
நான் எனது ஊரான திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டிக்கு செல்வதற்காக மாலை நேரத்தில் சுமார் ஆறு மணி இருக்கும், மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு சென்றேன். அப்போது தனியார் பேருந்துகளே வரிசையாக இருந்தது,,
முதலில் செல்வதற்காக தயாராய் இருந்த பேருந்தில் ஏற முயன்றேன், கண்டக்டர் இடைமறித்து எந்த ஊருக்கு? என கேட்டார். சின்னாளபட்டி செல்ல வேண்டும் என்றேன்.. அவர் அங்கெல்லாம் பஸ் நிக்காது, ஏறாதீங்க என்றார்.
இப்படிதான் தனியார் பஸ் நிக்காதுன்னு சொல்லுவாங்க, அப்புறமா கிளம்பும் போது ஏறிக்கலாம் என சொன்ன கண்டக்டர் திண்டுக்கல், திண்டுக்கல் என கூவி கூவி திண்டுக்கல் செல்பவர்களை மட்டுமே ஏற்றுவதில் குறியாக இருந்தார். ஆனா எல்லா ஸ்டாப்பிலும் நின்னு பஸ்ச புல்லா அடசிட்டுதான் போகும்..
நான் அடுத்த பஸ்ஸில் ஏற முயன்றேன், அந்த பஸ்ஸின் கண்டக்டர் திண்டுக்கல், திண்டுக்கல் என கூவி திண்டுக்கல் போறவங்க மட்டும் ஏறுங்க, இடையில் எந்த ஸ்டாப்பும் நிக்காது என பயணிகளை மிரட்டிக் கொண்டிருந்தார்..
-மீதி அடுத்த பாகத்தில்.....
இன்றைய பொன்மொழி:
உனக்கு ஒரே நண்பன் நீயே, ஒரே பகைவனும் நீயே, உன்னைத் தவிர பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை
இன்றைய விடுகதை:
இலை இல்லை; பூ இல்லை; கொடி உண்டு. அது என்ன?
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை:
ஆயிரம் கதைகள் எழுதுவான், அகிலத்தை ஆட்டி வைப்பான்,
நாக்கு வறண்டால் வீழ்ந்திடுவான். அவன் யார்?
விடை: பேனா.
முந்திய பதிவின் பின்னூட்டத்தில் சரியான விடை சொன்ன முத்துலட்சுமிக்கு வாழ்த்துக்கள்.
---------------
0 கருத்துரைகள்: