காலங்காலமாக ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு சாதகமாக ஓட்டை வாங்க வாக்காளரின் வாக்கு சீட்டில் தங்கள் வேட்பாளரின் பெயரையும், கட்சியின் சின்னத்தையும் இணைத்து கொடுப்பார்கள். (அப்ப ப்ளாகில் ஓட்டு வாங்க என்னசெய்யலாம்)
அப்புறமா வாக்காளர்களை வீட்டிலிருந்து வாக்கு பதிவு செய்கிற இடம் வரை தங்கள் வாகனங்களில் ஏற்றி, இறக்கி விடுவார்கள். இப்படியும் கொஞ்சம் ஓட்டு சாதகமா கிடைக்கும். அது மட்டுமில்லாமல் காலை, மதியம் என தேர்தல் நடைபெறும் நாள் முழுவதும் குவாட்டரும், பிரியாணியுமாய் தடாலடியாய் வாக்காளர்களை கவனிப்பார்கள் .
மேடை பிரச்சாரம், தெருமுனை பிரச்சாரம், வீதி வீதியை பிரச்சாரம், பத்திரிகைகளில் பிரச்சாரம், தொலைக்காட்சியில் பிரச்சாரம், என அலப்பறையாக இருக்கும்.
வீட்டுக்கு வீடு பரிசுப் பொருள்களாக குடம், தட்டு, அரிசி, சேலை சட்டை வேஷ்டி, என அள்ளி அள்ளி கொடுத்து ஓட்டு சேகரிப்பார்கள்.
அப்புறமா காலம் மாற மாற கட்சிகளுக்கும், மக்களுக்குமிடையே பணம் விளையாட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 100, 200 என கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கினார்கள். ஆனால் இன்றைய நிலைமையே வேற கதை. ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணம், அதுவும் ரூபாய் 100, 200 அல்ல. ஆயிரம் ரூபாய், அதற்கும் மேலும். இப்படி பணம் கொடுத்து வாக்காளர்களை கவர்வதற்கு என பல பார்முலாக்கள் வச்சிருக்காங்க. அது என்னானா, திருமங்கலம் பார்முலா, திருச்செந்தூர் பார்முலா, இன்னும் புதுசு புதுசா நிறைய....
தேர்தலில் ஜெயிக்க வாக்காளர்களின் ஓட்டை வாங்க பலவகையான உத்திகளை கையாளுகிறது. மக்களும் வேட்பாளர்கள் நல்லவரா? தொகுதிக்கு நல்ல திட்டங்களை செய்வாரா? என பார்ப்பதில்லை.. காசு வாங்குரோமா, ஓட்டு போடுரோமான்னு இருக்குறாங்க.
சரி, இப்ப இவன் என்னத்த சொல்ல வர்றான்னு யோசிக்கிறீங்களா? அதாங்க நான் சொல்ல வந்த விசயமே வேற, அது என்னான்னா?
நம்ம ஒவ்வொரு பதிவுக்கும் ஓட்டு நிறைய கெடச்சாத்தான் நாம பிரபலமாக முடியும். அதுக்காக நம்ம எல்லா பதிவுமே மக்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கும் என சொல்ல முடியாது. அப்ப ஓட்டும் சரியா கிடைக்காது. தேர்தலில் மட்டும் எப்படி நம்ம வேட்பாளரைப் பத்தி நினைக்காம ஓட்டு போடுறோம். அது போல நம்ம பதிவு எப்படி இருந்தாலும் சரி... ஓட்டு கிடைக்கணும்.. அதுக்கு என்ன செய்யலாம்? கொஞ்சம் சொலுங்களேன்.
அதுக்காக பதிவுகளோட தரம் நல்லா இருக்கணும் என சொல்லாதிங்க. ஏன்னா? இப்ப நல்ல பதிவுகளும் ஓட்டு வாங்குறது இல்லை. பதிவர்களை பொறுத்தே ஓட்டு கிடைக்கிறது.
என்னங்க, தலைப்பை பார்த்து ஏமாந்துடீங்களா! சரி, ஓட்டு வாங்க என்ன செய்யலாம்? உங்க யோசனைகளை அள்ளித் தெளிங்க பின்னூட்டங்கள் வழியா...
இன்றைய பொன்மொழி:
உன் கண்களில் கருனையையும், உன் வார்த்தையில் அன்பையும் காட்டு, பகையாளியும் உன்வசமாவான்.
இன்றைய விடுகதை:குத்துப்பட்டவன் கோபித்துக் கொள்ளாமல் தகவல் சொல்கிறான். அது என்ன?விடை அடுத்த பதிவில்....
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை: வௌவ்வால்
9 கருத்துரைகள்:
நான் உங்களுக்கு ஒட்டு போட்டுட்டேன் நீங்க எனக்கு ஒட்டு போடுங்க இதுதான் இப்ப trend
//அதுக்காக பதிவுகளோட தரம் நல்லா இருக்கணும் என சொல்லாதிங்க. ஏன்னா? இப்ப நல்ல பதிவுகளும் ஓட்டு வாங்குறது இல்லை. பதிவர்களை பொறுத்தே ஓட்டு கிடைக்கிறது.
nice :-) !!
நெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...
உங்ககிட்ட இருந்து மொக்கைய எதிர்பார்க்கலை... ஏமாத்திட்டீங்க...
தொப்பி தொப்பி சொன்னதை வழிமொழிகிறேன்...
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
http://sakthistudycentre.blogspot.com
இதுவும் ஒரு வழி...
@Philosophy Prabhakaran///உங்ககிட்ட இருந்து மொக்கைய எதிர்பார்க்கலை... ஏமாத்திட்டீங்க...////
இது மொக்கை இல்லை. பல பதிவர்களோட எண்ணம்.
@sakthistudycentre.blogspot.com THOPPITHOPPI, Philosophy Prabhakaran,அரசன், Saravanan, ///
இப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் உருவானால் மட்டுமே நமது எண்ணம் நிறைவேறும்,,,,அப்படித்தானே?
நிறைய ஓட்டுவாங்க வழி சொல்வீங்க்ன்னு வந்தா இப்படி ஏமாத்திப்புட்டீங்களே. இப்படில்லாம் பதிவுபோட்டா எப்படிங்க ஓட்டுவிழும்?