
சுனாமி அரக்கன் கோரத்தாண்டவமாடி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனாலும் தாக்குதலினால் ஏற்பட்ட ரணம் இன்னும் மக்கள் மனதில் இருந்து ஆறவில்லை. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பூமிக்கடியில் 30 கி.மீ., தொலைவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் கடலில் மிகப்பெரிய சுனாமி பேரலை ஏற்பட்டது.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி வீடியோ பாருங்கள்...
இயற்கையை யாராலும் வெல்ல முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் கடற்கரையோரம் வசித்த மீனவர்கள் நீச்சல் தெரிந்தும் பேரலைக்குமுன் ஈடுகொடுக்க முடியவில்லை.
அதுவரை சுனாமி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலேயே வாழ்ந்த மக்கள் அதன் தாக்குதலைக் கண்டு பிரமித்தனர். இந்தோனேஷியா நாட்டில் உள்ள சுமத்திரா தீவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் தாக்கம் கடலோர நாடுகளான தாய்லாந்து, இந்தோனேஷியா, இந்தியா உட்பட 11 நாடுகளை புரட்டிப் போட்டது.கடல் அலை 100 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. தமிழகத்தை பொறுத்தவரை மூன்று பேரலை மட்டுமே தாக்கியது. இந்த மூன்று ராட்சத அலைக்கே 7,000 பேர் பலியாகினர். தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக உயர்பலிகள் ஏற்பட்டன.கடலூர் மாவட்டத்தில் மட்டும் 610 பேர் பலியாகினர். பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். தாய், தந்தையர், உற்றார் உறவினரை இழந்து 43 சிறுவர்கள் நிர்கதியாய் நின்றனர். அந்த பிஞ்சு உள்ளங்கள் கடலூர் சேவை இல்லத்தில் சேர்க்கப்பட்டு அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
இன்றைய பொன்மொழி:
"பொய்யான உறவுகளுக்கு முன்னால் புன்னகையும் ஒரு பொய்தான்..
உண்மையான அன்புக்கு முன்னால் கோபம் கூட புன்னகைதான்".!
இன்றைய விடுகதை:விடை அடுத்த பதிவில்....
கடலைக்கலக்குது ஒரு குருவி, கடல் ஓரம் போகுது ஒரு குருவி, செடியைத்தின்பது
ஒரு குருவி, செடியோரம் போகுது ஒரு குருவி, அவை யாவை?
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை:
கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளை காகம் நிற்குது- அது உன்ன? விடை: உளுந்து.
1 கருத்துரைகள்:
ஒரு அதிசயமான நிகழ்வு ஆனால் நம்மை எல்லாம் அழ வைத்த நிகழ்வு... டிவி செய்திகளில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொன்ன வரிகள்... இனியும் சுனாமி வரக்கூடாது... ஒருவேளை வந்தால் நம்மை எல்லாம் மிச்சம் வைக்கக்கூடாது...