தொலைக்காட்சிக்கு அடிமையானவர்கள் போதைப் பொருள்களுக்கும் அடிமையானவர்கள் போன்றுதான் நடந்துகொள்கிறார்கள். ஆனால் தொலைக்காட்சியானது போதைப்பொருளை விட கொடூரமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதனின் மனதை பாழாக்கி வன்முறை மீது நாட்டம் கொள்ளவைத்து நாட்டையும், சமுதாயத்தையும் அது அழிக்கின்றது.
காலையில் "அழுது" கொண்டே தொடங்கும் பெண்களின் வாழ்க்கை இரவு உறங்கும் வரையும் முடிவதில்லை. அந்த அளவிற்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்கள் பெண்களை கட்டிப் போட்டு, இல்லை இல்லை அடிமையாக்கி வைத்திருக்கிறது.
தொலைக்காட்சியானது வளர்ந்து வரும் தலைமுறையினர் மனநிலையை மட்டுமின்றி உடல் நலனையும் வெகுவாகப் பாதிக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றின்படி ஒரு குழந்தை ஒவ்வொருவாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவழிக்கிறது. ஆனால் தன்பெற்றோருடன் பயனுள்ள விஷயங்களைப் பேச வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டொன்றுக்கு 900 மணி நேரத்தை சிறுவர்கள் பள்ளிகளில் கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் 1023 மணி நேரங்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுகின்றனர். உயர்நிலைப்பள்ளியை முடிக்கும் முன்பு 19 ஆயிரம் மணி நேரத்தை அவர்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுவதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் பள்ளி மாணவர்களால் குறைந்த பட்ச அளவு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் கூட ஈடுபட முடியவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தவம் கிடக்கும் 5 வயதில் இருந்து 8 வயதுக் குழந்தைகளுக்கு இதய நோய்களில் ஏதாவது ஒன்று தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. 1960 களில் இருந்த தொகையைவிட 1990 களில் மிதமிஞ்சிய உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு உடல் ரீதியாக எவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் முடங்கிக் கிடப்பது தான் முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தொலைக்காட்சியை பார்க்கும் சிறுவர்கள் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் தமது ஆழ் மனதில் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றும் இதனடிப்படையில் அவர்கள் செயல்களில் இறங்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் இவர்களால் காணமுடிவதில்லை என்றும், தொலைக்காட்சி ஏற்படுத்திய பாதிப்புகளால் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள் சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும் ஆகிவிடுவதாக பெருவாரியான குழந்தைகள் கருதுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
18 வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு இலட்சம் வன்முறைக் காட்சிகள் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு குழந்தை 11 வயதை அடைவதற்குள் 8,000 கொலைகளையும் 10,000 வன்முறைகளையும் தொலைக்காட்சி வழியே பார்க்க நேரிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி வன்முறையை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல், கொலை, பாலியல் உறவு கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் தொலைக்காட்சிகளில் காண்கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். தொலைக்காட்சியில் சித்தரிக்கப்படும் போலியான நிகழ்வுகள் உண்மையான வாழ்வில் நடப்புகளாக பசுமரத்து ஆணி போல பிஞ்சு நெஞ்சங்களில் பதிவாகின்றன. இதனால் குழந்தைகள் தங்களின் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் பாழ்படும் அளவிற்கு தொலைக்காட்சி வழியே நஞ்சு விதைகள் விதைக்கப்படுகின்றன என்பதே உண்மை.
நண்பர்களே, இந்த அழுக்காட்சி தொடர்கள் பற்றி ஒரு பதிவு எழுதனும் என நிறைய நாட்கள் நினைத்திருக்கேன். ஆனால் குசும்பு டாட் காமில் தெளிவான கட்டுரையாக இருந்ததால் உங்களிடம் பகிர்கிறேன்.
இன்றைய மற்றொரு பதிவு:
இன்றைய மற்றொரு பதிவு:
25 கருத்துரைகள்:
நண்பர்களே, தமிழ்மணத்தில் இணைக்கவும்... நன்றி..
அன்பின் பிரகாஷ் - பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.
பிரகாஷ்,
கட்டுரைப் பகிர்விற்கு நன்றி.
விழிப்புணர்வு பதிவு. ஒவ்வொரு பெற்றோரும் கவனிக்க வேண்டிய விசயம்.
நீ சொல்றதும் உண்மைதான் மாப்ள..
தமிழ் மனத்தையே காணோமே?
நண்பரே.. ஒவ்வொரு வீட்டிலும் உணரப்பட வேண்டிய விஷயங்கள்..
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுதான்
மிக்க நன்றி
நட்புடன்
சம்பத்குமார்
தமிழ் மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது பிரகாஷ்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
நல்ல பகிர்வு.....!
குழந்தைகள் தங்களின் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் பாழ்படும் அளவிற்கு தொலைக்காட்சி வழியே நஞ்சு விதைகள் விதைக்கப்படுகின்றன என்பதே உண்மை.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.
அம்மாடியோ அப்பிடியா அவ்வ்வ்வ் எப்பிடியெல்லாம் பேதியை ச்சே பீதியை கிளப்புராங்கப்பூ...
விழிப்பு உண்டாக்கிட்டீங்க....
ஒவ்வொருவரும் உணற வேண்டியபதிவு.
தமிழ்மணம் அட்ரசே இல்லை ஓட்டு எப்பிடி போடுறதாம்...?
சீரியல்கள் பார்க்கும் குழந்தைகள் தாமதமாக தான் பேச தொடங்குகிறது என்கிறார் என் குடும்ப மருத்துவர்.சம்பத் குமார்..
தேவையான பதிவு. சில நல்ல சேனல்களும் உள்ளன. அவற்றை பார்ப்பதை ஊக்குவிக்கலாமா?
மாமா மாப்ளே நாடகம் தவிர வேறு எந்த நாடகத்தையும் நான் இதுவரையில் பார்த்ததில்லை....
உண்மையில் இது போதைவிட போமசமானது...
உங்கள் கருத்தை, ஆய்வு தகவல்களுடன் சொல்லியிருக்கிறீர்கள்.
தொலைக்காட்சி நெடுந்தொடர்களால் தான் நடுத்தர குடும்பங்களில் இயல்பான வாழ்க்கை வாழ முடியாமல் போகிறது. அதன் தாக்கம் இப்போது குழந்தைகளையும் பாதிப்பு உள்ளாக்கி இருக்கிறது. மேலும் பெண்களின் சிந்திக்கும் விதத்தினை வக்கிரம் கலந்ததாக மாற்றியுள்ளது.
மொத்ததில் உலகிலுள்ள விஷங்களை நம் வீட்டு வரவேற்பு அறைக்குள் கொண்டு வந்து சேர்க்கும் ஆபத்தாக, அறிவியலின் அற்புத படைப்பு மாறியிருப்பது வருத்தப்பட வைக்கிறது.
தமிழ்மணத்தில் 10 out of 10 கொடுத்துள்ளேன். Indli 13 to 14
நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. பாராட்டுக்கள். நன்றிகள்.
பொதுவாக பெண்களை தான் தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமை என்று சொல்வார்கள் ஆனால் இப்படிப்பட்ட ஆண்களும் இருக்கார்கள் .....வெளங்கிடும் குடும்பம் )))
புள்ளிவிபரம் எல்லாம் சொல்லுறீங்க. நீங்க குட்டி விஜயகாந்த் பாஸ்!
தொலைக்காட்சியால் தொல்லைக்காளாகும் மக்களினைப் பற்றிய அருமையான பகிர்வினைத் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி பாஸ்......
வீட்டுப் பெண்களின் உணர்வுகளின் மூலம் வருமானம் தேட நினைக்கும் இயக்குனர்கள் உள்ள வரை இத்தகைய தொல்லைக் காட்சிகள் அழுக்காட்சிகளாக வருவது தவிர்க்க முடியாதது.
இந்த அநியாயத்த தட்டி கேட்க யாருமே இல்லையான்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்!! தமிழ்வாசி அண்ணே முதல் படிய எடுத்து வச்சிருக்காரு... வாழ்த்துக்கள் அண்ணே!!