
எனக்கு டாக்டர் பட்டம் சிறந்த நடிகர் என்பதற்காக வழங்கப்படவில்லை. சிறந்த சமூக சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாட்கள் எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் இருப்பதற்காக சிலர் தடுத்தனர் என்று விஜயகாந்த் கூறினார்.
இந்திய அப்போஸ்தல திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் இசைப் பெருவிழா மற்றும் விஜயகாந்துக்கு மனிதநேய சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள சர்வதேச தேவாலய மேலாண்மை நிறுவன தலைவர் ஜான் வில்லியம் மனிதநேய சமூக சேவைக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். விழாவில் ஏற்புரை நிகழ்த்தி பேசிய விஜயகாந்த்,
டாக்டர் பட்டம் வழங்கி என்னை கெளிரவித்த திருச்சபைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனக்கு வழங்கும் டாக்டர் பட்டம் தங்களுக்கே கிடைத்து விட்டதாக நினைத்து வரவேற்பு ஏற்பாடுகளை செய்த கட்சித் தொண்டர்களுக்கு இந்த பட்டத்தை நான் சமர்ப்பிக்கிறேன்.
சிறுபான்மையினர்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள். முதலில் சிறுபான்மையினர் என்பதே இல்லை. நீங்களும் பெரும்பான்மையினரே.நீங்களே சிறுபான்மையினர், எனச் சொல்லி உங்களை சிறுமைப் படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் பெருபான்மையினர், என நிரூபிப்பதற்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளது.
தி.மு.க., அரசு சிறுபான்மை மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என ஏசுநாதர் கூறினார். காரணம் எத்தனை தடவை அடித்தாலும், ஒரு நாள் கைவலிக்கும். அது போல் மக்கள் பொறுமையாகவுள்ளனர். அரசன் அன்று கொள்வான்; தெய்வம் நின்றுக் கொள்ளும். நான் சிறுவயதிலேயே நன்மை செய்தவன்; தீமை செய்யவில்லை. கபடம் இல்லாதவன் பாக்கியசாலி என்று பைபிள் வசனம் கூறுகிறது.
நான் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறேன். அனைத்து மதமும் போதிப்பது அன்பு ஒன்றைத்தான். எனக்கு இந்த டாக்டர் பட்டம் சிறந்த நடிகர் என்பதற்காக வழங்கப்படவில்லை. சிறந்த சமூக சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. அதனால் நான் பாக்கியசாலி தான். இவ்வளவு பிரச்னைக்கு இடையில் எனக்கு, டாக்டர் பட்டம் கிடைத்துள்ளதற்கு தெய்வம் தான் துணை நிற்கிறது.
இவ்வளவு நாட்கள் எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் இருப்பதற்காக சிலர் தடுத்தனர்.
திருச்சபையை மீறி இந்த டாக்டர் பட்டம் எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. எல்லா மதங்களும் அன்பு, பண்பு, கருணை ஆகியவற்றை போதிக்கிறது. கூடாரங்கள் வேறாக இருந்தாலும் இதயங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.
இலவசத்தை மக்களுக்கு கொடுத்து சோம்பேறி ஆக்குகின்றனர்.ஆலமர விழுதுகளாக எனது தொண்டர்கள், பொது மக்கள் எனக்கு பலமாக உள்ளனர். நான்கரை ஆண்டுகளாக, தே.மு.தி.க., அழியாமல் இருப்பதற்கு மக்கள் தான் காரணம். மக்கள் இருக்கும் வரைக்கும். நான் அழியமாட்டேன். நான் இருக்கும் வரை மக்களை அழிக்க விடமாட்டேன்.
தமிழகத்தில் ஊழலை அறுத்து, தூர எறிந்துவிட்டு, நோய்வாய் பட்டிருக்கும் மக்களுக்கு நல்வாழ்க்கை கொடுப்பதற்காகவே, எனக்கு இந்த டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சியை, நான் கொடுப்பேன்; என்னால் அது முடியும். முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தம்; முடியும் என்பதே அறிவாளிகள் சொல்லும் வார்த்தை.
இலவசத்தை மக்களுக்கு கொடுத்து சோம்பேறி ஆக்குகின்றனர்.ஆலமர விழுதுகளாக எனது தொண்டர்கள், பொது மக்கள் எனக்கு பலமாக உள்ளனர். நான்கரை ஆண்டுகளாக, தே.மு.தி.க., அழியாமல் இருப்பதற்கு மக்கள் தான் காரணம். மக்கள் இருக்கும் வரைக்கும். நான் அழியமாட்டேன். நான் இருக்கும் வரை மக்களை அழிக்க விடமாட்டேன்.
தமிழகத்தில் ஊழலை அறுத்து, தூர எறிந்துவிட்டு, நோய்வாய் பட்டிருக்கும் மக்களுக்கு நல்வாழ்க்கை கொடுப்பதற்காகவே, எனக்கு இந்த டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சியை, நான் கொடுப்பேன்; என்னால் அது முடியும். முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தம்; முடியும் என்பதே அறிவாளிகள் சொல்லும் வார்த்தை.
நான் ஒவ்வொரு முறையும் வறுமையை ஒழிப்பேன் என்று கூறி வருகிறேன். வறுமையை ஒழிப்பேன் என்றால் வருமானத்தை பெருக்குவேன் என்பதுதான் அதற்கு அர்த்தம். என்னை எப்படியாவது அசைத்து விடலாம் என்று பார்க்கிறார்கள். நான் ஆலமரம். எனக்கு விழுதாக தொண்டர்கள் இருக்கும் வரை என்னை யாராலும் அழிக்க முடியாது. அதே போல் நான் இருக்கும் வரை தொண்டர்களை அழிய விட மாட்டேன் என்றார்.
இன்றைய பொன்மொழி:தோழா!
முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும் ,
எழுந்து நட எரிமலையும் வழி கொடுக்கும் .
இன்றைய விடுகதை:
கிளை இல்லா மரம் வெட்ட வெட்ட வளரும், அது என்ன?
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை:
இலை இல்லை; பூ இல்லை; கொடி உண்டு. அது என்ன?
விடை: கைரேகை
********
1 கருத்துரைகள்:
சரி இனியாவது சமூக சேவை ஒழுங்காக செய்தால் சரி.. தாங்க...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?