|  |  |  |  |  |  |  | 
|  |  |  |  |  |  |  | 
|  |  | 
முந்தைய பாகங்களுக்கு...
இந்த பதிவின் இறுதியில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும்.
          
நண்பர்களே, கடந்த பாகத்தில் ABSOLUTE CO-ORDINATE METHOD என்றால் என்ன? என பார்த்தோம். இனி INCREMENTAL CO-ORDINATE METHOD பற்றி பார்ப்போம்.
INCREMENTAL CO-ORDINATE METHOD என்றால் என்ன?
நண்பர்களே, INCREMENTAL பற்றி கீழே உள்ள வரைபடத்தின் மூலம் விளக்கமாக பார்க்கலாம்.
இப்போது INCREMENTAL METHOD முறையில் எப்படி புள்ளிகளை குறிப்பிடுவது என பார்ப்போம்.
முதல் புள்ளிக்கு மைய புள்ளி GRAPHஇன் நடுவில் உள்ளது. அங்கே CO-ORDINATEஐ வைத்து பார்த்தால் முதல் புள்ளி மூன்றாம் கால்பகுதியில் இருக்கிறது. எனவே X-30.0 Y-20. என குறிக்கப்படுகிறது.
இரண்டாவது புள்ளிக்கு ORIGIN ஆனது அதற்கு முந்தய புள்ளியான முதல் புள்ளியில் இருக்கும். பார்க்க படம். படத்தில் உள்ள படி CO-ORDINATE வைத்தால் மூன்றாவது கால்பகுதியில் இரண்டாவது புள்ளி அமைகிறது. எனவே X50.0 Y0.0 என வரும். (குழப்பமாக இருப்பின் மேலே உள்ள INCREMENTAL வரையறையை மீண்டும் படிக்க)
மூன்றாவது புள்ளிக்கு ORIGIN ஆனது அதற்கு முந்தைய புள்ளியான இரண்டாவது புள்ளியில் அமைகிறது. அங்கு படத்தில் உள்ள படி CO-ORDINATE வைத்தால் முதல் கால்பகுதியில் வருகிறது. எனவே, X0.0 Y30.0 என வரும். இப்படியே ஒவ்வொரு புள்ளிக்கும் அதற்கு முந்தைய புள்ளியில் CO-ORDINATEஐ வைத்து பார்த்தால் X, Y சரியாக குறிப்பிடலாம்.
1. X-30.0 Y-20.0
2. X50.0 Y0.0
3. X0.0 Y30.0
4. X20.0 Y0.0
5. X10.0 Y0.0
6. X-50.0 Y0.0
7. X-10.0 Y-10.0
(எப்பவும் போல X,Y குறிப்பிட்டாலே TAPPER வரும்.)
8. X0.0 Y-20.0
9. X-10.0 Y-10.0
9வது புள்ளி படத்தில் இல்லை. ஆனால் 1வது புள்ளிக்கு மீண்டும் வந்து சேர்ந்தால் தான் படம் COMPLETE ஆகும்.
டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி
நண்பர்களே, கடந்த பாகத்தில் ABSOLUTE CO-ORDINATE METHOD என்றால் என்ன? என பார்த்தோம். இனி INCREMENTAL CO-ORDINATE METHOD பற்றி பார்ப்போம்.
INCREMENTAL CO-ORDINATE METHOD என்றால் என்ன?
             வரைபடத்தின் ஒவ்வொரு புள்ளியையும் குறிப்பிடும் போது அதற்கு முந்தைய புள்ளியை வைத்து குறிப்பிடப்படுவது INCREMENTAL CO-ORDINATE METHOD எனப்படும்.
        மேலே படத்தில் அளவுடன் ஒரு வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது.  அதற்கு முதலில் ஒரு பொதுவான புள்ளி வைக்க வேண்டும். அந்த படத்திற்கு புள்ளிகள் எப்படி குறிக்க வேண்டும். முதலில் அந்த படத்தை ஒரு GRAPH SHEET இல் வரைந்து கொள்ளுங்கள். நான் அந்த படத்திற்கு நடுப்பகுதியை பொதுவான புள்ளியாக வைத்து வரைந்துள்ளேன். இதில் முதல் கால்பகுதி, இரண்டாம் கால்பகுதி, மூன்றாம் கால்பகுதி, நான்காம் கால்பகுதி என நாம் பத்தாம் வகுப்பில் கணக்கு பாடத்தில் GRAPH SHEETஇல் பிரிப்பது போல பிரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் MACHINE இல் நாம் ஒரு பொதுவான புள்ளியை கொடுப்போம். அதற்கேற்ப X.Y புள்ளிகளுக்கு + அல்லது - கொடுக்க வேண்டும்.
         மேலே படத்தில் GRAPH SHEET இல் கொடுக்கப்பட்ட படத்தை மையப்படுத்தி வரைந்துள்ளேன். உங்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க + மற்றும் - கொடுத்துக் கொளுங்கள். நாம் GRAPH இல் ஒரு கட்டத்தை பத்து மில்லிமீட்டராக பிரிதுள்ளோம். நமக்கு கொடுக்கப்படும் படங்களின் அளவுகள் மில்லி மீட்டரில் குறிக்கப்பட்டே இருக்கும். சரி நண்பர்களே, மேற்கண்ட முறையில் GRAPH SHEETஇல் படத்தை வரைந்து கொள்ளுங்கள். 
இப்போது INCREMENTAL METHOD முறையில் எப்படி புள்ளிகளை குறிப்பிடுவது என பார்ப்போம்.
முதல் புள்ளிக்கு மைய புள்ளி GRAPHஇன் நடுவில் உள்ளது. அங்கே CO-ORDINATEஐ வைத்து பார்த்தால் முதல் புள்ளி மூன்றாம் கால்பகுதியில் இருக்கிறது. எனவே X-30.0 Y-20. என குறிக்கப்படுகிறது.
இரண்டாவது புள்ளிக்கு ORIGIN ஆனது அதற்கு முந்தய புள்ளியான முதல் புள்ளியில் இருக்கும். பார்க்க படம். படத்தில் உள்ள படி CO-ORDINATE வைத்தால் மூன்றாவது கால்பகுதியில் இரண்டாவது புள்ளி அமைகிறது. எனவே X50.0 Y0.0 என வரும். (குழப்பமாக இருப்பின் மேலே உள்ள INCREMENTAL வரையறையை மீண்டும் படிக்க)
மூன்றாவது புள்ளிக்கு ORIGIN ஆனது அதற்கு முந்தைய புள்ளியான இரண்டாவது புள்ளியில் அமைகிறது. அங்கு படத்தில் உள்ள படி CO-ORDINATE வைத்தால் முதல் கால்பகுதியில் வருகிறது. எனவே, X0.0 Y30.0 என வரும். இப்படியே ஒவ்வொரு புள்ளிக்கும் அதற்கு முந்தைய புள்ளியில் CO-ORDINATEஐ வைத்து பார்த்தால் X, Y சரியாக குறிப்பிடலாம்.
1. X-30.0 Y-20.0
2. X50.0 Y0.0
3. X0.0 Y30.0
4. X20.0 Y0.0
5. X10.0 Y0.0
6. X-50.0 Y0.0
7. X-10.0 Y-10.0
(எப்பவும் போல X,Y குறிப்பிட்டாலே TAPPER வரும்.)
8. X0.0 Y-20.0
9. X-10.0 Y-10.0
9வது புள்ளி படத்தில் இல்லை. ஆனால் 1வது புள்ளிக்கு மீண்டும் வந்து சேர்ந்தால் தான் படம் COMPLETE ஆகும்.
        அடுத்த பாகத்தில் மேற்க்கண்ட புள்ளிகளை எப்படி PROGRAM வடிவில் மாற்றுவது என பார்க்கலாம். அது வரை கீழே உள்ள வீடியோக்களை பார்த்துட்டே இருங்க.
THANKS: YOUTUBE
 
 Best Blogger Tips
UA-18786430-1
Best Blogger Tips
UA-18786430-1
20 கருத்துரைகள்:
மாப்ள நல்ல தொடர் நன்றி!
படிக்கற பசங்களூக்கு யூஸ் ஆகும்..!!
மதுர அண்ணே,CNC பற்றி எங்கள மாதிரி அப்பாவிகளுக்கும் புரியற மாதிரி நல்ல படம் போட்டு பாகங்கள் காட்டுறிங்க!!!!!
மாணவர்களுக்கான வழிகாட்டி தொடர்!!!
வாழ்த்துக்கள்!!!
நல்ல தொடர் நன்றி!
பயனுள்ள மெக்கானிக்கல் பதிவு... வாழ்த்துக்கள்
டியூசன் பீஸ் வாங்காமலே சொல்லிகுடுக்க உங்களுக்கு பெரிய மனசு!
புரிஞ்சவங்க கமெண்ட் போடுவாங்க புரியாதவங்க ஓட்டு மட்டும் நான் ரெண்டாவது ரகம்
போட்டுட்டேன் போட்டுட்டேன் ஓட்டு
அனைவருக்கும் பயன் படும் பதிவு
இன்று என் வலையில் ...
இது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.
மாணவ மணிகளுக்கு மிகவும் சிறந்த பதிவு...!!!
சிறப்பான முயற்சி ... தொடரட்டும் உங்கள் பணி...
உபயோகப்படும் தொடர்
தொடரட்டும் உங்கள் தொடர் கற்பித்தல்
அருமையான பகிர்வு பிரகாஷ்! சம்மந்தப்பட்ட நண்பர்களுக்கு பயன்மிக்கதாக இருக்கும்!
ஓ..இன்னிக்கு இன்க்ரிமெண்டலா......சூப்பர்..
ரெண்டுல எது ஈஸி..எது நல்லது..எது அதிகம் யூஸ் ஆகுது-ன்னு சொல்லுங்களேன்..
நல்ல பகிர்வு அன்னல் எனக்கு ஒன்னும் புரியல
அவன் லீவ் சார்..
மாணவர்களின் கற்றலினை இலகுவாக்கும் முயற்சியில் அருமையாகத் தொடரினை நகர்த்துறீங்க.
தொடர்கிறேன்.
அன்பின் பிரகாஷ் , என்னோட தொடர்ல உங்களுடைய லிங்க் கொடுத்திருக்கேன் .
http://anglethree.blogspot.com/2011/11/5.html
இயந்திரப் பொறியாளர்களுக்கு-என் அனுபவம்-பாகம் 5
நன்றிகள்