இனி காருக்கு(ம்) ஒரு பெக் விஸ்கி போட்டால் போதும். அடுத்த பெட்ரோல் பங்க் வரை பிரச்னையின்றி ஓடும். ஆம். விஸ்கியில் இருக்கும் 2 மூலப்பொருட்கள், வாகனங்களுக்கு தாவர எரிபொருளாக பயன்படுவதை ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எடின்பெர்க்கில் உள்ளது நேப்பியர் பல்கலைக்கழகம். தாவர எரிபொருள் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விஞ்ஞானி மார்ட்டின் டாங்னி தலைமையிலான குழுவினர், விஸ்கியை ஆராய்ந்தனர். அதில் உள்ள செம்பு தாதுவில் இருந்து திரவ வடிவில் எடுக்கப்பட்ட ‘பாட் ஆல்’, தானியத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ‘ட்ராப்’ ஆகிய 2 மூலப்பொருட்கள் மாற்று எரிபொருளாக பயன்படும் தன்மை இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளுக்கு பூட்டனால் என்று பெயரிட்டுள்ளனர். அதற்கு சர்வதேச காப்புரிமையும் பெற்றுள்ளனர். விரைவில் அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பல்கலைக்கழகத்தின் சார்பில் புதிய நிறுவனம் தொடங்கப்படுகிறது. இதுபற்றி மார்ட்டின் டாங்னி கூறியதாவது: இந்த பயோ-ச்ட்ணீ;ப்யூயலை பெட்ரோல், டீசலுடன் 5 முதல் 10 சதவீதம் வரை கலந்து பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. 5 10 சதவீதம் கலந்தாலே சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலை பெருமளவு மிச்சம் செய்ய முடியும். சுற்றுச்சூழல் மாசையும் குறைக்க முடியும். விஸ்கி தயாரிப்பில் பயன்படும் 2 மூலப்பொருட்கள் மட்டுமே இவை என்பதால் செலவும் குறைவாகவே இருக்கும்
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - காருக்கு விஸ்கியா - அது சரி -வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா