தீபாவளி வந்தாச்சு. புதுத் துணிகள் எடுத்தாச்சு. பட்டாசெல்லாம் வாங்கியாச்சு. இனிப்பு கார வகைகளும் செஞ்சாச்சு. அப்புறம் என்ன சொல்ல வரேன்னு பாக்கறிங்களா? ஒன்னும் பெருசா சொல்ல வரல. இருந்தாலும் என்னமோ சொல்றேன். கேட்டுக்கங்க. காலையில அஞ்சு மணிக்கு கரெக்டா எந்திரிச்சிருங்க. லேட்டா எந்திரிச்சா என்ன? அப்படின்னு கேள்வி கேட்கிறவங்கள ஒன்னும் பண்ண முடியாது. உங்க இஷ்டம் எப்ப வேணாலும் எந்திரிங்க. எப்படியோ எந்திரிச்சாச்சு. அடுத்து குளிச்சு புதுத்துணி போட்டு சாமி கும்பிட்டதுக்கு அப்புறம் தான் வெடி விடனுமா? எந்திரிச்சவுடனே விடக் கூடாதான்னு கேட்கரவங்க ஒரு சரம் அல்லது ஒரு அணுகுண்டு மட்டும் ஆசைக்கு காலையில விட்டுக்கங்க.
அப்புறமா உச்சந்தலை முதல் பாதம் வரை இளம் சூட்டில் உள்ள நல்லெண்ணையை தேச்சு கொஞ்ச நேரம் ஊற வச்சு, சீயக்காய் போட்டு நல்லா குளிச்சு முடிச்சிரனும். நல்லெண்ணெய் தேச்சு குளிக்கிறது நல்லதா, கெட்டதான்னு கமென்ட் போடறவங்க போடலாம். சரிங்க குளிச்சு முடிச்சாச்சு. அடுத்து ஆசையா வாங்கின ட்ரெஸ்க்கு மஞ்சள் வச்சு சாமி கிட்ட வச்சு அப்பா அம்மாவை எடுத்து தரச் சொல்லி போட்டுக்கறனும். அம்மா அப்பா கையால எந்த புதுதுணியும் வாங்கிப் போடறது ரொம்ப நல்லது. அப்புறம் சாமி கும்பிட்டுட்டு பட்டாசு வெடிக்க ஆரம்பிக்க வேண்டியது தான்.
பட்டாசு வெடிகிறப்போ ரொம்பவே கவனமா இருங்க. ஸ்டைல் பண்ணாதிங்க. கையில பிடிச்சு வெடி விடறது. வெடி மேல ஏதாவது பொருளை வச்சு சிதற விடறது போன்ற சாகசங்களை பண்ணாதிங்க. முக்கியமா வெடிக்காத வெடிகளை கண்டுக்றவே கண்டுக்காதிங்க. கையில எடுத்து ஆராய்ச்சி பண்றது, நெருப்பு இருக்கா, இல்லையானு பாக்கிறது, காலால மிதிக்கிறது போன்றவைகளை கண்டிப்பா செய்யாதிங்க. வெடி வெடிக்றதுக்கு பக்கத்துல ஒரு வாளி தண்ணிய பிடிச்சு வச்சுக்கங்க. ஏதாவது சிறிய தீ விபத்து நடந்தா உடனே அனைச்சுரலாம்.
டேய், வந்து டிபன் சாப்பிடு சாப்பிடுன்னு அப்பா அம்மா கூப்பிட்டுடே இருப்பாங்க. அதனால வெடி விடறதை கொஞ்ச நேரம் தள்ளி வச்சுட்டு சாப்பிட உட்கார வேண்டியது தான். அதுக்கு முன்னாடி மறக்காம கைகளை, கால்களை நல்லா சோப்பு போட்டு கழுவிருங்க. பட்டாசு மருந்தெல்லாம் இருக்கும். அதனால நல்லா சுத்தமா கழுவணும். அப்புறமா தான் சாப்பிட உட்காரணும். இட்லி, வடை, நாட்டுக் கோழி குழம்பு மணக்க காலை டிபன் அமர்களமா இருக்கும். நல்லா ஒரு புடி புடிச்சிட்டு, பிரண்ட்ஸ் வீட்டுக்கு போய் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிட்டு, அப்புறமா டி வி யில தீபாவளி ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் பார்த்துட்டு அதிலயும் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் ரொம்பவே சூப்பரா இருக்கும்.
இப்படியே மதியம் வந்திரும். அப்புறமென்ன, மதிய சாப்பாடு ரெடியா இருக்கும். மட்டன் பிரியாணி, கோழி வறுவல் என ஒரே அசைவ அயிட்டமா இருக்கும். ஒரு புடி புடிச்சுட்டு வெத்தல பாக்கு போட்டு நாக்கு சிவந்திருச்சான்னு வீட்டுல எல்லார கிட்டயும் காட்டி தம்பட்டம் அடிச்சுட்டு அப்படியே மதியம் டிவியில போடற படத்துல எது நல்ல படம்னு சூஸ் பண்ணிட்டு ஒரு தலகானிய போட்டு படுத்துட்டே படம் பாக்க வேண்டியது தான். தூங்கரவங்க தூங்க வேண்டியது தான். படம் முடிஞ்சதும் யாராவது எழுப்பி விடுவாங்க. ஆக இப்படியே தீபாவளி அன்னைக்கு சாயங்காலம் ஆயிரும்.
பலகாரங்கள், ஸ்வீட்ஸ் சாப்பிட்டிட்டு ஜாலியா நைட்டுல வெடிக்கிற வெடிகள் மற்றும் பூந்தொட்டி, கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் என ஒரே கலர் புல்லா வெடிக்க வேண்டியது தான். மறக்காம ஒரு பக்கெட் தண்ணிய பக்கத்துல வச்சுக்கறனும். அதுல தான் கம்பி மத்தாப்பு கம்பிகள போடணும். மறந்தும் வேற பக்கம் போட வேண்டாம். யாராவது அதை மிதிச்சு தீக்காயம் ஏற்பட சான்ஸ் இருக்கு. இப்படியே சந்தோஷமா தீபாவளி கொண்டாடிட்டு களைச்சு போயி உட்கார்ந்தோம்னா நைட் சாப்பாடு நேரம் வந்திரும். காலையில இருந்து ஹெவி சாப்பாடு சாப்பிட்டதுனால நைட் கொஞ்சமா ரசம் ரைஸ் சாப்பிடலாம். அப்ப தான் சாப்பிட்டது எல்லாம் நல்லா செரிக்கும்.
பலகாரங்கள், ஸ்வீட்ஸ் சாப்பிட்டிட்டு ஜாலியா நைட்டுல வெடிக்கிற வெடிகள் மற்றும் பூந்தொட்டி, கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் என ஒரே கலர் புல்லா வெடிக்க வேண்டியது தான். மறக்காம ஒரு பக்கெட் தண்ணிய பக்கத்துல வச்சுக்கறனும். அதுல தான் கம்பி மத்தாப்பு கம்பிகள போடணும். மறந்தும் வேற பக்கம் போட வேண்டாம். யாராவது அதை மிதிச்சு தீக்காயம் ஏற்பட சான்ஸ் இருக்கு. இப்படியே சந்தோஷமா தீபாவளி கொண்டாடிட்டு களைச்சு போயி உட்கார்ந்தோம்னா நைட் சாப்பாடு நேரம் வந்திரும். காலையில இருந்து ஹெவி சாப்பாடு சாப்பிட்டதுனால நைட் கொஞ்சமா ரசம் ரைஸ் சாப்பிடலாம். அப்ப தான் சாப்பிட்டது எல்லாம் நல்லா செரிக்கும்.
ஆகா பாருங்களேன் ஒரு நாள் தீபாவளி எப்படி ஓடிப் போச்சுன்னு தெரியல. ஒரு நாள் எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும். அடுத்த நாள்ல இருந்து வேலை வெட்டினு வழக்கமான நாட்களா நகர ஆரம்பிச்சிரும்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
நாளைக்கு தீபாவளிக்காக ஊருக்கு போறேன். அதான் இன்னைக்கே உங்க எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிடறேன். டைம் இருந்தா பதிவு எழுதறேன்.
32 கருத்துரைகள்:
மாப்ள இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்!
தீபாவளிய நல்லாக் கொண்டாடுங்க பிரகாஷ். உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@விக்கியுலகம்
உங்களுக்கும், மற்றும் வியட்நாமிய சொந்தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
வாத்துக்கள் தல!
#சிக்கன், மட்டன்னு நாக்குல எச்சி ஊற வச்சுட்டீரே! ஹ்ம்ம். என்சாய்....
Advance Happy diwali
இன்று என் வலையில்
விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா.
பதிவை பார்த்தா ஊருக்கு கிளம்பிட்ட மாதிரி தெரியுது?
@கவி அழகன்
உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பா.
//நாளைக்கு தீபாவளிக்காக ஊருக்கு போறேன். அதான் இன்னைக்கே உங்க எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிடறேன்.//
ஓஹோ..அப்போ ‘மாமனார் வீட்டில் தீபாவளி கொண்டாடுவது எப்படி’ன்னு தானே நீரு பதிவு எழுதணும்?
இனிய தீபாவளி வாழ்த்துகள் மாப்ள..
தாத்தா உங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .
மூக்கு முட்டச் சாப்பிட்டால் இறுதியாக இஞ்சித் தேத்தண்ணி
குடியுங்க .......
தீபாவளி வாழ்த்துக்கள்...
சந்தோசமான,பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்!
ஆஹா பயபுள்ள சோடாவை குடிச்சுட்டு என்னமா யோசிக்குது பாருங்க...!!!
சாயங்காலம் டாஸ்மாக் போறதை சொல்லாததால் நான் வெளிநடப்பு செய்கிறேன் வழியை விடுங்கய்யா...
தீபாவளி வாழ்த்துக்கள்...
ராசா,
தூங்கி எழவே காலைல 10 மணியாயிரும்...!
தீபாவளி வாழ்த்துக்கள்.
எங்களை குழந்தைகளாக பாவித்து, பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது எப்படியென்று விளக்கப்பதிவு போட்ட, பெரியவர் பிரகாஷ் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களும் நன்றிகளும்!ஹி!ஹி!ஹி!!!!!
ஆஹா நான் இந்த எச்சரிக்கையை நாளைய பதிவில் போடலாம்னு இருந்தேன் ,பகிர்வுக்கு நன்றி நண்பரே
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே
தீபாவளி வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...
நல்ல தீபாவளிப் பதிவைத் தந்து ஊர் ஞாபகங்களைத் தீண்டிவிட்டீர்கள்.
டாஸ்மார்க், பற்றி சொல்லதபடியால் மனோ அண்ணாச்சியுடன் சேர்ந்து நானும் வெளிநடப்புச் செய்கின்றேன்.
தமிழ்வாசிக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
வணக்கம் தல,
ஒரு தீபாவளிப் பண்டிகையை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறீங்க.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,.
அருமையான தீபாவளி கொண்டாட்டம்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ஹ ...ஹா ...ஹி ஹி
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா.
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள் பிரகாஷ்.
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!