CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



விமானம் பறப்பது எப்படி?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A.  ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag



ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது. 

ஹெலிகப்டரின் மேலெழும்பு விசை அதன் மேதிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக..

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்ரழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணமும் இதுவே.

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை  எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

நன்றி: உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!


5 கருத்துரைகள்:

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - எல்லாத் துறைகளிலும் இடுகைகளா ! நேரம் அதிகம் இருக்கிறதோ - தேடிக் கண்டு பிடித்து தகவலகள் அளிக்க..... வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

kottia said... Best Blogger Tips

ஹாய் வரி good

aalunga said... Best Blogger Tips

மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள்..
நன்றி!

Math Larks 04 said... Best Blogger Tips

மொத்தத்கில் கட்டுரை அருமை:

…இதில் இரண்டு கருத்துகள்:
…1. ஒரு சிறிய நுட்பம் விடுபடுகிறது அதாவது தாக்குதல் கோணம் (angle of attack) இறக்கை காற்றுடன் ஒரு சரிந்த/சாய்வான நிலையில் மோத வேண்டும். அப்படி மோதினால் அது காற்றைக் கீழேத் தள்ள முயலும். அதனால் கீழே மிகை அழுத்தமும் மேலே குறைந்த அழுத்தமும் உருவாகும். (பட்டம் பறக்கும் அதே நுட்பம்.. காற்றுடன் மோதும் பகுதிக்கு மறு பகுதியை வால் எனும் துணியைக் கட்டி கீழே இழுக்கச் செய்கிறோமே..). உண்மையில் நீங்கள் சொன்ன மேல்ப்பகுதி வளைவு இல்லாமலும் இது பறக்கும். மேல்ப்பகுதி வளைவு இல்லையென்றால் பின்பகுதியில் வெற்றிடம் ஏற்படும் முன்பகுதில் அழுத்தம் ஏற்படும் இதனால் வேகம் அதிஅகமாகத் தடை படும். அனால் காற்றுடன் மோதும் பகுதிக்கு மறு பகுதி கீழே சரிந்து/சாய்ந்து/வளைந்து இருப்பது மிகவும் அவசியம்.
…2. வேகத்தைப் போறுத்தே அதன் லிஃப்ட் இருக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். இது சரி அனால் அனைத்தும் அல்ல. ஒருவேளை அப்படி இருந்தால் ஒரு நேர்கோட்டில் பறக்கும் போதெல்லாம் ஒரே வேகத்தில் பறக்க வேண்டும் எழும்பும் போது அதிக வேகமும் அதே நிலையில் பறக்கும் போது சற்று குறைந்த வேகத்திலும் பறக்க வேண்டும் என்று ஆகிறது அதாவது இயந்திரத்தின் முழுத் திறமையை ஒரே உயரத்தில் பறக்கும் போது பயன்படுத்தக் கூடாது என்று ஆகிறது.. உண்மையில் விமானம் கிழ்நோக்கிப் பறக்கும் போதும் அதே நிலையில் பறக்கும் போதும் தான் மிகந்த வேகத்தில் செல்லும். நான் ஏற்கனவே சொன்னது போல இறக்கையை எவ்வளவு சரித்து காற்றை கீழே தள்ளுகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் லிஃப்ட் இருக்கும். விமானத்தின் இறக்கையின் பின் பகுதியில் ரட்டர் எனும் பகுதி இருக்கும் இதை கீழ்நோக்கிச் சாய்ப்பதன் மூலம் அதிக காற்றைக் கீழே தள்ளலாம் அதனால் விமானம் குறைந்த வேகத்திலும் எழும்ப முடியும்.. விமான தளத்தில் இறங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்தால் குறைந்த வேகத்தில் விமானதளத்தைச் சுற்றுவதைக் கண்டிருக்கலாம்.

Math Larks 04 said... Best Blogger Tips

வேகமாகப் பறக்கும் பருந்தினைப் பாருங்கள் அது இறக்கையை அடிக்காமல் கீழே பாய்கிறது அப்படியே மேலே செல்கிறது எப்படி இதைச் செய்கிறது? தனது இறக்கையைத் திருப்புவதால் தானே. இப்படி இறக்கையைத் திருப்பி காற்றுடன் மோதும் கோணத்தை மாற்றி விட்டால் மேலோ அல்லது கீழோ செல்ல முடியும்.

…மேலும் ஒரு சின்ன திருத்தம்.

…//விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
// புவியீர்ப்பு விசையில்லாமல் எடை இல்லை. நிறையும் எடையும் ஒன்றாகப் பார்க்கப் படுகிறது.. நிறை கீழ்நோக்கிய விசையைக் கொடுக்காது.. நிறை முடுக்கம் அல்லது வேகம் மாறும் வீதம் நம்ம பாஷையில் பிக்கப்பை மட்டுமே குறைக்கும் லிஃப்ட்டை அல்ல. எடை தான் கீழ்நோக்கிய இழுப்பு.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1