CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மக்களே! மறுபடியும் வச்சுட்டாங்கையா ஆப்பு...? நம்பி மோசம் போயிட்டோமோ?

இந்த சந்தோஷம் எத்தன நாள்கள் தான் நீடிக்கும் என எண்ணிட்டு இருந்தேன். நான் மட்டுமல்ல, நம்ம தமிழகமே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போச்சு. ஆம், அது இன்னையோட முடிவுக்கு வந்துருச்சு. வெறும் பத்து நாட்கள் தான் இருக்கும் அந்த சந்தோஷம்.
 ஆமாங்க, என்னத்த சொல்ல, போன வாரம் ரொம்ப சந்தோசமா ஒரு பதிவு போட்டேனுங்க. மதுரையில கரண்ட் கட் இல்லைன்னு போட்டிருந்தேன். அந்த பதிவ படிச்சுட்டு நம்ம நண்பர்களும் அவங்க ஊர்லயும் கரண்ட் கட் இல்லைன்னு சொல்லியிருந்தாங்க. மதுரைக்கு மீனாட்சியம்மன் அருள்ன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா காற்றாலை மூலமா ஆயிரம் மெகாவாட்க்கும் மேலாக கரண்ட் கிடச்சதால எல்லா ஊர்லயும் கரண்ட் கட் செய்றத நிறுத்தி மக்களை சந்தோசப்படுத்தினாங்க. 

இன்னைக்கு எல்லாம் போச்சு. இன்னையுல இருந்து மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன். ஆமாங்க, சுமார் அஞ்சு மணி நேரம் கரண்ட் கட் பண்ணிட்டாங்க. மதியம் 12.00 - 3.00, அப்புறம் 6.30 - 7.30, அப்புறம் 9.30 - 10.15 இப்படி கரண்ட் கட் பண்ணிட்டாங்க. அப்போ காற்றாலை கரண்ட் தீந்துச்சா? இல்ல, மதுரையில அழகர் திருவிழா முடிவுக்கு வர்றதுனால மீனாட்சியம்மன் அருளை நிறுத்திட்டாங்களான்னு தெரியல. மதுரை அல்லாத மற்ற இடத்திலையும் அந்த சந்தோஷம் முடிவுக்கு வந்துருச்சான்னு தெரியல. 

ஆக, மக்கள் சந்தோசமா, நிம்மதியா கரண்ட் காத்தை சுவாசிக்க அரசு விரும்பல போல. சரிங்க, மறுபடியும் ஏதாவது நல்லா பலமா காத்தடிக்குதான்னு பாப்போம், அரசும் இப்ப மாதிரியே நம்மள சந்தோசப்படுத்துறாங்களான்னு பொறுத்திருந்து தான் பார்ப்போமே?????????????????????
மேலும் வாசிக்க... "மக்களே! மறுபடியும் வச்சுட்டாங்கையா ஆப்பு...? நம்பி மோசம் போயிட்டோமோ?"



மதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்திரை திருவிழா 2012

இன்று 5-05-2012 காலை ஆறு மணி அளவில் கள்ளழகர் எதிர்சேவை மூன்றுமாவடியில் நடந்தது. கள்ளழகர் தங்கபல்லக்கில் வலம் வந்ததை புதூர் ஐயப்பன் கோவில் அருகில் தரிசனம் செய்து எடுத்த படங்கள், உங்களின் தரிசனத்திற்காக...
கோவில் யானை வலம் வருதல்
புதூர் கற்பகநகரில்

கள்ளழகருக்கு விளக்கு பூஜை செய்கிறார் ஒரு பக்தர்

புதூர் ஐயப்பன் கோவிலுக்கு முன்பு கள்ளழகர்

வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் எதிர்சேவை நடந்தது .மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவாகும். 

இதில் பங்கேற்க அழகர்கோவிலிருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்தில் நேற்று மாலை 5.21 மணிக்கு தங்கப்பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து அதிர்வேட்டு முழங்க பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் கோயிலை விட்டு வெளியே வந்தார். முதலில் வெள்ளையன்குன்றம் சண்முகராஜா, கூட்டு வண்டியில் முரசு அடித்து கொண்டு முன்னே செல்ல குட்டி யானை சுந்தரவள்ளி, அதனை தொ டர்ந்து 20 உண்டியல்கள் மற்றும் தனது பரிவாரங்களுடன் மதுரை நோக்கி புறப்பட்டார். 

கோயில் கோட்டை வாசலை விட்டு வெளியே வந்த கள்ளழகர் பின்பு கருப்பணசாமி கோயில் அருகேயுள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு சிறப்பு பூஜைக்கு பின்பு இரவு 7 மணி அளவில் புறப்பட்டு பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்தருளினார். மீண்டும் 2 மணி அளவில் புறப்பட்ட கள்ளழகர் காதக்கிணறு, கடச்சனேந்தல், சர்வேயர்காலனி வழியாக இன்று அதிகாலை 6 மணிக்கு மூன்றுமாவடிக்கு வந்தார்.

அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு எதிர்சேவை செய்தனர். காலை 9 மணிக்கு புதூர் மாரியம்மன் கோயிலிலும், மதியம் 12 மணிக்கு ஆயுதப்படை குடியிருப்பிலும், மாலை 5 மணிக்கு தல்லாகுளம் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயிலிலும், மாலை 5.20 மணிக்கு அம்பலகாரர் மண்டபத்திலும் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வணங்கி வரவேற்பார்கள்இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளுகிறார். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். திருமஞ்சனமான பின்னர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை பெருமாளுக்கு சாத்தப்படும். 

பின்பு தங்க குதிரை வாகனத்தில் இரவு 12 மணிக்கு புறப்படும் கள்ளழகர் 2.30 மணி அளவில் கருப்பணசாமி கோயிலில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருகிறார். அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் இறங்குகிறார்.வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வெள்ளி குதிரை வாகனத்தில் வரும் வீரராகவ பெருமாள் எதிர் கொண்டு வரவேற்பார். 
செய்திகள் தொகுப்பு: http://maduraipost.com/2012/05/kallalagar-festival/
புகைப்படங்கள் என் மொபைல் மூலம்
மேலும் வாசிக்க... "மதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்திரை திருவிழா 2012"



மொய்க்கு மொய் அவசியமா?

        மொய்க்கு மொய், இது பதிவுலகத்துக்கான மொய்க்கு மொய், அதாவது பதிலுக்கு பதில் கமென்ட் போடுவது, ஓட்டு போடுவது, ஓட்டு போட்டதை தனியா ஒரு கமென்ட் போட்டு சொல்வது, என்ற வகையான மொய்க்கு மொய் பத்தி இந்த பதிவுல நான் சொல்ல வரல. நெஜமாலுமே விஷேசதுக்காக வர்ற மொய்க்கு மொய் பத்தி கொஞ்சமா சொல்ல போறேன்.
        ஒரு பங்ஷன்காக  இன்விடேஷன் ஊரெல்லாம் வைப்ப்போம். ஊரைக் கூட்டி பங்ஷன் வைக்கார்யா என நாலு பேரு நல்ல விதமா சொன்னா ஓகே தான். ஆனா இப்போ சில பங்ஷன்கள் வெறும் காசை பிடுங்கவே நடக்குது. மத்தவங்க விஷேசத்துக்கு மொய்க்கு மேல மொய் செஞ்சு சோர்ந்து போயிருப்பாங்க. பின்ன இவங்களால விசேஷமே வைக்க சான்ஸ் இருக்காது. அதனால மொய் வரவை எதிர்பாக்க முடியாது. 

          அதாவது ஒரு பையன் மட்டுமே இருக்கான்னு வைங்க, சின்ன வயசுல காது குத்து விழா மட்டுமே வைக்க முடியும். அதுல மொய் வாங்கிரலாம். அதுக்கப்புறம் அவங்க வீட்டுல அவனுக்கு கல்யாணம் வரை எந்த விசேஷமும் வைக்க முடியாது. வீடு, கீடு கட்டுனா கிரகப்பிரவேசம் வைக்கலாம். அதுவும் இன்னைக்கு இருக்குற விலை வாசியில் அதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் தான். 

    இதே ஒரு பொண்ணு இருக்குன்னு வைங்க, காது குத்து, பெரியவளானதுக்கு ஒரு விழா. சடங்கு, அப்புறமா கல்யாணம்ன்னு வைப்பாங்க. ஓரளவு மொய் வாங்கலாம். ஆனா, அதுவும் அந்த பொண்ணு கல்யாணத்துக்கு நகை, சீர்வரிசை சேர்க்கறதுக்கே போயிரும். கல்யாணத்துக்கும் பெருசா அமௌன்ட் எதிர்பாக்க முடியாது. ஏன்னா, முந்தின விசேஷத்துக்கு மொய் வந்ததுனால கல்யாணத்துக்கு ஓரளவு மட்டுமே எதிர்பாக்க முடியும். 
       சரி, இப்போ என்ன சொல்ல வரேன்னா இந்த மாதிரி குடும்ப விசேஷங்கள் வச்சு மொய் கனிசமா வாங்க முடியாத ஆட்கள் புதுப்புது ட்ரெண்ட் கண்டுபிடிச்சிருக்காங்க. பையனுக்கு காது குத்து விழான்னு பத்திரிகை வச்சு அழைப்பாங்க. ஆனா, பங்க்சனுக்கு போயி பார்த்தா பையனுக்கு இருபது வயசுக்கு மேல இருக்கும். காதும் குத்தியிருக்க மாட்டாங்க, அட, மொட்டை கூட போட்டிருக்க மாட்டாங்க. நாமளும் பொறுக்க முடியாம ஏங்க, காது குத்து விழான்னு சொன்னிங்க, காதே குத்தலன்னு கேட்டா, அவிங்க ஹி..ஹி... ஒரு பையன் வச்சிருக்கோம். மொய் வாங்க காது குத்து விழான்னு பத்திரிகை அடிச்சுட்டோம். வேற ஒண்ணுமில்லைங்க, நல்லா சாப்பிட்டு மொய் செஞ்சுட்டு போயிருங்கன்னு சொல்வாங்க பாருங்க. ம்ஹும்... வேறவழி நாம மொய்க்கு மொய் வச்சுட்டு வர வேண்டியதுதான்.
        அப்புறமா ஏதாவது கோயில் பேரை போட்டு கிடா வெட்டு அழைப்புன்னே பத்திரிகை ஊர் ஊரா தருவாங்க. பத்திரிகை வச்சும் போகலைன்னா மதிப்பு இல்லையில. அதனால அங்கேயும் போயி நல்லா நான்வெஜ் சாப்டுட்டு மொய் வச்சுட்டு வர வேண்டியது தான்.
 
      போன மாசம் எனக்கு ஒரு காது குத்து விழா பத்திரிகை வந்துச்சுங்க. எப்படியும் எட்டு பக்கம் இருக்கும். பக்கத்து வீட்டுக்காங்க பேரெல்லாம் போட்டிருந்தாங்க. மாமன், மச்சான், என உறவு முறைகளில் போட முடியாத பேர்களை வரவேற்பாளர்கள் லிஸ்டில் சேர்த்திருந்தாங்க. அந்த பத்திரிக்கையில கடைசி பக்கம் ஒரு வரி போட்டிருந்தாங்க. ரொம்பவே டச்சிங் வரி அது. 
பின்குறிப்பு: 2003க்கு பின் உள்ள உங்கள் மொய் நோட்டை தயவுசெய்து பார்க்கவும்.
இதாங்க அந்த வரி. படிச்சுட்டு மிரண்டு போயிட்டேன். அந்த ஆளுங்க 2003இல் கடைசியா விசேசம் வச்சிருந்திருப்பாங்க போல. அதான் இன்னைக்கு 2012 வரை நிறைய மொய் செஞ்சு ஓஞ்சு போயி போட்ட காசை வசூல் பண்ண இப்படி யோசனை பண்ணியிருக்காங்க. அந்த காது குத்து விழாவுக்கு போயி ஏமாந்து வந்தேனுங்க. கறி சோறுன்னு நெனச்சு போனா சாம்பார் சாப்பாடு போட்டு மொய் வாங்கிட்டாங்க. அவ்வ்வ்வ்வ்....
     ஆக, இப்படி மொய் வாங்க எத்தனையோ ட்ரெண்ட்களை சொல்லிட்டே போகலாமுங்க. மக்கள் புதுசுபுதுசா யோசிச்சு பத்திரிக்கை அடிச்சு மொய் வாங்கிடுவாங்க... அதாவது மொய்க்கு மொய் வாங்கியே தீரனும்கறது மட்டுமே அவங்க குறிக்கோள்.
மேலும் வாசிக்க... "மொய்க்கு மொய் அவசியமா?"



அஞ்சலி கலகல பிகரா? கிளுகிளு பிகரா?

என்னவளைப் பார்த்து "என் மனம் கவர்ந்தவளே" என ஆசையோடு சொன்னேன்.
என்னைப்  பார்த்து "என் மகளைக் கவர்ந்தவனே" என அவள் அப்பா ஆத்திரத்தோடு சொன்னார்.
(ஹி..ஹி... சும்மா ஒரு ரைமிங்க்காக)

சந்தானம்: வேணாம் மச்சான் வேணாம், இந்த பொண்ணுங்க காதலு? அது மூடித் தொறக்கும் போதே கவுக்கும் காதலு...
உதயநிதி: போடா நீயும் உன் அட்வைசும்,  ஹன்சிகா செம பிகருடா, காதலிச்சு கைப்பிடிச்சே தீருவேண்டா...
(ஹி...ஹி... நண்பனா இவிங்க?)


எனக்கு ஒரு டவுட்டு:
ஐயாவால அம்மா ஆட்சி வந்துச்சா? அம்மாவால ஐயா ஆட்சி போச்சா?
ஹி... ஹி.. மக்களால ஐயா ஆட்சி போயி அம்மா ஆட்சி வந்துச்சு.
(இன்னும் எத்தன நாள்தான் இந்த கேள்விய கேட்டுட்டு இருப்பிங்க?)


எனக்கு இன்னொரு டவுட்டு:
நீர்நிலைகளில் இருக்குற தண்ணி ஆவியாகி மேக கூட்டமா மாறி குளிர்ச்சியான காத்து பட்டு மழை வருது. அதாவது அந்த மழை புவியீர்ப்பு விசை இருக்கறதுனால பூமிக்கு வருதுன்னா? புவியீர்ப்பு விசைன்னு ஒண்ணு இல்லைனா இந்த மழை எப்படி பூமிக்கு வரும்?
(எலேய், இன்னொரு டவுட்டு கேட்ட அருவா வரும்னு நீங்க சொல்றது கேட்குதுங்கோ... ஹி... ஹி.. எஸ்கேப்பு)

அரசியல்வாதி: வாக்காள பெருமக்களே, தேர்தல் வாக்குறுதியாய் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க ஆசப்படுறேன், இப்ப நம்ம தமிழகத்துல காத்தாலை மூலமா கரண்ட் ரொம்ப அதிகமா கிடைக்றதுனால, காத்து இல்லாத காலத்துல பெரிய ஃபேன்கள் வச்சு காத்தாலைகள் இயக்கப்படுமென கூறிக் கொள்கிறேன். ம்க்ஹும்....அக்காங்....


வாத்தியார்: வானத்துல மேகம் தெரண்டு, மழை பெய்யறப்போ, இடி இடிக்கும், மின்னல் வெட்டும். காத்து பலமா வீசும்.
மாணவன்: சாரு, மொதல்ல உங்க வெடி வெடிக்கிற வாயை மூடுங்க, எம்மேல ஒரே எச்சி மழையா பெய்யுது!

 "அஞ்சலி கலகலப்பா நடிச்ச படம் எதுடா?"
"அங்காடித்தெரு"
"அஞ்சலி கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா?"
"கருங்காலி"
"சரி, அஞ்சலி கலகலப்பா, கிளுகிளுப்பா நடிச்ச படம் எதுடா?
"கலகலப்பு"
(ஏனுங்க மூணு படத்திலயும் நடிச்சது ஒரே அஞ்சலி தானே, ?) 

சாரிங்க, பதிவு கொஞ்சம் ஓவரா மொக்கையா போயிருச்சே?
மேலும் வாசிக்க... "அஞ்சலி கலகல பிகரா? கிளுகிளு பிகரா?"



மதுரையில பவர் கட் இல்லைங்கோ! என்னா காரணமாம்?

மதுரையில நாலஞ்சு நாளா ஹாட் டாபிக் என்னான்னு தெரியுமா? இங்க மதுரையில பவர் கட் இல்லைங்கோ, இங்க மட்டும் தானா, இல்ல தமிழகம் முழுதும் பவர்கட் இல்லையா? இங்க மதுரையில மட்டும் பவர்கட் இல்லைன்னா. அதுக்கு காரணம் இங்க சித்திரை திருவிழா நடந்துகிட்டு இருக்கு. மீனாட்சி திருக்கல்யாணம், சாமி தேர்கள் வீதி உலா, அழகர் வைகை ஆற்றில் இறங்குதல், எதிர்சேவை என மதுரை களை கட்டியுள்ளது. இதனால தான் பவர் கட் இல்லைன்னு நினைக்கிறேன். 
எத்தனை மாசம்(வருஷம்) கழிச்சு புல் டே கரண்ட் இருக்கு. எல்லாம் அந்த மீனாட்சி அருள் தான் போல. இப்படியே பவர்கட் இல்லாம மத்த நாட்களும் இருக்குமா? மீனாட்சியம்மனே அருள் தாங்க. இப்படியே மதுரையில பவர்கட் இல்லாத மாதிரி தமிழகம் முழுதும் பவர்கட் இல்லா நிலை வரணும். அரசே, உங்களை தூற்றாம போற்றுவாங்க.

இந்த  போஸ்ட் எழுதிகிட்டே நியூஸ்பேப்பரை படிச்சேன். அதுல காற்றாலை மூலமா தயாரிக்கப்படும் மின்சார அளவு கூடியிருக்காம். அதனால மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் பவர்கட் நேரம் கொறஞ்சிருக்குன்னு போட்டிருக்காங்க. அப்புறம் இன்னொரு நியூஸில் நெல்லையிலும் நாலஞ்சு நாளா பவர்கட் இல்லைன்னு போட்டிருக்காங்க. இந்த நிலை இப்படியே தொடருமா? 
எப்படியோ, மதுரையில பவர்கட் இல்லைங்கோ, இருக்குற வரை கரண்ட் காத்த சுவாசிக்க வேண்டியது தான். இல்லைனாலும் கரண்ட் இல்லா காத்தை சுவாசிச்சு தான் ஆகணும். எப்படி இருந்தாலும் தமிழனோட தலைவிதி இதுதான்னா நடந்தே தீரும். ஹி..ஹி..
மேலும் வாசிக்க... "மதுரையில பவர் கட் இல்லைங்கோ! என்னா காரணமாம்?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1