நண்பர்களே, கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் இன்று ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அது பற்றிய ஒரு பார்வை:
அன்று சென்னைக்கு ஆபத்து வந்த போது அவரின் அறிக்கை:
கடந்த 2007 ம் வருடம் ஜூலை 1 ல் அமெரிக்க அணு சக்தி போர் கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்தில் நிறுத்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஒரு 500 மெகாவாட் திறனுள்ள ஒரு கப்பலே கடும் ஆபத்து நிறைந்தது எனவும், கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கும் எனவும் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
அவரின் முழு அறிக்கை கீழே:
இன்று கூடங்குளத்திற்கு ஆபத்து வந்த போது அவரின் அறிக்கை:
2000 மெகவாட் திறனுள்ள அணுமின் உலையால் எப்படி ஆபத்து இருக்காது என சொல்கிறார். நேற்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் கூடங்குளம் அணுமின் உலை பாதிப்பு இல்லை என சொல்லி இருக்கிறார்.
அவரின் அறிக்கை கீழே:
கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளதால், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும், அணுமின் நிலையத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய போதும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அணு உலைகளை இயக்கத்திலிருந்து நிறுத்தும் போதும், உலைகளை குளிர்விக்கத் தேவையான ஒரு டீசல் மின்னாக்கிக்கு பதில் நான்கு டீசல் மின்னாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டீசல் மின்னாக்கிகள், வெள்ளம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இந்திய விஞ்ஞானிகள், ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு தொடர்பாக பொது மக்கள், குறிப்பாக, கூடங்குளம், இடிந்தகரை, உவரி, கூட்டப்புளி, கூடுதாழை, பெருமணல், கூத்தங்குழி உள்ளிட்ட அந்தப் பகுதி கடற்கரை கிராமங்களில் யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். திட்டங்களுக்காக மக்கள் என்று இல்லாமல், மக்களுக்காகவே திட்டம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வரும் எனது தலைமையிலான அரசு, ஏழை, எளியவர்களுக்கான அரசு; சராசரி மனிதர்களுக்கான அரசு; சாமானிய மக்களுக்கான அரசு. தமிழக மக்கள் எவரும் பாதிக்கப்படாத வகையில் தான், எனது அரசு செயல்பட்டு வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். எனவே, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
அவரின் மேற்கண்ட அறிக்கையில் மக்களுக்காக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுகப்படுள்ளது என தெளிவாக சொல்லவில்லை. வெறும் தைரியத்தை கொடுக்கும் வகையிலே அவரின் அறிக்கை அமைந்துள்ளது. அன்று சென்னைக்கு என்றவுடனே ஒரு சாதாரண அணு ஆயுத கப்பலே ஆபத்து என்று சொன்னவர், இன்று ஒரு பெரிய அணுஉலை ஆபத்து இல்லை என சொல்லியுள்ளார்.
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? மக்களே சிந்தியுங்கள். உண்மை நிலையை அரசு உணர வேண்டும். நம் மக்கள் காக்கப்பட வேண்டும்.
26 கருத்துரைகள்:
சரியா எடுத்துக்காட்டி இருக்கீங்க நண்பா!
அருமை
உணர்ந்து பாருங்கள்
பாதிப்பின் விளைவுகளை...
எடுத்திடுங்கள்
நல்ல முடிவை..
நண்பரே
உங்கள் முயற்சி நன்று.
அண்ணே
பாவம் அந்த அம்மா யார் குடுத்த அறிக்கையோ!! அந்த அம்மா படிக்குது
வேற என்ன சொல்ல
நியாயமான கேள்வி சார்! தீர்வு எப்போ?
kut குட்
நன்றி சகோ!
நான் எழுதியுள்ள (என்வலையில்)
இதற்கும் உரிய பதிலாகும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்?
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்?
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்?
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்?
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்?
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்?
இன்னும் சத்தமிட்டுக் கேட்போம்..
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? மக்களே சிந்தியுங்கள். உண்மை நிலையை அரசு உணர வேண்டும். நம் மக்கள் காக்கப்பட வேண்டும்.//
உண்மைதான் மாப்ள..
மக்களே சிந்தியுங்கள்., சிந்திப்பீர்களா,?! :-)
அருமையாக பதிலடி அந்த அம்மாவுக்கு
நியாயமான கேள்வி நண்பரே
அது நேற்று இது இன்று ..அப்ப எதிர்க்கட்சி தலைவி, இப்ப முதல்வர் ..தொப்பிகள் பிரட்டப்படும் )))
நண்பா கப்பலுக்கும் ஒரு பாதுகாக்கப்பட மின் தொழிற்சாலைக்கும் உண்டான வித்தியாசத்தை உணருங்கள் மேலும் அந்த கப்பல் வேற்று நாட்டுக்கு சொந்தமானது நன்மைகள் என்பது ஏற்றுகொள்ளப்படவேண்டியது
நண்பா கப்பலுக்கும் ஒரு பாதுகாக்கப்பட மின் தொழிற்சாலைக்கும் உண்டான வித்தியாசத்தை உணருங்கள் மேலும் அந்த கப்பல் வேற்று நாட்டுக்கு சொந்தமானது
நன்மைகள் என்பது ஏற்றுகொள்ளப்படவேண்டியது
கூடங்குளம் அணு உலையில் உரிய பாதுகாப்பு அம்சங்களை இது வரை யாரும் தெளிவாக விளக்க வில்லை என்பது உண்மை தான், எத்தனை கட்ட பாதுகாப்பு, உலைக்கு இருக்கிறது என்பதை தெளிவாக சொல்லாத அரசாங்கங்கள்., எப்படி மக்கள் உயிருக்கு உத்திரவாதம் தருவதை ஏற்றுகொள்ள இயலும்.
எனது தளத்தில் உங்கள் பின்னூட்டம் கண்டு மறுமொழி சொன்னதை இங்கேயும் பதிவு செய்து கொள்கிறேன்.மக்கள் சார்ந்த,அரசியல் சார்ந்த வகையிலே மட்டுமே கூடங்குளம் திட்டம் வெளிவருகிறது.இதுபோன்ற பிரச்சினைகளையெல்லாம் வடக்கில் NDTV அடிச்சு துவைச்சு காயப்போட்டு விடுகிறது.தமிழகத்தில் விஞ்ஞானிகள் குறித்த எந்தக் கருத்தும் வெளிப்படுவதில்லை.
//
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வை//
வாங்க!உங்களைத்தான் தேடிகிட்டிருந்தேன்.கூடங்குளம் குறித்து இதுவரைக்கும் யாருக்கும் ஒரு பின்னூட்டம் கூட இடவில்லை.காரணம்,கூடங்குளம் பற்றிய முழு விபரங்கள் அணு விஞ்ஞானிகளின் கருத்தாக,விமர்சனமாகவோ இதுவரை காணக்கிடைக்கவில்லை.
நமது மின்சார தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால் ஜார்ஜ் புஷ் காலத்து அமெரிக்காவுடனான அணு ஆயுத உடன்படிக்கைக்கு ஆதரவான நிலையானவன் நான்.ஜப்பானின் சுனாமி போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டாலும் கூட அதனை ஜப்பான் போல் சமாளிக்கும் திறமை நம்மிடம் இல்லை என்பது உண்மையே.அதே நேரத்தில் பொருளாதார திட்டங்கள் போராட்டங்களினாலோ,உண்ணாவிரதங்களினாலோ முடங்கிப்போய் விடவும் கூடாது.பெட்ரோலிய மின்சாரத்துக்கு மாற்று அணு உலை மின்சாரமாகவே இருக்க முடியும்.போராட்டங்களும்,உண்னாவிரதங்களும் நமது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையா அல்லது இருப்பதை வைத்தே வாழலாம் என்ற சமரசமா என்பது விவாதத்திற்குரியது.இன்னும் சரியாகப் புரியாத கர்ரணத்தால் உண்ணாவிரதத்தை நான் ஆதரிக்கவுமில்லை.எதிர்க்கவுமில்லை.
எழும்பு இல்லாத நாக்கு எப்படி வேனாலும் வளையும் என்பதற்கு ஜெயலலிதாதான் சாட்சி.
சமூக அக்கறை கொண்ட பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே!
ஆஹா, நெத்தி யடி பதிவு
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்?
இன்னும் சத்தமிட்டுக் கேட்போம்..
இன்னும் உரக்க கேட்போம் .
சாரி பிரகாஷ், நமக்கு இப்போது மின்சாரம் தான் பற்றாக்குறை . அதனால் தற்போது உள்ள ஒரே வழி அணு ஒன்றுதான் . இதுவும் இல்லை என்றாள் நம் தமிழகம் இருளில் மூழ்கும்
we dont have natural gas, we dont have enough petroleum, we had only lignite which is making more pollution to our world. so we have to search for another opportunity.but the beggars ( Indian schooled scientists) working in other countries are not helping for their own country.
இன்றைய எனது பதிவில் இணைப்பு கொடுத்துள்ளேன் நண்பரே..
ஒன்றிணைந்து ஓங்கிக்குரல் கொடுப்போம் எழுப்பும் குரல் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்படி செய்வோம்
வெற்றி நமதே.. வெற்றி நமதே..
//Blogger siva said..
சாரி பிரகாஷ், நமக்கு இப்போது மின்சாரம் தான் பற்றாக்குறை . அதனால் தற்போது உள்ள ஒரே வழி அணு ஒன்றுதான் . இதுவும் இல்லை என்றாள் நம் தமிழகம் இருளில் மூழ்கும்//
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கேபிள் மூலம் மின்சார வினியோகம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதை கேள்விபட்டிர்களா ?
இவ்வெல்லாம் அரசியல்வாதிகள பெரிய அறிவியல் விஞ்ஞானிகளாயிட்டாங்கப்பா..
மிகவும் நல்ல கேள்வி. ஆனால் நண்பரே, சென்னையில் தான் கல்பாக்கம் அணுமின் நிலையம் இருக்கிறது என்பதை மறந்து விட்டீரா?