அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்வியை இயக்குனர் பாலச்சந்தர் ரஜினியிடம் கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் கீழே வீடியோவாக உள்ளது. தமிழக இயக்குனர்களின் நாற்பதாவது ஆண்டு விழா கொண்டாட்டம் கடந்த வருடம் அக்டோபரில் கோலாகலமாக நடந்ததை சன் டிவி நான்கு பகுதிகளாக ஒளிபரப்பியது.கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பான இறுதி பகுதியில் இயக்குனர் பாலச்சந்தர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பேட்டி எடுத்த நிகழ்ச்சி ஹைலைட்டாக இருந்தது. மேலும் பல கேள்விகளுக்கு ரஜினி சூப்பராக பதிலளித்தார். இங்கே உள்ள வீடியோ இரண்டாவது பகுதியாகும். ஏனெனில் பேட்டி சுமார் அரை மணிநேரம் நடந்தது. இதனால் இரு பகுதிகளாக பிரித்துள்ளேன்.
முதல் பகுதியை காண இங்கே கிளிக்கவும்.
இந்த பேட்டியை நான் ரெகார்ட் செய்வதற்காக இந்திய - தென்னாப்பிரிக்காவுக்கான 20/20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவதாக பேட் செய்த தென்னாப்பிரிக்காவின் கடைசி ஐந்து ஓவரை பார்க்காமல் தியாகம் செய்தேன். ஏனெனில் சேனல் மாற்றினால் ரேகார்டிங்கிலும் சேனல் மாறிவிடும்.
THANKS TO SUNTV
இன்றைய பொன்மொழி:நான் என்ற அகந்தையை விடு. நான் எல்லாம் தெரிந்தவன் என்று மற்றவர்களை குறைவாக மதிப்பிடாதே. அந்த மமதை உன்னை அழித்து விடும்.
இன்றைய விடுகதை:இவன் வலை பின்னுவான் ஆனால் மீன் பிடிக்க மாட்டான் அவன் யார்?விடை அடுத்த பதிவில்....
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை: தபால்
5 கருத்துரைகள்:
//ஏனெனில் சேனல் மாற்றினால் ரேகார்டிங்கிலும் சேனல் மாறிவிடும். //
உங்களுடைய இந்த மிகப்பெரிய தியாகத்துக்கு எனது பாராட்டுக்கள்
@THOPPITHOPPI match'in climax overs athu.. cricinfo thaan uthaviyathu...live'la paakkira tension cricinfo'la illa...
இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
// இவன் வலை பின்னுவான் ஆனால் மீன் பிடிக்க மாட்டான் அவன் யார்? //
சிலந்தி... இந்தமாதிரி எளிமையான கேள்வியெல்லாம் இனி கேட்காதீர்கள்... அப்புறம் இந்தமாதிரி மெனக்கெட்டு பதில் சொன்னதற்காக எனக்கு ஏதாவது பரிசு இருக்கா... குறைந்தபட்சம் ஒரு மின்-புத்தகம்...?
@Philosophy Prabhakaran
வாழ்த்துக்கள்.... கண்டிப்பாக ஒரு பரிசு உங்களுக்கு உண்டு. mail id கொடுக்கவும்.