நண்பர்களே, நான் சில நாட்களுக்கு முன்பு எனது வலைப்பூவுக்கு டெம்ப்ளேட் மாத்தினேன். அந்த டெம்ப்ளேட்டில் சிறு படத்துடன் கூடிய மேலும் வாசிக்க (Automatic Read More With Thumbnails) என்ற வசதி புதிய டெம்ப்ளேட்டில் இல்லை. இந்த வசதி இருந்தால் நமது முகப்பு பகுதியில் ஒவ்வொரு இடுகையும் ஒரு சிறு படத்துடன் இடுகையின் முதல் நான்கைந்து வரிகளும் மட்டுமே காட்டும். இதனால் முகப்பு பக்கத்தில் நான்கைந்து இடுகைகள் காட்டுமாறு வைத்தாலும் பக்கம் லோடிங் ஆவதில் பிரச்சனை இருக்காது. முகப்பு பக்கமும் பார்க்க அழகாக இருக்கும்.
ப்ளாக்கரில் NEW POST எழுதுகிற பக்கத்தில் "மேலும் வாசிக்க" என்ற வசதி (INSERT JUMP BREAK) வைக்கும் ஆப்ஷன் இருக்கு (பார்க்க மேலே உள்ள படம்). இருந்தாலும் ஒவ்வொரு பதிவிற்கும் நாம் இந்த ஐக்கானை கிளிக் செய்ய வேண்டும். இது நமக்கு இடுகை இடும் போதெல்லாம் மறக்காமல் இருக்க வேண்டும். இதற்காகவே இடுகையின் ஆரம்பத்தில் ஒரு படம் இணைக்க வேண்டும். ஆனால் நான் சொல்லப் போகும் டிப்ஸில் இந்த "மேலும் வாசிக்க" வசதியானது படத்துடன் ஒவ்வொரு இடுகைக்கும் தானாகவே எடுத்துக் கொள்ளும். சில html codes நமது டெம்ப்ளேட்டில் இணைத்தால் மட்டும் போதும். நாம் எப்பவும் போல இடுகை இட்டாலே போதும்.
மேற்கண்ட படத்தில் இருப்பது போல இடுகையின் தலைப்புக்கு கீழே ஒரு படம் மற்றும் இடுகையின் முதல் நான்கைந்து வரிகள் இருப்பது போல எப்படி வைக்கலாம் என்பதை கீழே காணலாம்.
1). பிளாக்கர் ஓபன் செய்துடாஸ்போர்டில் layout சென்று edit html சென்று "expand widget templates" box ஐ கிளிக் செய்யவும்.
2). அடுத்து </head> என்ற வரியை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு மேலே கீழ்க்கண்ட html codeஐ சேர்க்கவும்.
<script type='text/javascript'>var thumbnail_mode = "no-float" ;summary_noimg = 430;
summary_img = 340;
img_thumb_height = 100;
img_thumb_width = 120;
</script>
<script type='text/javascript'>
//<![CDATA[
function removeHtmlTag(strx,chop){
if(strx.indexOf("<")!=-1)
{
var s = strx.split("<");
for(var i=0;i<s.length;i++){
if(s[i].indexOf(">")!=-1){
s[i] = s[i].substring(s[i].indexOf(">")+1,s[i].length);
}
}
strx = s.join("");
}
chop = (chop < strx.length-1) ? chop : strx.length-2;
while(strx.charAt(chop-1)!=' ' && strx.indexOf(' ',chop)!=-1) chop++;
strx = strx.substring(0,chop-1);
return strx+'...';
}
function createSummaryAndThumb(pID){
var div = document.getElementById(pID);
var imgtag = "";
var img = div.getElementsByTagName("img");
var summ = summary_noimg;
if(img.length>=1) {
imgtag = '<span style="float:left; padding:0px 10px 5px 0px;"><img src="'+img[0].src+'" width="'+img_thumb_width+'px" height="'+img_thumb_height+'px"/></span>';
summ = summary_img;
}
var summary = imgtag + '<div>' + removeHtmlTag(div.innerHTML,summ) + '</div>';
div.innerHTML = summary;
}
//]]>
</script>
3). மேலே உள்ள codeஐ சேர்த்த பின்னர் <data:post.body/> என்பதை கண்டுபிடித்து, அதற்கு பதிலாக கீழே உள்ள html codeஐ replace செய்ய வேண்டும்.
<b:if cond='data:blog.pageType == "static_page"'><br/>
<data:post.body/>
<b:else/>
<b:if cond='data:blog.pageType != "item"'>
<div expr:id='"summary" + data:post.id'><data:post.body/></div>
<script type='text/javascript'>createSummaryAndThumb("summary<data:post.id/>");
</script> <span class='rmlink' style='float:right;padding-top:20px;'><a expr:href='data:post.url'> read more "<data:post.title/>"</a></span>
</b:if>
<b:if cond='data:blog.pageType == "item"'><data:post.body/></b:if>
</b:if>
4). read more இதற்கு பதிலாக "மேலும் வாசிக்க" என தமிழில் கொடுங்கள்.
5). அடுத்து save template கொடுங்கள்.
<data:post.body/>
<b:else/>
<b:if cond='data:blog.pageType != "item"'>
<div expr:id='"summary" + data:post.id'><data:post.body/></div>
<script type='text/javascript'>createSummaryAndThumb("summary<data:post.id/>");
</script> <span class='rmlink' style='float:right;padding-top:20px;'><a expr:href='data:post.url'> read more "<data:post.title/>"</a></span>
</b:if>
<b:if cond='data:blog.pageType == "item"'><data:post.body/></b:if>
</b:if>
4). read more இதற்கு பதிலாக "மேலும் வாசிக்க" என தமிழில் கொடுங்கள்.
5). அடுத்து save template கொடுங்கள்.
இனி ஒவ்வொரு இடுகையும் சிறு படத்துடன் மேலும் வாசிக்க என்ற வசதியுடன் கிடைக்கும். இந்த டிப்ஸ் மூலம் தான் என் வலைப்பூவிலும் சிறு படத்துடன் மேலும் வாசிக்க வசதி வைத்துள்ளேன். இனி உங்கள் வலைப்பூவுக்கும் ஈஸி தானே....
thanks: google search & http://www.anshuldudeja.com
ஓர் டிப்ஸ் வேணும் யாராச்சும் சொல்றிங்களா?
முகப்பில் உள்ள ஒட்டு பட்டைகளை மறைப்பது எப்படி?
37 கருத்துரைகள்:
நல்லதொரு வசதி தான்....மறுபடி அத்தனை விட்ஜட்...எல்லாம் மாத்த சோம்பேறித்தனம்...
யோவ், தமிழ்வாசி....நடுராத்திரில இதை எப்படிய்யா படிக்கிறது..கோடிங்..பூடிங்னு...
@செங்கோவி
பயனுள்ள தகவல் எப்ப வேணாலும் படிக்கலாம்...
இப்படியெல்லாம் வேற பண்ணனுமா?
ரீட் பதிவு-ன்னு தானே வைக்கணும்..எதுக்கு மோர்-னு போட்டிருக்கீங்க? மோரை குடிக்கத்தானே முடியும்? எப்படி படிக்க?
//////செங்கோவி said...
யோவ், தமிழ்வாசி....நடுராத்திரில இதை எப்படிய்யா படிக்கிறது..கோடிங்..பூடிங்னு...//////
உங்களை யாருண்ணே கோடிங்கை போஉ படிக்க சொன்னது? பதிவு அதுக்கு கீழயும் மேலயும் இருக்குண்ணே......
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////செங்கோவி said...
யோவ், தமிழ்வாசி....நடுராத்திரில இதை எப்படிய்யா படிக்கிறது..கோடிங்..பூடிங்னு...//////
உங்களை யாருண்ணே கோடிங்கை போஉ படிக்க சொன்னது? பதிவு அதுக்கு கீழயும் மேலயும் இருக்குண்ணே......//
அப்படியா..நான்கூட தமிழ்வாசி ஆங்கிலப்பதிவு எழுத ஆரம்பிச்சுட்டாரோன்னு பயந்துட்டேன்..
//என் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிரச்சனைகள் //
என்னமோ ப்ளட்-ஐ மாத்துன மாதிரி பில்டப் கொடுக்காரே..
செங்கோவி said...
//என் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிரச்சனைகள் //
என்னமோ ப்ளட்-ஐ மாத்துன மாதிரி பில்டப் கொடுக்காரே..//
டெம்ப்ளேட் மாற்றி பாரும்... கஷ்டம் புரியும்.
யோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு?
செங்கோவி said...
யோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு?///
கேப்டன் வாழ்க...
//
தமிழ்வாசி - Prakash said...
செங்கோவி said...
யோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு?///
கேப்டன் வாழ்க...//
இதுக்கு மேலயும் நான் இங்க நிக்க விரும்பலை..நான் கிளம்பறேன்.
செங்கோவி said...
//
தமிழ்வாசி - Prakash said...
செங்கோவி said...
யோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு?///
கேப்டன் வாழ்க...//
இதுக்கு மேலயும் நான் இங்க நிக்க விரும்பலை..நான் கிளம்பறேன்.///
ஓகே...ரைட்டு...
//////செங்கோவி said...
//
தமிழ்வாசி - Prakash said...
செங்கோவி said...
யோவ், நடுராத்திரில கேப்டன் படத்தை போட்டு டெமோ காட்டியிருக்கீரு..என்னய்யா பிரச்சினை உமக்கு?///
கேப்டன் வாழ்க...//
இதுக்கு மேலயும் நான் இங்க நிக்க விரும்பலை..நான் கிளம்பறேன்./////////
ஏன்யா கேப்டன்னதும் உடனே கேப்டன் படம் டவுன்லோட் பண்ண கெளம்பிட்டீரா? உங்க ஊர்க்காரய்ங்களுக்கு கேப்டன்னா அவ்ளோ இஷ்டமா? மகாராசனுங்கப்பா.......
டெம்ப்ளேட் மாத்தினதுல தமிழ்மணப்பட்டை காணாம்போய் மீட்கமுடியவில்லையே சகோதரரே ஏதும் வழி சொல்வீர்களா? அதற்குப்பின் இதுக்குவரேன் நல்ல தகவல் நன்றி.
@ஷைலஜா
டெம்ப்ளேட் மாத்தினதுல தமிழ்மணப்பட்டை காணாம்போய் மீட்கமுடியவில்லையே சகோதரரே ஏதும் வழி சொல்வீர்களா? ///
டெம்ப்ளேட் மாற்றினால் எந்த திரட்டியின் ஒட்டு பட்டை இருக்காது. நாம் தான் ஒவ்வொன்றாக திரும்பவும் இணைக்க வேண்டும், நீங்க தமிழ்மணம் தளத்தில் ஒட்டு பட்டைக்கான நிரலி எடுத்து உங்கள் டெம்ப்ளேட்டில் இணையுங்கள்..அவ்வளவே..
நல்ல ஐடியா சொல்லியிருக்கிறீங்கள் நேரம் அமையும் போது முயல்கின்றேன்!
நம்ம தலைவர் எங்க அண்ணா படம் போட்ட தமிழ்வாசி வாழ்க!
இனிய காலை வணக்கம் பாஸ்,
சூப்பரான ஐடியா தந்திருக்கிறீங்க.
முகப்பில் ஓட்டுப் பட்டையினை மறைப்பதற்கான ஐடியாவினைத் தேடித் தருகின்றேன்.
சூப்பர் வாசி அண்ணே ........
அடிக்கடி செய்யவேண்டிய jump break
//
நல்ல ஐடியா .......
அசத்தலான ஒரு தொழில்நுடப்த்தகவலை தந்திருக்கிறீங்க. ரொம்ப நன்றி
நன்றி நண்பரே நல்லதோர் பகிவிற்க்கு
நட்புடன்
சம்பத்குமார்
நன்றி
டெம்ப்லேட் மாத்துரவங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நல்லா சொல்லி அதற்கு தீர்வும் கொடுத்திருப்பது நல்லா இருக்கு
அருமையான தகவல், தமிழ்மணம் ஓட்டு பட்டை இணைக்கிரதுக்கே எனக்கு இத்தனை நாளாச்சு, நீங்க சொல்றத செய்ய எத்தனை நாளாகுமோ
அழகான உபயோகமான தகவல் நண்பரே
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே
sorry for the mobile comment
arumaiyana thakavalkal
ningkal ketta tips-kku nanbar Blogger nanban thalathhtil irandu naalkalukku munnar oru pathivu pottirunthar
bloggernanban.blogspot.com
எனக்கும் இதுபோல பல பிரச்சினைகள் வந்தன ...இப்போது எல்லாம் சரியாகிவிட்டது ...தங்கள் ஆலோசனையும் உதவியது .
நல்ல பகிர்வு சகோ
நன்றி
வாசி அண்ணே .....
மொபைல் டெம்ப்ளேட் ஆக்டிவ் பண்ணுக
தற்போது உள்ளதே
எனக்கு போதும் சகோ!
நன்றி
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் நீண்ட காலத்திற்கு பிறகு வலைத்தளப்பக்கம் வருகிறேன்!
இது பிரயோசமாகதான் இருக்கும்
பயனுள்ள பகிர்வு நண்பா... நன்றி...
http://bloggernanban.blogspot.com/2011/10/add-tamil-vote-buttons.html
ஓவ்வொருத்தருத்தரும் பிளாக் டெம்லேட் மாற்றும் போது ஓவ்வொரு தீர்வு கிடைக்குது.
நல்ல பகிரு.
மேலே உள்ள லின்கை பாருஙக்ள் வோட்டு பட்டை இனைப்பது ஈசியாக இருக்கும்.
Pls help me...
Edit HTML - Layout எங்கு இருக்கிறது. (Template - Edit HTML இல் பார்த்தால் என்பதை காண வில்லையே).
மிக்க நன்றிங்க .... ரெம்ப உபோயோகமா இருந்துச்சு ... நானும் மாத்திட்டேன் ....