வணக்கம்ண்னே, நம்மாளுக ஒரு நாளைக்கு ஒரு தம்மு அடிக்றதுல இருந்து சுமார் ரெண்டு மூணு பாக்கெட் வரைக்கும் காலி பண்ற ஆட்கள் இருக்காங்க. தம்மடிக்க வயசு வித்தியாசமெல்லாம் இல்லை. ரொம்ப சீக்கிரமா கத்துக்கறாங்க. பழக்கம் அதிகமாகி விட முடியாம செயின் ஸ்மோக்கரா ஆயிடறாங்க. அவங்களுக்கு நேரங்காலமெல்லாம் கிடையாது. சாப்பிடறதுக்கு முன்னாடி, பின்னாடி, தூக்கம் வரலையினா தம்மு, தூக்கம் வர்றதுக்கு தம்மு என தம்மடிக்க காரணம் ரெடியா வச்சிருப்பாங்க.
இதுல ஒரு கூத்து பண்ணுவாங்க பாருங்க, தம்மடிச்சுட்டே கக்கூஸ் போனாத்தான் நல்லா ஃபிரீயா போகும்னு டாய்லெட்டையே புகை மண்டலமா ஆக்கிருவாங்க. அடுத்து சிகரெட் பழக்கமிலாதவங்க அந்த டாய்லட்டுக்கு போனா அந்த புகை நாத்ததுல பாவம் அவங்களுக்கு கக்கூஸ் வராது. அவிங்க பாடு செம தின்டாட்டமா இருக்கும். இப்ப நான் சொல்ல வர்ற மேட்டரே வேற. சிகரெட் பிடிக்கிறது தப்பு கிப்புன்னு விழிப்புணர்வு சொல்ல வரல. நமாளுக சிகரெட் ஒன்னுன்னாலும் சரி, பாக்கெட் வாங்கினாலும் கூடவே எதுக்கு ஹால்ஸ் மிட்டாய் வாங்கறாங்க? அதுவும் பத்து பதினஞ்சுனு வாங்கி ஸ்டாக் வச்சிக்கிருவாங்க. சிகரெட் ஸ்டாக் வைக்கிறாங்களோ இல்லையோ ஹால்ஸ் எப்பவும் ஸ்டாக் இருக்கும்.
ஹால்ஸ் எதுக்கு யூஸ் ஆகுது? ஹால்ஸ், விக்ஸ் மிட்டாய்கள் தொண்டை கரகரப்பு, இருமலுக்கு தற்காலிக மருந்தாக பயன்படுகிறது. தண்ணீரோ, குளிர்சியோ சேராமல் இருமல் வந்தால் உடனே மருத்துவமனைக்கு போகனும்னு அவசியம் இல்லை. பக்கத்துல இருக்கற கடையில ஹால்ஸ், விக்ஸ் விப்பாங்க, நாமளும் இருமலுக்கு உடனே வாங்கி வாயில போட்டு சப்பிக்கலாம். ஒரு ரெண்டு நாள் போட்டோம்னா சரியாயிடும். அதுக்காக தான் ஹால்ஸ், விக்ஸ் விக்கறாங்க. அதுக்கும் மேல இருமல் சரி ஆகலைன்னா ஹாஸ்பிடல் போக வேண்டியது தான். இப்படி யூஸ் ஆகுற ஹால்ஸ் எதுக்கு சிகரெட் வாங்கறவன்களுக்கு தேவைப்படுது? சிகரெட் பிடிக்கணும் ஆனா பிடிச்ச மாதிரி காட்ட கூடாது. அதுக்கு அவிங்களுக்கு ஹால்ஸ் தேவைப்படுது. அதோட தொண்டைக்கும் நல்லதுன்னு நெனச்சு போட்டுக்கிருவாங்க.
அடப்பாவிகளா? இருமலுக்கு மருந்தா யூஸ் ஆகுற ஹால்ஸ் உங்களுக்கு சிகரெட் நாத்தத்தை போக்கும் மருந்தா பயன்படுதாக்கும். என்ன கொடுமை சார், பாக்கும் யூஸ் பன்றாங்களேன்னு சொல்றிங்களா? ஹி..ஹி... இதுல நம்மாளுக ஒரு ட்ரிக் வச்சிருக்காங்க. பாக்கு போட்டா அந்த வாசனையே பொண்டாட்டி கிட்ட காட்டி கொடுத்திரும். ஹால்ஸ் போட்டா வாசனை வராதான்னு கேட்கறின்களா? இருமல்னு சொல்லி சமாளிச்சுக்கலாம். தினமும் தம்மடிச்சுட்டு ஹால்ஸ் போட்டுட்டு போனா தினமும் இருமலானு போண்டாட்டிங்க கேட்பாங்களேன்னு நினைக்கறின்களா? ஏன்னா அந்த ஹால்ஸ் வாசனை அவங்களுக்கு பழகிப் போயிரும். சிகரெட் பிடிக்கிறது அவங்களுக்கு தெரிஞ்சாலும், நமக்கு பயந்துட்டு ஹால்ஸ் போட்டுக்கராங்கனு அவங்களுக்குள்ள ஒரு சந்தோசமும் வந்திரும்.
அது சரிங்க, பெட்டிக்கடையில ஹால்ஸ் ஏன் விக்கணும்? சிகரெட் பிடிக்றவங்க வாங்க தான் விக்கறாங்க. இது அவசியமாங்க? இருமலுக்கு தேவைபடுற மிட்டாய் சிகரெட்டுக்கு தேவையா? அதுவும், டீ, வடை, போண்டா, விக்கிற பங்க் கடையில் எதுக்கு ஹால்ஸ்? பெட்டிகடையில் விக்கிற ஹால்ஸ் டூப்ளிகேட்டா கூட இருக்கலாமே. சில்லறை இல்லையினாலும் அந்த ஹால்சை தான் தராங்க. அந்த அளவுக்கு ஹால்ஸ் சீப்பா போச்சா? அப்ப இருமலுக்கு மருந்துங்கிரதெல்லாம் சும்மா தானா? மெடிக்கல் ஷாப் எதுக்கு இருக்கு? ஹால்ஸ் க்கு அங்க மதிப்பு இல்லையா? இன்னும் என்னனமோ கேட்கலாம்ங்க. நீங்களே கேட்டுக்கங்க....
32 கருத்துரைகள்:
நல்ல கண்டுப்பிடிப்பு . உனக்கு ஆஸ்கர் தரலாம். இல்லையெனில் இந்திய உளவுப் படையில் சேர்க்கலாம் ..
மாப்ள இன்னைக்கு நானும் இதைப்பற்றிய ஒரு பதிவு போடுறேன் பாரும்!
ஆம்மால்ல கரீட்டாதான் கேட்டு இருக்க?
விடு மாப்ள உன் அனுபவத்தை எல்லாம் பதிவா போட்டுக்கிட்டு?
எவ்வளவு தெளிவாக இருக்கறாறு நம்ம மாப்ள...
விடுய்ய நம்ம ஜனங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க...
சிகரெட் பழக்கம் பத்திப் போடுவீங்கனு பாத்தா ஹால்ஸ் பத்தி போட்ருக்கீங்க???
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... சரி விடுங்க.. நமக்கெதுக்கு வம்பு.
ஹால்ஸ் அதிகம் சாப்பிட்டா அல்சர் வருமாம்ல..
EEN INTHA KOLAI VERY?
நல்லாச் சொன்னீர்கள் இந்த சிகரட் பத்திறவங்களாலை பத்தாதவங்கபடுகிற அவஸ்த்தை கொஞ்சநஞ்சமில்லை
சமீபத்தில எங்காவது போய் பப்ளிக் டாய் லெட்டில போய் கஷ்டப்பட்டிருப்பீங்க போலிருக்கு .
ஹிஹி விடுங்க நண்பரே
மற்றபடி டுப்ளிகெட் வர வாய்ப்புண்டுதான் நண்பரே
பகிர்வுக்கு நன்றி
தமிழ் மணம் ஆறு
ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் நீங்க புடிக்கிறீங்க நண்பா, சிகரெட் புடிக்காதா ஆளா இருப்பீங்கன்னு நினைக்கிறேன், சிகரெட் புடிச்சுட்டு வீட்டுக்கு போறது எவ்வளவு பெரிய ரிஸ்க் தெரியுமா, அதுக்கு தான் இந்த போஸ்ட் ப்ரிபரசன் (ஹால்ஸ் / பாக்கு / டீ/வடை) சில நேரம் சிகரெட் விலையை விட அதை மறைக்கிறதுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்கும், பொண்டாட்டிய சமாளிக்கலாம் ஆனா மாமியாரை சமாளிக்கிறது கஷ்டம். எல்லாம் அனுபவிச்சு இருந்தா தெரியும்.
கடைசியா ஒண்ணு நம்ம ஊர்ல (மதுரை) தான் பொட்டி கடையில ஹால்ஸ் கிடைக்கும் எங்க ஊர்ல (பெங்களூர்) மெடிக்கல் ஷாப்-ல மட்டும் தான் வாங்க முடியும்.
all votes ம் ம் ம்
அனுபவ கதை சூப்பர் ஹி ஹி....
விக்கியுலகம் said...
மாப்ள இன்னைக்கு நானும் இதைப்பற்றிய ஒரு பதிவு போடுறேன் பாரும்!//
எலேய் ராஸ்கல் இதெல்லாம் ஓவர் சொல்லிப்புட்டேன் ஆமா...
பாக்கு போட்டா அந்த வாசனையே பொண்டாட்டி கிட்ட காட்டி கொடுத்திரும். ஹால்ஸ் போட்டா வாசனை வராதான்னு கேட்கறின்களா? இருமல்னு சொல்லி சமாளிச்சுக்கலாம்.//
ஐ இது நல்ல ஐடியாவா இருக்கே...
ஹால்சுல இவ்வளவு மேட்டரா !
மொதல்ல சிகரட்டு பத்தி பதிவு போட்டிங்க.இப்ப,அந்த மணம் போக்கும் "ஹால்ஸ்" பத்தி போட்டிருக்கீங்க.ஒண்ணும் பிரிய (புரிய)மாட்டேங்குதே?அப்போ,சிகரட்டு புடிச்சிட்டு ஹால்ஸ் போடச் சொல்லுறிங்களா?
சிகரெட் பிடிடிசிட்டு
வாசத்தை மறைக்க
எவ்வளவோ வந்தாலும்
ஹால்ஸ் கு இணையா ஒன்னும் வரல...
ஹால்ஸ் ல இவ்வளவு மேட்டர் இருக்கா?/
நல்லா இருக்கு...
குட் ஷேர்
நல்லாத்தான் இருக்கு பதிவு, வித்தியாசமான ஆளுதான்.
என்ன அநியாயம்..இந்தியால இப்படில்லாமா நடக்குது..ச்சே..சே..
(ஒண்ணுமில்லை..நானும் ஃபாரின் பதிவர்னு தெரியவேண்டாமா..அதான் இப்படி!)
சரிய்யா..இதையெல்லாம் பார்த்துட்டு சும்மாவா வந்தீங்க? அந்த ஹால்ஸ் பாட்டிலை எடுத்து, கடைக்காரர் தலையில டொம்முன்னு போட வேண்டியது தானே?
நண்பா ஹால்ஸை விட ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு. அதுதான் பூமர் பபிள் கம் மற்றும் பாஸ் பாஸ். யாராலேயும் கண்டுபிடிக்க முடியாது.
தொண்டையிலே கிச் கிச் ...தம்பி பிரகாசுக்கு...
பெட்டிக்கடையில் பாட்டில் வித்தா செங்கோவி கொவிசுக்குவாரா ...என் அடுத்த பதிவு...-:)
அது சரிங்க, பெட்டிக்கடையில ஹால்ஸ் ஏன் விக்கணும்? சிகரெட் பிடிக்றவங்க வாங்க தான் விக்கறாங்க. இது அவசியமாங்க? ////
வணக்கம் சார், கும்புடுறேனுங்க!
ரொம்ப நல்லாக் கேட்டிருக்கீங்க/ அதானே!
எப்படி இப்படி அப்பாவியா எழுத முடியுது பிரகாஷ். அப்பறம் அந்த படம் வேறு story line சொல்கிறது.
இதுல ஒரு கூத்து பண்ணுவாங்க பாருங்க, தம்மடிச்சுட்டே கக்கூஸ் போனாத்தான் நல்லா ஃபிரீயா போகும்னு டாய்லெட்டையே புகை மண்டலமா ஆக்கிருவாங்க.//
அனுபவம் அருமை
நலம் பேண நல்ல பதிவு
யார் கேட்பாங்க!
புலவர் சா இராமாநுசம்
கேக்குறாங்க பாரு கேள்வி!
வணக்கம் பாஸ்,
புகை பிடிப்போர் தமக்கேற்ற மாதிரி சூழலை எப்படியெல்லாம் மாற்றிக் கொள்கின்றார்கள், ஹாக்ஸ் போட்டு எப்படியெல்லாம் பிழைக்கிறார்கள் என்பதனை உங்களின் பதிவு சொல்லி நிற்கிறது.
ஹால்ஸ் கடிக்க வேண்டாம் அப்படியே முழுங்கிடுவேன்
:)
பதிவு சூப்பர்
நல்ல பகிர்வு
ஹால்ஸ் மட்டுமா.. இப்போ வெங்காயம் கூட யூஸ் பண்ணுறாங்கப்பா