ஆஸ்திரேலியாவில் வரும் பத்தாம் தேதியன்று திருமணம் செய்து கொள்ள பெரும்பாலான காதலர்கள் முடிவு செய்துள்ளனர். 10.10.10 என வருவதே இதற்கு முக்கியக் காரணமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாள் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
சிட்னி நகரில் 106 ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைய பதிவு செய்துள்ளனர். திருமண பதிவு மிக அதிக அளவில் இருக்கும் என்று சிட்னியில் உள்ள பிறப்பு, இறப்பு, திருமண பதிவு அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்தார். இந்த அலுவலகம் 1856 முதல் செயல்படுகிறது. ஓராண்டுக்கு முன்பாகவே அக்டோபர் 10-ம் தேதியைத் தேர்வு செய்து பதிவு செய்தவர்கள் பலர் என்றும் அவர் கூறினார்.
நியூமராலஜி இணையதளத்தில், அக்டோபர் 10-ம் தேதி புதிய தொடக்கம், சுதந்திரம் மற்றும் சுய வெளிப்பாட்டு தினமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமண பதிவு அலுவலகத்தில் 1996-ம் ஆண்டிலிருந்துதான் அதிக எண்ணிக்கையிலானோர் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி திருமணம் செய்து கொள்ள பதிவு செய்தோர் பலர்.
இப்போது 10-ம் தேதியன்று காலை 10 மணிக்கு பலரும் திருமணம் செய்து கொள்ள பதிவு செய்துள்ளனர். சிலர் அந்த நேரம் கிடைக்காததால் 10.10-க்கு பதிவு செய்துள்ளனர்.
0 கருத்துரைகள்: