CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



டாகுட்டர்ர்ர் விஜய் ரசிகர்களே! படிசிங்கன்னா ரொம்ப பீல் பண்ணனுமுங்கண்ணா?




2020 ஆண்டு.. குழந்தை: அப்பா எனக்கு ஒரு பேய்க்கதை சொல்லுங்க... அப்பா: ஒரு காலத்தில விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...
குழந்தை: அய்யய்யோ பயமா இருக்குப்பா, இன்னைக்கு இது போதும்..

ஒரு குரங்கு ஒரு குருவிய மீட் பண்ணிச்சாம். உன்ன விட நான் பேமஸ் என சொல்லுச்சாம் . அதுக்கு குருவி இல்ல இல்ல என் பேர்ல தான் ஒரு படம் வந்திருக்கு, அதனால நான் தான் பேமஸ் என சொல்லுச்சாம், அதுக்கு அந்த குரங்கு "அந்த பட ஹீரோவே நான் தான்னு சொல்லிச்சு..

ஒரு மரத்தில பன்னிரண்டு குருவிகள் உக்காந்து இருந்திச்சு ஒருத்தன் வந்து துப்பாக்கியால சுட்டான். எல்லா குருவியும் பறந்திச்சு ஒண்னு மட்டும் ஓடாம இருந்திச்சு. ஏன்னா அது விஜய்யோட குருவி

நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வச்சாங்க உங்களோட ஹிட் படங்களை எல்லாம் பற்றி ஒரு குறிப்பு வரைக? என்பது தான் அந்த கேள்வி உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம் "இது அவுட்ஆப் சிலபஸ் " 
இன்னொரு தேர்வு அதுல கொடுக்கப்பட்ட கேள்வி "உங்களோட ப்ளாப் படங்களை பற்றி ஒரு குறிப்பு எழுதுக ?"
விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கி தள்ளிகிட்டே இருந்தாராம் .....

விஜய் நடிச்ச படத்துக்கு தியேட்டர்ல எக்கச்சக்க கூட்டம். என்னடா என்ன விஷயம் என ஆச்சரியப் பட்டு ஒருத்தன் கேட்டான்..
அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், அது ஒண்ணும் இல்லடா இந்த படத்துக்கு ஒருத்தன் ரிசர்வ் பண்ணி வந்திருக்கானாம். அவனை பார்க்க தான் இத்தனை கூட்டம்....

விஜய் : நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட,
ஒரு குரல் : டேய் நீ அடிச்சா கூட பரவால்லடா , நீ நடிச்சா தாண்டா தாங்கவும் முடியல்ல தூங்கவும் முடியல்ல.

ஒருத்தன் : 2012 படம் வந்திருக்கே பார்த்துட்டியா?
மற்றவன் : வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனா உலகம் என்ன ஆகும்னு அப்பட்டமா காட்டி இருக்காங்க !!! 


எஸ்எம்எஸ்-ல் வந்த ஒரு அபாயகரமான அறிவிப்பு இது
நமீதா ஒரு குடும்ப பெண். இந்த எஸ்எம்எஸ் ஐ பதினைந்து பேருக்கு பார்வேர்டு செய்யவும். அப்படி செய்பவர்களுக்கு ராமராஜன் நடித்த ஏதாவது ஒரு படத்தின் டி.வி.டி இலவசம். மீறி இதை டெலிட் செய்பவர்களுக்கு வேட்டைக்காரன் படத்தின் 20 டி.வி.டி கள் அனுப்பப்படும்.

இது விஜய் கணக்கு:
விஜய் மொத்தம் நடிச்ச படம் 47

அதில ரீமேக் 20 படம்

அதில 5 படம் தெலுகு படம் 5 copy paste

கதை மட்டுமே copy பண்ணினது 8 படம்

பேக்கரி சாரி போக்கிரி அப்படியே ஜெராக்ஸ் copy (இப்படி சொன்னதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டி வருமோ??)

மலையாளம் ரீமேக் 5 படம்

39 ரீமேக் ஆகி இருக்குது மொத்தமா நடிச்ச 47 படத்தில

வெறும் 8 படம்தான் ஒரிஜினல் scriptடோட வந்திருக்குது அதில 5 படம் சூப்பர் FLOP

அவர்தான் நம்ம இந்தியன் சினிமாவின் ஒரே காப்பிஸ்டார் ,

இதில இவருக்கு டாக்டர் பட்டம் வேற....

இளைய தலவலி சாரி இளைய தளபதி விஜய்....

டிஸ்கி: மக்களே தமிழ் சினிமாவ காப்பத்த உங்களாலயும் முடியும். இத அப்படியே நம்ம இளைய தளபதி விஜய் சாரி டாக்டர் விஜய் ஸ்டைலில அப்படியே இத காப்பி பண்ணி ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ் சினிமா பொளச்சிக்கும்ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா??
நானும் அப்படித்தான் செஞ்சிருக்கேனுங்கண்ணா!!!
படங்கள் உதவியது கூகுளங்கண்ணா... ஹீ....ஹீ...
மேலும் வாசிக்க... "டாகுட்டர்ர்ர் விஜய் ரசிகர்களே! படிசிங்கன்னா ரொம்ப பீல் பண்ணனுமுங்கண்ணா?"



கண்கள் விரிய பார்க்க, ரசிக்க... படங்கள்!

நேச்சுரல் போட்டோவுடன் பென்சிலில் வரைந்த போட்டோ அழகாக இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.







ஜிமெயில்
மேலும் வாசிக்க... "கண்கள் விரிய பார்க்க, ரசிக்க... படங்கள்!"

தனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து)

தனபாலு: டேய் கோபாலு.... அடேய் கோபாலு.... வீட்டுல இருக்கியா இல்லையா? டேய் கோபாலு?

கோபாலு: எவன்யா காலங்காத்தால தூங்க கூட விடாம, சே...சே.... நமீதா கனவுல வந்து என் கையை பிடிச்சா? அதுக்குள்ள எவனோ எழுப்பிட்டான், யாரது கூப்பிட்டது?

தனபாலு: டேய், மணி பத்து ஆகுதடா, மர மண்டையா, நான் தான்டா கூப்பிட்டேன். நமீதா உன் கையை பிடிச்சா கூடவே போயிருவியா.... ஏண்டா ஒரு முக்கியமான வேலை இருக்கு. காலையில சீக்கிரமா கிளம்பி ரெடியா இருன்னு சொன்னேன்ல...

கோபாலு: அண்ணே, திட்டாதிங்க, நமீதா ஞாபகத்துல மறந்துட்டேன். இதோ ஒரு அரை மணி நேரத்துல கிளம்பிருறேன். கோச்சிக்காதிங்க...

தனபாலு: சரி வெயிட் பண்றேன், அந்த டி விய போட்டுட்டு போடா...

கோபாலு: இந்தாங்கண்ணே ரிமோட்டு, நீங்களே உங்களுக்கு பிடிச்சத பார்த்துக்கங்க.

தனபாலு: சீக்கிரம் வாடா, டைம் ஆகுது. சே.... டிவிய போட்டாலும் நமீதா பாட்டு தான் வருது.

கோபாலு: அண்ணே ரெடியாயிட்டேன். போகலாமா?

தனபாலு: ம். வாடா போலாம். நீ தான் சைக்கிள் மிதிக்கணும் சரியா, லேட் ஆக்குனதுக்கு உனக்கு தண்டனை.

கோபாலு: ம்ஹும். இன்னைக்கு மட்டுமா சைக்கிள் மிதிக்கிறேன். உங்க கூட எப்ப பழக ஆரம்பிச்சேன்னோ அப்ப இருந்து நான் தான் சைக்கிள் மிதிக்கிறேன், நீங்க சொகுசா பின்னால உட்கார்ந்து சைட் அடிச்சிட்டு வருவீங்க.

தனபாலு: சரி சரி பேச்ச விடு. ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கா?

கோபாலு: கர்நாடகா முதலமைச்சரா இருந்த எட்டியூரப்பா ஊழல் பன்னுதா புகார் கிளம்புச்சுள்ள, அவரை கட்சி மேலிடம் ராஜினாமா பண்ண சொன்னாங்களாம், அவரும் ராஜினாமா பண்ணிட்டாரு.

தனபாலு: அவரு தான்யா மனுஷன். ஊழல் பண்ணியிருக்காரோ இல்லையோ, புகார் வந்த உடனே ராஜினாமா பண்ணிட்டாரே, நம்ம ஊருலயும் தான் ஊழல் பண்ணினதா சொல்றாங்க. ஆனா யாருமே ராஜினாமா பண்ண மாட்டிங்கறாங்க. மக்களா பார்த்து அவங்கள தூக்கி எறிய வேண்டியிருக்குடா.

கோபாலு: ஆமாண்ணே... நீங்க சொல்றது சரி தான்... அண்ணே மும்பைய திணறடிச்ச தீவிரவாதி கசாப் இருக்கான்ல, அவன் தூக்கு தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு பண்ணியிருக்கானாம். அவனுக்கு இந்த அளவுக்கு இடம் தரக் கூடாது அண்ணே.

தனபாலு: ஆமாண்டா. இந்நேரம் அவன ஒண்ணுமில்லாம ஆக்கியிருக்கணும். நம்ம சட்டம் அவ்வளவு கடுமையா இல்லாம இருக்கு. என்ன செய்ய?

கோபாலு: அண்ணே, நடிகை மீனா வேற ஒருத்தர் கூட ஓடி போயிட்டாங்களாமே கேள்விப்பட்டீங்களா?

தனபாலு: அது கண்ணழகி மீனா இல்லடா, துணை நடிகை மீனா

கோபாலு: அண்ணே, ஐஸ்வர்யா தனுஷை வைத்து ஒரு படம் இயக்குறாங்களாமே, தெரியுமா?

தனபாலு: சொல்ற விஷயத்தை தெளிவா சொல்லுடா, தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தான் தனுஷை வைத்து டைரக்ட் பண்ண போறாங்க. தனுஷ்க்கு ஜோடியா அமலா பால் நடிக்கிறதா சொல்றாங்கடா.

கோபாலு: தெளிவா தெரியாம தானே உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன். அதுக்கு போயி இப்படி சலிச்சுக்கறிங்க.

தனபாலு: டேய் கோபாலு, இந்தியா பர்ஸ்ட் டெஸ்ட் மேட்சுல தொத்ததுக்கு காரணம் ஹர்பஜன் அதிக விக்கெட் எடுக்காதது தான் காரனமாமே. அப்படியா?

கோபாலு: அண்ணே, அவரு மட்டுமல்ல, பேட்ஸ்மேன் யாரும் சரியா விளையாடல. ஜாஹிர்கானுக்கு காயம் வேற... என்ன செய்றது? தோக்கணும்னு இருக்கு தோத்திட்டோம். 

தனபாலு: ஆமாண்டா, எப்படியோ தோத்துட்டாங்க, அடுத்து நடக்கற மேட்ச்சுல ஜெயிக்கணும். பாக்கலாம்.

கோபாலு: அண்ணே, எங்க போகணும்... நான் பாட்டுக்கு சைக்கிள் ஓட்டிட்டு வந்துட்டே இருக்கேன். எடத்தை சொல்லுங்க. 

தனபாலு: மீனாட்சி பஜார் போடா. ஏதாவது புது பட சி டி வாங்கலாம்?

கோபாலு: அண்ணே, முன்னாடியே சொல்லியிருந்தா நான் இம்புட்டு தூரம் சைக்கிள் மிதிச்சிருக்க மாட்டேன். சி டி கடை எல்லாத்தையும் மூடி ஒரு மாசத்துக்கும் மேல ஆகுது. அம்மா ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுத்துட்டாங்க. அதனால ஒரு சி டி கடையும் இல்லை.

தனபாலு: அய்யோ. எப்படி இனி படம் பாக்கிறது? காசு நிறைய செலவு ஆகுமே.... சரி வா வீட்டுக்கு போலாம்

கோபாலு: அண்ணே, வீட்டுக்கு அப்புறமா போலாம். இம்புட்டு தூரம் சைக்கிள் ஓட்டிட்டு வந்திருக்கேன். நீங்க நெனச்ச மாதிரி சி டி யும் வாங்க முடியல, அதனால என்னை ஒரு படத்துக்கு கூட்டிட்டு போங்க.
தனபாலு: டேய் காசு ரொம்ப செலவாகுமே...

கோபாலு: அதெல்லாம் எனக்கு தெரியாது, இங்க பக்கத்துல தங்கரீகல் தியேட்டர் இருக்கு வாங்க அங்க போலாம். நானே சைக்கிள் ஓட்டறேன்.

தனபாலு: இன்னைக்கு எனக்கு மொய் வைக்காம விட மாட்ட? சரி வாடா போலாம். ஓட்டு சைக்கிளை, இனிமே உன்னை சைக்கிள் ஓட்ட சொல்லவே மாட்டேன்.


(இருவரும் தங்கரீகல் தியேட்டருக்கு போகிறார்கள்.)


டிஸ்கி: ஒரு சேஞ்சுக்கு இந்த முறை நடிகர்கள் படம் போட்டிருக்கேன். யாரும் எம்மேல கோவப்படாதீங்க.
மேலும் வாசிக்க... "தனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து)"



அதிகமான ஊழலில் எடியூரப்பாவா? ரெட்டி சகோதரர்களா?


       
    கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த சட்டவிரோதச் சுரங்கம் தொடர்பான லோக் ஆயுக்தா நீதிமன்றத்தின் அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டவுடனே அந்த மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பு பற்றிக் கொண்டது. கர்நாடகாவில் பெல்லாரி, தும்கூர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விதிகளுக்கு புறம்பான சட்ட விரோத இரும்புச் சுரங்கங்கள் மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஆசியுடன் மாநில கனிம வளத்தை சுரண்டி வருவதாக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தனது பரிந்துரையில் தெரிவித்து விட்டார்.
       சுமார் 25 ஆயிரம் பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையில் 300 பக்கங்களில் அவர் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளார். சட்டவிரோதச் சுரங்கங்களை நடத்திவரும் முக்கிய புள்ளிகளான ரெட்டி சகோதரர்கள் இருவர், எடியூரப்பா அமைச்சரவையிலேயே முக்கிய அமைச்சர்களாக உள்ளனர். ஒருவர் கருணாகர ரெட்டி, மற்றொருவர் ஜனார்த்தன ரெட்டி. ஒரு அரசின் அமைச்சரவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரர்கள் இடம் பெற்றிருப்பது இந்திய அரசியல் வரலாற்றில் கர்நாடகாவில் தான். அவர்கள் வெறும் அமைச்சர்கள் மட்டு மல்ல. மாநில அரசையே தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆட்டிப்படைத்து வருபவர்கள். சுருக்கமாக சொன்னால் தென்னிந்தியாவின் முதல் பாஜக அரசே இந்த சுரங்க கொள்ளையர்களின் வழி காட்டுதல்படி தான் நடந்து வந்தது. இதற்கு பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோரின் ஆசியும் உண்டு. 
  
  
ஒரு கட்டத்தில் ரெட்டி சகோதரர்களுடன் மோதல் முற்றி சட்டவிரோதச் சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக முதல்வர் மிரட்டிய போது, மேலிடத்தின் சமரசம் காரணமாக பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது. இதன் பின்னர் ரெட்டி சகோதரர்களிடமிருந்து முதல்வருக்கும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் அறக்கட்டளைக்கும் கணிசமான தொகை கிடைக்கத் துவங்கியவுடன் அவர்களது கொள்ளைக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கியது போல் ஆகிவிட்டது. இதனால் தான் அவர்கள் 2006 முதல் 2008 ஆம் ஆண்டுவரை சுமார் 16 ஆயிரத்து 85 கோடி ரூபாய் அளவுக்கு மாநில அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக எடியூரப்பா மீதும் ரெட்டி சகோதரர்கள் மீதும் லோக்ஆயுக்தா குற்றம் சாட்டியுள்ளது. இதில் நேரடியாகவே முதல்வர் எடியூரப்பா ஆதாயம் அடைந்துள்ளதாகவும் அதற்காக அவரது குடும்பத்தினர் நடத்திவரும் அறக்கட்டளைக்கு ரூ.30 கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அறிக்கை வெளியாகி விட்டதால் வேறு வழியில்லாமல் எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு கட்சியின் மேலிடம் பணித்துள்ளது. தற்போதைக்கு இதை விட்டால் அவர்களுக்கு வேறு வழியில்லை. இருந்தாலும் முதல்வரை மாற்றுவதால் மட்டும் இந்த ஊழலை மூடி மறைத்து விட முடியாது. 
  இந்த ஊழலுக்கு முக்கிய காரணகர்த்தாக்களான ரெட்டி சகோதரர்களையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி, ஊழல் வழக்குகளை சந்திக்க வேண்டும். பாஜக தலைமை இதைச் செய்யாமல் ஆட்களை மட்டும் மாற்றி ஏமாற்ற முயன்றால் அடுத்த தேர்தலில் மக்கள் நல்ல பாடத்தை கற்றுக்கொடுப்பர். அரசுக் கட்டுப்பாடுகள் எல்லாம் விலக்கிக் கொள்ளப்பட்டு, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் அமலுக்கு வந்த பின்னர் நாட்டில் ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் பஞ்சமில்லை. இதில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் விதிவிலக்கு அல்ல.
மேலும் வாசிக்க... "அதிகமான ஊழலில் எடியூரப்பாவா? ரெட்டி சகோதரர்களா?"



சர்தார்ஜி ஏன் பஸ்சில் ஏறல? கிழவர் பதில்.


     
   சர்தார்ஜி தன் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளோடு தியேட்டருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஒரு பஸ் வந்தது, அதில் மூன்று சீட்டுகள் மட்டுமே காலியாக இருந்ததால் அனைவரும் உட்கார முடியாது என அந்த பஸ்ஸில் அவர்கள் ஏறவில்லை.
          அதே பஸ் ஸ்டாப்பில் ஒரு கிழவனும் கைத் தடியை தரையில் தட்டிக் கொண்டே பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தார். அவர் தரையில் தட்டிக் கொண்டிருந்தது நம்ம சர்தார்ஜிக்கு எரிச்சலைத் தூண்டியது. அடுத்து ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சிலும் ஒரு சீட் மட்டுமே காலியாக இருந்ததால், அந்த பஸ்சிலும் சர்தார்ஜி குடும்பம் ஏற வில்லை.
            அவர் மனைவி முறைத்துக் கொண்டிருந்தாள் . பக்கத்துல தானே தியேட்டர் இருக்கு? நடந்து போகலாம், என சர்தார்ஜியிடம் சொன்னாள். சர்தார்ஜி அவள் சொல்வதைக் காதில் வாங்காமல் அடுத்த பஸ் வருமா என ரோட்டை பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கிழவனும் கைத் தடியை  தட்டிக் கொண்டே நம்ம சர்தார்ஜியை எரிச்சலேற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பஸ் வந்தது. அந்த பஸ் புல்லா கூட்டத்த அடச்சிக்கிட்டு வந்தது. சர்தார்ஜி ஏறுகிற  மாதிரி தெரியவில்லை.
            அவர் மனைவி பிள்ளைகளை  கூட்டிக் தியேட்டரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சர்தாஜியும் வேறு வழியில்லாமல் அவள் பின்னே நடக்க ஆரம்பித்தார். அந்தக் கிழவனும் அவர் ஏற வேண்டிய பஸ் வராத காரணத்தால் வேறு வழியில்லாமல் கைத்தடியின் உதவியால் சர்தார்ஜி பின்னே நடக்க ஆரம்பித்தார்.  அவர் நடக்க நடக்க கைத்தடி சத்தம் அதிகமாவே  கேட்டது. நம்ம சர்தாஜிக்கு கோபம் அதிகமாகி கிழவரைப் பார்த்து, "ஏய்யா, கிழவரே அந்த தடிக்கு ஒரு உறையை மாட்ட வேண்டியது தானே, சத்தம் கேட்காம இருக்குமுல்ல" என சத்தமா சொன்னார். அதற்கு பதிலாக அந்த கிழவர் சர்தார்ஜியை பார்த்து, " நீ, அன்னைக்கே ஒரு உறையை மாட்டியிருந்தால் முதலாக வந்த பஸ்சிலேயே ஏறியிருக்கலாம்" என சொன்னார். நம்ம சர்தார்ஜிக்கு அவர் சொன்னது புரியவில்லை.
      என்னங்க, உங்களுக்காவது புரியுதா?
மேலும் வாசிக்க... "சர்தார்ஜி ஏன் பஸ்சில் ஏறல? கிழவர் பதில்."

எப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது? - பொதுக்குழு அறிக்கை


   
   இனி எந்தக் காலத்திலும் யாருடனும் பாமக கூட்டணி வைக்கப்போவதில்லை; பாமக தலைமையில் மாற்று அணியை அமைப்போம் என்று அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
      கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். "தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக பாமக தலைமையில் மாற்று அணியை உருவாக்கி அதன் தலைமையில் தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடுவது என உறுதி பூண்டுள்ளது.
    இந்தக் கொள்கையில் ஏற்புடைய கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கிறோம். தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும், அதன் பிறகு வரும் எல்லா தேர்தல்களிலும் பாமக தலைமையிலான அணியே தேர்தலைச் சந்திக்கும் என இப்பொதுக்குழு முடிவு செய்கிறது. பாமக தலைமையிலான அணியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் மிக விரைவில் வெளியிடப்படும்.
  • மக்களின் வாக்குகளுக்கு உண்மையான மதிப்பு வழங்கும் வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக சட்டத்தில் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும்.
  • தமிழக அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
  • 69 சதவீத ஒதுக்கீடை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்திடம் கால அவகாசம் பெற்று சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்.
  • இலங்கையில் தனி ஈழம் அமைக்க ஐ.நா. அமைப்பின் மூலமாக பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
  • பெரிய மாவட்டங்களான விழுப்புரம், வேலூர், சேலம், திருநெல்வேலி, மதுரை ஆகிய 5 மாவட்டங்களை இரண்டிரண்டு மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும். இவ்வாறு மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களின் தனிக்கட்சி கொள்கையை கடைபிடிக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் வாசிக்க... "எப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது? - பொதுக்குழு அறிக்கை"



நடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை

   
   நடிகர் அஜித் குமார் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் நாள் ஹைதராபாத் நகரில் பிறந்தார். இவரின் அண்ணன் பெயர் அனில் தம்பி பெயர் அனுப் குமார். 1986 ஆம் ஆண்டு இவர் ஆசன் மெமோரியல் சீனியர் செகண்டர் பள்ளியிலிருந்து விலகி பகுதி நேர இரு மற்றும் நான்கு சக்கர வாகன மெக்கானிக்காக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் 1990 வரை ஈரோட்டில் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் சிறிது காலம் மாடலிங் வேலையும் செய்தார். ஒரு சமயம் இவர் மோட்டர் சைக்கிள் விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டதால் கால்கள் உணர்விழந்தன. ஆனால் இவர் விடாமுயற்சியுடன் அதிலிருந்து மீண்டு சென்னையிலுள்ள அவரின் வீட்டிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 1996 ஆம் வருடத்தில் அஜித் குமார்-நடிகை ஹீரா காதல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அந்த காதல் 1999 ஆம் வருடத்தின் முற்பகுதியில் முடிவுக்கு வந்தது.
அஜித் குடும்பம்
     அஜித் குமார் அமர்க்களம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை 2000 ஆம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். 03-01-2008 அன்று அஜித்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனுஷ்கா என பெயரிட்டுள்ளனர். அஜித் குமார் ஒரு சிறந்த மோட்டார் பந்தய வீரர். அவர் ஜெர்மனி மற்றும் மலேசியாவில் நடைபெற்ற மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவர் பார்முலா 3 கார் பந்தயங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.

அஜித் பெற்ற விருதுகள்:
  • அஜித் குமார் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
  • 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
  • 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார். 
  • 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.
  • 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
  • தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். 
  • கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.  

ரஜினியுடன் அஜித்
சர்ச்சைகள்:
பிப்ரவரி 06 2010 அன்று நிகழ்ந்த கலைஞர் கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் இயக்கங்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாக பகிங்கரமாக புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளால் மன வருத்தம் அடைந்த அஜித் மீண்டும் கார்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.

2011 ம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை சில பல காரணங்களால் கலைத்தார்.



அஜித் நடித்துள்ள படங்கள்:
1. பிரேம புஸ்தகம் - (தெலுங்கு) - 1992 - பவன்
2. அமராவதி - (தமிழ்) - 1993 - ரமேஷ் குமார்
3. பாசமலர்கள் - (தமிழ்) (நட்புக்காக) - 1994 - ரமேஷ் குமார்
4. பவித்ரா - (தமிழ்) - 1994 - நிதின்
5. ராஜாவின் பார்வையிலே - (தமிழ்) (நட்புக்காக) -1995 - மன்மோகன்
6. யுவா ரக்தம் - (தெலுங்கு) (நட்புக்காக) - 1995 - மன்மோகன்
7. ஆசை - (தமிழ்) - 1995 - வசந்த்
8. ஆசா ஆசா ஆசா - (தெலுங்கு) - 1995 - வசந்த்
9. வான்மதி - (தமிழ்) - 1996 - அகத்தியன்
10. கல்லூரி வாசல் - (தமிழ்) - 1996 - பவித்ரன்
11. காலேஜ் கேட் - (தெலுங்கு) - 1996 - பவித்ரன்
12. மைனர் மாப்பிள்ளைகள் - (தமிழ்) (நட்புக்காக) - 1996 - ஏ. மனோகர்
13. காதல் கோட்டை - (தமிழ்) - 1996 - அகத்தியன்
14. நேசம் - (தமிழ்) - 1997 - நாராயண்
15. ராசி - (தமிழ்) - 1997 - முரளியப்பாஸ்
16. உல்லாசம் - (தமிழ்) - 1997 - ஜேடி-ஜெர்ரி
17. உல்லாசம் - (தெலுங்கு) - 1997 - ஜேடி-ஜெர்ரி
18. பகைவன் - (தமிழ்) - 1997 - டி. ராஜசேகர்
19. ரெட்டை ஜடை வயசு - (தமிழ்) - 1997 - சிவக்குமார்
20. காதம் மன்னன் - (தமிழ்) - 1998 - சரண்
21. அவள் வருவாளா - (தமிழ்) - 1998 - ராஜ் கபூர்
22. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - (தமிழ்) (நட்புக்காக)- 1998 - விக்ரமன்
23. உயிரோடு உயிராக - (தமிழ்) - 1998 - சுஷ்மா
24. தொடரும் - (தமிழ்) - 1999 - ரமேஷ் கண்ணா
25. உன்னைத் தேடி - (தமிழ்) - 1999 - சுந்தர் சி
26. பிரேமடோ பிலிசா - (தெலுங்கு) - 1999 - சுந்தர் சி
27. வாலி - (தமிழ்) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
28. வாலி - (தெலுங்கு) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
29. வாலி - (இந்தி) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
30. ஆனந்த பூங்காற்றே - (தமிழ்) - 1999 - ராஜ் கபூர்
31. நீ வருவாய் என - (தமிழ்) (நட்புக்காக) - 1999 - ராஜகுமாரன்
32. அமர்க்களம் - (தமிழ்) - 1999 - சரண்
33. அத்புதம் - (தெலுங்கு) - 1999 - சரண்
34. முகவரி - (தமிழ்) - 2000 - துரை
35. சிறுநாமா - (தெலுங்கு) - 2000 - துரை
36. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - (தமிழ்) - 2000 - ராஜீவ் மேனன்
37. பிரியுரலு பிலிச்சிண்டி - (தெலுங்கு) - 2000 - ராஜீவ் மேனன்
38. உன்னைக் கொடு என்னைத் தருவேன் - (தமிழ்) - 2000 - கவி காளிதாஸ்
39. தீனா - (தமிழ்) - 2001 - ஏ.ஆர். முருகதாஸ்
40. சிட்டிசன் - (தமிழ்) - 2001 - சரவண சுப்பையா

41. சிட்டிசன் - (தெலுங்கு) - 2001 - சரவண சுப்பையா
42. பூவெல்லாம் உன் வாசம் - (தமிழ்) - 2001 - எழில்
43. அசோகா - (இந்தி)(நட்புக்காக) - 2001 - சந்தோஷ் சிவன்
44. சாம்ராட் அசோகா - (தமிழ்) (நட்புக்காக) - 2001 - சந்தோஷ் சிவன்
45. ரெட் - (தமிழ்) - 2002 - ராம் சத்யா
46. ராஜா - (தமிழ்) - 2002 - எழில்
47. நூவு நாக்கு காவாலி - (தெலுங்கு) - 2002 - எழில்
48. வில்லன் - (தமிழ்) - 2002 - கே.எஸ். ரவிக்குமார்
49. வில்லன் - (தெலுங்கு) - 2002 - டாக்டர் ராஜசேகர்
50. என்னை தாலாட்ட வருவாளா - (தமிழ்) (நட்புக்காக) - 2003 - கே.எஸ். ரவீந்திரன்
51. ஆஞ்சநேயா - (தமிழ்) - 2003 - மகராஜன்
52. ஆச்சார்யம் - (தெலுங்கு) - 2003 - மகராஜன்
53. ஜனா - (தமிழ்) - 2004 - ஷாஜி கைலாஷ்
54. ரௌடி டான் (தெலுங்கு) - 2004 - ஷாஜி கைலாஷ்
55. அட்டகாசம் - (தமிழ்) - 2004 - சரண்
56. ஜீ - (தமிழ்) - 2005 - லிங்குசாமி
57. ஜீ - (தெலுங்கு) - 2005 - லிங்குசாமி
58. பரமசிவன் - (தமிழ்) - 2006 - பி. வாசு
59. பரமசிவம் - (தெலுங்கு) - 2006 - பி. வாசு
60. திருப்பதி - (தமிழ்) - 2006 - பேரரசு
61. திருப்பதி - (தெலுங்கு) - 2006 - பேரரசு
62. வரலாறு - (தமிழ்) - 2006 - கே.எஸ். ரவிக்குமார்
63. ஆழ்வார் - (தமிழ்) - 2007 - செல்லா
64. கிரீடம் - (தமிழ்) - 2007 - விஜய் ஆனந்த்
65. பில்லா - (தமிழ்) - 2008 - விஷ்ணுவர்த்தன்
66. ஏகன் - (தமிழ்) - 2008 - ராஜு சுந்தரம்

67. அசல் - (தமிழ்) - 2010 - சரண்
68. மங்காத்தா - விரைவில்
69. பில்லா - 2 - தயாரிப்பில்
நன்றி: பல இணைய தளங்கள்
மேலும் வாசிக்க... "நடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை"



அட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - மூன்றாம் பாகம்!

அட்ரா சக்க சி.பி பேட்டியின் மூன்றாம் பாகம் இது. இந்த பாகத்தில் வலையுலக நண்பர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சி.பி யின் பதில்களும் தொகுக்கப்பட்டுள்ளது. என்னன்ன கேள்விகள் கேட்டிருக்காங்கன்னு பார்போமா?

பண்ணிக்குட்டி ராமசாமி:
1. உங்க பாசுக்கு (ஆபீஸ்) நீங்க பண்ணிட்டு இருக்கறது தெரியுமா? தெரிஞ்சா என்ன செய்வீங்க?
ஹி ஹி யோவ் ராஸ்கல் ராம்சாமி.. நான் என்ன கொள்ளை கொலையா பண்றேன்.. ரவுசு..?!கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போறதுதானே?ஃபீல்டு ஒர்க்கர்ஸ் செய்யாததையா நான் செஞ்சுட்டேன்?ஆனாலும் தெரிஞ்சா சங்குதான் ஹி ஹி ஆஃபீஸ் மேனேஜர் ஃபோன் நெம்பர் கேட்ட்ராதேயும் அடுத்த கேள்வியா.. ஹி ஹி 

2. உங்க ஸ்கூல் டைம் கேர்ள்பிரண்டை [அதான் முன்னாள் (இப்பவும் முன்னாள்தானே?) காதலி] இப்போ திடீர்னு பார்க்கும் போது, ஏன்டா சிபி இன்னும் நீ திருந்தலியான்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?
ஹி ஹி ஹி ஹி அப்டீம்பேன்.....(இதான் சாக்குன்னு டேய்!!! ம் ம் )  

3. பிட்டுப்படம் பார்த்துட்டு இருக்கும் போது பார்க்கக் கூடாத ஆளை எதிரும் புதிருமா சந்திச்சு வழிஞ்ச அனுபவம் இருக்கா? அப்போ எப்படி சமாளிச்சீங்க?
10ஆம் கிளாஸ் படிக்கறப்ப எங்க கிளாஸ் கணக்கு வாத்தியார் அந்த படத்துக்கு வந்துட்டார்.. அவர் பால்கனில நான் பெஞ்ச்ல... என்னை பார்த்துட்டார்னு தான் நினைக்கறேன் ஹி ஹி சமாளீக்க தெரியலை.. 

4. நீங்க இப்படி வாராவாரம் வெள்ளிக்கெழமைன்னா பிட்டுப்படம் பார்க்கறது வீட்ல தெரியுமா?
ஹி ஹி ஹி தெரியாது.. (யோவ்,.. நானும் பொறுமையா பதில் சொல்லிட்டே இருக்கேன், எகனை மொகனை கேள்வியா கேட்டா எப்படி?)

5. திடீர்னு நமீதாவை சந்திக்க நேர்ந்தால் என்ன பேசுவீங்க?
எதுக்கு பேசனும்? ஹி ஹி (அதாவது நடிகைங்க கூட எல்லாம் பேச்சு எதுக்கு? ந்னு அர்த்தம்)

6. நீங்க கிழி கிழின்னு விமர்சனத்துல கிழிச்ச படத்தோட டைரக்டரை சந்திக்க நேர்ந்தால் உங்கள் ரியாக்சன்?
சித்து + 2 பட விமர்சனத்துல கே பாக்யராஜ் சாரை நக்கல் அடிச்சிருந்தேன்.. 18 வருஷமா அவர் பத்திரிக்கைல ஜோக் எழுதிட்டு இப்படி கவுத்துட்டானே என உதவி ஆசிரியரிடம் வருத்தப்பட்டதா எனக்கு தகவல் வந்தது.. ஆனா நேரடியா என் கிட்டே எதுவும் கேட்கல.. 

7.ஹிட்ஸ், ரேங் எல்லாத்தையும் திடீர்னு தூக்கிட்டா உங்களிடம் என்ன மாற்றங்கள் இருக்கும்?
பெரிசா ஒண்ணூம் மாற்றம் வராது.ஹிட்ஸூக்காக நான் அலையறதில்லை.பத்திரிக்கைகளூக்கு ஜோக் எழுதும்போதே மற்றவர்களை விட நாம் தனிச்சு தெரியனும்னு நினைப்பேன்.. எல்லாரும் வாரம் 5 ஜோக் அனுப்பும்போதே நான் 100 ஜோக் அனுப்புனவன்.. அதனால ஹிட்ஸ்,ரேங்க் அதுக்கும், என் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்மணம் மக்கர் பண்ணூன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது.  இருக்கும்..

8. என்னைப் போன்றவர்கள் உங்களை கலாய்க்கும் போது சமய்ங்களில் ஓவராகவும் போய்விடுகின்றது. எப்பொழுதாவது வருத்தப்படும்படி நேர்ந்ததுண்டா?
ஹா ஹா குட் கேள்வி.. நான் செம ஜாலி டைப்.. எதையும் ஜாலியா எடுத்துக்குவேன்.. இருந்தாலும் சில சமயங்களீல் நண்பர்களே இப்படி கலாய்க்கறாங்களேன்னு மனம் வருத்தப்படுவேன்.. அவங்களூக்கு பதிலடி குடுக்கலாம்னு நினைப்பேன்.. அப்போ என் மனசாட்சி வந்து தடுத்துடும்.. உன் சுயநலம் முக்கியமா? நட்பு முக்கியமா?ன்னு கேட்கும்.. அதனால நம்ம மனசு புண்பட்டாலும் அடுத்தவங்க மனசு புண்படக்கூடாதுன்னு நினைச்சுக்குவேன்.. 

9. நெல்லை பதிவர் சந்திப்புக்கப்புறம் ஏன் திருந்திட்டீங்க.. இல்ல இல்ல திருந்திட்டேன்னு சொல்றீங்க? இதுக்கு முன்னாடி யாருமே இதுவரை உங்களை திருந்தச் சொல்லலியா?
யோவ்.. விளையாடறீங்களா/ மொத்தம் 37 பேரு.. ஹாலை சாத்திட்டாங்க.. மாத்தி மாத்தி.. 4 மணி நேரம்.. திணறத்த்திணற.. ஹி ஹி அந்த எஃபக்ட் கொஞ்ச நாளாவது இருக்காதா?

10. பதிவு எழுதி அதுனால அடிவாங்கி இருக்கீங்களா? இல்ல வேற தொந்தரவுகள் ஏதாவது வந்திருக்கா?
கனிமொழி - ராசா கிண்டல் அடிச்சு ஒரு ஜோக் போட்டிருந்தேன்.. ஈரோடு தாதா என் கே கே பி ராஜா வோட அடிப்பொடி ஒருவர் ஃபோன் பண்ணி அந்த ஜோக்கை எடுத்துடுன்னாரு,... சரிங்க.. நான் ஆஃபீஸ்ல இருக்கேன்,.. மாலைல வந்து எடுத்துடறேன்னேன்.. ஆனா அவங்க 10 அடியாளுங்களை வீட்டுக்கு அனுப்பி அதை எரேச் பண்னாத்தான் போவோம்னாங்க.. அப்புறம் வேற வழி இல்லாம நெட் செண்ட்டர் போய் அந்த ஜோக்கை எரேஸ் பண்ணேன்.. 

11. திரைத்துறையில் நுழைவதற்கு முயற்சி செஞ்சிருக்கீங்களா? இல்ல இனிமே செய்வீங்களா? என்ன பண்ண போறீங்க?
சினிமாத்துறை லட்சியம்.. சின்னத்திரை நிச்சயம்./.... நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கலந்துக்க ஆசை.. ஆனா அதுல கலந்துக்க 10 படம் எடுக்கனும்.. ஒரு படம் எடுக்க 30,000 செலவு ஆகும், மொத்தம் 3 லட்சம் ஆகும்.. அதுக்கு ஸ்பான்சர் கிடைக்காது கைக்காசு தான் போடனும்.. அதான் திங்க்கிங்க்.. அது போக.. ஏற்கனவே காமெடி ஸ்கிரிப்ட் 3 புது இயக்குநர்களுக்கு எழுதிக்கொடுத்து இருக்கேன்.. ஏமாந்தும் இருக்கேன்.. லெட் சீ.. நாளைய தினம் நமக்காக விடியும் என்று ஏங்கிக்கிடப்பதுதானே படைப்பாளனின் கடமை?

நாற்று - நிரூபன்: 
சிபி அவர்களிடம் இரு வேறுபட்ட கேள்விகளை முன் வைக்கலாம் என நினைக்கிறேன். 
1. நாடறிந்த, சிறந்த ஒரு நகைச்சுவைப் படைப்பாளியாக பத்திரிகை, சஞ்சிகைகள் வாயிலாக இந்தியாவில் மட்டு மன்றி, ஈழத்தின் தமிழக சஞ்சிகை வாசிப்பு வட்ட்டாரத்திற்கும் அறிமுகமான நீங்கள், அப் பத்திரிக்கைத் துறையினை விட்டு, வலைப் பதிவிற்குள் நுழைந்தமைக்கான காரணம் என்ன? ஏன் வலைப் பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் கருக் கொண்டது? இதனைப் பகிர முடியுமா?
       அடுத்த கட்டம் என்ற ஒரு சுவராஸ்யம் தான்.. இதற்கு அடுத்த கட்டம் என்று ஒன்று இருந்தே தீரும்.. காலத்தின் கைகளில் அந்த மாற்றம் நடந்தே தீரும்.. 

2. முது பெரும் நகைச்சுவைப் படைப்பாளி என்ற அடிப்படையிலும், உங்களின் அனுபவத்தினை அடிப்படையாக வைத்தும் நான் உங்களிடன் எழுப்பும் வினா,
வலைப் பதிவினூடாக ஆக்க இலக்கியங்கள் அல்லது படைப்பிலக்கியங்களின் வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் எப்படி இருக்கும்? தமிழக இலக்கிய சஞ்சிகைகளுக்கு நிகரான வளர்ச்சியினை இவ் வலைப் பதிவுகளும் எட்டக் கூடிய அல்லது பரந்து பட்ட அளவில் வாசகர்களிடம் சென்று சேரக் கூடிய வழி முறைகள் உருவாகுவது எதிர்காலத்தில் சாத்தியமாகுமா?
     இப்போதே அதன் தாக்கம் அதிகமே.. ஃபிஷர்மேன் ட்வீட் ஏற்படுத்திய தாக்கம் பிரமாதம்.. முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனால் அதன் ரிசல்ட் தெரிய 7 நாட்கள் ஆகும், ஆனால் இப்போது நெட்டில் வரும் விமர்சனங்களால் படம் ரிலீஸ் ஆகி 4 மணி நேரத்தில் ரிசல்ட் தெரிகிரது. பட தயாரிப்பாளர்கள் இணைய எழுத்தாளர்கலை மதிக்கிறார்கள்..
இணைய வாசகர்கள் இப்போது சராசரியாக 10000 பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.. இது பல மடங்கு உயரும்,உயரனும்.. 

ஜோஸ்பின் பாபா:
நண்பா, உங்கள் நகைச்சுவை உணர்வின் பின் புலன் என்ன?
   ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் சோக சம்பவங்கள் இருக்கும். சிலர் அந்த சோகங்களை மனசுக்குள் வைத்துப்பூட்டிக்கொண்டு மறுகுகிறார்கள்.. சிலர் அதை மறக்க நகைச்சுவை எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள்.. தானும் சிரிக்க மற்ரவர்களை சிரிக்க வைப்பது ஒரு கலை.. அந்த கலையை நான் 12 வது படிக்கும் நிலையிலிருந்து ஆரம்பித்து விட்டேன்..
சார்லி சாப்ளின் கவிதை ஒன்று நினைவு வருது..
"நான் மழையில் நனைய விரும்ப காரணம்
என் கண்ணீர் யாருக்கும் தெரியாமலே போகட்டும் என்று தான்"
நான் நகைச்சுவை மழையில் நனைவதும் மற்றவர்களை நனைய வைப்பதற்கும் அதுவே காரணம். 


மதிசுதா 

1.வணக்கம் சீபி நேரே கேட்பதற்கு மன்னிக்கவும். 
போட்டிகள் பொறாமைகள் நிறைந்த இந்தப் பதிவுலகத்தில் தலைக்கனம் இல்லாத ஒரு மனிதனாக வலம் வரகிறீர்கள். இப்படியான நிலையில் தங்களைச் சுற்றி போடப்பட்ட சதிவலை தங்களை எந்தளவு பாதித்தது ?
ஹா ஹா நேரே கேட்காமல் சைட்ல நின்னா கேக்க முடியும் ( SIDE   NOT SIGHT) 
ஹெட் வெயிட் எனக்கு இல்லாததற்குக் காரணம் நிஜமாகவே என் வீடு சுடுகாட்டின் அருகே தினம் தினம் பிணங்கள் போகும் பாதையில் வீடு அமையப் பெற்ற ஒருவன் வாழ்க்கையின் நிலையில்லாத் தன்மையை எளிதில் புரிந்து கொள்வான். 
அதுவும் இல்லாம நான் ஹேர் கட் மாதம் ஒரு முறை பண்ணிக்குவேன் சோ நோ சான்ஸ் டூ தலைக்கனம். சதி வலைன்னு சொல்ல முடியாது ஆற்றாமை, பொறாமை காரணமாக எழுந்த எதிர்ப்புகள்னு சொல்லலாம். அவற்றை பொறுமை, சகிப்புத்தன்மை என்ற 2 ஆயுதங்கள் மூலம் சமாளீத்தேன். 

2.தங்கள் கருத்துப்படி ஒரு பதிவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் ?
     மனிதனாக இருக்க வேண்டும். தன்னால் யாருக்கும் கெடுதல் வரக்கூடாது. ஏதாவது செய்தால் அது மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி இருக்கனும்.நமக்குள்ள அடிச்சுக்க கூடாது. சிரிக்க வைக்கும் திறமை இருப்பவர்கள் சிரிக்க வைக்கலாம், சிந்திக்க வைக்கும் திறமை இருப்பவர்கள் விழிப்புணர்வு பதிவுகள் போடலாம்

சூ. மஞ்சு - யாழ் கணினி நூலகம்
1. உங்களை பதிவுலகத்திற்கு வர தூண்டியது எது? அதாவது என்ன நோக்கத்திற்காக காலடி வைத்தீர்கள்? 
   ஆனந்த விகடன் இல் ட்விட்டர் அக்கவுண்ட்டில் போடும் ட்வீட்கள் வலை பாயுதே என வர ஆரம்பித்தது.. பலத்த வரவேற்பை பெற்றது.. அதிலும் புகுந்து பார்த்துடலாம்னு நினைச்சேன். அதே போல் கேபிள் சங்கரின் பிளாக் பற்றிய விமர்சனம் விகடனில் வந்தது.. நாமும் அது போல் வர வைக்கனும் என்ற எண்ணம் மனதில் பிறந்தது..

2. அந்த நோக்கத்தை அடையும் திசையில் உங்கள் பயணம் தொடர்கிறதா? 
ம் .. அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் காலம் தான் நல்ல பதில் சொல்லும், கூடவே வாசகர்களும் நண்பர்களூம் தான் சொல்ல வேண்டும்.

அடுத்த பாகத்தில் முடியும்
மேலும் வாசிக்க... "அட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - மூன்றாம் பாகம்!"



மூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு


இந்த தொடர் பதிவை எழுத கோர்த்து விட்ட "கவிதை வீதி" சௌந்தர், "மாய உலகம்" ராஜேஷ் அவர்களுக்கு நன்றி.

1) நான் விரும்பும் மூன்று விஷயங்கள்...?

அப்பா, அம்மாவோட பாசம்...
மனைவியோட அன்பும், அனுசரணையும்...
நான் பார்க்கிற வேலை... 

2) நான் விரும்பாத மூன்று விஷயங்கள்?
நைட் ஷிப்ட் வேலை பிடிக்காதுங்க, ஆனாலும் தவிர்க்க முடியாதது.
மனிதனால் மனிதனுக்கு ஏற்படும் அடக்குமுறை (தீவிரவாதம்)
தேவைக்கு அதிகமாக பேசுபவர்களை (பந்தா பார்ட்டிகள்)

3) நான் பயப்படும் மூன்று விஷயங்கள்?
அய்யோ நேரமாச்சே... சரியான நேரத்துக்கு சென்று விடுவோமா?
உலகில் இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்குமோ?
வேலையில் கமிட்மன்ட் கொடுத்திட்டு முடிக்காமல் இருக்கும் போது...

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
இந்த தொடர் பதிவு ஏன் எழுதணும்?
இலக்கியமா ஓடு...ஓடு....
என்ன வாழ்க்கையடா இது... இப்படி சொல்லி ஏன் வெறுக்கணும்?

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
கம்ப்யுட்டர் மானிடர், 
நேரம், டெம்பரேச்சர் காட்டுகிற கடிகாரம்
ஆபீசில், என் ப்ளாகிற்கு(blog)  பதிவு எழுதிய பேப்பர்கள். 

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
எல்லோரும் தான் சொல்றாங்களே... வேறென்ன ஜோக்ஸ் பிட்டுகள்
அரசியல்வாதியான கேப்டன் படத்தில் நடித்தால் காமெடி தான்.
குழந்தைகளின் சேட்டை.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
வேறென்ன செய்றேன்... இந்த பதிவுக்காக டைப் பண்ணிட்டு இருக்கேன்.
கூகுளில சாட்டிங் போயிட்டு இருக்கு
நண்பர்கள் பதிவுக்கு கமென்ட்டுகிறேன்.

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
அட நம்ம பிரகாஷ் இவ்ளோ செய்திருக்கானா? மற்றவர்கள் சொல்ல வேண்டும்.
ஒரு முறையேனும் குடும்பத்தோட வெளிநாடு போகணும்.
எலோருக்கும் இருக்கற ஆசை தான்... நிறைய பணம் சேர்க்கணும்.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
கண்டிப்பா இந்த பதிவை எழுதி முடிச்சிருவேன். டோன்ட் வொர்ரி
ஓரளவு வசதியா இருக்கணும். கண்டிப்பா முடியும் .
எந்த வேலை செஞ்சாலும் கரெக்டா செய்யணும். கண்டிப்பா முடியும்.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
வேறென்ன கெட்ட செய்திகள் தான்...
ஏன், எதுக்கு, எப்படி? கேட்கலாம். ஆனா அடிக்கடி கேட்கக்கூடாது.
உங்க சம்பளம் எவ்வளவு?

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
என் வேலைக்கு சம்பந்தமான CNC ப்ரோகிராம்ஸ்.
கம்ப்யுட்டர் ஹார்டுவேர்
எப்படித்தான் இவ்ளோ கருத்தோட பதிவு எழுதராங்களோ?

12) நான் ரசித்த மூன்று திரைப்படங்கள்...?
ரஜினியின் "பாட்ஷா"
நம்பியாரின் "நெஞ்சம் மறப்பதில்லை" 
அஜித்தின் "தீனா"

13) நான் விரும்பி அதிக முறை கேட்ட மூன்று திரைப்பாடல்கள்...?
உன்னைப் பார்த்த பின்பு தான்.... (காதல் மன்னன்)
என்னைத் தாலாட்ட வருவாளா.... (காதலுக்கு மரியாதை)
வசீகரா... என் நெஞ்சினில்... (மின்னலே)

14) எனக்கு பிடித்த மூன்று உணவுகள்...?
பணியாரம்
பிரியாணி வகைகள்
ஆப்பம் தேங்காய்பால்

15) இப்பதிவை தொடர அழைக்கும் மூன்று பதிவர்கள்..?
லீலைகளுக்கு நடுவில் இதற்காக நேரம் கிடைக்குமா?  "செங்கோவி"
எழுதுவார் என்ற நம்பிக்கையில், விக்கியுலகம் "விக்கி"
தொழில்நுட்பங்களுக்கு லீவ் கொடுங்க, வந்தேமாதரம் "சசி"
மேலும் வாசிக்க... "மூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1