CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



திரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

       தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு சில முக்கிய கட்சிகளுக்கிடையே கூட்டணி தொடரும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு இருந்த கூட்டணி அப்படியே இந்த தேர்தலுக்கும் தொடரும் என்றே நினைத்திருந்த சமயத்தில் கூட்டனிக்கிடையே பிளவை ஆரம்பித்தி வைத்தவர் ஜெயலலிதா. கடந்த சட்டசபை தேர்தலைப் போலவே இந்த தேர்தலுக்கும் கூட்டணி கட்சிகளை கலந்த ஆலோசிக்காமலே தன்னிச்சையாக போட்டியிடும் இடங்களை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளான தேமுதிக, அதிமுக உடன் கூட்டனியில் இருக்கிறோமா? இல்லையா? என்ற தெரியாத திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டது. 
           அதிமுக அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை ஜெ விடம் எப்படி பணிவுடன் நடந்து கொள்வார்களோ அந்த அளவுக்கு விஜயகாந்தும், அவரது கட்சியினரும் விசுவாசமாக நடந்து கொண்டார்கள். ஒரு எதிர் கட்சியாக இருந்து கொண்டு எந்த கேள்விகளும் கேட்காமலும், சட்டசபையில் எதிர் வாதங்களும் புரியாமல் அமைதி காத்து வந்தார்கள் தேமுதிக வினர். அப்படி நடந்தால் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிர்பார்த்த இடங்கள் கேட்டுப் பெற்று விடலாம் என்ற ஆசையில் இருந்தது. ஆனால் ஜெ நினைத்தது வேறு. தேமுதிக வளர இந்த உள்ளாட்சி தேர்தல் வாய்ப்பாக இருக்கும் என எண்ணியே இடங்கள் தராமல் எல்லா இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஒரு பெரிய கட்சியின் நிழலில் சட்டசபை தேர்தலில் ஜெயித்த தேமுதிக வுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இது ஒரு புறமிருக்க திமுகவும் காங்கிரஸை கழட்டி விட்டது. இது ஏற்கனவே எதிர்பார்த்த முடிவுதான். இப்படி திமுக, அதிமுகவும் கூட்டணிகளை விடுத்து தனித்தனியே போட்டியிடும் இடங்களை அறிவித்தது. ஆனால் தேமுதிக மிகவும் தாமதமாகவே போட்டியிடும் இடங்களை அறிவித்துள்ளது. இது அவர்களின் முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதத்தை காட்டுகிறது. அந்த சூழ்நிலையிலும், அதிமுகவுடன் கூட்டணியில் பழகிப் போன விஜயகாந்த் ஏதாவது கட்சியுடன் கூட்டணி சேர முடியுமா என எதிர்பார்த்திருந்தவருக்கு கம்யுனிஸ்ட் உதவியது. இப்படி ஒரு வழியாக கூட்டணி சேர்ந்து வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த கூட்டணி மூலம் தேமுதிக சந்தர்ப்பவாத கட்சியாக உருவெடுத்துள்ளது. 
           தனது கட்சியை வளர்க்க ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறும் பாமக போல யாருடனும் கூட்டணி வைக்கும் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது தேமுதிக. அக்கட்சி தொண்டர்களுக்கு அவர்களின் கொள்கையே மறந்து விட்டது போலும். மக்கள் நலனை காக்கும் கட்சி எங்கள் கட்சி என்று கூக்குரலிட்டவர்கள் யாருடன் கூட்டணி சேர்ந்து பாதுகாப்பு அரசியல் செய்யலாம் என்ற நிலைக்கு வந்துள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக. தேமுதிக கூட்டணிக்கு வாக்களித்த மக்கள் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிப்பார்களா? அல்லது தேமுதிகவுக்கு வாக்களிப்பார்களா? இதே நிலை தான் மற்ற கட்சிக்கும். 
       மக்களின் வாக்களிக்கும் உரிமையை இவ்வாறான கூட்டனிகளே தீர்மானிப்பதாக இந்த சூழ்நிலை அமைகிறது. வாக்காளர்கள் தனித்து முடிவெடுப்பதெல்லாம் மலையேற்றி விட்டது இந்த கூட்டணி முறை. நான்கு மாதத்துக்கு முன் ஒரு கட்சிக்கு விரும்பி ஓட்டு போட்ட மக்களுக்கு இன்று அந்த கட்சி விரும்பாத கட்சியாக மாறியுள்ளது. இதற்கு காரணம் இந்த கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறியதே ஆகும். திமுக, அதிமுக, கம்யும்னிஸ்ட் போன்ற பழைய கட்சிகள் கூட்டணி தர்மத்தை மாற்றிக் கொண்டே இருக்கலாம், அது அவர்களுக்கு புதிதல்ல. ஆட்சியை பிடிக்க அவர்கள் போடும் கணக்கு இது. ஆனால் தேமுதிக எந்த கணக்குடன் கூட்டணி அமைகிறது? கடந்த சட்டசபை தேர்தலில் கொடுக்கப்படும் இடங்களின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணியை முடிவு செய்தது. அந்த சமயங்களில் அதிமுகவுக்கு பெறும் நெருக்கடியை கொடுத்தே அதிக இடங்களை பெற்றது. இந்த தேர்தலிலும் அவ்வாறான நெருக்கடிக்கு ஆளாகாமல் ஜெ சுதாரித்து விட்டார். அதனாலேயே தேமுதிகவுக்கு நெருக்கடி ஏற்ப்பட்டு கம்யுநிஸ்டுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டனியால் தேமுதிகவின் வாக்கு வாங்கி குறையுமா? கூடுமா? என்பது தேர்தல் முடிவைப் பொறுத்தே தெரியும். வாக்கு வாங்கி சரியும் பட்சத்தில் தேமுதிகவிடம் இருந்து மக்கள் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளார்கள் என்பது தெரிய வரும். விஜகாந்துக்கும், அவரது கட்சியினருக்கும் மக்கள் மத்தியில் நிலையான கட்சியாக உருவெடுத்துள்ளதா என்பதும் இந்த தேர்தல் முடிவைப் பொறுத்தே உள்ளது.
        தேமுதிக உருவான காலத்தில் மற்ற கட்சிகளுக்கு மாற்றாக ஒரு நல்ல கட்சி உருவெடுத்துள்ளது என உணர்வு தற்போது குறைந்து வருவதாக தெரிகிறது. கட்சி வளர்க்க போதிய நிதி வசதியும் இல்லாததை இந்த கூட்டணி அமைத்தலில் காணப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் குறைந்து வருவதாகவே தெரிகிறது. இதற்கு உதாரணம் சமச்சீர் கல்வி பிரச்சனையில் ஜெ வை ஆதரித்தும் பேசவில்லை, எதிர்த்தும் பேசவில்லை. அது ஏன்? இன்று வரை தேமுதிக எந்த கொள்கையுடன் செயல்படுகிறது என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளதாக நினைக்கிறேன். மக்களுக்கு ஆதரவான கட்சியாக இருக்கப் போகிறதா? அல்லது, மற்ற கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை பெறுவதில் நெருக்கடி தரும் கட்சியாக இருக்கப் போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம் நண்பர்களே.


29 கருத்துரைகள்:

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

Naana ?

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

Hatric....3 days-aa .....

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

Hatric-ku ethum MEYER pathavi
kidaiyaathaa??

ம.தி.சுதா said... Best Blogger Tips

கப்டனும் இனி அரசியல்வாதி தானே அதுக்குத் தகுந்தால் போற மாற வேணாமா?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்

Unknown said... Best Blogger Tips

இது இன்னொரு சந்தர்ப்பம் கேப்டனுக்கு..

இப்போது தன்னுடைய பலத்தை தெரிந்து கொள்ளலாம் பிறருக்கும் தெரியப்படுத்தலாம்..

இதில் சொல்லிக்கொளும் அளவு ஓட்டுக்கள் பெற்றால் அடுத்த தேர்தல் கூட்டணி பற்றி பேச்சு வார்த்தையில் அதிகம் சீட்டு கேட்க உதவும்..

சம்பத்குமார் said... Best Blogger Tips

கேப்டனின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் அதிகரிக்கும் என்றே நினைக்கிறேன்

Anonymous said... Best Blogger Tips

////ஒரு எதிர் கட்சியாக இருந்து கொண்டு எந்த கேள்விகளும் கேட்காமலும், சட்டசபையில் எதிர் வாதங்களும் புரியாமல் அமைதி காத்து வந்தார்கள் தேமுதிக வினர். /// அரசியல்வாதிஎண்டால் இவரல்லோ )))

காட்டான் said... Best Blogger Tips

அம்மாவிற்கு ரெம்பத்தான் தைரியம் பார்போம்..!!!!)))

Unknown said... Best Blogger Tips

என்னாது கொள்கையா...எங்க கொள்கை ஏன்னா தெரியுமா...பம்பரம் விட்டு அரசியலுக்கு வந்தவங்க நாங்க...நாடு மக்கள்...இதெல்லாம் எங்கயோ கேட்டாபோல இருக்கே...அய்யயோ தேர்தல் வருதில்ல!

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

கேப்டன் வாழ்க!!!!!!!

SURYAJEEVA said... Best Blogger Tips

தே.மு.தி.க வின் கொள்கை என்ன என்று சொல்ல சொல்லுங்கள், பிறகு அவர்களுடன் கூட்டணி பற்றி பேசுவோம் என்று அந்த கட்சி ஆரம்பிக்கப் பட்ட புதிதில் முழங்கியவர்கள் பொது உடமை கட்சியினர்... சமச்சீர் கல்வி குறித்து கழுதை குதிரை என்று தமிழக அரசின் முடிவுக்கு சாதகமாகவே கேப்டன் முழங்கினார் என்பதும் தெரிந்ததே.. மக்களுடன் கூட்டணி என்ற பொழுது மக்கள் அவர் பக்கம் நின்றனர்... என்று மக்கள் கூட்டணி புளித்ததோ அன்றே மக்கள் அவரை புறக்கணித்தனர்...

MUTHU said... Best Blogger Tips

திமுக இந்த தனித்துப் போட்டி என்ற நிலையை எடுக்க காரணம் திருவாளர் இளங்கோவன் என்பது அனைவருக்கும் தெரியும். எவ்வளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் அதிமுக இந்த முடிவு எடுக்க யார் காரணம் தேமுதிக வை வளர்த்துவிட அம்மா விருப்பப்படவில்லை. எப்படியும் இரண்டு மாநகராட்சி, 40-50 நகராட்சி 100 பேரூராட்சியை பெற்றுவிட வேண்டும் என்றுதான் கேப்டனும் பரமக்குடி துப்பாக்கிச்சூட்டை பற்றிக்கூட பேசாமல் இருந்து பார்த்தார் ஆனாலும் அம்மா தரவில்லை. உடனே கேப்டன் தனி கூட்டணி அமைக்க முடிவெடுத்து விட்டார் இனிமேல் அவரால் தனியாக நிற்க முடியாது என்பது இதன் மூலம் தெரிகிறது. விரைவில் மதிமுக போல மாறிவிடும் என தெரிகிறது.

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

எலேய் முதல்ல என் மச்சினனுக்கு போன போட்டு உம்மை காட்டி குடுக்கப்போறேன், வலை வீசி தேடிட்டு இருக்கான்....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

பிரகாஷ், இனி ராத்திரி ஒரு மணிக்கெல்லாம் போன வளும் [[வரும்]] பார்த்துய்யா ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

தமிழ்மணம் ஏழு டண்டனக்கா...

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் பாஸ்,

தனித்துப் போட்டியிட முடியாதவராகவும்
கூட்டணி வைக்க முடியாதவராகவும்
முழித்துக் கொண்டிருக்கும் கேப்டனின் நிலையினை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

துரைராஜ் said... Best Blogger Tips

vijaykanth meethu amputtu veruppaanne ungalukku...

கவி அழகன் said... Best Blogger Tips

இதெல்லாம் சகஜமப்பா

சசிகுமார் said... Best Blogger Tips

அருமை

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

சுட்டி சுட்டி உன் வாலைக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி......
வட்டி வட்டியும் முதலுமா வாங்கிக் கொள்ளடி......

சத்ரியன் said... Best Blogger Tips

அரசியல் அலசல் அவசியம்.

பதிவிட்டு பகிர்ந்தமைக்கு நன்றிங்க பிரகாஷ்.

Anonymous said... Best Blogger Tips

//////அதிமுகவுடன் கூட்டணியில் பழகிப் போன விஜயகாந்த் ஏதாவது கட்சியுடன் கூட்டணி சேர முடியுமா என எதிர்பார்த்திருந்தவருக்கு கம்யுனிஸ்ட் உதவியது. இப்படி ஒரு வழியாக கூட்டணி சேர்ந்து வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த கூட்டணி மூலம் தேமுதிக சந்தர்ப்பவாத கட்சியாக உருவெடுத்துள்ளது./////

இந்த கருத்து முற்றிலும் உங்கள் வசதிக்காக வளைத்து எழுதியிருக்கிறீர்கள். தே.மு.தி.க அ.தி.மு.க வுடன் கூட்டணியை தொடரவே விரும்பியது. ஆனால் அதை அ.தி.மு.க விரும்பவில்லை. இதனால் கூட்டணிக்காக தே,மு.தி.க எந்தக் கட்சியை நோக்கியும் எவ்வித கூக்குரலும் இடவில்லை. கம்யூனிஸ்டு தேடி வந்தது. அதை ஏற்றுக்கொண்டது. இதை சந்தர்ப்பவாத கட்சியென்று அழைப்பது உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை கூறுவதைப்போல் உள்ளது.

M.R said... Best Blogger Tips

அரசியல் அலசல்

அனைத்திலும் போட்டாச்சு வாக்கு

செங்கோவி said... Best Blogger Tips

அக்கட்சி தொண்டர்களுக்கு அவர்களின் கொள்கையே மறந்து விட்டது போலும். //

கொள்கையா? தேமுதிகவிற்கு ஏதய்யா கொள்கை?

செங்கோவி said... Best Blogger Tips

//மக்கள் நலனை காக்கும் கட்சி எங்கள் கட்சி என்று கூக்குரலிட்டவர்கள் யாருடன் கூட்டணி சேர்ந்து பாதுகாப்பு அரசியல் செய்யலாம் என்ற நிலைக்கு வந்துள்ளது. //


ஐயா, அதைச் செய்திருப்பது கம்யூனிஸ்ட்கள் தான்..தேமுதிக அல்ல. மேலும், கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி சேர்வதில் விஜயகாந்திற்கு இழுக்கு இல்லை..இழுக்கு, கம்யூனிஸ்ட்களுக்குத் தான்.

Anonymous said... Best Blogger Tips

காப்டன் வய்ஸ் காப்டன் ஆகிறார்...

அம்பாளடியாள் said... Best Blogger Tips

ஆகா அரசியல் .வாழ்த்துக்கள் சகோ .எல்லா ஓட்டுக்களும்
போட்டாச்சு ............

K said... Best Blogger Tips

பொறுத்திருந்து பார்க்கலாம் தமிழ்வாசி சார்! ஆமா அவருக்கு என்னாச்சு்?

Mahan.Thamesh said... Best Blogger Tips

நல்ல அரசியல் அலசல்

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1