ஆந்திராவில கர்னூல்லில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில போன வியாழக்கிழமையில இருந்து மறு நாள் வரை சுமார் 12 சிசு குழந்தைகள் இறந்திருக்கு.... எவ்ளோ அதிர்ச்சியான விஷயம் இது. இந்த இறப்புகள் சாதாரணமா வரக்கூடியது என அந்த ஆஸ்பத்திரியின் பெரிய டாகுட்டரு அலட்சியமா சொல்லியிருக்காரு. என்னாங்க நெனச்சிட்டு இருக்கீங்க, ரெண்டு நாள்ல ஒரு டஜன் சிசுக்கள் இறந்திருப்பது உங்களுக்கு சாதாரண விஷயமா? எப்படிங்க உங்களால இவ்ளோ ஈசியா பேச முடியுது? பாவம்யா அந்த அப்பா அம்மாக்கள். எவ்ளோ கனவுகளோட அவங்க இருந்திருப்பாங்க. அட்லீஸ்ட் ஒரு மருத்துவ ரீதியான காரணத்தையாவது அவங்களுக்கு சொல்லி அவங்கள தேத்தியிருக்கலாம். அதுவும் செய்யல.
அதுக்கும் மேல ஆந்திர சுகாதார துறை அமைச்சர் ரவீந்திர ரெட்டி இந்த இறப்புகள் மனுஷ தவறினால் நடக்கல. முழுக்க முழுக்க இறைவனே காரணம்னு சொல்லி இருக்காரு. எவ்வளவு வேதனையான விஷயம். ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா? எல்லாம் மருத்துவர்களின் அலட்சியமே காரணம். நூறு குழந்தைகள் அனுமதிக்க வசதிகள் இருந்தும் வெறும் ரெண்டே ரெண்டு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மட்டுமே வச்சிருந்திருக்காங்க. எப்படி இது போதும்? இதனால அவசர காலத்தில் எல்லோருக்கும் ஆக்சிஜன் கொடுக்க முடியாததும் ஒரு காரணம். ஒரு அரசு மருத்துவமனையில் சரியான அளவில் மருத்துவ உபகரணங்கள் இருக்க வேண்டாமா? இனியாவது அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்.
உரிய பொறுப்பில் இருப்பவர்களும் சாக்குபோக்கு சொல்வதை நிறுத்தி விட்டு, உண்மையான காரணத்தை ஆராய வேண்டும். அப்போது தான் இனியும் நடக்கும் மரணங்களை தடுத்து நிறுத்த முடியும்.
அப்புறம் ஒரு விஷயம்,
இது தமிழ்வாசியில் 300வது இடுகையாகும் என ஒரு புள்ளி விவரம் சொல்லுது. எப்படியோ தட்டுத்தடுமாறி, இத்தன பதிவுகள தாண்டி வந்திருக்கேனுங்க. எல்லாமே உங்க ஆதரவுதான்னு சொல்லி ஐஸ் வக்கிறேன். வேறவழி... நீங்க தேடி வந்து வாசிக்கரதுனால இம்புட்டு எழுத முடியுது... நீங்க வாசிக்கலைனாலும் எழுதுவேன். எனக்காக எழுதுவேன்... பொழுது போக்கிற்காக எழுதுவேன். நண்பர்கள் பிளாக்கிற்கு தேடிப்போய் வாசிப்பதும், அவர்களுக்கு கருத்துரை சொல்லி உற்சாகப்படுதுவது போல, என்னையும் உற்சாகபடுத்தும் நண்பர்களுக்கு நன்றி....
டிஸ்கி:
நண்பர்களே, 300வது பதிவிற்கான வாழ்த்தை இங்கே தெரிவிக்க வேண்டாம். மேலே போட்டுள்ள செய்திக்கான கருத்தை தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றி...
46 கருத்துரைகள்:
நண்பர்களே! தமிழ்மணம் இணைக்கவும்... நன்றி
300 அடிச்சும் ஸ்டடியா நிக்கும் அண்ணன் பிரகாஷை வாழ்த்த வயது பத்தாது, எனவே வணங்குகின்றேன் ஹி ஹி
article very shock.....
நண்பா தமிழ்
வாழ்த்துக்கள் முண்ணூறு............
வாழ்த்துக்கள் முண்ணூறு...
வாழ்த்துக்கள் முண்ணூறு...
வாழ்த்துக்கள் முண்ணூறு...
அன்புடன்
யானை குட்டி
கொடுமையான நிகழ்வு மாப்ள....300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
அன்பின் பிரகாஷ் - 300க்கு பாராட்டுகள் _ நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நண்பர்களே, என் 300 வது பதிவுக்கான வாழ்த்தை தெரிவிக்க வேண்டாம். மேலே போட்டுள்ள செய்திக்கான கருத்தை வழங்குமாறு அன்புடன் கேட்டுள்ளேன்...
மாப்ள..அது ஏதோ ஆக்ஸிஜன் தீர்ந்தது தான் காரணம்னு சொல்றாங்க..பெரிய அநியாயம்யா இது.
எப்படிய்யா 300க்கு வாழ்த்துச் சொல்லாம இருக்கிறது? சொல்லாமலாவது இருக்கணும்..
வாழ்த்துகள்!
சரி சரி - நீ கருத்துச் சொல்லச் சொன்னதாலே கர்த்து இதோ - அரசு மருத்துவ மனைகளில் பல் வேறு காரணங்களீனால் இத்தவறுகள் நடக்கின்றன. தடுப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் போதாது - இது மாதிரி உயிர் காக்கும் கருவிக்ள் தினந்தினம் பரிசோதிக்கப் பட வேண்டும். பொறுப்பு யாரிடமாவது கொடுக்கப்பட வேண்டும். செய்வார்களா ? ...... நட்புடன் சீனா
VERY SAD....
மருத்துவமனைகளில் சுகாதாரத்தை மேம்படுத்த அரசு கட்டாயமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பிஞ்சு குழந்தைகளை இறப்பது கொடுமையான விஷயம்.
சரி கருத்த சொல்லியாச்சு வாழ்த்த சொல்லலாமா??
வெல்டன் 300
உரிய பொறுப்பில் இருப்பவர்களும் சாக்குபோக்கு சொல்வதை நிறுத்தி விட்டு, உண்மையான காரணத்தை ஆராய வேண்டும். அப்போது தான் இனியும் நடக்கும் மரணங்களை தடுத்து நிறுத்த முடியும்.
வாழ்த்துகள்!300 --3000!!
இந்த கொடுமை ஆந்திராவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவமனையிலும் நடக்கிறது...
இது கண்டிப்பாக கண்டி்க்க வேண்டியது...
கடவுள் செயல் என்றால் இவர் எதற்க்கு மருத்தும் படிக்க வேண்டும்...
இந்த கொடுமை குறித்த விழிப்புணர்வை நாடு முழுவுதும் ஏற்படுத்த வேண்டும்...
தங்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் தங்களின் 300 வது பதிவுக்கு வாழ்த்து சொல்ல வில்லை...
அங்கே நடந்தது முழுக்க முழுக்க மனித தவறாத்தான் தெரியுது.... யாராவது பொதுநல வழக்கு போட்டு எல்லாரையும் தண்டிக்கனும்......!
சே என்ன கொடுமை இது. வெரி, வெரி பேட்
உயிரின் மதிப்பு தெரியாதவர்கள் டாக்டர் - அல்ல அரக்கர்கள்....
300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
இதுக்கு மருத்துவரை குறை சொல்ல முடியாது..!? அரசு வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுக்கவில்லை.. அரச வைத்தியசாலைகளின் ஆள் பற்றாக்குறை தெரிந்த விடயம்தானே.. இதில் பாவம் அப்பாவி பெற்றோர்களே..
வணக்கம் நண்பா
நலம் தானே,
சுகாதாரா அமைச்சின் கவலையீனத்தால் நிகழும் கொடூரமான செயல் தான் இது..
அப்பாவி மக்களின் பணத்தினைச் சூறையாடினாலும், அவர்களுக்கு நல்ல சேவை வழங்க முடியாது மருத்துவ மனைகள் இருப்பது தான் வேதனையளிக்கிறது.
உங்களின் எழுத்து முயற்சிக்கு வாழ்த்துச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
தொடர்ந்தும் பல பதிவுகளை எழுதி, பிரகாஷ் மேலும் மேலும் பிரகாசம் பெற வாழ்த்துகிறேன்.
உரிய பொறுப்பில் இருப்பவர்களும் சாக்குபோக்கு சொல்வதை நிறுத்தி விட்டு, உண்மையான காரணத்தை ஆராய வேண்டும். அப்போது தான் இனியும் நடக்கும் மரணங்களை தடுத்து நிறுத்த முடியும்.
பரிதாபகரமான பகிர்வு .உண்மையில இதுக்கு உடனடியா நடவடிக்கை எடுக்கணும் ........
முன்னூறு பதிவுகள் இல்ல சகோ
இன்னும் மூவாயிரம் ஆக்கங்கள்
போடவேண்டும் அதற்குத்தான்
இந்த வாழ்த்துக்கள் ......................
தொடருங்கள் உங்கள் பணியை
இடைவிடாது இறைவன் துணையிருப்பார்.
நன்றி சகோ பகிர்வுக்கு .
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! அதிர்ச்சியான ஒரு தகவல் சொல்லியிருக்கீங்க! மனசுக்கு கஷ்டமா இருக்கு!
ஸார், உங்க முன்னூறாவது பதிவுக்கு என்னோட வாழ்த்துக்கள் சார்!
சார், என்னோட லேட்டஸ்ட் பதிவுல உங்களப்பத்தி ஒரு குறிப்புப் போட்டிருக்கேன்! டைம் கெடைச்சா வந்து பாருங்க சார்!
இவ்வளவு கவனயீனமாக இருக்கிறார்களே ((
பகிர்வுக்கு நன்றி நண்பரே
மனதை வலிக்க செய்யும் பதிவு
மனதை நெகிழச் செய்யும் பதிவு..
ஏன்னா ஸ்பீட்டு.. முதல் பகுதிக்கு கண்டனங்கள், அடுத்த பகுதிக்கு வாழ்த்துக்கள்
சமூகத்தில் பொருப்புள்ள மனிதர்களிடமிருந்து மிகவும் பொருப்பற்ற வார்த்தைகள் வருவது இது நம் சமூகத்தின் இயலாமையைத்தான் காட்டுகிறது. பச்சிளம் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு இறைவன் ஆறுதலை அளித்திடவேண்டும்
நல்ல பதிவு பிரகாஷ்.
முன்னூறுக்கு வாழ்த்துக்கள்.
300 ரோட உங்க சமூக அக்கறையையும் பாரட்டுறேன்
வேதனையான விஷயம் தான் நண்பரே .
அஜாக்கிரதை,பொறுப்பின்மை,இது என் வேலை இல்லை அடுத்தவர்களது என்று ஒதுங்கி போதல் இப்பிடி பல காரணங்கள் நண்பரே .
votted
congrats for achieved 300 th episode
300 க்கு வாழ்த்துக்கள் ப்ரகாஷ்.. ஆனால் பதிவு கொஞ்சம் பகீர்தான்.
வேதனையான பகிர்வு, உடனே அந்த வைத்திய சாலைக்கு சீல் வைக்க வேண்டும்,
மிக வேதனைதான்
300வது பதிவுக்கு பாராட்டுக்கள்.
எனது புதிய பதிவு http://pc-park.blogspot.com/2011/09/jaffna.html
உங்கள் மின்னஞ்சல் வேணும் தமிழ்வாசி சேர் என் மின்னஞ்சல் rss4sk@gmail.com
கொடுமையான விசயம் சார்!!
.............
அப்புறம் வாழ்த்துக்களும்!
வேதனையான விஷயம்.. நண்பரே..
என்ன கொடுமையிது குழந்தைங்கன்னா இவ்வளவு கேவலமாகிவிட்டதா? atleast ஒரு விசாரணைக்கமிசன்.
எத்தனை பதிவு வேண்டுமானாலும் போடு பிரகாசு. படிக்க நாங்க இருக்கோம்ல .முன்னூறுக்கு வாழ்த்துக்கள். சாமி .
300க்கு பாராட்டுகள்... நல்வாழ்த்துகள்...
கொடுமையான விசயம் ...