ஒரு குறுநில மன்னன் தன நாட்டை நகர் வலம் வந்தான். அப்போது அங்கிருந்த பிச்சைக்காரத் துறவி ஒருவர் மன்னனிடம் பிச்சை கேட்டான். மன்னன் அவனை நோக்கி, என் அமைதியை கெடுக்காதே என சொல்லி விரட்டினார். உடனே பிச்சைக்காரத் துறவி உங்களோட அமைதி கெடகூடிய நிலையில் இருந்தால் அது அமைதியில்லை என்று கூறினான்.
உடனே மன்னன் சுதாரித்துக் கொண்டு தன்னிடம் பிச்சை கேட்டவன் பிச்சைக்காரர் வேடத்தில் இருக்கும் ஒரு துறவி என்பதை புரிந்து கொண்டு துறவியே உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் என்னிடம் கேளுங்கள் என்று பதிலுரைத்தான். அதற்கு அந்த பிச்சைக்காரன் , நான் கேட்பதை உங்களால் கொடுக்க முடியாது என்று கூற, அதை கேட்டவுடன் மன்னனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
மன்னன் நகர்வலத்தை நிறுத்தினான். பிச்சைக்காரனை அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு திரும்பினான். இப்பொது கூறுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்? என்றான். உடனே பிச்சைக்காரன் தனது பிச்சை பாத்திரத்தைக் காட்டி இது நிறைய தங்கக் காசுகள் போடுங்கள் என்று கூறினான். பூ இவ்வளவு தானா? என்று கேட்ட மன்னன், கை தட்ட அங்கிருந்த காவலாளிகள் ஓடிவந்தனர். உடனே தாம்பாளம் நிறைய தங்கக் காசு வந்தது.
மன்னனே தனது கையால் தங்கக் காசுகளை அள்ளி, அள்ளி பிச்சைக்காரனின் பாத்திரத்தில் போட்டான்.. ஆனால் அந்தப் பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவில் இருந்த எல்லாத் தங்கக் காசுகளையும் போட்டும், பாத்திரம் நிறையவில்லை. கடைசியில் மன்னன் அவன்கிட்ட சரணாகதி அடைந்தான். அப்ப அந்த பிச்சைக்காரத் துறவி சொன்னான், அரசே! இந்தப் பிச்சைப் பாத்திரத்தை உங்களால் மட்டுமல்ல எப்பேர்பட்ட சக்ரவர்த்திகளாலும் நிரப்ப முடியாது.
ஏனென்றால், இது சாதாரணப் பாத்திரமல்ல, பேராசைகளோடு வாழ்ந்து, தன்னுடைய ஆசைகள் நிறைவேறாமல் செத்துப் போன ஒரு மனிதனோட மண்டையோடு. ஆக அசைகளை அடக்கி போதுமென்ற மன நிறைவோடு வாழ்பவனுக்கு பூமியே சொர்க்கம். அதேபோல் அசைகளை வென்று ஒதுக்கிய மனிதனே மகானாகிறான்.
இன்டலி மற்றும் தமிழ் 10 - இல் உங்கள் ஓட்டை பதிவு செய்து, இன்னும் நிறைய நண்பர்கள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள்...
0 கருத்துரைகள்: