வணக்கம் வலையுறவே ,
நமது தளத்தில் இதுவரை வலைச்சரம் சீனா ஐயா, இலங்கை பிரபல பதிவர் மதிசுதா, நம்மூரு பிரபல பதிவர் அட்ரா சக்க சி பி அவர்களின் பேட்டி வந்துள்ளது. இவர்களிடம் நமது வலையுலக பதிவர்களே கேள்விகள் கேட்டார்கள். அவர்களது கேள்விகளுடன் சுவையான பதில்களை நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம். இதே போல பிரபல பதிவர் பேட்டியொன்று வர உள்ளது.
ஆம்... பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க கேபிள் சங்கர் காத்திருக்கிறார்.
உங்களின் கேள்விகள் வலையுலகை பற்றி, சினிமா சார்ந்து, பொதுவான கேள்விகளாக இருக்கலாம். ஒருவர் மூன்று கேள்விகளுக்கு மிகாமல் கேட்கலாம். கேள்விகளை இறுதி செய்பவர் கேபிள் அவர்களே!...
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com
உங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012
முக்கிய குறிப்பு:
1. கேள்விகள் கேட்பவர்கள் வலைப்பூ பெயரையும் (BLOG URL), பதிவரின் பெயரையும்(வலையுலகில் தங்களின் பெயர்) குறிப்பிடப்பட வேண்டும். இதனால் உங்கள் பெயரில் கேள்விகள் கேட்க வசதியாக இருக்கும்.
2. கேள்விகள் மின்னஞ்சலில் மட்டுமே கேட்கப்பட வேண்டும். தங்களின் மின்னஞ்சல் தளத்தில் வெளியிடப்படாது என உறுதி அளிக்கிறோம்.
3. முகநூல் நண்பர்கள் தங்களின் முகநூல் முகவரியை இணைத்தல் வேண்டும்.
4. பெயரில்லா நபரிடமிருந்து வரும் கேள்விகள் மட்டுறுத்தப்படும்.
5. முக்கியமாக பின்னூட்டத்தில் கேள்விகள் கேட்க வேண்டாம்.
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com
உங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012
diski: ஐந்து மாதங்களுக்கு முன்பே மெட்ராஸ்பவன் சிவாவிடம் கேபிள் அவர்களின் பேட்டி வேணும் என கேட்டிருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு சென்னை பதிவர் சந்திப்பில் கிட்டியது. கேபிளிடம் கேட்டேன் உடனே ஓகே சொன்னார். சிவா மற்றும் கேபிளுக்கு நன்றி.
12 கருத்துரைகள்:
கேள்வியை கேட்டுட வேண்டியதுதான்..!
என்ன கேள்வி கேக்கிறதுன்னே தெரியலியே?சாம்பிள் கேள்வி ஏதாச்சும்...................
@Yoga.S.
//
என்ன கேள்வி கேக்கிறதுன்னே தெரியலியே?சாம்பிள் கேள்வி ஏதாச்சும்...................
//
ஹா ஹா ஹா, இவருக்கு ஏதாவது உதவி பண்ணுங்க பாஸ்! :)
எங்களை எல்லாம் எப்போ கேள்வி கேட்க போறீங்க...நாங்களும் பிரபலம் ஆகிட்டு போறோம்...
கேட்டு விடுவோம் நண்பரே...
அசத்துங்க
சிந்தித்ததும் சந்தித்ததும் தித்தித்தது
ரைட்டு...
நல்ல தகவல்!
இன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html
கேள்விக்கணைகளை தொடுக்கவும். கெட் ரெடி போல்க்ஸ்!!
அண்ணாச்சி... நானும் திருநெல்வேலி தான்.. இனிமே சந்திப்பு இருந்தா சொல்லுங்க.. என் தளத்திற்கும் வாங்களேன்...
போன ஆண்டு நடத்துனத உங்க தளம் மூலமா தெரிஞ்சுகிட்டேன்... நன்றி அண்ணாச்சி
என்ன கேள்வி
உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்...