நொறுக்கு தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் அதிகமா சாப்பிட்டா என்னென்ன நோய்கள் வரும்னு சொல்லனும்னு அவசியமே இல்லை. ஆனா பெண்கள் பிஸ்கட் மற்றும் கேக்குகள் சாப்பிட்டா கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. ஒரு வாரத்துக்கு கொறஞ்ச பட்சம் மூணு தடவைக்கு மேல பிஸ்கட் மற்றும் கேக் வகைகளை சாப்பிட்டாலே புற்று நோய் வரும் அபாயம் இருபதாக இந்த ஆராய்ச்சி சொல்கிறது.
பிரிட்டனில் ஒரு ஆண்டுக்கு சுமார் 6400 பெண்களுக்கு கர்பப்பை புற்று நோய் வர்றதாகவும், அதுல சுமார் ஆயிரம் பெண்கள் மரணமடையரதாகவும் ஆய்வு சொல்கிறது. இந்த ஆய்வாளர்கள் பொதுவாக இனிப்புப் பண்டங்களுக்கும் புற்றுநோய் வாய்ப்பிற்கும் தொடர்புள்ளதா என கண்டறியவே ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார்கள். ஆனால் அதிக சர்க்கரை உள்ள இனிப்புப் பண்டங்கள், குளிர் பானங்கள், ஜாம்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு புற்று நோய் வாய்ப்பு தெரியவில்லையாம். பிஸ்கட்டுகள், பன்கள், இனிப்பு கேக்குகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் தான் புற்று நோய்க்கான ரிஸ்க் 42% அதிகமிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
வாரத்திற்கு 3 முறைக்கும் மேல் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உண்பவர்களுக்கு புற்றுநோய்க் கட்டி ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டு பிடிக்கபட்டுள்ளது. இன்னும் பல ஆய்வுகள் செய்ய இருப்பதாக சொல்கிறார்கள். அந்த ஆய்வின் முடிவுகள் இந்த ஆய்வுடன் ஒத்து போச்சுனா புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம். ஆகவே பெண்களே, ஆராய்ச்சி முடிவு என்னவேனாலும் இருந்திட்டு போகட்டும். எதுக்கும் பிஸ்கட், கேக்குகள் சாப்பிடுவதை கொஞ்சம் கொறச்சுக்கங்க.
ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆய்வில் 60,000 த்திற்கும் மேற்பட்ட பெண்களை பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
25 கருத்துரைகள்:
அடடா..பிஸ்கட்டில் இம்புட்டு மருத்துவ விடயங்கள் இருக்கா?
பிஸ்கட்,கேக் சாப்பிடுறத குறைச்சா புற்று நோய் வாய்ப்புகள் குறையுமோ என்னமோ,ஆனால் நம்ம பர்ஸ் சைஸ் குறையாது .விழிப்புணர்வு பதிவு!
பாத்து நண்பா!பிஸ்கட் கம்பனிகாரங்க,பேக்கரி காரங்க சண்டைக்கு வந்துடப்போறாங்க!
பிஸ்கோத்து மேட்டர் இல்ல இது
செலவு மிச்சம்
வணக்கம் பிரகாஷ். லக்ஷ்மி அம்மாவின் பதிவில் உங்களை பற்றி பார்த்து உங்க பதிவுக்கு வந்திருக்கிறேன்.
இந்த பதிவு மிகவும் பயனுள்ளது. என் பெண்களிடம் இதை படித்து காட்ட வேண்டும்..நன்றி.
எதை தின்னாலும் ஏதாவது ஆகும்ன்னு சொல்லிக்கிட்டே திரியிறாங்கே?? திங்க விடாம தடுப்பவர்களை தட்டி கேட்க இங்க யாருமே இல்லையா!!??
அது சரி இது பொண்ணுகளுக்கு மட்டும் தானே, பசங்களுக்கு இல்லையே??
மாப்ள விஷயங்கள் அடங்கிய பகிர்வுக்கு நன்றி!
யோவ், என்ன அநியாயம்யா இது...பிஸ்கட்டும் சாப்பிடக்கூடாதா..வேற என்னத்தைத் தான்யா சாப்பிடறது.
பெண்களே கவனியுங்கள் ))
பிஸ்கட்,கேக் போன்றவை குழந்தைகளின் உணவு வகைகள்.இது எப்படி புற்று நோயை உருவாக்கும்?மேலும் குளிர்பானங்கள் அதிலும் பெப்சி,கோலா போன்றவை உடலுக்கு கெடுதி என்றும் ஆராய்ச்சிகள் சொல்வதாக கேள்வி.
பெண்களே உஷார் !
அப்ப பாருங்களன்
நல்ல தகவல்
ஆச்சரியமா இருக்கே?அது ஏன் பொம்பளைங்களுக்கு மட்டும் இப்புடி ஆவுது?
எங்கேய்யா போயிட்டீங்க,செங்கோவி வூட்டுப் பக்கம் காணம்???
தமிழ் மணம் ஒன்பது
நல்ல கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பா
அடடா, பிஸ்கெட் சாப்பிடுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா. நல்ல
விழிப்புணர்வு பதிவுதான். நன்றி.
என்னலே இப்பிடி மிரட்டுறீங்க???
போற போக்குல... எதையும் சாப்பிட முடியாது...
பெணகளுக்கு அதிர்ச்சி தரும் விழிப்புணர்வு பதிவு ... பகிர்வுக்கு பாராட்டுக்கள் வாசி
விழிப்புணர்வு பதிவு.
நல்லா கண்டு பிடிக்கிராறையா நம்ம ஆதிவாசி
உடம்பு சரியில்லை என்றால் பிஸ்கட் தான் சாப்பிட சொல்லு வாங்க ஆனால் இப்ப அதை கூட தின்ன கூடாதா?
வாரத்திற்கு 3 முறைக்கும் மேல் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உண்பவர்களுக்கு புற்றுநோய்க் கட்டி ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டு பிடிக்கபட்டுள்ளது.
ஆகா இந்த விசயம் தெரியாமல் இதுவரைகாலமும் வெளுத்துக்கட்டிவிட்டமே....!!!
இனியாவது அவதானமாய் இருக்க வேண்டும் .(பயப்புள்ள நல்ல பதிவுதான் போட்டிருக்காரு!..
அருமையான விழிப்புணர்வுப் பதிவாச்சே....) ஓட்டுப் போட்டாச்சு சகோ .