வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை சுவாசிப்பதால் ஆண்டுக்கு 44 லட்சம் பேர் நோய்வாய்பட்டு இறப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால் ஏற்படும் பிரச்னை குறித்து இரோப்பியன் ஹார்ட் ஜர்னலில் வெளியான தகவல் வருமாறு:
வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையில் இருந்து நைட்ரோ ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு வெளியாகிறது. அது காற்றில் வேகமாக கலந்து விடுகிறது. புகை கலந்த காற்றை சுவாசிக்கும் மனிதருக்கு மூளை, ரத்தநாளம் போன்றவை பாதிக்கின்றன. அடிக்கடி வாகன புகையை சுவாசிப்பவர்கள் எளிதில் நோய்வாய்படுகின்றனர்.
இதனால் ஆண்டுதோறும் நுரையீரல், மூளை செயலிழப்பு உட்பட பல நோய்கள் தாக்கி பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது உலக அளவில் மனிதன் இறப்புக்கு காரணமான வெளிக்காரணிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுகுறித்து 7,500 நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாசடைந்த காற்றை சுவாசித்ததால் ரத்த ஓட்டத்தை உடலின் பாகங்களுக்கு சீராக செல்ல விடாமல் தடை செய்து நோயில் தள்ளுவது தெரிய வந்தது. நோயாளிகளில் 21 சதவீதம் பேர் வாகன புகை சுவாசிப்பால் பாதிக்கப்பட்டதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
0 கருத்துரைகள்: