உலகம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைவிட சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம் என்று சுற்றுச் சூழல் பேராசிரியர் ஜோயல் ஷ்வார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
சாலை விபத்துக்கு அடுத்தபடியாக புற்றுநோயால் உயிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சுற்றுச் சூழல் மற்றும் தொற்றுநோய் பரவல் பிரிவு பேராசிரியரான ஜோயல், பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத தாக்குதலால் உயரிழப்பவர்களின் எண்ணிக்கையை விட, அன்றாடம் எதிர்கொள்ளும் சாலை விபத்து மற்றும் புற்று நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதலில் மரணமடைபவர்களை விட சாலை விபத்து மற்றும் புற்று நோயால் உயிரிழப்போர் அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஓராண்டில் நிகழ்ந்த உயிரிழப்புகளை பட்டியலிட்டு, அதில் மரணத்துக்கான காரணத்தை பட்டியலிட்ட அவர், 6,700 பேரில் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார் என கணக்கிட்டுள்ளார்.
மும்பையில் 2008-ம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்து பலர் பீதியடைந்துள்ளனர். காரணம் இந்தத் தாக்குதலில் 166 பேர் உயிழந்தனர். ஆனால் மும்பையில் உள்ள 1.36 கோடி மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தோர் விகிதம் மிக மிகக் குறைவு என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 10 லட்சத்தில் ஒருவர் மட்டுமே பயங்கரவாத தாக்குதலில் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளில் இருப்பவர்களுக்கு மரணம் நேரிடாது என்று கருத முடியாது. அவர்களது வீட்டின் மீது பஸ் மோதி விபத்து நேரிடலாம். அல்லது புற்றுநோயால் மரணம் சம்பவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
510 பேரில் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.மாசடைந்த சுற்றுச் சூழல் காரணமாக அமெரிக்காவில் 4 சதவீதம் பேர் உயிரிழப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க நகரங்களைச் சுற்றி வருவதன் மூலம் உங்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதனுடன் ஒப்பிடுகையில் பயங்கரவாத தாக்குதலால் உயிரிழக்கும் வாய்ப்பு குறைவானது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
2 கருத்துரைகள்:
நல்ல தகவல்
Sorry My dear friend. First of all, I am n't familiar in IT, all based on experience.Due to lack of IT knowledge, I am unable to do now.., A friend like you help me to teach, how to arrange the blogs by Field of Job category and registering their resume in blog, it would be appreciated.
Hope soon I'll try to fulfill ur suggestion/idea.
Thank you!