நம் நாட்டில் உபயோகப்படுத்தும் நாணயங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது.. அதிலும், நாலணா, ஐம்பது பைசா, இருவது பைசா, பாத்து பைசா போன்ற நாணயங்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. அப்படியே அந்த நாணயங்களை கடைகளில் கொடுத்தாலும் அவற்றை வாங்குவதில்லை, மேலும் அவை செல்லாக் காசுகள் என்றும் கூறுகின்றார்கள்.
மேலும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுகளை பார்ப்பதும் இக்காலத்தில் அரிதாகவே உள்ளது. அப்படியே இருந்தாலும் கிழிந்த நோட்டுகளே கிடைக்கின்றன. வங்கிகளிலும் கூட இந்த ருபாய் நோட்டுகள் அரிதே.
வருங் காலத்தில் நம் சந்ததியினர் நாணயங்கள் என்றால் என்ன? எப்படி இருக்கும்? எனக் கேட்டால் நாம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்வதற்கு நம்மிடம் ஒரு நாணயங்கள் கூட இருக்காது. எனவே இன்றிலிருந்து நமக்கு கிடைக்கும் நாணயங்களை சேகரித்து வைக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்வோம்.
உங்களுக்காக இந்தியாவில் புழக்கத்தில் இருந்த நாணயங்களின் படங்கள் தொகுப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்படங்களையாவது சேகரித்து வையுங்களேன்.
பத்து பைசா, இருபத்தைந்து பைசா / நான்கு அண, ஐம்பது பைசா / எட்டு அணா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ருபாய் நாணயங்கள் படங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.
படங்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாத் தான் இருக்கும், பொறுமையா பாருங்க,
பத்து பைசா நாணயங்கள்
இருபத்தைந்து பைசா / நான்கு அணா நாணயங்கள்
ஐம்பது பைசா / எட்டு அணா நாணயங்கள்
ஒரு ரூபாய் நாணயங்கள்
இரண்டு ரூபாய் நாணயங்கள்
ஐந்து ரூபாய் நாணயங்கள்
பத்து ருபாய் நாணயங்கள்
நன்றி: சிருவருலகம்
இன்றைய பொன்மொழி:உலகத்தில் உனக்கென்ன யாருமே இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் யாரோ ஒருவருக்கு 'நீயே' உலகமாய் இருக்கலாம் ..
இன்றைய விடுகதை:முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை அது என்ன?
விடை அடுத்த பதிவில்....
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை: நாற்காலி.
4 கருத்துரைகள்:
நாணயங்களின் புகைப்படங்கள் அருமை...
நாணயமான பதிவு...
நல்ல தொகுப்பு..நன்றி
நண்பரே, நாணயங்களின் புகைப்படங்கள் அருமை. இதையும் பாருங்கள். - சிமுலேஷன் http://simulationpadaippugal.blogspot.com/2010/02/numismatics.html