வணக்கம் பதிவுலக நண்பர்களே,
எல்லா(கலந்துகிட்ட, கலந்துக்காத ஹி..ஹி..) பதிவர்களுமே "ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா" அப்படின்னு நேத்து(26-08-2012) ஈவ்னிங் பெருமூச்சு விட்டிருப்பிங்க. அதுக்கு காரணம், போன வாரம் பதிவுலகில் நடந்த பரபர விசயங்கள். இதனால பதிவுலகமே ரொம்பவே கிர்ராகி இருந்துச்சு. ஆனா அந்த கிர் நேத்து தூள் தூளாகி போச்சு. ஆமாங்க, இந்த சென்னையில் நடந்த தமிழ் பதிவர் சந்திப்பு மாபெரும் ஹிட் ஆகிருச்சு. இதுல டவுட்டே இல்லை என்பதை பதிவுலக நண்பர்களின் வருகைகளும், பதிவுகளும், கமெண்ட்ஸ்களும் நிருபிச்சிருச்சு.
இந்த பதிவர் சந்திப்பு வெற்றிக்கரமா நடந்து முடிஞ்சதுல நம்ம "மது"வுக்கு பெரும் பங்கு இருக்கு. அதே போல இந்த சந்திப்பு நடக்க விதை இட்ட புலவர் ராமானுசம் ஐயா, பதிவுலக அஜித் சென்னைபித்தன் ஐயா, மின்னல் கணேஷ் சார், தென்றல் சசிகலா ஆகியோருக்கும் பெரும் பங்கு இருக்கு. இவர்களுக்கு உறுதுணையா விழாவை சக்சஸ் ஆக்குனதுல சிவா, பிரபா, ஆரூர் மூனா, அஞ்சா சிங்கம், கேபிள் சார், ஜெய், மோகன் குமார், கருண், சௌந்தர், சீனு, அரசன், கசாலி, சிராஜ், (இன்னும் சிலரின் பேரு மறந்திருச்சு) ஆகியோர்களுக்கு ரொம்பவே பங்கு இருக்கு.. மேடை அலங்காரம், மைக்செட், உணவு, டீ, காபி, ஸ்நாக்ஸ், பேனர்ஸ், புக் ஸ்டால், கேமரா, வீடியோ என அனைத்திலும் பங்கு பெற்ற நண்பர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
அப்புறமா முக்கியமா, வலையகம் திரட்டி இவ்விழாவை ரொம்பவே சூப்பரா நேரடி ஒளிபரப்பு செஞ்சாங்க (நேரடி ஒளிபரப்பு பார்த்த நிறைய பேர் பாராட்டி பதிவு போட்டிருக்கிங்க, நன்றி).
காலை நடந்தது என்ன?
"பத்து மணி அளவில மதுமதியால் கடவுள் வாழ்த்து மூலம் ஆரம்பித்து விழாவின் நிகழ்ச்சிகளை தொகுக்க, மோகன்குமார் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்த, செல்வி தூயா குறிப்புரை மூலம் திரு. சென்னைபித்தன் ஐயா விழா தலைமை ஏற்க, சௌந்தர் குறிப்புரை மூலம் புலவர். ராமானுசம் ஐயா முன்னிலை வகிக்க, என்னுடைய குறிப்புரை மூலம் வலைச்சரம் சீனா ஐயா'வும் முன்னிலை வகிக்க, கேபிள், சிபி, சங்கவி, சிராஜ் அவர்களின் வர்ணனைகளுடன் ஒவ்வொரு பதிவர்களும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஆற்ற,
... ஹி..ஹி..." அப்புறமென்ன மதிய நேரம் வந்திருச்சு.
மதிய உணவு வெஜ் தான். ரொம்பவே டேஸ்டா இருந்துச்சு. சமையல் பதிவருக்கு நன்றி.
"திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் தலைமை வகிக்க, மின்னல் கணேஷ் வரவேற்புரை ஆற்ற, சாப்பாடு உண்ட களைப்பில் பதிவர்கள் அமர்ந்த வாறே தூங்கி வழிய, அவர்களை சுரேகா கையை தட்டுங்க, கையை தட்டுங்க என எழுப்பி சுவாரஸ்யமாய் நிகழ்ச்சியை தொகுக்க, நண்டு நொரண்டு குறிப்புரை ஆற்ற, மூத்த பதிவர்கள் பாராட்டு பெற, சசிகலாவின் "தென்றலின் கனவு" கவிதை நூலை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் வெளியிட, சேட்டைக்காரன் நூலைப் பெற்றிட, நூலின் நாயகி சசிகலா ஏற்புரை வழங்க,
....ஹி...ஹி... " அப்புறமென்ன மாலை நேரம் வந்திருச்சு.
மாலை நடந்தது என்ன?
பட்டுக்கோட்டை பிரபாகர், புலவர். ராமானுசம், ரமணி ஐயா அவர்கள் முன்னிலையில் கவியரங்கம் ஆரம்பிக்க, அவ்வப்போது சுரேகா கவரும் வர்ணனைகளுடன் பதிவர்கள் கவிதைகளை முழங்க, கசாலி நன்றியுரை ஆற்ற...
.....ஹி..ஹி... அப்புறமென்ன விழா வெற்றியுடன் முடிஞ்சுச்சு...
ரொம்ப சுருக்கமா சந்திப்பு பத்தி பதிவைமுடிச்சுட்டேனா?போதுங்க...
அடுத்த பதிவாக,
பதிவர்களின் கலகலப்பு, கலாய்ப்பு, கிசுகிசு, சீக்ரெட் வர இருக்குங்கோ....ஹி...ஹி... ஈரோடு, நெல்லை பதிவர் சந்திப்புக்கு தொடர் பதிவு போட்டு தேத்து தேத்துன்னு பதிவை தேத்துனோம்ல. அந்த பதிவுகளின் லிங்க் கீழே உங்கள் பார்வைக்கு.
நெல்லையில் உணவுலகம் சங்கரலிங்கம் ஆபீசர் வீட்டு கல்யாணத்தில்:ஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பில்:
குறையொன்றுமில்லை லக்ஷ்மி அம்மாவுடன் மினி சந்திப்பில்:
நெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பில்:
மேற்கண்ட லிங்க்-களை தனிப் பதிவாகவே போட்டிருக்கலாமோ?
41 கருத்துரைகள்:
ஹி..ஹி...அருமை......
இவ்ளோ நாள் பதிவ தேத்தாம இப்போ என்ன புதுசா..?
பதிவு அருமை...
த.ம.----இல்லை....
என்னால்தான் கலந்துகொள்ள முடியவில்லை ... ஆனாலும் ரொம்ப சுருக்கமா முடிசுடிங்க ...
// நாய் நக்ஸ் - HMT TIME OF WORLD //
இது என்ன புது உள் குத்து ?????????
// நாய் நக்ஸ் - HMT TIME OF WORLD //
VILLAGE MOON OF WORLD என இருந்தால் நல்லா இருக்கும்
"என் ராஜபாட்டை"- ராஜா said...
// நாய் நக்ஸ் - HMT TIME OF WORLD //
இது என்ன புது உள் குத்து ?????????/////
இப்ப பாருங்க...
நீங்கள் சொல்வது போல
விழாக்குழுவினருக்கு அப்பாடா என்று இருந்திருக்கும்
ஆனால் கலந்துகொண்டவர்களுக்கு எல்லாம்
அதற்குள் முடிந்துவிட்டதே என இருந்தது நிஜம்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
"ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா" ங்கிரதுக்கு விளக்கம் இப்போத்தான் தெரியுது :D
உங்க குறிப்புரை நம்ம கண்ணுல இருந்து தப்பிருச்சு தல!
முதல் போடோவிலும் கடைசி போட்டோவிலும் இருக்கும் கருஞ்சிறுத்தையை (சத்தியமா இதுல உள்குத்து எதுவும் இல்லய்யா ஹி ஹி) நேரில் கான ஆவலாய் இருக்கேன்! டிசம்பர்ல ரெண்டுபேரும் சேர்ந்து மதுரையை மிரட்டுவோம் தல! :)
Nice.,
http://sakthistudycentre.blogspot.com/2012/08/blog-post_5740.html
naangalum padhivu poduvomla..
பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 8)
நீங்க மேடையில் வந்து பேசியதை (பேசுனீங்க தானே?) பார்த்தேன் நண்பா! கலகலப்பா பேசுனீங்க.. பார்த்ததில் மகிழ்ச்சி...
@ஆட்டோமொபைல்
ஹி..ஹி...அருமை...... ///
நன்றி ஆட்டோ.
@கோவை நேரம்
இவ்ளோ நாள் பதிவ தேத்தாம இப்போ என்ன புதுசா..? ////
நம்ம சந்திப்பை நெனச்சு பாக்க தேத்தியிருக்கேன் மச்சி
@நாய் நக்ஸ் - HMT TIME OF WORLD
பதிவு அருமை...
த.ம.----இல்லை.... ///
இருக்குயா... நல்லா கண்ணை தொறந்து பாரு.
@"என் ராஜபாட்டை"- ராஜா
என்னால்தான் கலந்துகொள்ள முடியவில்லை ... ஆனாலும் ரொம்ப சுருக்கமா முடிசுடிங்க ..///
உங்களை சந்திக்க முடியாததில் சிறு வருத்தம் ராஜா... வந்திருக்கலாமே?
@"என் ராஜபாட்டை"- ராஜா
// நாய் நக்ஸ் - HMT TIME OF WORLD //
இது என்ன புது உள் குத்து ????????? ///
நக்ஸ் hmt watch வாங்கியிருக்கார். அதான் சும்மா வெளம்பரம்
@Ramani
நீங்கள் சொல்வது போல
விழாக்குழுவினருக்கு அப்பாடா என்று இருந்திருக்கும்
ஆனால் கலந்துகொண்டவர்களுக்கு எல்லாம்
அதற்குள் முடிந்துவிட்டதே என இருந்தது நிஜம்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள் //////
ஆமாம் ஐயா, நிகழ்ச்சி முடிஞ்சிருச்சேன்னு வருத்தம் இருந்துச்சு.
@வரலாற்று சுவடுகள்
முதல் போடோவிலும் கடைசி போட்டோவிலும் இருக்கும் கருஞ்சிறுத்தையை (சத்தியமா இதுல உள்குத்து எதுவும் இல்லய்யா ஹி ஹி) நேரில் கான ஆவலாய் இருக்கேன்! டிசம்பர்ல ரெண்டுபேரும் சேர்ந்து மதுரையை மிரட்டுவோம் தல! :) ///
வாய்யா வரலாறு!... மிரட்டுவோம்
கலக்கிபுட்டிங்கா நண்பா
என்னன்னே.. என்னமோ ஏதோன்னு அடிச்சு புடிச்சு ஓடியாந்தேன்..
இப்படி நிகழ்ச்சி நிரல்ல இருக்கிறதையே பதிவாப் போட்டு கொன்னுட்டீங்களே..!
லைவ்வா பார்த்ததால சுவராஸ்யம் இல்லாம போயிடுச்சு...
ஸ்பெஷல் சரக்கு வச்சிருப்பீங்களே..!
அதை எடுத்து விடுங்க..!
பதிவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசினது.. புதியவர்களை சந்தித்திது.. பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகள் அல்லாமல்.. அது சார்ந்த நிகழ்வுகள்.. இப்படி நிறைய இருக்குமே...!!!
அதை எடுத்து விடுங்க அண்ணே..!
லைவ்வா பாராத்த நிகழ்ச்சிகள் கிட்டதட்ட அத்தனைப் பேருக்குமே தெரியும்..
நம்ம மதுமதி அண்ணே தமிழ்த்தாய் வாழ்த்துல தூக்க கலக்கத்துலேயே வரியை மாத்தி பாடிட்டார்.. நான் கவனிச்சேன்.. நீங்க கவனிச்சீங்களா?..
பாவம் அவர் மட்டும் என்ன செய்வார்.. மாசக் கணக்கா பிளான் பண்ணி.. நம்ம மக்களை ஒரு இடத்துல சேர்க்கிற பெரிய வேலையை செய்யறதுக்குள்ள முழி பிதுங்கியிருக்கும்..
ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்றது பெரிய விஷயமில்லை.. கடைசி வரைக்கும் அதனுடைய வேகம் குறையாமல்... நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, கலந்துக்கிறவங்களை குஷிப்படுத்தி.. (அதாங்க.. கலகலப்பா வச்சிக்கிறது)இப்படி நிறைய இருக்கு. மது மதி அண்ணை விழா மேடைல பார்க்கணுமே...! என்னம்மா பறக்கறார்.. எங்கயாவது தவறு நடந்திடுமோன்னு பயந்து பயந்து எச்சரிக்கை உணர்வோட நிகழ்ச்சியை நடத்தின விதம் அருமை..
இதைப் பத்தி நான் ஒரு பதிவே போடலாம்னு இருந்தேன்.. நிகழ்ச்சியில் கலந்துகிட்டவங்களே எழுதட்டுமேன்னு காத்திட்டிருக்கேன்..
நிகழ்ச்சிக்கு போய்ட்டு வந்ததுல களைப்பா இருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.. ஒரு ரெண்டுநாள் ஓய்வு எடுத்திட்டுதான் எழுதுங்களேன்..!!
ஒன்னும் அவசரமில்லை..!!!!
ஆமாம் தங்கம் பழனி,தவறு ஏற்பட்டது உண்மை.மன உளைச்சல் தான் காரணம் அதைப் பற்றி நாளைய பதிவில் கூறுகிறேன்.நன்றி..
என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஒவ்வொரு பதிவரும் சந்திப்பை மனநிறைவோடு முடித்திருப்பது பெரும் வெற்றியே
நல்லதொரு பதிவு !!! பதிவுலக சந்திப்புக்கு உழைத்த அனைத்த சகப் பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் , நன்றிகளும் !!!
>>மேற்கண்ட லிங்க்-களை தனிப் பதிவாகவே போட்டிருக்கலாமோ?
யோவ்!!!!!!!!!!!
பதிவர் சந்திப்பு உண்மையிலேயே ஒரு திருவிழா போன்றூ இருந்தது!நேர்முக ஓளிபரப்பு அருமை! இந்த விழா சிறக்க அரும்பாடுபட்ட அனைத்து நல் இதயங்களுக்கும் பாராட்டுக்கள்! நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)
பரவால்ல பிரகாஷ் - கொஞ்சம் கொஞ்சமா கொடுத்தாலும் வழக்கம் போல கலக்கிட்டே - இறுதியா பழைய பதிவுகளுக்கு சுட்டி கொடுத்து விளம்பரம் வேற - தூள்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
விடக்கூடாது ...20 பதிவாவது தேத்தணும்..
இரத்தின சுருக்கமா பதிவு எழுதியிருக்கீங்க பிரகாஷ்... இதுதான் உங்கள் உண்மையான தோற்றமா..? ஆளே மாறிடீங்க.
சுருங்கக் கூறியதன் காரணம் என்னவோ சகோ.
உங்களை சந்திச்சது மிக்க மகிழ்ச்சி..
Visit my blog and put your feedback
http://rajaavinpaarvayil.blogspot.com/
பதிவர் சந்திப்பு - நடந்தது என்ன?
விளக்க்க்கமா சொன்னதுக்கு நன்றி பிரகாஷ்.
:-)
இனிய சந்திப்பு
வாழ்த்துக்கள்
கச்சிதம்!வேறென்ன வேண்டும்?!
கலக்கிய நிகழ்வை கலக்கலா எழுதி இருக்கீங்க நண்பா
பதிவே போடப்போறதில்லைன்னு சொன்னீங்க?!
யோவ், ஆரம்பிச்சாச்சா?...இன்னும் எத்தனை பாகம் வருமோ?..
சுருக்கமான பதிவு அருமை.
இன்னும் இன்னும் உங்க கிட்டஇருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் சகோ. ஒவ்வொரு பதிவரை சந்தித்து பேசினதையும் தனித்தனி பதிவாய் தருவீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்.
உங்களை நல்லாவே தெரியும். பட் உங்களுக்கு என்னை தெரியுமா தெரியாதான்னு கொஞ்சம் குழப்பத்தில் இருந்தேன். அடடா... நீங்களே வந்து பேசிட்டீங்க... மகிழ்ச்சியாக இருந்தது உங்களுடன் பேசியது...
rasiththen.. oru vaarththai alaikkavillai enra varuththam...