சில சமயங்களில் நமக்கு பொருந்தாத உணவுகள் மற்றும் பழைய உணவுகளால் நமது உடம்பில் விஷத்தன்மை சேருகிறது. அதனால் எலும்புகளில் வலி, கண்களில் எரிச்சல், தலைவலி, மூச்சு பாதிப்பு, மற்றும் மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இவைகளை உடனே கவனிக்காமல் விட்டால் நீண்ட நாள் தொடர்ந்து இன்னும் மோசமான விளைவுகளை உண்டு பண்ண வாய்ப்பு உள்ளது. அப்படியே மேலும் தீவிரம் அடைந்து உயிரிழப்பும் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.
என்ன செய்யலாம்:
அழுகிய இறைச்சி, பழைய உணவுப் பொருட்கள் போன்றவைகளால் விஷம் உண்டாகிறது. நாம் உண்ட உணவில் விஷத்தன்மை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்கள். சுடுநீரில் சுமார் பதினைந்து நிமிடங்கள் வரையாவது குளியுங்கள். தாகம் எடுத்தால் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாற்றை ஒரு தம்ளர் பருக வேண்டும். பின்னர் ஓய்வெடுக்க கொஞ்ச நேரம் படுக்கையில் படுக்கலாம். இனிமா எடுத்துக் கொண்டாலும் நல்லது தான்...
மேலும் நன்றாக பசிக்கும் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. விஷத்தன்மை இருந்தால் அதிக நாட்கள் உங்கள் வயிற்றில் சீரணம் ஆவது குறைந்து போயிருக்கலாம். இந்த மாதிரி நேரத்தில் ஏதாவது சாப்பிட்டால் உடல்நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது.
34 கருத்துரைகள்:
டோக்கன் நெ. 1
பசித்து ருசி....
அப்படி செய்தால் பிரச்சனைகள் இருக்காது...
சூப்பர் பிரகாஷ்! டாக்டரா மாறிட்டீங்க!
விஷத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் ....
ஆஜர். தகவலுக்கு நன்றி. தமிமணம் 6
நன்றி தகவலுக்கு .....
டாக்டர் அய்யா வாங்கய்யா, நீங்க சொன்னா மாதிரியே செஞ்சிர்றோம் ரொம்ப நன்றிங்கய்யா...
தகவலுக்கு நன்றி நண்பா!
அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள தகவல். நன்றி
ஃபுட் பாய்சன் ஆயிடுச்சா? சமைச்சது யாரு..நீங்களா? அப்போ அப்படித் தான் ஆகும்.
பல பிரம்மச்சாரிகள் இந்த அவஸ்தை அடிக்கடி பட்டிருப்பார்கள்.
நிச்சயம் உதவும்!
payanulla thakaval..vaalththukkal
நம்மூர்ல பாய்சனையே பாயசம் மாதிரி சாப்புடுற அப்பாட்டக்கருலாம் நிறைய இருக்காங்கங்கோ.....
அன்பின் பிரகாஷ் - உடல் உணவின் விஷத்தினால் பாதிக்கப்பட்டால் - உடனே 1000 ரூபாய் செலவழித்து மருத்துவம்னை சென்று ஒரு நாள் தங்கி 3 / 4 பாட்டில் டிரிப்ஸ் ஏற்றினால் சரியாகி விடும். வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு இருப்பது சரியல்ல. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பகிர்வுக்கு நன்றி!
பாய்சனே நம்மள ஒன்னும் செய்யாது...:)
பயனுள்ள பதிவைப் பகிர்ந்த பிரகாஷ் அவர்களுக்கும்,
பின்னூட்டத்தில் கூடுதல் தகவல் வழ்ங்கியிருக்கும் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும் பாராட்டுகளும் , நன்றிகளும்!
நல்ல ஆலோசனை!
நன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
Good post. thanks for sharing
http://www.emedicinehealth.com/food_poisoning/article_em.htm
food poisoning குறித்து மேலும் தகவல் பெற
இனிய வணக்கம் பாஸ்,
நலமா?
மிகவும் சுருக்கமான முறையில் உடல் ஆரோக்கியத்திற்கும், உணவினை உண்ணும் போது நாம் கருத்திற் கொள்ள வேண்டிய விடயத்தினையும் தந்திருக்கிறீங்க.
மிக்க நன்றி.
நல்ல விழிப்புணர்வு பதிவு. அனைவருக்குமே பயன்படும்.
டாக்டர் பிரகாஷ் வாழ்க
நல்ல தகவல்
எல்லோருக்கும் பய தரக்கூடிய பதிவு நன்றி பிரகாஷ்
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.
தகவலுக்கு நன்றி.இன்று என் வலையில்
ரா ஒன் எந்திரனின் சாதனையை முறியடிக்குமா?
http://kobirajkobi.blogspot.com/2011/10/blog-post_13.html
வணக்கம் டாக்டர்!போறவன் வரவனுக்கெல்லாம் "டாக்குடர்" பட்டம் குடுக்குறாங்க,கில்மாவிலேருந்து பல்சுவையும் கலந்து கட்டி அடிக்கிற பிரகாஷுக்கு குடுக்க மாட்டாங்களாம்!ஷேம்,ஷேம்!
தகவலுக்கு நன்றி மச்சி..
தீபாவளிக்கு முன்பே இதை வெள்யிட்ட் பிரகாஷுக்கு நன்றி.தீபாவ்ளியன்றோ,அல்லது அடுத்த நாளோ மீண்டும் ஒருமுறை இதை இன்னும் விளக்கமாக எழுதவும்.விஷத்தைப் பற்றிய விஷயம் விளக்கமாக உள்ளது, அருமை.
சூப்பர் பகிர்வுக்கு நன்றி
நல்ல பயனுள்ள பதிவு அண்ணா
nalla arumaiyaana thakaval doctor
ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்தாலே...பாதி புட் பாய்சனிங் கம்மியாகிடும்....