டிஸ்கி:
வீட்டு உபயோக பொருட்காட்சின்னு ஊர் ஊருக்கு போடறாங்களே, அங்க நடக்கற வியாபாரம் பத்திதான் சொல்றேன்.
"ஐயாமாரே... அம்மாமாரே... அண்ணமாரே... அக்காமாரே... தங்கச்சிமாரே.... எல்லோரும் இங்க ஓடி வாங்க... இத வாங்குனா அது பிரீ, அது வாங்கினா இது பிரீன்னு கூவி கூவி கூப்பிடுவாங்க. அத கேட்டு ஒரு ஸ்டால் பக்கமா ஒதுங்கிட்டோம்னு வைங்க? இங்க ஒங்க எல்லாத்துக்கும் இலவசமா ஒண்ணு தர போறோம். ஆனா அதுக்கு முன்னாடி இத பாருங்க... எப்பிடி வேலை செய்யுதுன்னு.... நீங்க உருட்டி நடுவுல வச்சா போதும், தேய்க்க வேணாம், வட்டமா வரலையினு கவலைப்பட வேணாம். நீங்க எதிர்பாக்கிற மாதிரி வட்டமா புசுபுசுன்னு சூடா ஆவி பறக்க வரும்". இப்படி சொல்லித்தான் சப்பாத்தி மேக்கர் விப்பாங்க. இப்பவே புக் பண்ணினா டிஸ்கவுண்ட் இருக்கு. இன்னைக்கு மட்டும் தான் இந்த ஆபர். உங்க வீட்டு அட்ரெஸ் கொடுத்திட்டு போங்க. உங்க வீட்டுக்கு வந்து உங்க சப்பாத்தி மாவிலேயே செஞ்சு காட்டறோம், உங்களுக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்கங்கனு" சொல்வாங்க. இப்படி ஆச வார்த்தைகள் சொல்லி நம்மள எப்படியாவது வாங்கற நெலமைக்கு கொண்டு வந்திருவாங்க. கொஞ்சம் ஏமாந்தாலும் நம்ம காசு அங்கேயே அம்பேல் தான். சுதாரிச்சோம்னா காச பத்திரப்படுதிக்கலாம். அப்புறம் இலவசமா என்ன தருவாங்கனு கேட்கறிங்களா? வேறேன்னா, அவங்க சுட்ட சப்பாத்தி கொஞ்சூண்டு பிச்சு கொடுப்பாங்க. நாம வாயில வச்சதும் மறுபடியும் கேன்வாஸ் பண்ண ஆரம்பிச்சிருவாங்க. அந்த பொருளை நான் வாங்க வேணாம்னு சொல்லல. நாம இந்த பொருள் தான் வாங்கனும்னு திட்டமிட்டு இருந்தோம்னா, அந்த பொருளை பற்றி ஓரளவு முன்கூட்டியே விசாரிச்சு வச்சிருப்போம். அப்போ நமக்குள்ள ஒரு ஐடியா வந்திருக்கும். எந்த கம்பெனி வாங்கினா நல்லா இருக்கும்? விலைகளையும் விசாரிச்சு ஒரு முடிவுக்கு வந்திருப்போம்.
அப்புறம் மசாலா பொருட்கள் விக்கிற இடத்துக்கு போனா, ஒரு டப்பால நாலஞ்சு மசாலா பாக்கெட்கள் போட்டு வச்சுட்டு நூறு ரூபான்னு விப்பாங்க. அதுமட்டும் இல்லாம, ரெண்டு வெரைட்டி வாங்கினா இவ்ளோ டிஸ்கவுண்ட், அவ்ளோ டிஸ்கவுண்ட் அப்படின்னு சொல்வாங்க. அந்த பாக்கெட்களை பார்த்தா ரெகுலரா கடையில் விக்கிற பாக்கெட் மாதிரியே இருக்காது. பொருட்காட்சி இடத்துல விக்கிறதுக்குனே பாக்கெட் பண்ணுன மாதிரி இருக்கும். அதில்லாம அந்த பிராண்டில் நமக்கு அறிமுகமில்லாத பொருட்களும் இருக்கும். உதாரணமா, நமக்கு அறிமுகமான மஞ்சள் தூள், சாம்பார் பொடி போன்ற மசாலா பொடிகளுக்கு மத்தியில் ஊறுகாய், பருப்பு வகைகளும் இருக்கும். இந்த பொருட்களை வெளிச்சந்தையில் பார்க்கவே முடியாது.
இந்த மாதிரி நிறைய வீட்டு உபயோக பொருட்கள் பொருட்காட்சியில் ஸ்டால் போட்டு விப்பாங்க. ஸ்டால் கடைகளை டெமோவாக பயன்படுத்தலாம். அவர்களுக்கு விற்பனையை விட விளம்பரமே முக்கிய நோக்கம் ஆகும். நாம அங்க வாங்காம வெளிக் கடைகளில் நம்பிக்கையுடன் வாங்கலாம். பொருட்களும் தரமா இருக்கும். பல மாடல்கள் பார்த்து செலக்ட் பண்ணலாம். கடைகளில் நேரடியாக வாங்குவதால் பொருட்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் ஈசியாக மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. நண்பர்களே, இங்கே நான் பகிர்ந்திருப்பது என் தனிப்பட்ட கருத்தே.....
27 கருத்துரைகள்:
எவ்வளவு சொன்னாலும் கேக்குராய்ங்களா....
நண்பர் பாலா சொன்னதுபோல் எவ்வளவு சொன்னாலும் கேட்கவே மாட்டார்கள்
correct
உங்கள் கருத்து உண்மையே...
நாமதான் விழிப்புணர்வோட இருக்கணும். நல்ல பதிவுதான்.
நல்ல பத்தி பிரகாஷ்
என்ன தமுக்க மைதானம் பக்கம் போயிட்டு வந்த மாதிரி இருக்கே எவ்வளவு குடுத்து ROTI MAKER வாங்குனீங்க?
அண்ணே! கருத்து உங்க தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும், அருமையான கருத்து அண்ணே! நிச்சயமாக அனைவரும் சிந்திக்க வேண்டிய மேட்டர்!
"ஐயாமாரே... அம்மாமாரே... அண்ணமாரே... அக்காமாரே... தங்கச்சிமாரே.... எல்லோரும் இங்க ஓடி வாங்க... இத வாங்குனா அது பிரீ, அது வாங்கினா இது பிரீன்னு //
ஐ!நல்லா கூவுறிங்களே!
ஹிஹி!
சிந்திக்க வேண்டிய விஷயம்!
காலை வணக்கம்!உண்மை தான் இப்படிப் பொருள்களை வாங்குவதை விட,நிரந்தரமாக கேரண்டியுடன் பொருள்கள் விற்கும் கடைகளிலேயே ஐந்து,பத்து அதிகமென்றாலும் வாங்க வேண்டும்!உடலுக்கும்,உள்ளத்துக்கும் நல்லது!
அதாவது பொருட்காட்சியில் போய் பொருளைப் பார்த்து செலக்ட் பண்ணிட்டு, நல்ல கடைக்குப் போய் வாங்கணும்ம்ம்ம்ம்..
மாப்ள விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி!
பாஸ் மொத பந்தியின் முதல் வரியினைப் படிக்கும் போது...நான் நெனைச்சேன் நீங்களும் ஒரு கம்பனி ஆரம்பித்து சேல்ஸ் பண்ணத் தொடங்கிட்டீங்க என்று...
அவ்வ்வ்வ்வ்வ்
நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவு பாஸ்.
எதையும் பிளான் பன்னி பண்ணனும்னு சும்மாவா சொன்னாயிங்க??
அப்படியே அந்த பொருளை வாங்கி சென்றாலும், ரெண்டே நாள்ல அவுட்டாகி வீட்டம்மா'கிட்டே உதய் வாங்க வச்சிரும்!!!!
உங்கள் கருத்து உண்மையானதே....
ஆனாலும் கடைநிலைமக்கள் கட்டுமல்ல பொதுவாக விலை குறைவான பொருட்களை வாங்குவது சர்வசாதரனமாகிவிட்டது....
சின்ன விலை தானே...குறைவான நாள் பாவித்தாலும் போதும்னு சிலர் நினைக்குறாங்க....
நல்ல வ்ழிப்புணர்வு நண்பரே
உங்கள் கருத்து உண்மையானதே....
தேவையான விழிப்புணர்வு பதிவு நண்பரே
சிந்திக்கவேண்டிய விடயம் !
////எந்த கம்பெனி வாங்கினா நல்லா இருக்கும்? விலைகளையும் விசாரிச்சு ஒரு முடிவுக்கு வந்திருப்போம். ////
கொழும்மில ஒரு இடம் இருக்குப்பா... மாட்டுப்பட்டா எல்லாத்தையும் உரிச்சுப் போட்டுத் தான் விடுவாங்கள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி
எவ்வளவு குடுத்து அந்த பொருளை வாங்குனீங்க?
"ஐயாமாரே... அம்மாமாரே... அண்ணமாரே... அக்காமாரே... தங்கச்சிமாரே.... எல்லோரும் இங்க ஓடி வாங்க... நம்ம தமிழ்வாசி நல்லது ஒரு பதிவு போட்டிருக்கார். படித்துப் பயன் பெறுங்கோ............
நம்ம சனத்துக்கு விலை குறைவா இருந்தா காணும், எதையும் வாங்குங்கள்
ஓசியில ஒண்ணு கிடைக்குமுன்னா வாய புளந்துக்கிட்டேவேண்டுவோமில்ல .நல்ல விசயம்தான் சொல்லி இருக்கீங்க .
இதுக்காக எல்லா ஓட்டும் போட்டாச்சு வாழ்த்துக்கள் .
உங்க கருத்து மிகச்சரி. இலவசத்தை பார்த்து ஏமாறாமல் இருக்க வேண்டும்.
@RAMVI
நண்பர் எந்த இலவசத்தை பற்றி பேசுகிறார்?????????
[யாரையாவது வம்புல மாட்டி விடலன்னா தூக்கமே வரமாட்டேங்குது நண்பா ஹி ஹி]
நல்ல விழிப்புணர்வு தரும் பதிவு.