ஒருவரைப் பற்றி கடுஞ் சொற்கள் பேசுவதற்கு முன் பேசவே முடியாத ஒரு மனிதரை நினைத்து பாருங்கள்.
உணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள்.
நமது வாழ்க்கைத் துணை பற்றி புகார் அல்லது கோபம் கொள்ளும் முன் துணையே இல்லாத மனிதர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.
நம் வாழ்க்கை இப்படி ஆனதே என்று புலம்பும் முன் வாழ்க்கையே மறுக்கப்பட்டவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.
எப்பொழுதும் குழந்தைகள் பற்றிக் கடிந்து பேசும் போது குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.
சுத்தமாக வீடு இல்லையே என்று அலுத்துக் கொள்ளும் முன் சாலையோரத்தில் வாழும் மனிதர்களை நினைத்துப் பாருங்கள்.
சீராக வாகனத்தை ஓட்ட முடியவில்லையே எனப் புலம்பும் முன் பெரும்பாலும் நாள் தோறும நடந்தே செல்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.
நமது பணி பற்றி பிறர குறையோ குற்றமோ சொல்லிப் புலம்புவதற்க்கு முன் பணி கிடைக்காமல் அவதிப்படுபவர்களை நினைத்துப் பாருங்கள்.
இப்படி ஒவ்வொருவரும் தன்னைத் தானே ஒரு தராசில் நிறுத்திப் பார்த்து எது நல்லது என பகுத்துப் பார்த்தால் நாம் வாழ்வில் உயரலாம்.
இதையே வள்ளுவர் சொல்கிறார்,
"ஏதிலார் குற்றம்போல் தன் குற்றம் கான்கிற்பின் தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு".
42 கருத்துரைகள்:
நல்ல பதிவு.சிந்திக்க வைத்த கருத்துக்கள்.
//உணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள்.//
அடப்பாவி மனுசா...ஆஃபீசர் நல்ல மனுசனாச்சே..அவரைப் போய் ஏன்யா வம்புக்கு இழுக்கிறீங்க?
//நமது வாழ்க்கைத் துணை பற்றி புகார் அல்லது கோபம் கொள்ளும் முன் துணையே இல்லாத மனிதர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.//
இது என்னடா அநியாயமா இருக்கு பொண்டாட்டிய திட்டணும்னா கல்யாணம் ஆவாதவங்கள நெனச்சி பார்க்கணுமா என்னடா இது ஒண்ணுமே புரியல...
//சுத்தமாக வீடு இல்லையே என்று அலுத்துக் கொள்ளும் முன் சாலையோரத்தில் வாழும் மனிதர்களை நினைத்துப் பாருங்கள்.//
டே மாப்ள நிறைய பேருக்கு வீடு இல்லைன்னு நீயும் ரோட்ல தான் இப்ப படுக்குரியாமே உண்மையாவா...
அப்படியே நம்ம அரசியல்வாதிகளை இதெல்லாம் நினைசுப்பாக்க சொல்லுங்க!
வரி கட்டாம வயிறு பெருதுக்கிடக்கரவங்க எல்லாம் இத படிச்சா தேவலாம்
Inniku vadai poche ??
Adutha prakashanantha !!!! ????
திருக்குறளுக்கு விளக்கமா?
இல்ல... விளக்கத்திற்கேற்ற குறளா???
அழகான தத்துவங்கள் நண்பரே
தமிழ் மணம் ,தமிழ் 10 ஒட்டு போட்டாச்சு ....
இன்ட்லியில் எப்பிடி ஒட்டு போடறது ,
Good thoughts . . . Keep it up
தத்துவம் கண்ணா தத்துவம்..
அத்தனையும் சூப்பர்..
தத்துவம் கண்ணா தத்துவம்..
அத்தனையும் சூப்பர்..
உலவுக்கும், உங்களுக்கும் வாய்க்காத்தகராறா?
superb!
இந்தப் பயலுக்கு என்ன ஆச்சு...!!! என்னமோ ஆகிப் போச்சு .ஆனா தத்துவ மழை நல்லாத்தான் இருக்கு .ஓட்டெல்லாம் போட்டாச்சு .அட கடவுளே எனக்கு விழுகுற எந்த ஓட்டும்
இருவதத் தாண்டுதில்ல.சரி இனிமேல் ஐந்துக்குக் கீழ் நிற்பவர்களை
நினைத்துப் பார்ப்போம் நம்ம தமிழ் வாசி மாதிரி ஹி..ஹி ..ஹி ..
நன்றி சகோ வாழ்த்துக்கள் ...........
அடடா மொட்டை மாடியில மல்லாந்து கிடந்தது சிந்திச்சிருக்கார், அதான் இம்புட்டு அருமையா வந்துருக்கு ஹி ஹி...
இப்பிடி மனிதன் நினைக்க ஆரம்பித்தால் ஆசையில்லாத உலகமா மாறிடும், ஆ ராசாவும், கனிமொழியும் வெளியே வந்துவிடுவார்கள்...
அழகாக
ஆழமாக
புரியும் விதமாக
அருமையாகச் சொன்னீர்கள் நண்பா..
அழகாக
ஆழமாக
புரியும் விதமாக
அருமையாகச் சொன்னீர்கள் நண்பா..
ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய சிந்தனை...
right
Good post Prakash!
சிந்திக்க வைத்த நல்ல பதிவு.
ரைட்டு...
///இப்படி ஒவ்வொருவரும் தன்னைத் தானே ஒரு தராசில் நிறுத்திப் பார்த்து எது நல்லது என பகுத்துப் பார்த்தால் நாம் வாழ்வில் உயரலாம்.///
தனக்கு மேலிருப்பவர்களை பார்த்து அவர்களை போல அடையனும்னு நினைக்கலாம், அதேபோல கீழிருப்பவர்களைப் பார்த்து அவர்களை விட நாம் எவ்வளவோ நன்றாக இருக்கிறோம் என்று சந்தோசப்பட்டுக்கொள்ளலாம்.
பதிவு அருமை பிரகாஷ்.
நல்ல சிந்தனைகள் பாஸ்!
நல்ல விழிப்புப் பதிவு!நல்ல சிந்தனைகள்!அத்தனையும் சூப்பர்!அருமையாகச் சொன்னீர்கள்!சிந்திக்க வைத்த கருத்துக்கள்.
நல்ல பதிவு சிந்திக்க வைக்கும் கருத்துகள்
நல்ல பதிவு , கருத்துக்கள் நச்சுன்னு இருக்கு . இதை அனைவரும் பின்பற்றினால் நல்ல இருக்கும்
வாழ்த்துக்கள் நண்பரே . . .
நல்லா கருத்துச் சொல்லி இருக்கீங்க...!
நல்ல கருத்துக்கள்.. அருமையா சொல்லியிருக்கிறீங்க
இனிய இரவு வணக்கம் பாஸ்,
வாழ்வில் மேம்படுவதற்கேற்ற அருமையான சிந்தனைகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி தல.
ரைட்டு...
எங்கயாவது இப்படி கமென்ட் எழுதுனம்னு ஆசை..பிரகாஸ்...நிறைவேறி யாச்சு...
-:)
இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால்.. நாட்டில் ஒரு பிரச்சனையும் இருக்காது... கவலை என்ற ஒரு சொல்லே இருக்காது என நினைக்கிறேன்.. கலக்கல் நண்பா
நல்ல பதிவு, நல்ல கருத்துக்கள்...
செங்கோவி said...
//உணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள்.//
அடப்பாவி மனுசா...ஆஃபீசர் நல்ல மனுசனாச்சே..அவரைப் போய் ஏன்யா வம்புக்கு இழுக்கிறீங்க?////
எத எதோட கொர்க்குது பாருங்க, எப்புடிண்ணே இப்புடியெல்லாம் சிந்திக்கிறீங்க?
ஓட்டு வாங்கலியே கவலை படறதை விட்டுட்டு... ப்ளாக்னா என்னன்னு கேட்கறானே அவனை நெனச்சி பாரு..
அட உங்க பதிவு என்னையும் தத்துவம் பேச வைக்குது :)
இவை கவலையை போக்கும் சிந்தனைகள்தான். நல்ல பதிவு பிரகாஷ்.
Ha ha ha
Ha ha ha
Ha ha ha