நம்ம பிளாக்கில் நெனச்ச உடனே ஒரு போஸ்ட் போடணும்னு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தா என்ன எழுதறதுன்னு தெரியாம முழிக்கறிங்களா? மேட்டர் கிடைக்காம அலையற உங்களுக்கு உடனே மேட்டர் வேணுமா? மேல.. சாரி.. கீழ படியுங்க...
இதோ வழிகள்:
1. கூகுளே இமேஜ்ல ஏதாவது வார்த்தை போட்டு தேடி நாலஞ்சு படத்தை பதிவா போடலாம். விக்கிபீடியாவும் அப்பப்ப கை கொடுக்கும்.
2. நியூஸ் தளத்துல எதாச்சும் ஹாட் டாபிக் இருந்தா அதை காப்பி/பேஸ்ட் செய்யலாம்.
3. ஹாட் டாபிக் கிடைக்காட்டி தலைப்பை ஹாட்-டா போடலாம். முக்கியமா அது, இது, எது-ன்னு வார்த்தைகள் இருக்கனும்.
4. ஏதாச்சும் நாலஞ்சு வரியில பிட்டு பிட்டா எழுதி கவிதைங்குற தலைப்புல போடலாம். ஆனா, அதுக்கும் மண்டையில கொஞ்சம் யோசிக்கணும்னு நெனச்சா அவாய்ட் பண்ணிருங்க.
5. நம்ம பிளாக் பிரண்ட்ஸ் பேரை போட்டு செமையா கலந்துகட்டி கலாய்கலாம்.
6. இருக்கவே இருக்கு.. பேஸ்புக்... ஒரு அஞ்சு நிமிஷம் நண்பர்களோட ஸ்டேடஸ் மேஞ்சா ஒரு பதிவுக்கு மேட்டர் கேரன்டி...
7. யாரையாவது திட்டணும்னு நினைக்கறிங்களா? இருக்கவே இருக்கு பிளாக். மறைமுகமா, ஜாடையா பேரை மாத்தி திட்டி பதிவு எழுதலாம்.
8. சினிமா ரிலீஸ் ஆகுற நாள்ல பதிவுக்கு பஞ்சமா? நம்ம பிளாக்கர்ஸ் நிறைய பேர் விமர்சனம்னு போட்டிருப்பாங்க. அவங்க லிங்க்-கை மட்டும் தந்து குருட்டாம் போக்குல ஹிட்ஸ் அள்ளலாம். (இது மட்டும் இன்னும் எனக்கு பாக்கி இருக்கு. அதான் லிங்க் தரல)
9. பதிவு எழுத மேட்டரே கிடைக்கலியா? காலையில எந்திருச்சதுல இருந்து பதிவு எழுதலாம்னு உட்கார்ந்த டைம் வரை என்னென்ன நடந்துச்சோ, அப்படியே மானே, தேனே, பொன்மானே போட்டு எழுதிருங்க.. அம்புட்டுதேன்,
10. இன்னொரு பிளாக்கில் இருக்குற ஒரு பதிவு உங்களுக்கு பிடிச்சிருக்கா? உடனே அந்த பதிவை காப்பி/பேஸ்ட் செஞ்சு உங்க கருத்துன்னு ஒரு நாலஞ்சு வரி எழுதிருங்க... அப்படியே அந்த பதிவோட லிங்க் தர மறந்துராதிங்க...
11. யுட்யூப்-ல உங்களுக்கு பிடிச்ச பாட்டை எடுத்து மனங் கவர்ந்த பாடல்கள்-ன்னு தலைப்பு போட்டு, பாட்டு லிங்க் இணைச்சு பதிவை எழுதி, அப்படியே உங்க நண்பர்களையும் அதே தலைப்புல பதிவு எழுதச் சொல்லிரலாம். அதுக்கு பேர் தான் தொடர்பதிவு (பதிவு எழுதாம இருக்கறவங்களை மாட்டி விட சூப்பர் ஐடியா இது).
12. மேல இருக்குற எல்லா மேட்டரும் யூஸ் செஞ்சு பதிவு போட்டாச்சா? அப்பவும் ஏதாவது மேட்டர் கிடைக்குமான்னு தேட உங்க பிளாக் இருக்கு. உங்க பதிவுல, டாப் டென் பிரபல பதிவுகள், அதிக கமெண்ட்ஸ் வந்த டாப் டென் பதிவுகள், சென்ற வருட டாப் டென் பதிவுகள், கடந்த மாதம் ஹிட்ஸ் அள்ளிய டாப் டென் பதிவுகள், இப்படி உங்க பிளாக்கிலேயே கொறஞ்சது பத்து பதிவுகள் தேத்தலாம்.
13. அட, அப்படியும் பதிவு போட்டாச்சு. இன்னும் மேட்டர் வேணுமேன்னு நினைகறிங்களா? உங்க பதிவுல ஒண்ணொண்ணா, மீள்பதிவு-ங்குற தலைப்புல திரும்ப காப்பி/பேஸ்ட் செஞ்சிருங்க.. இத விட ஈசியான வழி வேற இருக்காதுங்க...
நண்பர்களே, பிளாக் எழுத நிறைய மேட்டர் சொல்லியிருக்கேன். யூஸ் புல்லா இருக்கும்னு நினைக்கிறேன்....
நண்பர்களே, பிளாக் எழுத நிறைய மேட்டர் சொல்லியிருக்கேன். யூஸ் புல்லா இருக்கும்னு நினைக்கிறேன்....
29 கருத்துரைகள்:
இதுலாம் பண்ணியும் மேட்டர் கிடைக்கலைன்னா பதிவு போடுவது எப்படின்னு நீங்க பிளாக் எழுத கத்துக்கிட்டதை வச்சு ஒரு பதிவு தேத்தலாம். நம்ம தம்பியை போல!!
நல்ல ஆலோசனைகள்... இன்றைய பகிர்வின் மூலம் படங்களுடன் புத்தரின் வாழ்க்கை வரலாறு வாசிக்க முடிந்தது...! நன்றி...
இன்னாபா நீ
மேட்டர் வேணுமானு சொல்லிகினு ஒரு மேட்டர் படமும் போடல!
உன் பேச்சு டூ
நெட்லே பதிவர்ன்னு சொல்லிக்கிற பாதி பேரு இந்த வேலையைத்தானே செஞ்சுக்கிட்டு இருக்காக ...நீங்க வேற கேவலப் படுத்துறீங்களே ...நியாயமா ?
Useful Information...
செம ஐடியாவா கீது, குறிச்சு வச்சிகினேன் பாஸ்.
ஹீஹீ ரைட் ஜமைசுடலாம்
நானும் டிரை பண்றேன்...
ஹா..ஹா.. எல்லாமே செம ஐடியா.. இதை ஃபாலோ பண்ணினாலோ போதும்...பிரபல பதிவராகி விடலாம்..
ஆனா எல்லாத்திலேயும் ஒரு உள்குத்து இருக்குதுன்னு மட்டும் தெளிவா தெரியுது.
இப்படி நமக்கு நாமே குத்தி போஸ்ட் போட்டா எப்படி....????
@ராஜி
இதுலாம் பண்ணியும் மேட்டர் கிடைக்கலைன்னா பதிவு போடுவது எப்படின்னு நீங்க பிளாக் எழுத கத்துக்கிட்டதை வச்சு ஒரு பதிவு தேத்தலாம். நம்ம தம்பியை போல!!///
ஆமா.. தேத்தலாம்... தேத்தலாம்...
@திண்டுக்கல் தனபாலன்
நல்ல ஆலோசனைகள்... இன்றைய பகிர்வின் மூலம் படங்களுடன் புத்தரின் வாழ்க்கை வரலாறு வாசிக்க முடிந்தது...! நன்றி...////
நன்றி நண்பரே
@சைதை அஜீஸ்
இன்னாபா நீ
மேட்டர் வேணுமானு சொல்லிகினு ஒரு மேட்டர் படமும் போடல!
உன் பேச்சு டூ////
ஆஹா//// மேட்டர்ன்னா படமா? அண்ணே கொவிச்சுகிட்டாரே..
@Bagawanjee KA
நெட்லே பதிவர்ன்னு சொல்லிக்கிற பாதி பேரு இந்த வேலையைத்தானே செஞ்சுக்கிட்டு இருக்காக ...நீங்க வேற கேவலப் படுத்துறீங்களே ...நியாயமா ?///
நடக்கறதை தானே சொன்னேன்.. இதுல எங்க கேவலம் வந்துச்சு...?
@சங்கவி
Useful Information......////
சங்கவிக்கு ரொம்ப யூஸ்புல்லா? ஓகே ஓகே
@கும்மாச்சி
செம ஐடியாவா கீது, குறிச்சு வச்சிகினேன் பாஸ்.///
குறிச்சு வச்ச இடத்தை மறந்துராதிங்க பாஸ்..
@சக்கர கட்டி
ஹீஹீ ரைட் ஜமைசுடலாம்///
சக்கர.. உனக்கு ரொம்ப யூஸ்புல் தான்..
@koodal bala
நானும் டிரை பண்றேன்...///
ட்ரை பண்ணி சக்ஸஸ் ஆக்கிருங்க பாலா அண்ணே..
@Manimaran
ஹா..ஹா.. எல்லாமே செம ஐடியா.. இதை ஃபாலோ பண்ணினாலோ போதும்...பிரபல பதிவராகி விடலாம்..///
ரொம்பச் சரியா சொன்னிங்க தல...
///ஆனா எல்லாத்திலேயும் ஒரு உள்குத்து இருக்குதுன்னு மட்டும் தெளிவா தெரியுது.////
ஆகா... மேட்டரை கண்டுபிடிச்சிடிங்களே தல.... வெவரமான ஆளு நீங்க...
@நாய் நக்ஸ்
இப்படி நமக்கு நாமே குத்தி போஸ்ட் போட்டா எப்படி....????///
இன்னாயா செய்றது? பதிவு தேத்த நம்மள விட்டா இன்னைக்கு ஆள் கிடைக்கல...
மிக்க நன்றி !!!! எனக்கு அடுத்த பதிவுக்கு தலைப்பு ரெடி !!!!
ரொம்பவும் யூஸ்ஃபுல்லானா பதிவு! இதுல சிலதை நான் யூஸ் பண்ணீயும் இருக்கேன்! நன்றி!
எல்லோருக்கும் நீங்க ஒரு மேட்டரா போயிட்டீங்க பிரகாஷ்.. !
நம்ம தமிழக அரசியல் தலைவர்களின் பேச்சை அப்படியே போட்டால் நல்ல காமெடி பதிவு ரெடி அதை சொல்ல மறந்துட்டீங்களே பிரகாஷ்
இன்னுமாய்யா உன்னை சுனாமி தூக்காம வச்சிருக்கு ஹா ஹா ஹா ஹா....!
சும்மாவே பதிவுன்னு சொல்லி மிரட்டி கூப்புட்டு கமெண்ட்ஸ் போடுன்னு சொல்லி மிரட்டுவானுங்க, இவிங்களுக்கு ஐடியா வேறயா ம்ஹும்.
பதிவர் என்ற பெயரில் முக்கால் வாசிப் பேர் இதைத் தான் செய்யிறாங்கள், வேண்டாம்டா சாமியோவ், நல்லதா சொந்தமா மாதம் நாலு பதிவுப் போட்டாலும் போதும்.. எனக்கென்னவோ நீங்கள் பலரோட காலை வாரி விட்டீங்கள் என தோன்றுகிறது. ம்ம்ம்.
எனக்கும் பயன்படும் தான்!ஆனா 'ப்ளாக்' தான் காணாமலே போயிடுச்சே?(இவரு எழுதிக் கிளிச்சுட்டாலும்!)
இதையும் நோட் பண்ணி வெச்சுக்கிறோம் சமயத்துக்கு உதவுமில்ல..