சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நீச்சல் அடிக்க விருப்பம். பல்கலைகளகங்களிலே இணைந்த ஆரம்பத்தில் தண்ணீர் இல்லாத வெறும் தரையிலே உங்களிள் Seniors இன் வேண்டுதலால் நீச்சல் அடித்திருப்பீர்கள். எங்களில் பலர் நீச்சல் குளங்களில் (Swimming Pools) நீச்சல் மட்டுமல்லாது வேறு சில நல்ல விடயங்களையும் சத்தமில்லாது செய்து வருகிறார்கள்.இவற்றால் பல நோய் கிருமிகள் பரவி கால போக்கிலே பல உயிர் கொல்லி நோய்களை உண்டாக்கின்றது.
ஐந்து பேரில் ஒருவராவது நீச்சல் குளங்களில் சிறுநீர் (Urine) அடிக்கிறாங்க.இது ஒன்றே நோய் பரப்ப முக்கிய காரணியாகிறது. 20% மக்கள் பொது நீச்சல் குளங்களின் பராமரிப்பையோ,சுத்தத்தையோ கருத்தில் கொள்வதில்லை.30% மக்கள் குளிக்காமலே நீச்சல் குளங்களிற்குள் இறங்குகிறார்கள். இவையெல்லாம் தோல் சம்பந்தமான நோய்களையும்,காதுடன் தொடர்புடைய நோய்களையும் ஏற்படுத்துகின்றது.
நீரில் தோன்றும் பக்ரீரியாக்களால் பிறப்பு உறுப்புகளை பாதிக்க செய்வதோடு மட்டுமல்லாது மிகவும் விரைவாகவே வயது முதிர்ந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. chlorine ஐ சேர்ப்பதற்கு முதல் புதிய நீரை மாற்றுவதற்கு நீச்சல் குளங்களை பாராமரிப்பவர்களிற்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், இவர்கள் நீரை மாற்றுவதாக தெரியவில்லை.சில நீச்சல் குளங்களிற்கு சூரிய ஒளி பட்டு பல வருடங்கள் ஆகியிருக்கும்.இவற்றை தான் கூடிய கவனம் எடுத்து பாராமரிக்க வேண்டி உள்ளது.
சிறுபிள்ளைகளுடன் நீச்சல் குளங்களிற்கு செல்வதாயின் நீச்சல் குளங்களின் தரத்தை அறிந்த பின் செல்வதே நல்லது. சிலவற்றில் இருந்து 10 அடி தூரத்தில் நின்றாலே ஒருவிதமான மணமும்,நீர் தெளிவற்ற நிலையிலும் இருந்தால் தவிர்து கொள்வதே நல்லது.
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - நீச்சல் குளத்தில் இவ்வளவு பிரச்னைகளா - ம்ம்ம்ம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா