ஆஸ்திரேலியாவில் ஒரு பெண், தன் அன்பை வெளிப்படுத்த உச்சகட்டமாய், கணவனின் ரத்தத்தை குடிக்கிறாள். இவளின் பெயர் கிரிஸ் பாய்சன். (பெயரிலேயே விஷம் இருக்கு...) ‘நான் என் கணவனின் அனுமதியுடன் தான் அவரது ரத்தத்தை குடிக்கிறேன். காதலன் தன் காதலியின் ரத்தத்தை குடிப்பதும், காதலன் ரத்தத்தை காதலி குடிப்பதும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு உச்சகட்ட உத்தி தான். நான் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெண்கள், ரத்தம் குடிக்கின்றனர்’ என்கிறார் பாய்சன்.
‘விலங்கினங்களின் ரத்தத்தை குடிக்கும் வவ்வால்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போதும் மனிதர்கள், தங்கள் அன்பை வெளிப்படுத்த தன் மனைவி, காதலி ரத்தத்தை குடிக்கின்றனர். அதுபோல பெண்களும் செய்கின்றனர். டிவி, இன்டர்நெட்டை பார்த்து சூப்பர்மென் போல தாங்களும் செய்யலாம் என்று நினைப்பதன் விளைவே இது; செக்ஸ் செய்கையின் உச்சம் தான் இது’ என்கிறார் சிட்னி பல்கலைக்கழக செக்சாலஜி பேராசிரியர் ஆடம்.
‘பயம் தான் போபியா. அதுபோல, செக்ஸ் குஷிக்காக ரத்தம் குடிப்பது என்பது ‘ரென்பீல்டு சிண்ட்ரோம்’ என்ற மனோவியாதி. பெரும்பாலும், ஆண் தான் பெண்ணின் ரத்தம் குடிப்பான். ஆனால், ஆஸ்திரேலியாவில் தலைகீழாகவும் நடக்கிறது’ என்று குயின்ஸ்லாந்து மனோதத்துவ நிபுணர் டேவிட் கீவொர்த் கூறினார்.
சிட்னி நகரில் பல ஆண்டுக்கு முன் மோர்பஸ் என்ற சிறுவன், தன்னுடன் சண்டை போட்ட நண்பனை தாக்கி, அவன் ரத்தத்தை குடித்தான். அதன் பின் பெண்களின் ரத்தத்தை மட்டும் குடிக்க ஆரம்பித்தான். ‘பெண்ணின் ரத்தம் குடித்தால் ரொமான்சில் மிதக்கிறேன்’ என்று சொன்னான். இவனைப் போல, ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் 300 பேர் ரத்தம் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் பற்றி மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
0 கருத்துரைகள்: