முந்தைய பாகங்களுக்கு...
டிஸ்கி:
டிஸ்கி:
இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி
இந்த பதிவின் இறுதியில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும்.
கடந்த பாகத்தில் நாம் G CODE, M CODE, ADDRESS CHARACTERS பற்றி பார்த்துள்ளோம். இன்று நாம் பார்க்க போவது CO-ORDINATE METHODS.
1. ABSOLUTE CO-ORDINATE METHOD,
2. INCREMENTAL CO-ORDINATE METHOD
1. ABSOLUTE CO-ORDINATE METHOD என்றால் என்ன?
வரைபடத்தின் ஒவ்வொரு புள்ளியையும் குறிப்பிடும் போது ஒரு பொதுவான புள்ளியை வைத்து குறிப்பிடப்படுவது ABSOLUTE CO-ORDINATE METHOD எனப்படும்.
2. INCREMENTAL CO-ORDINATE METHOD என்றால் என்ன?
வரைபடத்தின் ஒவ்வொரு புள்ளியையும் குறிப்பிடும் போது அதற்கு முந்தைய புள்ளியை வைத்து குறிப்பிடப்படுவது INCREMENTAL CO-ORDINATE METHOD எனப்படும்.
நண்பர்களே, ABSOLUTE, INCREMENTAL பற்றி கீழே உள்ள வரைபடத்தின் மூலம் விளக்கமாக பார்க்கலாம்.
மேலே படத்தில் அளவுடன் ஒரு வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் ஒரு பொதுவான புள்ளி வைக்க வேண்டும். அந்த படத்திற்கு புள்ளிகள் எப்படி குறிக்க வேண்டும். முதலில் அந்த படத்தை ஒரு GRAPH SHEET இல் வரைந்து கொள்ளுங்கள். நான் அந்த படத்திற்கு நடுப்பகுதியை பொதுவான புள்ளியாக வைத்து வரைந்துள்ளேன். இதில் முதல் கால்பகுதி, இரண்டாம் கால்பகுதி, மூன்றாம் கால்பகுதி, நான்காம் கால்பகுதி என நாம் பத்தாம் வகுப்பில் கணக்கு பாடத்தில் GRAPH SHEETஇல் பிரிப்பது போல பிரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் MACHINE இல் நாம் ஒரு பொதுவான புள்ளியை கொடுப்போம். அதற்கேற்ப X.Y புள்ளிகளுக்கு + அல்லது - கொடுக்க வேண்டும்.
மேலே படத்தில் GRAPH SHEET இல் கொடுக்கப்பட்ட படத்தை மையப்படுத்தி வரைந்துள்ளேன். உங்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க + மற்றும் - கொடுத்துக் கொளுங்கள். நாம் GRAPH இல் ஒரு கட்டத்தை பத்து மில்லிமீட்டராக பிரிதுள்ளோம். நமக்கு கொடுக்கப்படும் படங்களின் அளவுகள் மில்லி மீட்டரில் குறிக்கப்பட்டே இருக்கும். சரி நண்பர்களே, மேற்கண்ட முறையில் GRAPH SHEETஇல் படத்தை வரைந்து கொள்ளுங்கள்.
இப்போது ABSOLUTE METHOD முறையில் எப்படி புள்ளிகளை குறிப்பிடுவது என பார்ப்போம்.
முதல் புள்ளி மூன்றாம் கால் பகுதியில் இருப்பதால் X மற்றும் Y க்கு மைனஸ் குறி வரும், X ஆனது பூஜ்யத்தில் இருந்து மூன்று கட்டங்கள் தள்ளி இருப்பதால் X-30 என குறிக்க வேண்டும். கவனியுங்கள் 30 என ஏன் போட்டிருக்கேன் என்றால் படத்தில் அளவுகள் மில்லி மீட்டரில் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், GRAPH இல் ஒரு கட்டத்தை பத்து MM ஆக வைத்துள்ளோம்.
இங்கு மையப்புள்ளி என்பதை ORIGIN என சொல்வோம்.
இனி மையப்புளியை வைத்து ஒவ்வொரு புள்ளிக்கும் X,Y பார்ப்போம்.
1. X-30.0 Y-20.0
2. X20.0 Y-20.0
3. X20.0 Y10.0
4. X40.0 Y10.0
5. X40.0 Y20.0
6. X-10.0 Y20.0
7. X-20.0 Y10.0
(எப்பவும் போல X,Y குறிப்பிட்டாலே TAPPER வரும்.)
8. X-20.0 Y-10.0
9. X-30.0 Y-20.0
9வது புள்ளி படத்தில் இல்லை. ஆனால் 1வது புள்ளிக்கு மீண்டும் வந்து சேர்ந்தால் தான் படம் COMPLETE ஆகும்.
நண்பர்களே, இன்று ABSOLUTE METHOD பற்றி பார்த்தோம். அடுத்த பாகத்தில் INCREMENTAL METHOD பற்றி பார்ப்போம்.
அப்படியே கீழே உள்ள வீடியோவை பாக்க மறந்துராதிங்க.
19 கருத்துரைகள்:
தமிழ்வாசி சிஎன்சி பத்தி ஏதோ சொல்றாரே...என்னன்னு பார்ப்போம்.
வணக்கம் மச்சி..
absolute-ன்னா என்ன?
//ஒவ்வொரு புள்ளியையும் குறிப்பிடும் போது ஒரு பொதுவான புள்ளியை வைத்து குறிப்பிடப்படுவது //
அதாவது எம்.ஜி.ஆரை மையமா வச்சே, இப்போ புதுசா வர்ற அரசியல்வாதிகளை மதிப்பிடற மாதிரியா?
@செங்கோவி
absolute-ன்னா என்ன?
//ஒவ்வொரு புள்ளியையும் குறிப்பிடும் போது ஒரு பொதுவான புள்ளியை வைத்து குறிப்பிடப்படுவது //
அதாவது எம்.ஜி.ஆரை மையமா வச்சே, இப்போ புதுசா வர்ற அரசியல்வாதிகளை மதிப்பிடற மாதிரியா?///
ஆகா... காலத்துக்கேற்ற விளக்கம்... சூப்பரு
//ஒவ்வொரு புள்ளியையும் குறிப்பிடும் போது அதற்கு முந்தைய புள்ளியை வைத்து குறிப்பிடப்படுவது INCREMENTAL CO-ORDINATE METHOD //
அதாவது சிநேகாவை ரசிச்ச, பதிவர் அஞ்சலிக்கு மாறி, பிறகு ஹன்சில மையம் கொள்வது போலவா?
@செங்கோவி
அதாவது சிநேகாவை ரசிச்ச, பதிவர் அஞ்சலிக்கு மாறி, பிறகு ஹன்சில மையம் கொள்வது போலவா?///
அட..அட... புது யோசனையா இருக்கே... தொழில்நுட்ப பதிவிலும் நடிகைகளை சேர்க்கிறாரே...
என்னமா சொல்றாருய்யா மாணவர்களுக்கு பிரயோசனமுள்ளது!!!!
அட்டெண்டெண்ட்ஸ்
சி.பி.செந்தில்குமார் said...
அட்டெண்டெண்ட்ஸ்//
இதுக்கு மூதேவி நீ இங்கே வராமலேயே இருந்துருக்கலாம் ஹி ஹி...
நல்ல பயனுள்ள விஷயங்களாகப் பலவும் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
[நம்ம பக்கம் இன்று வாங்க! சூப்பர் விருந்து காத்திருக்கு]
அருமையான தகவல்கள் சார்! தேவையான மாணவர்களுக்கு நன்கு பயன்படும்! பகிர்வுக்கு நன்றி வாசி அண்ணே!
அழகா சொல்லி இருக்கீங்க
எனக்கு தான் ஒண்ணும் ஏறலை, படிக்கும் போதே நான் கொஞ்சம் அப்பிடித்தான் இப்போ படிப்ப நிப்பாட்டி 15 வருஷம் ஆய்டுச்சா ஹி ஹி ஹி
படிக்கிற பசங்க சரியாய் புரிஞ்சு படிச்சுகுங்கப்பா யாரும் ப்ரீயா இவ்வளவு விஷயங்கள் சொல்லி தர மாட்டாங்க
மெக்கானிகல் துறையினருக்காக அழகா சொல்லிருக்கீங்க
தேவையான தொடர் நண்பா..
விருந்துக்கு வாங்க நண்பா..
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_565.htm
Absent Sir...
present sir ,o.k sir ,voted sir .
உள்ளேன் ஐயா...
நானும் தொடர்கிறேன் நண்பா.