சர்தார்ஜி தன் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளோடு தியேட்டருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஒரு பஸ் வந்தது, அதில் மூன்று சீட்டுகள் மட்டுமே காலியாக இருந்ததால் அனைவரும் உட்கார முடியாது என அந்த பஸ்ஸில் அவர்கள் ஏறவில்லை.
அதே பஸ் ஸ்டாப்பில் ஒரு கிழவனும் கைத் தடியை தரையில் தட்டிக் கொண்டே பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தார். அவர் தரையில் தட்டிக் கொண்டிருந்தது நம்ம சர்தார்ஜிக்கு எரிச்சலைத் தூண்டியது. அடுத்து ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சிலும் ஒரு சீட் மட்டுமே காலியாக இருந்ததால், அந்த பஸ்சிலும் சர்தார்ஜி குடும்பம் ஏற வில்லை.
அவர் மனைவி முறைத்துக் கொண்டிருந்தாள் . பக்கத்துல தானே தியேட்டர் இருக்கு? நடந்து போகலாம், என சர்தார்ஜியிடம் சொன்னாள். சர்தார்ஜி அவள் சொல்வதைக் காதில் வாங்காமல் அடுத்த பஸ் வருமா என ரோட்டை பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கிழவனும் கைத் தடியை தட்டிக் கொண்டே நம்ம சர்தார்ஜியை எரிச்சலேற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பஸ் வந்தது. அந்த பஸ் புல்லா கூட்டத்த அடச்சிக்கிட்டு வந்தது. சர்தார்ஜி ஏறுகிற மாதிரி தெரியவில்லை.
அவர் மனைவி பிள்ளைகளை கூட்டிக் தியேட்டரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சர்தாஜியும் வேறு வழியில்லாமல் அவள் பின்னே நடக்க ஆரம்பித்தார். அந்தக் கிழவனும் அவர் ஏற வேண்டிய பஸ் வராத காரணத்தால் வேறு வழியில்லாமல் கைத்தடியின் உதவியால் சர்தார்ஜி பின்னே நடக்க ஆரம்பித்தார். அவர் நடக்க நடக்க கைத்தடி சத்தம் அதிகமாவே கேட்டது. நம்ம சர்தாஜிக்கு கோபம் அதிகமாகி கிழவரைப் பார்த்து, "ஏய்யா, கிழவரே அந்த தடிக்கு ஒரு உறையை மாட்ட வேண்டியது தானே, சத்தம் கேட்காம இருக்குமுல்ல" என சத்தமா சொன்னார். அதற்கு பதிலாக அந்த கிழவர் சர்தார்ஜியை பார்த்து, " நீ, அன்னைக்கே ஒரு உறையை மாட்டியிருந்தால் முதலாக வந்த பஸ்சிலேயே ஏறியிருக்கலாம்" என சொன்னார். நம்ம சர்தார்ஜிக்கு அவர் சொன்னது புரியவில்லை.
என்னங்க, உங்களுக்காவது புரியுதா?
------------------------------------------------------------------------------------------
எல்லோரும் டிஸ்கி, டிஸ்கின்னு போடராங்கயா, அதனால நாமளும் புதுசா கடிஸ்கி போடப் போறோம்.
கடிஸ்கி 1 :
தெருவுல நாம நாலு பேரோட நின்னு அரட்டையடிசிக்கிட்டு இருக்குறப்போ அந்தப் பக்கமா ஒரு பிகரு கிராஸ் ஆனா முதல்ல நாம என்ன நினைப்போம்? கடவுளே, மத்த மூணு பெரும் அவளைப் பாக்கக் கூடாதுன்னு தான்.
கடிஸ்கி 2 :
என்னதான் பிகரை பைக்குல ஏத்திட்டு அப்பன் கண்ணுல படாம ஊரை சுத்தினாலும், அந்த அப்பன் கிட்ட தானே செலவுக்கு காசு வாங்கியாகனும்?
கடிஸ்கி 3 :
அவன் வாரம் தவறாம வெள்ளிக்கிழமையானா கோயிலுக்கு போவானாம்,
ஏன்? சாமி கும்பிடவா?
இல்லை, மாமியைக் கும்பிட!!
கடிஸ்கி 4 :
காதலி: டேய், எனக்கு தலை சுத்தல் மயக்கமா வருது.
காதலன்: ஏண்டி நாம தான் தப்பு கிப்பு பண்ணலையே,
காதலி: போடா லூசு. நீ கழட்டி வச்ச ஷுவை மொதல்ல காலுல மாட்டுடா.
இன்றைய பொன்மொழி:வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால்,
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால்
வாழ்ந்து பார்
இன்றைய விடுகதை:குடிக்க உதவாது, குளத்தில் தங்காது, கைகளால் தொடாத நீர், கண்களுக்கு மட்டுமே விருந்தாகும்- அது என்ன?விடை அடுத்த பதிவில்....
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை: மாதுளை.
20 கருத்துரைகள்:
:)
kaamedi காமெடி கலக்கல்.தமிழ்மண ஓட்டு நீங்களே இன்னும் போட்டுக்கலையா?
@சி.பி.செந்தில்குமார், Samudra, வருகைக்கு நன்றி...தொடர்ந்து வாருங்கள்.
Kanal Neer
ஹ...ஹ..ஹ...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்
டிஸ்கி அருமை
http://speedsays.blogspot.com/
கலக்கல் காமெடி
Anonymous, ம.தி.சுதா, Speed Master, FARHAN, சிரித்த அனைவருக்கும் நன்றி
உங்கள் பதிவில் இளமை ஊஞ்சலாடுகிறது. தொடருங்கள்...
""""குடிக்க உதவாது, குளத்தில் தங்காது, கைகளால் தொடாத நீர், கண்களுக்கு மட்டுமே விருந்தாகும்- அது என்ன?"""""
கானல் நீர்தானே அது?
a.chandar singh
பாஸ் நீங்க மதுரையா வரும் புதன் கிழமை மதுரை பதிவர்கள் ஒன்று கூடுகிறோம் . நீங்களும் வருகிறீர்களா
கடிஸ்கி ஒன்று மிகவும் அருமை.. உண்மை.. தொடர்க...
கடிஸ்கி ஒன்று மிகவும் அருமை.. உண்மை.. தொடர்க...
அன்பின் பிரகாஷ் குமார்- நல்லாவே இருக்கு - இளமை கொப்பளிக்கிறது. கடிஸ்கியும் சூப்பர். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
@cheena (சீனா) வருகைக்கு நன்றி.. தொடர்ந்து வாருங்கள்...
@நா.மணிவண்ணன் சாமக்கோடங்கி,
வருகைக்கு நன்றி.. தொடர்ந்து வாருங்கள்...
//முந்திய பதிவின் விடுகதைக்கான விடை: மாதுளை//
மன்னிக்கவும், விடுகதை தவறாக சொல்லிவிட்டீர்கள்.
அது "கெம்பு நிறைய கம்பு" கொம்பு நிறைய கம்பு அல்ல.
கெம்பு என்பது சிவப்புக் கல்லைக் குறிக்கும். மாதுளை கிட்டத்தட்ட அந்த நிறத்தில் இருப்பதால் இந்த விடுகதை சொல்லப் பட்டது.
பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html
@பெயர் சொல்ல விருப்பமில்லை விடுகதையில் திருத்தி விட்டேன். நன்றி
@Philosophy Prabhakaran ///பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html///
அடங் கொக்கமக்கா காலங்காத்தாலே தண்ணியடிக்க கூப்பிடுராங்கய்யா.