அன்பே! நான் உன் அன்புக்காக மயங்குகிறேன்
அடிப்பாவி, நீயோ என் பணத்திற்காக மயங்குகிறாய்
ஆனாலும், நான் உன் மனதை மாற்றுவேன்,
ஏனெனில் உன்னை அவ்வளவு நேசித்து விட்டேன் பெண்ணே!
*************************************
மயங்கினேன் உன்னுடைய அழகில்,
இன்னும் மயங்கினேன் உன்னுடைய தங்கையின் பேச்சில்,
இன்னும் இன்னும் மயங்கினேன் உன்னுடைய அக்காவின் உபசரிப்பில்,
ஐயோ! யாரை நான் கைப்பிடிக்க?
****************************************************
பேருந்தில் ஏறினேன், என்னவள் இருக்கிறாள் என்பதால்
அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன், அவள் தந்தை அருகில் இருந்ததால்
மாலையில் அவளிடமிருந்து கைபேசி அழைப்பு
வீட்டுக்கு அம்மா, அப்பாவோட வாங்க மாப்ளே என்றார் அவளின் அப்பா!
***************************************************
உன்னிடம் பேசுவதை தவிர்த்தேன்
உன்னைப் பார்ப்பதை தவிர்த்தேன்
உன்னிடம் பழகுவதையும் நிறுத்தினேன்
நீ வேண்டாமென்று, ஆனாலும்
ஏதோ, ஒன்று என்னை ஈர்க்கிறதடி பெண்ணே!
**********************************************************
இன்றைய மற்றொரு பதிவு:
அழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந்தைகள்
கொசுறு: இது மீள்பதிவாக மலர்ந்துள்ளது.
34 கருத்துரைகள்:
நண்பர்களே,... தமிழ்மணம் இணைக்க உங்க உதவி வேணுமே...
என்ன படங்கள்லாம் ரொம்ப பழசா இருக்கு?
ஓ இது மீள்பதிவா?
தலைவரு எப்படியோ அஞ்சலிய உள்ள கொண்டு வந்துடுறாரே?
நானும் தமிழ்மணத்தோட ரொம்ப மல்லுக்கட்டிட்டு இருக்கேன், முடியலீங்ணா.....
//நீ வேண்டாமென்று, ஆனாலும்
ஏதோ, ஒன்று என்னை ஈர்க்கிறதடி பெண்ணே!//
அதுதான் லவ்வோ லவ்வு ! ன்னு சொல்றாங்களோ?
Indli 2 to 3
OK...
நல்ல கருத்து ???
படம் பழசு...மாட்டர் எப்பவுமே...
தமிழ் மணம் இணைத்து விட்டேன்
பல வரிகள் பிடித்து இருந்தாலும் சில வரிகள் கொஞ்சம் நெருடல்
கவித..கவித
தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே,... தமிழ்மணம் இணைக்க உங்க உதவி வேணுமே...//
எங்கோ ஒரு பதிவனின் அழுகுரல் கேட்கிறது. உதவிக்கு ஓடியாங்கோ!
மூன்றையும் பிடிங்க வாசி!
உருப்புடாமல் போறதுக்கு கவிதையை சொல்லி மூடை கிளப்புறீங்களே....
இன்னைக்கு பப்பு வேகாமல் மீள்பதிவா ஹி ஹி....
வீட்டுக்கு அம்மா, அப்பாவோட வாங்க மாப்ளே என்றார் அவளின் அப்பா!
அது எப்பிடி போறது எனக்கு தான் கல்யாணம் ஆச்சே !
அட கடவுளே நாட்டுல மழை வருமா வாராதா சகோ?...ஹி..ஹி ..ஹி ..
பகிர்வுக்கு நன்றி .என் தளத்திற்கும் வாங்க .
மூன்று ஓட்டுக்கள் போட்டாச்சு சார் .
ஆகா....! இந்த டீல் நல்லாயிருக்கே!!
ஓகே ஓகே
எலேய்... அடங்கமாட்டபோல....
பிரகாஷ்கூட கவிதை எழுத ஆரபிச்சிட்டருபோல...
பாடங்கலை பார்த்தா கவிதை வரும்...
வணக்கம் பாஸ்
கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
வர முடியலை...
எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.
மன்னிக்க வேண்டும்!//
மயங்கினேன் உன்னுடைய அழகில்,
இன்னும் மயங்கினேன் உன்னுடைய தங்கையின் பேச்சில்,
இன்னும் இன்னும் மயங்கினேன் உன்னுடைய அக்காவின் உபசரிப்பில்,
ஐயோ! யாரை நான் கைப்பிடிக்க//
அவ்..........
திக்கு முக்காடும் மன உணர்வுகளை வெளிச்சம் போட்டுச் சொல்லியிருக்கிறீங்க.
கவிதைகள் ஒவ்வொன்றும்,
அலை பாயும் மனித மனங்களின் உணர்வுகளைப் பாடி நிற்கின்றது.
கவிதைகள் ஒவ்வொன்றும்,
அலை பாயும் மனித மனங்களின் உணர்வுகளைப் பாடி நிற்கின்றது.
//ஐயோ! யாரை நான் கைப்பிடிக்க? //
வீட்ல கேளும்யா..விளக்கமாச் சொல்வாங்க.
ஓவர் லவ்வு உடம்புக்கு ஆகாதுன்னு எங்க தல சொல்லிருக்கார் .ஆனாலும் இது ரொம்ப ஓவரு .பார்த்து ஹாங்ஓவர் ஆகிட போகுது
மாப்ள கவிதை சூப்பர்யா... மீண்ட கவிதை போல ஹிஹி!
அஞ்சலி படத்த போட்டு பதிவு எழுதணும்ங்குறதுக்காக இப்புடி ஒரு கவித? ஏன்னே இப்புடி எல்லாம்?
வீட்ல கேளும்யா..விளக்கமாச் சொல்வாங்க.///டெம்ப்ளேட் கமென்ட்!ஹி!ஹி!ஹி!
ஹா ஹா ஹா ஜோக்ஸ் சூப்பர் பாஸ்
கலக்கல் காதல் பதிவு ...
ஈர்க்கிறதடி பெண்ணே!
என்ன தமிழ் !!!!
வாழ்த்துக்கள் .
அன்புடன்
யானைக்குட்டி
உங்கள் பார்வைக்கு ....
பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !!!
கவிதைகள் அருமை.
இனிமேல் பதிவு எழுதுனா உங்ககிட்டு தலைப்ப கேட்டுட்டு தான் பதிவு எழுதுனும்
இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்