CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

 பார் போற்றும் பைந்தமிழ் நடிகர் செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 1927ம் வருடம் அக்டோபர் மாதம் 1ஆம் நாள் சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னையாப்பிள்ளை கணேசன் ஆகும்.



     சிவாஜி கணேசன் திரையுலகில் அறிமுகமாகும் முன் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். அச்சமயம் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடத்தார். அந்நாடகத்தில் அவரது நடிப்புத்திறனைக் கண்ட தந்தைப் பெரியார் அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்து பாராட்டினார். அன்றிலிருந்து அதுவே அவரது பெயராகிவிட்டது.


     பராசக்தி படம் மூலம் திரையுலகில் அறிமுகமான சிவாஜி கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும், 9 தெலுங்குப் படங்களிலும், 2 இந்திப் படங்களிலும், ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

     இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. கப்பலோட்டிய தமிழன் படத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையாக நடித்து அவரை நம் கண் முன் நிறுத்தியவர். பாசமலர், வசந்தமாளிகை, உயர்ந்த மனிதன், கௌரவம், தில்லானா மோகனாம்பாள், திருவருட்செல்வர், திருவிளையாடல், புதிய பறவை, தியாகம், திரிசூலம் போன்ற படங்கள் இவருக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தன.



     ஆரம்ப காலம் முதல் 1955 வரை சிவாஜி கணேசன் திராவிட இயக்கங்களில் ஆர்வம் கொண்டு விளங்கினார். 1961ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகித்தார். 1987ல் காங்கிரஸில் இருந்து பிரிந்து தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து திருமதி ஜானகி ராமச்சந்திரனின் அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும் அவரால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. பின்னர் படிப்படியாக அரசியலிலிருந்து விலகினார்.



     சிவாஜி கணேசன் அவர்கள் 2001 ஜூலை 21ல் இயற்கை எய்தினார்.




விருதுகள் மற்றும் கௌரவங்கள்

ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழா (கெய்ரோ 1960)- சிறந்த நடிகருக்கான விருது
பத்ம ஸ்ரீ விருது (1966)
பத்ம பூஷன் விருது (1984)
செவாலியே விருது (1994)
தாதா சாகேப் பால்கே விருது (1997)

     1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.


சிவாஜி கணேசன் நடித்துள்ள படங்கள்

பராசக்தி (1952) (குணசேகரன்)
பெம்புடு கொடுக்கு (தெலுங்கு) (1953)(மோகன்)
பூங்கோதை (1953)
பர்தேசி (1953) (ஆனந்த்)
அன்பு (1953)
மனோகரா (1954) (மனோகரா)
எதிர்பாராதது (1954) (சுந்தர்)
அந்த நாள் (1954) (சிவாஜி கணேசன்)
கூண்டுக்கிளி (1954)
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி(1954)
முதல் தேதி (1955) (சிவஞானம்)
மங்கையர் திலகம் (1955) (வாசு)
கள்வனின் காதலி (1955) (முத்தையன்)
தெனாலி இராமன் (1956)(தெனாலி இராமக்கிருஷணா)
ரங்கூன் ராதா (1956) (தர்மலிங்க முதலியார்)
பெண்ணின் பெருமை(1956)
அமரதீபம் (1956) (அசோக்)
பாக்யவதி (1957)
புதையல் (1957)
தால வன்சானி வீருடு (தெலுங்கு) (1957)
வணங்காமுடி (1957)
தங்கமலை இரகசியம் (1957)
மக்களை பெற்ற மகராசி (1957) (செங்கோடையன்)
அம்பிகாபதி (1957) (அம்பிகாபதி)
காத்தவராயன் (1958)
உத்தமபுத்திரன் (1958)
சாரங்கதார (1958)
ஸ்கூல் மாஸ்டர் (1958)
சபாஷ் மீனா (1958)
தங்கப்பதக்கம் (1959)
தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை (1959)
பாகப்பிரிவினை (1959)
வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1959) (கட்டப்பொம்மன்)
மரகதம் (1959)
பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)
தெய்வப் பிறவி (1960)
இரும்புத்திரை (1960)
பாவை விளக்கு (1960)
படிக்காத மேதை (1960)
புனர் ஜென்மம் - (1961)
பாவமன்னிப்பு (1961) (ரஹிம்)
பாசமலர் (1961) (ராஜசேகரன்)
பாப்பா பரிகாரம் (1961)
பாலும் பழமும் (1961)
கப்பலோட்டிய தமிழன் (1961) (வ.உ. சிதம்பரம்பிள்ளை)
வடிவுக்கு வளைகாப்பு (1962)
படித்தால் மட்டும் போதுமா (1962)
நிச்சய தாம்பூலம் (1962)
ஆலயமணி (1962)
பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)
பார்த்தால் பசி தீரும் (1962)
பலே பாண்டியா (1962)
அன்னை இல்லம் (1963)
குங்குமம் (1963)
குலமகள் ராதை (1963)
அறிவாளி (1963)
ரத்த திலகம் (1963) (குமார்)
பார் மகளே பார் (1963)
கர்ணன் (1963) (கர்ணன்)
இருவர் உள்ளம் (1963)(செல்வம்)
பச்சை விளக்கு (1964)
ராமதாசு (தெலுங்கு) (1964)
நவராத்திரி (1964)
கை கொடுத்த தெய்வம் (1964)
புதிய பறவை (1964)
அன்புக்கரங்கள் (1965)
பழனி (1965)
சாந்தி (1965)
திருவிளையாடல் (1965) (சிவன்)
செல்வம் (1966)
மகாகவி காளிதாஸ் (1966)
மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966) (சுந்தரம் பிள்ளை)
திருவருட்செல்வர்(1967)
தங்கை (1967) (மதன்)
கந்தன் கருணை (1967) (வீரபாகு)
இரு மலர்கள் (1967)
என் தம்பி (1968)
கலாட்டா கல்யாணம் (1968)
திருமால் பெருமை (1968)
எங்க ஊரு ராஜா (1968)
கௌரி (1968)
உயர்ந்த மனிதன் (1968)
தில்லானா மோகனாம்பாள் (1968) (சிக்கில் சண்முகசுந்தரம்)
குருதட்சனை (1969)
தங்கச் சுரங்கம் (1969)
சிவந்த மண் (1969)
தெய்வ மகன் (1969)
காவல் தெய்வம் (1969)
பாதுகாப்பு (1970)
எங்க மாமா (1970)
எங்கள்  தங்க  ராஜா
விளையாட்டுப் பிள்ளை (1970)
வியட்னாம் வீடு (1970) (பத்மநாப ஐயர்)
இரு துருவம் (1971)
தங்கைக்காக (1971)
குலமா குணமா (1971)
பாபு (1971)
சுமதி என் சுந்தரி (1971)
மூன்று தெய்வங்கள் (1971)
சவாலே சமாளி (1971)
நீதி (1972)
வசந்த மாளிகை (1972)
ஞான ஒளி (1972) (அந்தோணி)
பங்காரு பாபு (தெலுங்கு)(1972)
பாரத விலாஸ் (1973)
இராஜராஜசோழன் (1973)
ராஜபாட் ரங்கதுரை (1973)
கௌரவம் (1973)
பக்த துகாரம் (தெலுங்கு) (1973) (சிவாஜி)
தீர்க்க சுமங்கலி (1974)
என் மகன் (1974)
அன்பைத்தேடி (1974)
தங்கப்பதக்கம் (1974)
அவன் தான் மனிதன் (1975)
அன்பே ஆருயிரே (1975)
டாக்டர் சிவா (1975) (டாக்டர் சிவா)
கிரகப் பிரவேசம் (1976)
ரோஜாவின் ராஜா (1976)
சத்தியம் (1976)
உனக்காக நான் (1976)
உத்தமன் (1976)
அவன் ஒரு சரித்திரம் (1976)
நாம் பிறந்த மண் (1977)
இளைய தலைமுறை (1977)
தீபம் (1977)
அண்ணன் ஒரு கோயில் (1977)
சானக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
அந்தமான் காதலி (1977)
புண்ணிய பூமி (1978)
தியாகம் (1978)
பைலட் பிரேம்நாத் (1978)
ஜஸ்டிஸ் கோபினாத் (1978)
ஜெனெரல் சக்கரவர்த்தி (1978)
என்னைப் போல் ஒருவன் (1978)
வாழ்க்கை அலைகள் (1978)
இமயம் (1979)
கவரி மான் (1979)
நான் வாழவைப்பேன் (1979)
நல்லதொரு குடும்பம் (1979)
பட்டாகத்தி பைரவன் (1979)
திரிசூலம் (1979)
வெற்றிக்கு ஒருவன் (1979)
நான் வாழ வைப்பேன் (1979) (ரவி)
மாடி வீட்டு ஏழை (1980)
மோகனப் புன்னகை (1980)
தர்ம ராஜா (1980)
எமனுக்கு எமன் (1980)
விஷ்வரூபம் (1980)
இரத்த பாசம் (1980)
ரிஷி மூலம் (1980)
சத்ய சுந்தரம் (1981)
அமரகாவியம் (1981)
கல்தூண்(1981)
கீழ்வானம் சிவக்கும் (1981)
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
கருடா சௌக்கியமா (1982)
ஹிட்லர் உமாநாத் (1982)
நெஞ்சங்கள் (1982)
ஊருக்கு ஒரு பிள்ளை (1982)
ஊரும் உறவும் (1982)
பரீட்சைக்கு நேரமாச்சு (1982)
சங்கிலி (1982)
தீர்ப்பு (1982)
துணை (1982)
தியாகி (1982)
வா கண்ணா வா (1982)
வசந்தத்தில் ஒரு நாள் (1982)
காஷ்மிர் காதலி (1983)
வெள்ளை ரோஜா (1983)
நீதிபதி (1983)
மிருதங்கச் சக்கரவர்த்தி (1983)
உண்மைகள் (1983)
சந்திப்பு (1983)
சுமங்கலி (1983)
உருவங்கள் மாறலாம் (1983)
தாவணிக் கனவுகள் (1983)
சிம்ம சொப்பனம் (1984)
திருப்பம் (1984)
தராசு (1984)
எழுதாத சட்டங்கள் (1984)
சிரஞ்சீவி (1984)
சரித்திர நாயகன் (1984)
வம்ச விளக்கு (1984)
வாழ்க்கை (1984)
இரு மேதைகள் (1984)
நேர்மை (1985)
நாம் இருவர் (1985)
படிக்காத பண்ணையார் (1985)
நீதியின் நிழல் (1985)
பந்தம் (1985)
ராஜ ரிஷி (1985)
படிக்காதவன் (1985)
முதல் மரியாதை(1985)(மலைச்சாமி)
மருமகள் (1986)
விடுதலை (1986)
ஆனந்தக் கண்ணீர் (1986)
லட்சுமி வந்தாச்சு (1986)
மண்ணுக்குள் வைரம் (1986)
சாதனை (1986)
தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)
ஜல்லிக்கட்டு (1987)
ராஜ மரியாதை (1987)
முத்துக்கள் மூன்று (1987)
குடும்பம் ஒரு கோயில் (1987)
கிருஷ்ணன் வந்தான் (1987)
தாம்பத்தியம் (1987)
வீரபாண்டியன் (1987)
அன்புள்ள அப்பா (1987)
என் தமிழ் என் மக்கள் (1988)
புதிய வானம் (1988)
காவலுக்குக் கெட்டிக்காரன் (1990)
ஞானப் பறவை (1991)
தேவர் மகன் (1992)
க்னோக் அவுட் (1992)
முதல் குரல் (1992)
நாங்கள் (1992)
சின்ன மருமகள் (1992)
பாரம்பரியம் (1993)
எங்கிருந்தோ வந்தான் (1995)
பசும்பொன் (1995)
ஒன்ஸ் மோர் (1997)
கோபுர தீபம் (1997)
ஒரு யாத்ர மொழி (மலையாளம்) (1997)
என் ஆசை ராசாவே (1998)
பூப்பறிக்க வருகிறோம் (1999)
மன்னவரு சின்னவரு (1999)
படையப்பா (1999)

நன்றி: பல இணைய தளங்கள்.

இன்றைய பொன்மொழி: 
கண்டால்  ஒரு  பேச்சு...  காணாவிட்டால்  ஒரு  பேச்சு....  

இன்றைய விடுகதை: 
தங்கச்சி  விளக்கு  கட்டுவாள், அண்ணன்  மத்தளம் கொட்டுவான்,  அம்மா  தண்ணீர்  தெளிப்பாள்  - அது  என்ன?
 விடை  அடுத்த பதிவில்....
முந்திய  பதிவின் விடுகதைக்கான விடை: மின்விசிறி.
 


8 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips

Thanks. Good record.

தமிழ் உதயம் said... Best Blogger Tips

எங்கள் தங்கம், காஷ்மீர்காதலி என்று சில பிழையான படங்கள் பட்டியலில். மற்றப்படி சிவாஜி பற்றி ஒரு சிறந்த பதிவு.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தமிழ் உதயம் எங்கள் தங்கம், காஷ்மீர்காதலி என்று சில பிழையான படங்கள் பட்டியலில்.

என்ன பிழை என்று சொல்லவில்லையே... சரி செய்ய?

abbeys said... Best Blogger Tips

எங்கள் தங்கம்.. MGR MOVIE

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@abbeys எங்கள் தங்கம்.. MGR MOVIE/// பட்டியலிலிருந்து நீக்கி விட்டேன், நன்றி

tamilworld said... Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash
athu 'engal thangam' illai. 'engal thanga raja'
-Ansar.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@tamilworld athu 'engal thangam' illai. 'engal thanga raja'
-Ansar.////

சரியான படத்தின் பெயரை மீண்டும் இணைத்து விட்டேன். தகவலுக்கு நன்றி.

Rathnavel Natarajan said... Best Blogger Tips

நல்ல முயற்சி பிரகாஷ்.வாழ்த்துக்கள்.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1