CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வெங்காயமா? இல்ல, தங்கமா?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
           
            தற்போது எக்குத்தப்பாக எகிறிக் கொண்டிருக்கும் வெங்காயத்தின் விலையை விட இதன் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகள்தாம் நம்மை அதிர வைக்கிறது. வெங்காயம் மட்டுமில்லாமல் எல்லா காய்கறிகளுமே விலையேறிவிட்டன. என்ன காரணம்? இதற்கு பொதுவாய் கூறப்படும் காரணங்கள் மழையினால் உற்பத்தி குறைந்துவிட்டது, விளைச்சல் இல்லை என்பது. ஆனால் அதுதான் உண்மை நிலையா?

             உற்பத்தி குறைந்தால் விவசாயிகளிடமிருந்து அதிக விலை கொடுத்துதானே வியாபாரிகள் வாங்கியிருக்க வேண்டும்.
ஆனால் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கும் விலை பத்திலிருந்து பதினைந்து ரூபாய் மட்டும்தான் உயர்ந்திருக்கிறது.
இருபது ரூபாய்க்கு சந்தையில் விற்பனையான ஒரு கிலோ வெங்காயத்தின் விலையோ 60 ரூபாய்க்கு மேல் எகிறியிருக்கிறது.


           கொள்முதலுக்கும் விற்பனைக்கும் இடையிலேயே கிலோவுக்கு இவ்வளவு பெரிய தொகை மனசாட்சியில்லாமல் சுரண்டப்படுகிறது. இந்த நிழல் வர்த்தகத்தின் ஒட்டுமொத்த பயனாளிகளுமே வியாபாரிகள்தான்.

            "ஆண்டுதோறும் மழைக்காலங்களின்போது செயற்கையான ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை ஏற்றி கொள்ளை இலாபம் பார்ப்பதை குறியாக வைத்து இருக்கிறார்கள் வியாபாரிகள். எப்போதும்போல் எல்லா சந்தைகளிலும் வெங்காய வரத்து உள்ளது. மலைமலையாக குவித்தும் வைக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு உண்மையானால் இதெப்படி சாத்தியம்?
மழைக் காலங்களில் நன்கு விளையக்கூடிய பீட்ரூட், பீன்ஸ், கேரட், அவரை போன்ற காய்கறிகளின் விலையும் ஏன் ஏறியது என்பது இன்றைக்கும் புரியாத புதிர்தான்.


            கத்திரி, வெண்டை போன்ற மற்ற காய்கறிகளையும் கிலோ ஐம்பது ரூபாய்க்கு விற்க பேராசைப்பட்டு உபரியாக உற்பத்தியாகும் பீட்ரூட், காரட், அவரை, பீன்ஸையும் நாற்பது ரூபாய் வரை விலை ஏற்றி வாங்க வைக்கின்றனர் மொத்த வியாபாரிகள். இன்று விவசாயிகள், பொதுமக்கள் என எல்லோரையும் கதற வைத்துக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான்.


         ஒட்டன்சத்திரம், கோயம்பேடு போன்ற மாபெரும் காய்கறிச் சந்தைகளில் குளிர்பதன கிடங்குகள் இருக்கின்றன. ஆனால் இவை இடைத் தரகர்கள் மற்றும் பெரு வியாபாரிகளின் கட்டுப்பாட்டிலேயே சிக்கியிருக்கிறது. இவர்கள் மொத்தமாக ஆக்ரமித்ததால் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உடனடியாக இவர்களிடமே விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

         விலையேற்றத்திற்கு ஆன் லைன் வர்த்தகமும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. உளுந்து, பருப்பு போன்ற மளிகைப் பொருட்களில்தான் முதலில் ஆன் லைன் வர்த்தகத் தரகர்கள் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் சமீபகாலமாக வெங்காயத்திலும் அவர்களது கழுகுப் பார்வை பதியத் தொடங்கி இருக்கிறது. அதுவும் விலையேற ஒரு காரணம். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.


         வியாபாரிகள் பதுக்கவில்லை என்று சிலர் சொல்லுகிறார்கள். வியாபாரிகள் பதுக்குவதே இல்லை என்று சொன்னால் வாடிக்கையாளர் மற்றும் விவசாயிகளிடம் தங்களுடைய கொள்முதல் நிலையங்களைத் திறந்து காட்டலாம். ஆனால் அதைச் செய்ய மாட்டார்கள். பதுக்கி வைப்பதால் மட்டுமே பற்றாக்குறை ஏற்படும்.

             வெங்காயம் பற்றாக்குறை என்றால் எதனால் என்று காரணத்தைத் தேடவேண்டும். உற்பத்தி குறைந்துள்ளதா? உபரி குறைந்துள்ளதா என ஆய்வு செய்து பார்க்க வேண்டும். மழைக்காலத்தில் உற்பத்தி குறையும். உணவுப் பொருளுக்குத் தட்டுப்பாடு வரும் என்றால் ஒரு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு தேவை இருக்கிறது... எவ்வளவு விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது... உற்பத்தி என்ன மதிப்பீடு என்ற புள்ளி விவரமெல்லாம் ஒரு அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டாமா? அப்படி ஒரு புள்ளிவிவரம் இருப்பதாகத் தெரியவில்லை.


           வெங்காயம் மற்றும் காய்கறி விலையேற்றம் பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் வேளாண் மற்றும் உணவுத்துறை நன்கு உறங்கிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் உறங்கலாம். ஆனால் பொதுஜனமல்லவா கஷ்டப்படவேண்டியிருக்கிறது.

குமுதம் செய்திகள் 

 இன்றைய பொன்மொழி:   பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்.

இன்றைய விடுகதை: 
சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
விடை  அடுத்த பதிவில்....
 
 முந்திய  பதிவின் விடுகதைக்கான விடை:  கானல் நீர்.
  சரியான விடையளித்த Anonymous, cs, க்கு வாழ்த்துக்கள்.
 
முந்திய விடுகதைக்கு  பதிவை பார்க்க:  சர்தார்ஜியும், (க)டிஸ்கியும்


6 கருத்துரைகள்:

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ்

அருமை - வெங்க்காயம் தங்க விலைக்கு வருவதற்கு முன்னரே ஆய்வு செய்து - ஏன் விலைஏறுகிறது எனத் தெள்ளத் தெளிவாக எழுதி இருப்பது நன்று. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

அமைதி அப்பா said... Best Blogger Tips

அவசியமான பதிவு!

மதுரை சரவணன் said... Best Blogger Tips

நல்ல காரணமாத்தான் இருக்கு...வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

நன்று... வெங்காய விலை குறைஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க... இல்லையா...?

Speed Master said... Best Blogger Tips

ஏன் விலைஏறுகிறது எனத் தெள்ளத் தெளிவாக எழுதி இருப்பது நன்று.

Unknown said... Best Blogger Tips

எல்லாவற்றுக்கும் காரணம் பெட்ரோல் விலை ஏற்றம்தான் .

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1