2009 ஆம் ஆண்டில் முதன்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தனது கணவரைத் தேர்வு செய்யப்போவதாக நடிகை ராக்கி சாவந்த் அறிவித்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தேர்வு செய்யப்பட்டவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தொலைக்காட்சி நேயர்களை ஏமாற்றிவிட்டனர் என்று அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. அத்தகைய ஏமாற்று வேலை மீண்டும் ஒரு முறை நடந்துள்ளது.
ரதன் காரிஸ்தா என்ற பெயரில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் ரத்தன் ராஜ்புத் என்ற நடிகை இந்த நிகழ்ச்சியை நடத்தினார். எட்டு வாரங்கள் நடத்தப்பட்ட இந்த சுயம்வர நிகழ்ச்சியில் 13 ஆண்களை அவர் பேட்டி கண்டார். இந்த நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் பார்க்கிறார்கள் என்ற நிலை வந்தபோது விளம்பரங்களும் எக்கச்சக்கமாக வந்தன. எட்டு வாரங்கள் கழித்து நிறைவாக அபினவ் சர்மா என்பவரைத் தேர்வு செய்தவுடன், நிச்சயதார்த்தம் மட்டும் நடக்கும் என்று ரத்தன் பல்டி அடித்தார். கேட்டால், நான் நேயர்களுக்கு உறுதிமொழி எதையும் அளிக்கவில்லை.
எனது அணுகுமுறையில் நியாயமாக இருந்துகொள்வேன் என்று மட்டுமே கூறினேன். நிகழ்ச்சியை மிகவும் முதிர்ச்சியோடு நான் தொகுத்தளித்ததை நேயர்கள் பார்த்திருப்பார்கள் என்று அவர் கூறிக் கொண்டிருக்கிறார். திருமணம் என்ன சில வாரங்களில் முடிவெடுக்கக்கூடியதா என்று அவர் எதிர்க்கேள்வி எழுப்புகிறார். கிட்டத்தட்ட எட்டு வாரங்கள் ஊதியமில்லா விடுப்பு எடுத்திருந்த அபினவ் சர்மா, மீண்டும் வேலையில் சேருவதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் நேயர்கள் மீண்டும் ஒருமுறை பரபரப்புக்காக ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
இன்னும் எத்தனை பெண்கள் இந்த மாதிரி ஆண்களை ஏமாற்ற கிளம்ப உள்ளார்களோ? ஆண்களே! பெண்களின் மாய வலையில் விழுந்து விடாமல் கவனமாக இருங்கள்.
15 கருத்துரைகள்:
engkee எங்கே ஃபிகரு?
இந்திய சுதந்திரம் கட்டிக்காப்பாற்றப்படுகிறது மாப்ள!
இந்த நிகழ்ச்சிக்கு முன்னோடி ஒரு அமெரிக்க நிகழ்ச்சி,ஆனால் அந்த நிகழ்ச்சியில் அப்பெண் தான் தேர்ந்தெடுத்த நபரையே திருமணம் செய்தார்.குழந்தையும் பெற்றார்கள்,நிண்ட நாட்களாக இணைந்தும் இருக்கிறார்கள் பெயர் நினைவில்லை.
//இன்னும் எத்தனை பெண்கள் இந்த மாதிரி ஆண்களை ஏமாற்ற கிளம்ப உள்ளார்களோ?// பதிவரின் ஆணாதிக்க மனப்பான்மை ஒழிக.
maapla oru padhivu Teththal..
மாப்பு ஒரு குவாட்டர் சொல்லேன்...அந்த கடைசியா தெரிவு செய்யப்பட்டவங்க அவள உண்டு இல்லைஎன்று ஆக்கி இருக்கணும்
மாப்பு ஒரு குவாட்டர் சொல்லேன்...அந்த கடைசியா தெரிவு செய்யப்பட்டவங்க அவள உண்டு இல்லைஎன்று ஆக்கி இருக்கணும்
விழிப்புணர்வுப் பாதிவினைத் தந்திருக்கிறீங்க.
நமாளும் தான் ஹாண்ட்சம் ஆக இருக்கோம். யாருமே வரன் பார்த்து வாறாளுங்க்ச் இல்லையே!
செங்கோவி said... 4
//இன்னும் எத்தனை பெண்கள் இந்த மாதிரி ஆண்களை ஏமாற்ற கிளம்ப உள்ளார்களோ?// பதிவரின் ஆணாதிக்க மனப்பான்மை ஒழிக//
ஆஹா....இங்க பாருங்க, கோத்து விடுறவர் யார் என்று.
ஹி....ஹி...
ஊண்மை நட்புத்தான் பாருங்கோ.
Indha ponnugalae ippadithaan Ejamaa. Kuthunga ejamma, kuthhunga
முதலில் பாராட்டு உங்களுக்கு
ஒட்டு மொத்த பெண்ணுலகமே
எதி்ர்க்க வேண்டிய ஒன்று
ஆனால் எந்த சந்தடியும்
காணவில்லை
இந்த உலகம் எங்கே போய்க்
கொண்டிருக்கிறது....?
புலவர் சா இராமாநுசம்
ஆண்களாக பிறந்ததை விட நாங்கள் என்ன தவறு செய்தோம் எங்களை ஏன் இப்படி அலைய விடுறீங்க.........
சுயம்வரம் என்றாலே பெண் தேடுவது தானோ ?
அடடா இப்படியெல்லாம் பண்றாங்களா?