செய்தால் அது மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி இருக்கனும்.நமக்குள்ள அடிச்சுக்க கூடாது. சிரிக்க வைக்கும் திறமை இருப்பவர்கள் சிரிக்க வைக்கலாம், சிந்திக்க வைக்கும் திறமை இருப்பவர்கள் விழிப்புணர்வு பதிவுகள் போடலாம்
சூ. மஞ்சு - யாழ் கணினி நூலகம்
1. உங்களை பதிவுலகத்திற்கு வர தூண்டியது எது? அதாவது என்ன நோக்கத்திற்காக காலடி வைத்தீர்கள்? ஆனந்த விகடன் இல் ட்விட்டர் அக்கவுண்ட்டில் போடும் ட்வீட்கள் வலை பாயுதே என வர ஆரம்பித்தது.. பலத்த வரவேற்பை பெற்றது.. அதிலும் புகுந்து பார்த்துடலாம்னு நினைச்சேன். அதே போல் கேபிள் சங்கரின் பிளாக் பற்றிய விமர்சனம் விகடனில் வந்தது.. நாமும் அது போல் வர வைக்கனும் என்ற எண்ணம் மனதில் பிறந்தது..
ம் .. அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் காலம் தான் நல்ல பதில் சொல்லும், கூடவே வாசகர்களும் நண்பர்களூம் தான் சொல்ல வேண்டும்.
அடுத்த பாகத்தில் முடியும்
49 கருத்துரைகள்:
என்னமா கேக்குறாங்க கேள்விகள்...எனக்கு இவரு கிட்ட கேக்க எதுவும் இல்ல...அப்படித்தான் நினச்சி கேள்விகள் தொடுக்கல ஹிஹி!...பகிர்வுக்கு நன்றி மாப்ள!
கேள்வி ஆஹா
பதில் ஓஹோ
இது சிபி அண்ணே சொன்னது தானா இல்ல , உங்க கற்பனையா? //டவுட்
இது நிஜம்ன்னா நான் கூட கேள்வி கேக்கலாமா??
கேள்வி கேட்கணும்னா எந்த ஈமெயில்லுக்கு அனுப்புறது?
அருமையான பேட்டி நிகழ்வு . சிபி சாருக்கு எனது
வாழ்த்துக்களும் நன்றியும்.சரி போனாபோகுது
உங்களுக்கும் எனது வாழ்த்துகள் சகோ (ஹி..ஹி..ஹி..)
நன்றி பகிர்வுக்கு.....
அப்போ நான் தான் ஓவரா கேள்வி கேட்டவனா?
///3. பிட்டுப்படம் பார்த்துட்டு இருக்கும் போது பார்க்கக் கூடாத ஆளை எதிரும் புதிருமா சந்திச்சு வழிஞ்ச அனுபவம் இருக்கா? அப்போ எப்படி சமாளிச்சீங்க?
10ஆம் கிளாஸ் படிக்கறப்ப எங்க கிளாஸ் கணக்கு வாத்தியார் அந்த படத்துக்கு வந்துட்டார்.. அவர் பால்கனில நான் பெஞ்ச்ல... என்னை பார்த்துட்டார்னு தான் நினைக்கறேன் ஹி ஹி சமாளீக்க தெரியலை../// பாவம் வாத்தியார் ,அதை வச்சே பிளக்மெயில் பண்ணியிருக்கலாமே ஹிஹிஹி
///ஹா ஹா குட் கேள்வி.. நான் செம ஜாலி டைப்.. எதையும் ஜாலியா எடுத்துக்குவேன்.. இருந்தாலும் சில சமயங்களீல் நண்பர்களே இப்படி கலாய்க்கறாங்களேன்னு மனம் வருத்தப்படுவேன்.. அவங்களூக்கு பதிலடி குடுக்கலாம்னு நினைப்பேன்.. அப்போ என் மனசாட்சி வந்து தடுத்துடும்.. உன் சுயநலம் முக்கியமா? நட்பு முக்கியமா?ன்னு கேட்கும்.. அதனால நம்ம மனசு புண்பட்டாலும் அடுத்தவங்க மனசு புண்படக்கூடாதுன்னு நினைச்சுக்குவேன்.. // ஆகா ,நெஞ்சை தொட்டுட்டிங்க பாஸ் ...
//////ஹி ஹி ஹி ஹி அப்டீம்பேன்.....(இதான் சாக்குன்னு டேய்!!! ம் ம் ) //////
சொல்றத பாத்தா இதுவே பலவாட்டி நடந்திருக்கும் போல...
///கனிமொழி - ராசா கிண்டல் அடிச்சு ஒரு ஜோக் போட்டிருந்தேன்.. ஈரோடு தாதா என் கே கே பி ராஜா வோட அடிப்பொடி ஒருவர் ஃபோன் பண்ணி அந்த ஜோக்கை எடுத்துடுன்னாரு,... சரிங்க.. நான் ஆஃபீஸ்ல இருக்கேன்,.. மாலைல வந்து எடுத்துடறேன்னேன்.. ஆனா அவங்க 10 அடியாளுங்களை வீட்டுக்கு அனுப்பி அதை எரேச் பண்னாத்தான் போவோம்னாங்க.. அப்புறம் வேற வழி இல்லாம நெட் செண்ட்டர் போய் அந்த ஜோக்கை எரேஸ் பண்ணேன்.. /// உங்களுக்கு செய்த பாவம் தான் இப்ப ரண்டு பெரும் ஜெயில்ல போல ஹிஹி
///லெட் சீ.. நாளைய தினம் நமக்காக விடியும் என்று ஏங்கிக்கிடப்பதுதானே படைப்பாளனின் கடமை?// வாழ்த்துக்கள் பாஸ் .
////10ஆம் கிளாஸ் படிக்கறப்ப எங்க கிளாஸ் கணக்கு வாத்தியார் அந்த படத்துக்கு வந்துட்டார்.. ////////
பத்தாங்கிளாசுலேயே பிட்டுப்படம்... அதுவும் கணக்கு வாத்தியார் கூட? இன்னும் என்னென்ன அக்கிரமம்லாம் இருக்கோ..... அடுத்த பேட்டில பாத்துக்குவோம்...
//////ஹி ஹி ஹி தெரியாது.. (யோவ்,.. நானும் பொறுமையா பதில் சொல்லிட்டே இருக்கேன், எகனை மொகனை கேள்வியா கேட்டா எப்படி?)//////
அப்போ வாராவாரம் பிட்டுப்படம் பாக்குறீங்க?
////எதுக்கு பேசனும்? ஹி ஹி (அதாவது நடிகைங்க கூட எல்லாம் பேச்சு எதுக்கு? ந்னு அர்த்தம்)//////
வெளங்கிருச்சு........
/////சித்து + 2 பட விமர்சனத்துல கே பாக்யராஜ் சாரை நக்கல் அடிச்சிருந்தேன்.. 18 வருஷமா அவர் பத்திரிக்கைல ஜோக் எழுதிட்டு இப்படி கவுத்துட்டானே என உதவி ஆசிரியரிடம் வருத்தப்பட்டதா எனக்கு தகவல் வந்தது.. ஆனா நேரடியா என் கிட்டே எதுவும் கேட்கல.. //////
ஆமா முன்னாடி ஒருதடவ சொல்லி இருக்கீங்க......
////தமிழ்மணம் மக்கர் பண்ணூன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது. இருக்கும்..
//////
இதுக்குத்தான் இந்த கேள்வி கேட்டதே.....
////// இருந்தாலும் சில சமயங்களீல் நண்பர்களே இப்படி கலாய்க்கறாங்களேன்னு மனம் வருத்தப்படுவேன்.. அவங்களூக்கு பதிலடி குடுக்கலாம்னு நினைப்பேன்.. அப்போ என் மனசாட்சி வந்து தடுத்துடும்.. உன் சுயநலம் முக்கியமா? நட்பு முக்கியமா?ன்னு கேட்கும்.. அதனால நம்ம மனசு புண்பட்டாலும் அடுத்தவங்க மனசு புண்படக்கூடாதுன்னு நினைச்சுக்குவேன்.. //////
எல்லாரும் கேட்டுக்குங்கப்பா........ கலாய்க்கும் போது பாத்து பண்ணுங்கப்பா...........
///யோவ்.. விளையாடறீங்களா/ மொத்தம் 37 பேரு.. ஹாலை சாத்திட்டாங்க.. மாத்தி மாத்தி.. 4 மணி நேரம்.. திணறத்த்திணற.. ஹி ஹி அந்த எஃபக்ட் கொஞ்ச நாளாவது இருக்காதா?
/////
அந்த எஃபக்ட் போய் 10 நாளாகிடுச்சு போல?
////கனிமொழி - ராசா கிண்டல் அடிச்சு ஒரு ஜோக் போட்டிருந்தேன்.. ஈரோடு தாதா என் கே கே பி ராஜா வோட அடிப்பொடி ஒருவர் ஃபோன் பண்ணி அந்த ஜோக்கை எடுத்துடுன்னாரு,... /////
ம்ம் இதுவும் முன்னாடி சொல்லி இருக்கீங்க!
////ஒரு படம் எடுக்க 30,000 செலவு ஆகும், மொத்தம் 3 லட்சம் ஆகும்.. அதுக்கு ஸ்பான்சர் கிடைக்காது கைக்காசு தான் போடனும்.. அதான் திங்க்கிங்க்.. ///////
இணையத்துல நிறைய ஸ்பான்சர்ஸ் கிடைப்பாங்க, புரியுதா?
////சித்து + 2 பட விமர்சனத்துல கே பாக்யராஜ் சாரை நக்கல் அடிச்சிருந்தேன்.. 18 வருஷமா அவர் பத்திரிக்கைல ஜோக் எழுதிட்டு இப்படி கவுத்துட்டானே என உதவி ஆசிரியரிடம் வருத்தப்பட்டதா எனக்கு தகவல் வந்தது.. ஆனா நேரடியா என் கிட்டே எதுவும் கேட்கல.. //////
ஆஹா அப்ப பதினெட்டு வருசமா சோக்கு எழுதுறீங்களா ? அப்படினா இப்ப உங்க வயசு நாப்பது இருக்கும் .நாப்பது பிளஸ் பதினெட்டு= அம்பத்தெட்டு ,ஆக இப்ப உங்களுக்கு அம்பத்தெட்டு வயசு ஆகுது, எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்காரு அவருக்கும் அம்பத்தெட்டு வயசுதான் ஆகுது ,அவர நான் மாமான்னுதான் கூப்பிடுவேன் , அப்ப இனிமே உங்கள மாமானுதான் கூப்பிடனும் ,இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இனிமேல் சிபி எல்லோரும் " மாமா " என்றே அழைக்கவேண்டும் ,
" மாமா" சிபி அவர்களுக்கு எனது வணக்கம்
///அதுவும் இல்லாம நான் ஹேர் கட் மாதம் ஒரு முறை பண்ணிக்குவேன் சோ நோ சான்ஸ் டூ தலைக்கனம். சதி வலைன்னு சொல்ல முடியாது ஆற்றாமை, பொறாமை காரணமாக எழுந்த எதிர்ப்புகள்னு சொல்லலாம். அவற்றை பொறுமை, சகிப்புத்தன்மை என்ற 2 ஆயுதங்கள் மூலம் சமாளீத்தேன்.///
என்னது முடி நெறைய வச்சிருக்கவுங்கலாம் தல கணம் புடுச்சவுங்களா, பெண்கள் நிறைய முடி வைத்திருக்கிறார்கள் ( சில பேர் அல்ல அல்ல பல பேராக கூட இருக்கலாம் ,அவர்கள் எல்லாம் கனம்தாங்காமல் கலட்டி வைத்துவிடுவார்கள் என்பது வேறு விசயம் ) நிறைய முடி வைத்திருக்கும் பெண்கள் எல்லாம் தல கணம் பிடித்தவர்களா ? அப்படி என்றால் நீங்கள் பெண்ணிய எதிர்ப்பாளாரா ?( டேய் மணி இதான் சான்சு போட்டு தாக்கு )
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ஒரு படம் எடுக்க 30,000 செலவு ஆகும், மொத்தம் 3 லட்சம் ஆகும்.. அதுக்கு ஸ்பான்சர் கிடைக்காது கைக்காசு தான் போடனும்.. அதான் திங்க்கிங்க்.. ///////
இணையத்துல நிறைய ஸ்பான்சர்ஸ் கிடைப்பாங்க, புரியுதா?///
அண்ணே நீங்களும் இணையத்துலதானே இருக்கீங்க ,ஏன் நீங்க ஸ்பான்சர் பண்ண வேண்டியதானே ,( எப்படி கோர்த்து விட்டோம்ல ) இதையே நீங்க ரீபீட் பண்ண முடியாது , ஏன்னா அவரு கிட்ட இந்த கேள்விய நான் கேக்கவில்லை நீங்கள் தான் கேட்டீர்கள்
மாமா சிபி செந்தில்குமார் ,பன்னிகுட்டி அண்ணன்கிட்ட பேசிட்டேன் , இப்பதான் பேசினேன் உங்களுக்கு பத்துலட்சம் ஸ்பான்சர் பண்றாராம்
பன்னிக்குட்டி ராம்சாமி said... 15 Best Blogger Tips [Reply To This Comment]
////// இருந்தாலும் சில சமயங்களீல் நண்பர்களே இப்படி கலாய்க்கறாங்களேன்னு மனம் வருத்தப்படுவேன்.. அவங்களூக்கு பதிலடி குடுக்கலாம்னு நினைப்பேன்.. அப்போ என் மனசாட்சி வந்து தடுத்துடும்.. உன் சுயநலம் முக்கியமா? நட்பு முக்கியமா?ன்னு கேட்கும்.. அதனால நம்ம மனசு புண்பட்டாலும் அடுத்தவங்க மனசு புண்படக்கூடாதுன்னு நினைச்சுக்குவேன்.. //////
எல்லாரும் கேட்டுக்குங்கப்பா........ கலாய்க்கும் போது பாத்து பண்ணுங்கப்பா...........///
அண்ணே பன்னிகுட்டி அண்ணே நான் கூட அவர 'மாமா'ன்னு சொல்லிட்டேனே ,ரொம்ப வருத்தபடுவாரோ? ,கேட்டு சொல்லுங்கண்ணே
அருமை சிபி.
நன்றி பிரகாஷ்.
வாழ்த்துக்கள்.
/////நா.மணிவண்ணன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 15 Best Blogger Tips [Reply To This Comment]
////// இருந்தாலும் சில சமயங்களீல் நண்பர்களே இப்படி கலாய்க்கறாங்களேன்னு மனம் வருத்தப்படுவேன்.. அவங்களூக்கு பதிலடி குடுக்கலாம்னு நினைப்பேன்.. அப்போ என் மனசாட்சி வந்து தடுத்துடும்.. உன் சுயநலம் முக்கியமா? நட்பு முக்கியமா?ன்னு கேட்கும்.. அதனால நம்ம மனசு புண்பட்டாலும் அடுத்தவங்க மனசு புண்படக்கூடாதுன்னு நினைச்சுக்குவேன்.. //////
எல்லாரும் கேட்டுக்குங்கப்பா........ கலாய்க்கும் போது பாத்து பண்ணுங்கப்பா...........///
அண்ணே பன்னிகுட்டி அண்ணே நான் கூட அவர 'மாமா'ன்னு சொல்லிட்டேனே ,ரொம்ப வருத்தபடுவாரோ? ,கேட்டு சொல்லுங்கண்ணே
///////
சே சே அதெல்லாம் வருத்தப்பட மாட்டாரு.... அதுக்காக கமிசனை குறைச்சி கொடுத்திடாதிங்கப்பா.....!
தொந்தரவுகள் ஏதாவது வந்திருக்கா?
கனிமொழி - ராசா கிண்டல் அடிச்சு ஒரு ஜோக் போட்டிருந்தேன்.. ஈரோடு தாதா என் கே கே பி ராஜா வோட அடிப்பொடி ஒருவர் ஃபோன் பண்ணி அந்த ஜோக்கை எடுத்துடுன்னாரு,... சரிங்க.. நான் ஆஃபீஸ்ல இருக்கேன்,.. மாலைல வந்து எடுத்துடறேன்னேன்.. ஆனா அவங்க 10 அடியாளுங்களை வீட்டுக்கு அனுப்பி அதை எரேச் பண்னாத்தான் போவோம்னாங்க.. அப்புறம் வேற வழி இல்லாம நெட் செண்ட்டர் போய் அந்த ஜோக்கை எரேஸ் பண்ணேன்..
இந்த மறுமொழி என்னை ஏதோ செய்யுது..இதுக்குதான் கூண்டோடி போயிட்டாங்க...
கருட்து சுதந்திரம் தெரியாத காடையர்கள்..
காட்டான் குழ போட்டான்....
எந்த கேள்வி கேட்டாலும் சமாளிக்கிற திறமை செந்தில் கிட்டே இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன்..
யோவ பண்ணிக்குட்டி நிறுத்துமையா போதும் உமது கேள்விக்கணைகள்
<<பன்னிக்குட்டி ராம்சாமி said... 4 Best Blogger Tips [Reply To This Comment]
அப்போ நான் தான் ஓவரா கேள்வி கேட்டவனா?
யோவ், நீங்க எல்லாமே ஓவர் தான்
கலக்கல் எக்ஸ்க்ளுசிவ்!!!!!!!!!பேட்டி!
நல்லா இருக்கு
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ நான் தான் "ஓவரா" கேள்வி கேட்டவனா?////ஒரு "ஓவரில"(OVER) ஆறு பால் தான் போடலாம்!
ஓவரா என்னும் போது காட்டானுக்கு ஓவர்ன்னு விளங்கீற்று.. இதுக்கு பதில் போட ஒரு குறும்பாடு வரும்ங்கோ அத பிடிச்சு கட்டி வையா மாப்பிளா நான் போடும் இலைகளை தின்னுதையா..
காட்டான் குழ போட்டான்...
காட்டான் said...
ஓவரா என்னும் போது காட்டானுக்கு "ஓவர்"ன்னு விளங்கீற்று///கரெக்ட்!"ஓவர்" தான்!!!!!!!!!!!
ப்போ என் மனசாட்சி வந்து தடுத்துடும்.. உன் சுயநலம் முக்கியமா? நட்பு முக்கியமா?ன்னு கேட்கும்.. அதனால நம்ம மனசு புண்பட்டாலும் அடுத்தவங்க மனசு புண்படக்கூடாதுன்னு நினைச்சுக்குவேன்.. அண்ணா எம்புட்டு நல்லவரு......அவரை போய் எப்படி கலாய்கிறாங்க பா..
10ஆம் கிளாஸ் படிக்கறப்ப எங்க கிளாஸ் கணக்கு வாத்தியார் அந்த படத்துக்கு வந்துட்டார்.. அவர் பால்கனில நான் பெஞ்ச்ல... என்னை பார்த்துட்டார்னு தான் நினைக்கறேன் ஹி ஹி சமாளீக்க தெரியலை.. ஆனாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்தினா..
ஏற்கனவே காமெடி ஸ்கிரிப்ட் 3 புது இயக்குநர்களுக்கு எழுதிக்கொடுத்து இருக்கேன்.. ஏமாந்தும் இருக்கேன்.. லெட் சீ.. நாளைய தினம் நமக்காக விடியும் என்று ஏங்கிக்கிடப்பதுதானே படைப்பாளனின் கடமை?வாழ்த்துக்கள்..அண்ணா.நீங்கள் சின்னத்திரையில் நுழைவதற்க்கு
பேட்டி கலக்கல். விரிவான பின்னூட்டங்களோடு பின்னர் வருகின்றேன்.
//சிலர் அதை மறக்க நகைச்சுவை எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள்.. //
கஷ்டப்பட்டவனுக்குத் தான் நகைச்சுவை வரும்-னு நாகேஷ் ஒருமுறை சொனனர்! நல்ல பதில் சிபி.
//நாமும் அது போல் வர வைக்கனும் என்ற எண்ணம் மனதில் பிறந்தது..// சிபி பதிவு அங்க வர்றதுக என்ன்ய்யா பெருமை..அவிய்ங்க கட்டுரை சிபி ப்ளாக்ல வர்றது தான் அவிய்ங்களுக்குப் பெருமை!
இன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்..தமிழ்மண ஒட்டு மட்டும் போட்டேன்...மன்னிச்சு...
நண்பர் சி.பி என் கேள்விக்கான பதில் என்னை அழவைத்து விட்டது. நண்பா கவலைப் படாதீர்கள் இந்த சிரிக்கும் சிபிக்குள் இப்படி ஒரு சோகமா? ஒரு பதிவா சோகத்தை பகிர்ந்து ஆறுதல் தேடலாம் இல்லையா? சி.பி எல்லா பதில்களும் அர்த்தமுள்ள ஆழமான கருத்துக்கள் உடையவை. வாழ்த்துக்கள்!!! விமர்சனம் கண்டு கலங்க வேண்டாம் காய் உள்ள ம்ரத்திற்க்கு தான் கல் எறி உண்டு என்று தெரியும் தானே...
வாழ்த்துக்ள் சகோதரா!
வாழ்த்துக்கள் சகோதரா!
என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு
சிபி அவர்களின் கேள்வி பதில்கள் ஒரு
டானிக் போல அமைந்துள்ளது.நன்றி பிரகாஷ்
இதில் நண்பர் சிபி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்... 3 இயக்குனர்கள் ஸ்கிரிப்டை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்கள் என ... நான் பல புது இயக்குனர்களிடம் ஏமாந்திருக்கிறேன்.. உழைப்பை மாத கணக்கில் வாங்கிக்கொண்டு ரூபாய் 20 பேட்டாவைக்கூட தராமல் ,சம்பளம் தராமல் கடைசியில் வாய்ப்பும் தராமல் நிராகரிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறேன்.. ஆனால் திரு. கனல்கண்ணன் அவர்கள் மட்டும் முறையாக சம்பளம் கொடுத்து உதவி இயக்குனர் நிலைமையை புரிந்துக்கொண்டவர்...அவருக்கும், பரிந்துரைத்த உதவி இயக்குனர் யுவராஜ் அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.... இந்த கருத்து விளம்பரத்திற்காக அல்ல ஏமாற்றப்பட்டார் என்று சொன்னவுடன் எனது நிலைமை ஞாபகத்திற்கு வந்தது...கெட்டவர்களுக்கு மத்தியில் நல்லவர்களும் இருக்கிறார்கள் நாம் தான் தேடி பெற்றுக்கொள்ளவேண்டும்.. நண்பர் சிபி அவர்கள் வாய்ப்பு கிடைத்து இயக்குனராக வேண்டி எல்லம் வல்ல இறைவனை வேண்டுவோம்... பகிர்வுக்கு நன்றி ... நன்றியுடன் வாழ்த்துக்கள்...
நெல்லை பதிவர் சந்திப்புக்கப்புறம் ஏன் திருந்திட்டீங்க.. இல்ல இல்ல திருந்திட்டேன்னு சொல்றீங்க? இதுக்கு முன்னாடி யாருமே இதுவரை உங்களை திருந்தச் சொல்லலியா?
யோவ்.. விளையாடறீங்களா/ மொத்தம் 37 பேரு.. ஹாலை சாத்திட்டாங்க.. மாத்தி மாத்தி.. 4 மணி நேரம்.. திணறத்த்திணற.. ஹி ஹி அந்த எஃபக்ட் கொஞ்ச நாளாவது இருக்காதா?//
ஹா ஹா ஹா ஹா நான் நெனைச்செண்டா அண்ணா நீ இப்பிடித்தான் பதில் சொல்வேன்னு ஹி ஹி...
நாளைய இயக்குநருக்கு வாழ்த்துக்கள்.
நாளைய இயக்குனராக நல்வாழ்த்துகள் சிபி - நட்புடன் சீனா
அட என் கேள்வியையும் இணைத்துவிட்ட தமிழ் வாசிக்கும் பதில் தந்த சி.பி க்கும் ஒரு டோடா.எவ்வளவு காலம் தான் நன்றி என்று சொல்வது.
நான் தப்பு பண்ணின மாதிரி என்மேலயே குற்றம் சொல்லப்பா நீ?