பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இமானுவேல் சேகரன் நினைவு விழாவிற்காக வந்த ஒரு கட்சியின் தலைவரை, முன்கூட்டியே கைது செய்ததற்காக, தொண்டர்களின் எழுச்சியால், பரமக்குடியே ஸ்தம்பித்து, ராமநாதபுரம் மாவட்டமே சீர்குலைந்து, இன்று இந்தியாவில் அவப்பெயர் பெற்றுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.
பின், 144 தடையுத்தரவு நீக்கப்பட்டு, படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதில் நடந்த அடிதடி சண்டையில், 2 கோடி ரூபாய்க்கு மேல், அரசுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகளில் படிக்கும்போது, மிகவும் வேதனையாக உள்ளது.
எந்தவொரு தலைவரின் நினைவு விழா கொண்டாடப்பட்டாலும், அந்த தலைவரை தெய்வமாக நினைத்து, அவரின் கொள்கைகளை கடைபிடித்து, அவரின் வழியில் மற்றவர்களும் நடக்க வேண்டும். இதைத் தவிர்த்து, அடிதடி சண்டையில் இறங்கி, மற்ற கலவரங்களை உருவாக்கவோ, சட்டம்-ஒழுங்கு பிரச்னை உண்டாக்கவோ, மக்களின் பொதுச் சொத்துக்களை சீரழிக்கவோ கூடாது.
இதுபோன்ற செயல்களைக் கண்டு இளைஞனாகிய எனக்கு, மிகவும் வேதனையாக உள்ளது. இதுபோன்ற விழாவிற்கு தலைவர்களோ, தொண்டர்களோ வராவிட்டால் அல்லது தடை செய்யப்பட்டாலோ, பஸ், ரயில் போன்றவைகளை சூறையாட வேண்டுமா? அதற்கான உத்தரவு பிறப்பித்த அதிகாரியுடன் கலந்தாலோசித்து காரணத்தை அறிந்துகொள்ள வேண்டியதுதானே புத்திசாலித்தனம்.
இதையெல்லாம் செய்யாமல், எவ்வளவோ அற்புத வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த கம்ப்யூட்டர் காலத்திலும், இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்வது மனிதத் தன்மையல்ல. அதிலும், கலவரம் நடந்து பல நாட்கள் ஆகியும், விசாரணை என்ற பெயரில், நினைவு நாள் கொண்டாடக் கூடிய மக்கள், கிராமங்களில் இரவும், பகலும் வீட்டில் இருக்கும் ஆண்களை கைது செய்தும், ஆண்கள் இல்லாதபட்சத்தில், பெண்களை மிரட்டி விசாரிப்பதும், மிகப்பெரிய கொடுமை.
இதனால், மக்கள் நிம்மதி இழந்து, மிகவும் பயந்து நடமாடுகின்றனர். செய்தி உதவி தினமலர். மக்களின் நண்பன் என சொல்லக்கூடிய காவல்துறையே, சம்பந்தமில்லாத நபர்களையும், கல்லூரி மாணவர்களையும் கைது செய்து, விசாரணை நடத்துவது மிகவும் கொடுமையானது.விசாரிக்க வேண்டுமென்றால், மாவட்ட எஸ்.பி., மூலம், கிராமத் தலைவரையோ அல்லது ஊராட்சித் தலைவரையோ அழைத்து, அந்தத் தலைவரின் மூலம், யாரெல்லாம் இவ்விழாவிற்கு சென்கின்றனரோ, அவர்களின் பட்டியலை வாங்கி, விசாரிப்பதுதான் முறை.
சம்பந்தமில்லாதவர்களையும், கண்ணில் தெரிந்தவர்களையும் கைது செய்வது, துன்புறுத்துவது ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாத ஒன்று. எவ்வளவு நாள்தான் இப்படி அடிமையாக வாழ முடியும். ஒருவன் தவறு செய்தாலோ, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினாலோ, அவனுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் நம் சட்டம்.
அந்த வகையில், ஒருபோதும் அவர்களை மன்னிக்க முடியாது. கண்டிப்பாக அவர்களை கண்டறிந்து, தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் மக்களின் கருத்து.எனவே, இனி வரும் காலங்களில் இதுபோன்ற விழாவில் பங்கேற்பவர்கள், அவர் பங்கேற்பதற்கு அனுமதி பாஸ் வழங்கும்போது, அவர்களின் குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதாரமான சான்றிதழ்கள் வாங்கிக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால்தான், தவறு செய்தவர்களை மட்டும் தண்டிக்க முடியும். இல்லையெனில், சம்பந்தமில்லாமல் இருப்பவர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது ஆகாது. தயவுசெய்து மக்களை துன்புறுத்தாமல், மக்களின் நண்பனாக நின்று விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். செய்யுமா?
25 கருத்துரைகள்:
நான்தானா ?
ஆஹா நானேதான் !!!
புது உடை நல்ல இருக்கு
விரிவான அலசல், ஞாயமான ஆதங்கம்.. எல்லாம் சரி மாப்ள நீ இளைஞன் ன்னு சொல்லி இருக்கியே அதுதான் உதைக்குது..
ஹீ.ஹீ
இதுபோன்ற செயல்களைக் கண்டு இளைஞனாகிய எனக்கு, மிகவும் வேதனையாக உள்ளது./////
இங்கதான் டவுட் ?????
ஒட்டுமொத்தமாக இந்த மாதிரி ஜெயந்தி விழாக்களுக்கு அரசு தடை விதித்து விட்டாலே போதும். ஆனால் நடக்கிற காரியமா?
நல்லதொரு அலசல்
அது தாங்க ஜனநாயகம்.... லெனின் எழுதிய அரசு புத்தகம் படியுங்கள்
ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், போலீஸ்ல மாட்டுனவங்க பாடு இருக்கே இனி, போலீஸ் கோர்ட்டுன்னு நாசம் பண்ணிருவாங்க, அதை நினைச்சாதான் பாவமா இருக்கு.
இன்னும் எத்தனை வருஷம் விசாரணை பண்ணுவாங்களோ அவங்களுக்கு தான் வெளிச்சம்!!..
புது டெம்ப்ளேட் கண்ணை கவருது சூப்பர் நண்பா..
மாப்ள இதுல பல பெரிய மனுசங்க மாட்டாம தப்பிச்சிட்டாங்க போல!
என்னமோய்யா...........!
தேவையான அறிவுரை மிக தெளிவா கூறியுள்ளீர்
செய்வார்களா..?
புலவர் சா இராமாநுசம்
இதுபோன்ற சம்பவங்களுக்கு என்னதான் தீர்வு என்று நாம் நினைக்கவும் வருந்தவும் மட்டுமே நம்மால் முடியும்
கலவரத்தை தூண்டியவர்களுக்கும், கலவரத்தினை அடக்கவேண்டியவர்களுக்கும் சமுகப் பிரக்ஞ்சை இல்லை என்பதே உண்மை! இதில் நசுக்கப்படுவது அப்பாவி ஜனங்கள் தான்! உயிருள்ள / அமரரான எவ்வித மனிதப் புனிதர்களுக்கும் ‘குரு பூஜை’ போன்ற விழாக்கள் கூடாது என்பதே நமது ஆதங்கம். இதையே பலரும் கூறுகின்றனர். (என் பதிவுகளிலும் இந்த ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளேன்).
பரமக்குடி குருபூஜைக்காக நிறைய பேர் வெளியூர்களிலிருந்து வந்து தங்கியிருக்காங்க. அவங்கனால மீண்டும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் பரிட்சயமில்லாத நபர்களை விஷாரிக்கிறாங்க. குறிப்பா நைட் 10 மணிக்கு மேல முக்கிய சாலைகளில் வருபவர்களை விஷாரிக்கிறாங்க. இது சில சங்கடங்களையும் எரிச்சலையும் கொடுத்தாலும் கூட அசம்பாவிதங்களை தடுக்கும் முயற்சி என்பதால் பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்துட்டு வராங்க என்பது மகிழ்ச்சி கரமான விஷயம் தான். (என்னவரையும் நிறைய தடவ விஷாரிச்சாங்க. பட் கராரா இல்லைன்னும் நார்மலான கேள்விகளும், பரமக்குடிகாரனா என்பதை உறுதிபடுத்த சில விஷயங்களும் கேட்டதாக தான் சொன்னார்). அது மட்டுமில்லாம ஒருவாரம் மட்டும் தான் இந்த கெடுபிடி இருந்தது. இப்போது எல்லாமே நார்மல் தான்.
மத்தபடி உங்கள் கருத்துக்கள் அனைத்திலும் ஒத்துபோகிறேன். பாலா சொன்னது போல் தான். அரசியலமைப்பு சட்டத்தில் அங்கிகரிக்கப்படாத ஜாதிகளை வைத்து நடத்தப்படும் இத்தகைய குருபூஜைகள் நிறுத்தப்பட வேண்டும். போலீஸாருகும் கட்சி ஆதரவாளருக்கும் நடந்த இந்த பிரச்சனை இப்போது இரு தரப்பு ஜாதியினருக்கும் உள்ள பிரச்சனையாக மாற்றப்பட்டுவிட்டது. என் குருபூஜைய நடத்த விடலன்னா அவன் குருபூஜைய நடத்த விடமாட்டோம்னு எல்லாரும் கெளம்ப ஆரம்பிக்கிறதுக்குள்ள குருபூஜைகள் நிறுத்தப்பட்டால் மக்களின் வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும். ஆனா கண்டிப்பா இந்த அரசு செய்யாது :-(
நியாயம்தான்......
நல்லதொரு அலசல்...
Copy paste from dinamalar?????
செய்யுமா?
கேள்விக்குறிதான்!
ஆமா,மல்லிகைய எங்க காணோம்?
இதுவும் நல்லாத்தான் இருக்கு.
பரமக்குடி குருபூஜைக்காக நிறைய பேர் வெளியூர்களிலிருந்து வந்து தங்கியிருக்காங்க. அவங்கனால மீண்டும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் பரிட்சயமில்லாத நபர்களை விஷாரிக்கிறாங்க. குறிப்பா நைட் 10 மணிக்கு மேல முக்கிய சாலைகளில் வருபவர்களை விஷாரிக்கிறாங்க. இது சில சங்கடங்களையும் எரிச்சலையும் கொடுத்தாலும் கூட அசம்பாவிதங்களை தடுக்கும் முயற்சி என்பதால் பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்துட்டு வராங்க என்பது மகிழ்ச்சி கரமான விஷயம் தான்.
புது டெம்ப்ளேட் மாத்துனதுக்கு பார்ட்டி வைக்கவும், ஆனா சோனா வேணாம் ..
நல்லதோர் அரசியல் ஆய்வுப் பகிர்வு நண்பா.
குடியரசு நாட்டில் ஒரு இடத்தில் குழுமி தங்கள் தலைவரை நினைவு கூற தடை விதிப்பது ஜனநாயக முறையல்ல! எல்லா கலவரங்களிலும் போல் தலைவர்கள் தப்பிய போது சாதாரணமக்கள் மாண்டுள்ளனர்.