நண்பர்களே,
இன்று காலை மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனை அருகில் உள்ள சாலை சந்திப்பில் ஒரு நண்பருக்காக சிறிதுநேரம் காத்திருந்தேன். காலை நேரமாதலால் வாகனங்கள் அதிக அளவில் சாலையை ஆக்கிரமித்திருந்தது. மாட்டுதாவனியில் இருந்து மேலூர் வழியாக நேரே செல்லும் சாலையும், வலது புறமாக ராமேஸ்வரம், சிவகங்கை வழியாக செல்லும் சாலையும் செல்கிறது.
இந்த சந்திப்பில் வலது புறமாக திரும்பும் வாகனங்கள் பெரும்பாலும் சாலை விதிகளை மதிக்காமல் தங்கள் இஷ்டத்துக்கு திரும்பி சென்றது. நான் நின்ற சுமார் பதினைந்து நிமிடங்களில் சென்ற வாகனங்கள் பெரும்பாலும் தவறான வழியிலேயே சென்றது.
அந்த எதிர் பக்கத்தில் இருந்து திரும்பும் வாகனங்களுக்கு பெரும் சிக்கல்களாக இருந்தது. வாகன ஓட்டிகளே சாலை விதிகளை மதித்து விதிகளை மீறாமல் சரியான வழியை தேர்ந்தெடுத்து பயணியுங்கள். உங்கள் பயணம் இனிதே இருக்கும்.
அந்த சந்திப்புக்கு அருகே போலீஸ் செக்போஸ்ட் உள்ளது. பெரும்பாலான நேரங்களில் பூட்டியே இருக்கும்.காவல்துறை நண்பர்களே, சாலை விதிகளை மீறும் வாகனங்களை சிறை பிடியுங்கள். இல்லையேல் பெரும் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
படங்கள்: என் மொபைல் மூலம்...பின் குறிப்பு:
எல்லோரும் என்ன மொபைல் என கேட்கறாங்களே? MICROMAX Q7 தானுங்கோ...
39 கருத்துரைகள்:
இங்கு மட்டும் இல்லை மதுரையில் பல இடங்களில் விதிமுறை மீறப்படுகிறது .காவல் துறையினர் என்னும் கூஜாதூக்கிகளுக்கு தேவை காசுமட்டுமே
நல்ல விஷயம் தான்... மொபைல் காமெரா சூப்பர்
பிரகாஷ் பின்றாரே?
வாழுக!
மாப்ள விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி! ..அவங்களா பாத்து திருந்தனும்!
மொபைல் போட்டோ சூப்பர் ...
விழிப்புணர்வு பதிவு. இதனை காவல்துறை கவனித்தால் நல்லது. பகிர்வுக்கு நன்றி நண்பா!
குட் ஆனா இதுக்கெல்லாம் பதிவு போடக்கூடாது கேஸ் போடணும் ஹி ஹி ஹி அப்ப தான் திருந்துவாங்கே
விழிப்புணர்வு பதிவு ,நன்றி
மொபைல் கேமரா மூலம் வந்த படம் க்லியராக வந்துள்ளது .காஸ்ட்லி மொபைலா ?
போக்குவரத்து விதிமுறை மீறல் என்பது எல்லா ஊருக்கும் பொதுவானதுதான் போலும்... சம்பந்தப்பட்டவங்க கவனத்துக்கு இது போனா மகிழ்ச்சி.
சமூக பொறுப்புள்ள பதிவு..
வாழ்த்துக்கள்.
இதனை யாரும் இப்போது பெரிதாக கண்டுகொள்வதேயில்லை (காவல் துறை உட்பட..) என்பது வருத்தத்திற்குரியதே.. (ஆனால் வசூல் பண்ணும்போது மட்டும் பொங்கியெழுந்திடுவாங்க..)
புகைப்படம் தெளிவாக உள்ளது.. என்ன மொபைல்??
என்ன அநியாயம் இது? அப்படியே போலீஸ்பூத்ல போய் கம்ப்ளைட் பண்ணிட்டு வந்திருக்கலாம்ல?
சமூக அக்கறையுடைய பதிவு..பாஸ்.
போட்டோக்கள் மிக தெளிவாக இருக்கின்றது என்ன மொபைல்?
சமூக அக்கறைப் பதிவு.
மீனாட்சி மிஷன் அருகில் அடிக்கடி விபத்து நடப்பதும் உண்டு. இருந்தும் காவல்துறை கண்டு கொள்ளாமல்தான் இருக்கிறது... இது போன்ற விதி மீறல்களை...
நம்ம பகுதியில் எல்லா இடத்திலும் இதே பிரச்சினைதான்.
சாலை விதிகளை மீறும் வாகனங்களை சிறை பிடியுங்கள். இல்லையேல் பெரும் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சமூக பொறுப்புள்ள பதிவு..
வாழ்த்துக்கள்.
.உருப்படாதவனுங்க, சாலை விதிகளை மிதியுங்கள்'ன்னு தப்பா புருஞ்சிட்டாணுக போல....
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு நண்பரே..
தொடரட்டும் தங்களது புலனாய்வு பணி
நட்புடன்
சம்பத்குமார்
எல்லோரும் என்ன மொபைல் என கேட்கராங்களே? MICROMAX Q7 தானுங்கோ...
எனக்கு மிகவும் பரிச்சயமான இடம் அது ...மிகவும் மோசமான இடம் ...காவலுக்கு யாரும் இல்லை ...கவனிக்கப்படவேண்டிய விஷயம் ...
நல்ல சமுக அக்கறை
இன்று என் வலையில்
நடிகர் விஜய் பய(ங்கர) டேட்டா
mobile rate ena?
வணக்கம் மச்சி,
நல்லதோர் பதிவு,
ஒரு பத்திரிகையாளனுக்கேயுரிய சமயோசித செயற்பாட்டினையும், சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் நல்லதோர் பதிவினையும் தந்திருக்கிறீங்க.
இப்படி விதிகளை மீறுவது தான் விபத்துக்களுக்கான காரணமாக அமைந்து கொள்கிறது.
பொலீஸார் இப் பதிவினைப் படித்தாவது நடவடிக்கை எடுப்பார்களா?
கமெராக் கை வண்ணம் சூப்பர்.
மைக்ரோ மக்ஸ் போன் குவாலிட்டி போட்டோ அசத்தலாக இருக்கு.
சூப்பர்யா...கலக்கிட்டீங்க.
மொபைல் ஃபோட்டோ..விழிப்புணர்வு பதிவு..இதுதான்யா ப்ளாக் சக்தி! அசரவெச்சுட்டீங்க
பிரகாஷ்,
ஆதாரத்துடன் பதிவு!
அறிவுரையையும் கேக்க மாட்டானுவோ, சட்டத்தையும் மதிக்க மாட்டானுவோ.
வாவ்...இதுவரை பார்க்காத வித்தியாச கோணம்...வாழ்த்துக்கள் நண்பரே...
பிரகாஷுக்கு ஒரு "ஓ" போடுங்க எல்லோரும்!விழிப்புணர்வுப் பதிவு,பலரைச் சென்றடைய வேண்டும்!வாழ்த்துக்கள்!
அண்ணன் பிரைவேட் பஸ்ல ஏறினதே
இல்லை போல இருக்கே!
அவங்க வழியே தனி வழி.
ஆகா அருமையாக படம் பிடித்துள்ளீர்கள் சகோ .வாழ்த்துக்கள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்
அருமையான செயலுக்கும் இப் பகிர்வுக்கும் ....
விழிப்புணர்வு பதிவு.செல்போனில் எடுத்த படங்களா இவை ? தெளிவாக உள்ளது
உண்மைதான் தமிழ்வாசி சாலை விதிகளை அதிகமானவர்கள் இங்கு பின்பற்றாத நிலையை நானும் நேரடியாக பார்த்திருக்கின்றேன் மதுரைக்கு அன்மையில் சென்ற போது காவல்துறை கண்கானிக்க வேண்டும்.
@தமிழ்வாசி - Prakash
நல்ல காமெரா, நல்ல செய்தி
அருமையான பதிவு படங்களும். எழுத்தை பயனுள்ளதாக்கும் தமிழ்வாசிக்கு வாழ்த்துக்கள்!
சகோ! இன்றுள்ள போக்குவ்வரத்து
உயிருக்கு பாதுகாப்பு இல்லை!
புலவர் சா இராமாநுசம்
மதுரையில் இது சகஜம்தான். அதே சாலையில் ஒவ்வொரு சனிக்கிழமை நரசிங்கம் பெருமாள் கோவிலுக்கு சென்று திரும்புவதற்குள் எத்தனை கவனகுறைவான டிரைவிங்கை பார்க்கிறேன்.
mobile deevali bonus purchase?
தமிழ் 10 பாடல் பிரிவில் காத்திருக்கும் பட்டியலில் உள்ள
என் ஆரம்ப காலக் கவிதைகளைப் பகிர்ந்துள்ளேன் .அவைகள்
ஒவ்வொன்றையும் சிரமம் பாராமல் சட்டெனப் பார்த்து பிடித்திருந்தால்
உங்கள் ஓட்டுக்களை வழங்கி அந்தக் கவிதைகளை வாழ வையுங்கள்
சகோ .இது என் அன்பான வேண்டுகோள் .மிக்க நன்றி உங்கள் ஒத்துளைப்புகளிற்கு .