அடுத்த வாரத்தில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 பைசா முதல் 70 பைசா வரை உயர்த்த பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, பெட்ரோலிய நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளதாகவும், இதனையடுத்து, தொடர்நது பலமுறை, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்ததாகவும், இந்நிலையில், மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை நிர்ணயிக்கும் உரிமையை தங்களிடமே வழங்கி உள்ளதாகவும், இந்நிலையில் தங்கள் கூட்டமைப்பு, மாதத்திறகு இருமுறை, பெட்ரோலியப் பொருட்களின் விலையை மாற்றியமைக்க முடிவு செய்திருந்ததாகவும், ஆனால், அப்போதைய அளவில் மாற்றம் பெரிய அளவில் இல்லாததால், விலை உயர்வு குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால், தற்போதைய அளவில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பெட்ரோல் விலை உயர்த்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளதாகவும், இதுகுறித்த முறையான அறிவிப்பு ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு வெளிவரும் என்றும், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 பைசா முதல் 70 பைசா வரை விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்திக்குறிப்பில் பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - பெட்ரோல் விலை எங்கேயோ போய்க் கிட்டு இருக்கு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா