CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?

        நண்பர்களே, ஒரு மகிழ்ச்சியான மற்றும் வேதனையான செய்தி சொல்லப் போறேன். பர்ஸ்ட் மகிழ்ச்சி செய்தியை சொல்லிறேன். விலைவாசி கண்டமேனிக்கு ஏறிப் போச்சு என்னையா மகிழ்ச்சியான செய்தின்னு கேட்க்கறிங்களா? உண்மையிலே மகிழ்ச்சி தான்... 
       ஆமா மறுபடியும் பெட்ரோல் விலை குறையப் போகுதாம். சர்வதேச அளவுல கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கி இருக்றதுனால நம்ம நாட்டு பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை கொஞ்சம் குறைக்கலாம்னு முடிவு செய்திருக்காங்க. போன வருஷம் மதிய அரசு கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோலிய பொருட்களின் விலை கட்டுப்பாட்டை நீக்கி பெட்ரோலிய நிறுவனங்களின் கையில் ஒப்படைத்தது. அது முதல் பெட்ரோல் விலை கிடு கிடுவென உயர்ந்து. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுமார் 74 ரூபாய் வரை அதிகரித்ததே வரலாற்று சாதனையாக இருந்தது. அந்த விலையில் இருந்து இரண்டு ரூபாய் குறைத்து வயிற்றில் பாலை (பெட்ரோலை) வார்த்தனர். இந்நிலையில் மேலும் விலையை குறைக்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
        அப்படி எவ்வளவு ரூபாய் குறைக்க போறாங்கன்னு தெரியுமா? வெறும் ஒரு ரூபாய் மட்டுமே. அந்த ஒரு ரூபாயில் நாம ஒரு கிலோ மீட்டர் கூட அதிகமா போக முடியாது. என்னத்த கொறச்சு?, நாம இப்படியே அவங்க தர்ற அல்வாவுக்கு வாயை தொறந்துகிட்டே இருக்க வேண்டியது தான். ஒரு சொட்டு நெய் கூட நம்ம வாயில விழாது. அப்புறம் இப்படி விலையை குறைச்சா ஒரு சாதனையாம். ஆமாங்க கடந்த 2009ம் ஆண்டு இப்படி அடுத்தடுத்து ரெண்டு முறை விலையை குறைச்சாங்களாம். அந்த சாதனையை இந்த வருஷம் சமன் செய்ய போறாங்களாம். எப்படியெல்லாம் சாதனை செயறாங்கப்பா, முடியல...

இப்போ வேதனையான செய்தி:


  மின்சார கட்டணம் கூட போகுதுன்னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்காங்களே அதோட சேர்ந்து சின்ன பூச்சாண்டியும் காட்ட போறாங்க.  அதாவது ஏற்கனவே மின்சார வாரியம் மின்சார பயனீட்டு அளவுக்கு ரேட்டை உயர்த்தி ஒரு மாதிரியை மக்கள் மத்தியில் சர்வே மாதிரி பூச்சாண்டி காட்டிட்டு இருக்காங்கள்ல. அந்த ரேட்டே இப்போ இருக்கிற அளவை விட ரெண்டு மடங்கு அதிகமா ஒரு யூனிட்க்கு அதிகமாயிருச்சு. அதே போல கொறஞ்சபட்ச மாதாந்திர கட்டணமும் ரெண்டு மடங்கா அதிகரிக்க போறாங்களாம். அதாவது நாப்பது ரூபாயில் இருந்து, நூத்திபத்து ரூபாயாக ஏத்த போறாங்க.
         அது என்னான்னா நாம கரண்ட் யூஸ் பண்ணினாலும் இல்லைனாலும், மினிமம் அமௌன்ட் மாசா மாசம் கட்டனுமாம். அந்த அமௌன்ட்டும் அதிகமாயிருச்சு. இப்போ சொல்லுங்க ஒரு நாளைக்கு அஞ்சாறு மணிநேரம் கரண்ட் இருக்கிறது இல்லை. இப்போ ரேட்டும் அதிகமாயிருச்சுன்னா நாம கரன்ட்டை சிக்கனமா பயன்படுத்தறோம்னு சொல்லி ஆதிகாலத்துக்கு போகாம இருந்தா சரி தான்...

இன்றைய பொன்மொழி:
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே!

இன்றைய விடுகதை:
செடியில் விளையாத பஞ்சு
தறியில் நூற்காத நூல்
கையில் தொடாத துணி. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: குடம்
முந்தைய விடுகதைக்கான இடுகை: 

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0



மேலும் வாசிக்க... "அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?"

எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

      தமிழ் பேரன்ட்ஸ் வலை நண்பர் சம்பத்குமார் அவர்கள் எனக்குள் நான் என்ற தொடர்பதிவில் என்னையும் தொடர்பதிவிட மிரட்டல் விடுத்திருந்தார். அவர் மிரட்டலை தட்ட முடியாமல் ஏதோ எழுதி இருக்கேன். கண்டிப்பா படிச்சிருங்க.

நான்: ஊர் ஒலகத்துக்காக அப்பா, அம்மா வச்சது பிரகாஷ் குமார். பதிவுலகிற்காக நான் வச்சது தமிழ்வாசி பிரகாஷ். அப்புறம் என்னைப் பத்தி சொல்றதுக்கு அப்படியொண்ணும் சாதனை பண்ணல.


பிறந்த நாள்: டிசம்பர் 14


பிறந்த, வளர்ந்த இடம்: பிறந்தது வத்தலக்குண்டு, வளர்ந்தது திண்டுக்கல்.


இருப்பது: பார்க்கும் வேலைக்காக மீனாட்சியம்மன் குடியிருக்கும் மதுரைக்கு வந்து ஏழு வருசமாச்சு.


படிப்பு: டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங்


வேலை: கோவை, சென்னை என அங்க இங்க சுத்திட்டு இப்போ ஏழு வருசமா தனியார் டயர் தயாரிக்கும் கம்பெனில வேலை பாக்கிறேன்.


பிடிச்ச விஷயங்கள்: நெறைய இருக்கு. குடும்பம், நண்பர்கள், இக்கட்டில் உதவியவர்கள் மற்றும் பதிவுலகம்(பலரால்)


பிடிக்காதது: ஏமாற்றுதல், சூழ்ச்சி மற்றும் பதிவுலகம்(சிலரால்)


நட்புக்கள்: இருக்காங்க. பள்ளி, கல்லூரி நண்பர்கள், முகம் தெரியா பதிவுலக நண்பர்கள்.


காதல்: முதல் காதல் திண்டுக்கல் டூ மதுரை ரயில் பயணங்களில், தண்டவாளம் போல சேராமலே போயிருச்சு. இரண்டாம் காதல், பெற்றோர் பார்த்து முடிவு செஞ்ச பெண்ணை, இரண்டு வருடம் லவ்வி, திருமணம் முடிஞ்சு மூணு வருசமாச்சு.


அன்பு, பாசத்துக்கு: அம்மா, அப்பா, மனைவி ஆகியோர்.


மறக்க முடியாதது: திரும்பி வராத பள்ளி, கல்லூரி நாட்கள், நானும் என் மனைவியும் காதலித்த நாட்கள்(மறக்க முடியுமா?). 


மறக்க நினைப்பது: நிறைய இருக்கு. இப்போது ஞாபகப்படுத்த விரும்பவில்லை.


சந்தோஷம்: பணியிடத்தில், வீட்டில், நண்பர்களிடத்தில் எப்போதும் சந்தோஷம் நிறைந்திருக்க வேண்டும். அதை தினமும் கடைபிடிக்கனுமே அதுவே ஒரு சந்தோஷம் தான்.


பலம்: சொல்வதை சுருக்கமாக நறுக்குன்னு சொல்றது.


பலவீனம்: சொல்வதை சுருக்கமாக நறுக்குன்னு சொல்றது. (ஆமாங்க, பிட்டு போட தெரியாது.)


கோபம்: முன் கோபம் அதிகம். (அப்ப பின் கோபம் இல்லையான்னு கேட்க கூடாது)


ஏமாற்றம்: அம்மா ஆட்சியின் விலையேற்றம். (நெஜமாலுமே சமாளிக்க முடியலைங்க)


பிடிச்ச பொன்மொழி: மன்னிப்போம், மறப்போம்!


பிடிக்காத பொன்மொழி: மருமக ஒடச்சா மண்குடம், மாமியார் ஒடச்சா பொன்குடம். (வேலையில் தவறு என்னால் வரவில்லை. அவங்களால தான் தவறு வந்துச்சுன்னு ஆபீஸ்ல ஒருத்தர் எப்பவுமே மத்தவங்க பழி போடுவாரு. அப்போ இந்த பொன்மொழியை அவர் கிட்ட சொல்வேன்.)


பொழுதுபோக்கு: இணைய தேடல், பதிவு எழுதுதல், வாசித்தல்...


ரசிப்பது: எங்கள் கம்பெனி மலையோரத்தில் இருப்பதால் மயில்களும், குரங்குகளும் நிறைய வரும். அவற்றின் விளையாட்டுகளை ரசிச்சு பார்ப்பேன். அன்றைய டென்சன் குறைந்து விடும்.


பிடிச்ச சுற்றுலா தளம்: கொடைக்கானல். அதுவும் பனிக் காலத்தில் அந்த மெல்லிய சாரலுடன் ஹோக்கர் வாக்ஸ்-இல் நடந்து செல்ல ரொம்ப பிடிக்கும்.


நிறைவேறாத ஆசை: வெளிநாட்டில் வேலை பார்க்கனும்.


கடவுள்: விநாயகர், முருகன், ஆஞ்சநேயர்.


சமீபத்திய பெருமை: வலைச்சரத்தில் நிர்வாக ஆசிரியர் குழுவில் திரு. சீனா ஐயாவுடன் இணைந்தது.


தற்போதைய சாதனை: மெக்கானிகல் துறையினருக்காக CNC பிரிவில் எழுதும் தொடர்.


தொடர்புக்கு: 
முகநூல்: https://www.facebook.com/sprakashkumar
முகநூல் குழுமம்: https://www.facebook.com/groups/tamilvaasi/
கூகிள் ப்ளஸ்: https://plus.google.com/u/0/106412922467461633842/posts
ட்விட்டர்: https://twitter.com/#!/tamilvaasi

மேலும் என்னைப்பற்றி அறிய: இந்த லிங்க் பாருங்கள்.

இந்த எனக்குள் நான் என்ற பய(ங்கர) டேட்டாவை எழுத நான் அழைக்கும் நண்பர்கள்:

என்னை பத்தி சொல்லிட்டேன். பிடிச்சிருந்தாலும், பிடிக்கலைனாலும் உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க. 


மேலும் வாசிக்க... "எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு"



"வொய் திஸ் கொலவெறி டி" - Why This Kolaveri Di

              
     தனுஷ் மனைவி ஐஸ்வர்யா எழுதி இயக்கும் "3" என்ற படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.  இசை புதுமுகம் அனிரூத். இந்தப்படதுக்காக தனுஷ் ஒரு பாடலை எழுதி அவரே பாடியுள்ளார். "வொய் திஸ் கொலவெறி" என ஆரம்பிக்கும் பாடல் வெளியாகி பத்து நாட்களில் செம ஹிட் ஆகியுள்ளது. கடந்த பத்து நாட்களில் இணையத்தில் அதிகம் கேட்கப்பட்ட பாடல் இது தான் என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. 
       இவ்வளவு பிரபலம் ஆனாலும் ஒரு சில பிரச்சனைகள் அந்த பாடலுக்கு வந்துள்ளது. பெண்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் இருப்பதாக பிரச்சனை எழுந்துள்ளது. அதற்கு விளக்கம் அளித்த தனுஷ் கதைக்கு தேவைப்பட்டே அந்த பாடல் வரிகளை எழுதியிருப்பதாகவும், அந்தப் படத்தில் வரும் பெண் கதாபாத்திரத்துக்கு மட்டுமே இந்த பாடல் பொருந்தும் என்றும் எல்லா பெண்களையும் தாக்கி எழுதவில்லை என ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். 
     இந்தப் பாடல் வரிகள் முழுதும் லோக்கல் இங்க்லீஷ் கலந்து எழுதியுள்ளார். கொலவெறி என்ற வார்த்தை மட்டுமே தமிழ். மற்ற வார்த்தைகள் எல்லாம் இங்கிலீஷ் தான்.
இதோ அந்த பாடல்:

     இந்த பாடல் யூட்யூப்-இல் இருந்து இணைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்க்கை இங்கே இடுகையில் இணைக்கும் போது வரை யூட்யூப்-இல் மொத்தம் 6,796,845 பேர் பார்த்துள்ளார்கள்.

பாடல் வரிகள்:
yo boys i am singing song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
rhythm correct
why this kolaveri kolaveri kolaveri di
maintain this
why this kolaveri..di

distance la moon-u moon-u 
moon-u  color-u  white-u
white background night-u nigth-u
night-u color-u black-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

white skin-u girl-u girl-u
girl-u heart-u black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama notes eduthuko
apdiye kaila sax eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4

whaa wat a change over maama

ok maama now tune change-u

kaila glass
only english.. 

hand la glass
glass la scotch
eyes-u full-aa tear-u
empty life-u
girl-u come-u
life reverse gear-u
lovvu lovvu 
oh my lovvu
you showed me bouv-u
cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u

this song for soup boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

flop song


thanks: youtube
www.magicalsongs.blogspot.com

மேலும் வாசிக்க... ""வொய் திஸ் கொலவெறி டி" - Why This Kolaveri Di"



மழை பொழிய இது தான் காரணமா? இம்புட்டு நாளா தெரியலையே!

நண்பர்களே,
ரெண்டு மூணு நாளா ரொம்ப பிஸி. அதனால இன்னைக்கு சின்ன பதிவா போடறேன். 
இது நாள் வரை மழை பெய்ய ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் நெனச்சிட்டு இருந்திருப்போம். ஆனா இங்கே கீழே இருக்குற படத்தை பார்த்தா உண்மையான காரணம் தெரியவரும். 
நம்ம ஹீரோ மேகம் ஹீரோயின் மேகத்தை லவ் பண்ண பிட்டு போடறார். ஹீரோயினும் கண்ணடிச்சு ஓகே சொல்றாங்க...

            ஹீரோயின் மேகம் இன்னொரு மேகம், யாருயா அது? வேற யாரு? ஹீரோயின் அப்பா தான். ஹீரோ மேகத்துக்கு வார்னிங் கொடுக்கிறாரு. எம்பொண்ணை பார்த்த... பேசின.... அப்படி இப்படின்னு நிறைய டயலாக் பேசுறாரு.

        "போகுதே... போகுதே... என் பைங்கிளி வானிலே...." அப்படின்னு நம்ம ஹீரோ மேகம் ஹீரோயின் மேகத்தை பார்த்து சோகமா பாடறாரு. ஹீரோயின் மேகத்தை அந்த வில்லன் அப்பா தரதர என இழுத்துட்டு போறாரு. அப்பா பேச்சை தட்ட முடியாத ஹீரோயின், ஹீரோவை ஏக்கமா பாக்கறாங்க.

           அடடா.... காதல் முறிஞ்சு போச்சே.... நம்ம ஹீரோவுக்கு, ஒரு பிகர கரெக்ட் பண்ணி அதை லவ் செய்ய இம்புட்டு பாடுபட்டும் தோல்வியா ஆயிருச்சே....

         வேற வழி தெரியாம நம்ம ஹீரோ குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிச்சுட்டார். ஒரு ஆம்பிள இப்படி அழலாமா? 


        ஓ... இதனால தான் வானத்துல இடி இடிச்சு, மின்னல் வெட்டுடன் மழை பெய்யுதா? அப்ப காதல் தோல்வி ரொம்ப இருக்கும் போல வானத்துல.... எப்படியோ நமக்கு மழை பெய்தா சரி? 
யாருல அங்க அருவாள தூக்றது?


மேலும் வாசிக்க... "மழை பொழிய இது தான் காரணமா? இம்புட்டு நாளா தெரியலையே!"



சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை


ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65  போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள். அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே.  


       சிக்கனுக்கு பதிலாக என்ன உயிரினம் கலப்படம் செய்யப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்தி விடுவீர்கள். சிக்கனுக்கு பதிலா எலிக்கறி கலப்படமாக சேர்க்கப்படுகிறது. என்ன நண்பர்களே, அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், எலிக்கறி தான் சேர்க்கப்படுகிறது. 

   எப்படி எலி கிடைக்கிறது?
    மளிகை கடைகள் இருக்கும் மார்க்கெட்டில் எலிகள் அதிகமா இருக்கும். சாக்கு மூட்டைகளுக்கு இடையில், டின்களுக்கு இடையில், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். கடைக்காரர்கள் அந்த எலிகளை பிடிப்பதில் அவ்வளவா ஆர்வம காட்டுவது கிடையாது. அப்புறம் யார் பிடிக்கராங்கன்னு கேட்கறிங்களா? சில்லி சிக்கன் விக்கிற ஆளுங்க பிடிக்கறாங்க. காலையில அஞ்சு மணிக்கெல்லாம் மார்க்கெட்டுக்கு போயிருவாங்க, ஏற்கனவே எலிகளை பிடிக்க பொறிகளை மொத நாளே வச்சிருப்பாங்க. அரிசி பருப்பை தின்னு நல்லா கொழுகொழுன்னு எலிகள் அந்த பொறிகளில் மாட்டி இருக்கும். கடைக்காரங்களுக்கு எலித்தொல்லை இல்லாம இருந்தா போதும்னு சந்தோசப்படுவாங்க. 

சிக்கனுக்கும், எலிக்கும் என்ன வித்தியாசம்:
வெந்த சிக்கனை பிச்சு பாருங்க, வெளுமையா இருக்கும், நார் போல நீள நீளமா இருக்கும். ஆனா எலிக்கறியை பிச்சு பார்த்தா கொஞ்சம் பழுப்பு நிறமா இருக்கும். சதையும் சிக்கனை போல சற்று நார் நாராக இல்லாமல் நல்ல மிருதுவாக கட்டி கட்டியா இருக்கும். கொஞ்சம் கவனமா பார்த்தா வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

என்ன நண்பர்களே! கடைசியா நீங்க ரோட்டோர கடைகளில் சாப்பிட்டது சிக்கனா? எலியா? யோசிங்க...

டிஸ்கி: இந்த செய்தி திண்டுக்கல்லில் நடந்த உண்மை சம்பவம்.
மீள்பதிவு.
பொன்மொழி, விடுகதை அடுத்த இடுகையில்...

மேலும் வாசிக்க... "சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை"



மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0

     மைக்ரோசாப்ட் விண்டோஸ் முதல் பதிப்பில் இருந்து அண்மைய பதிப்பு (Windows version 1.0 to 8.0) வரை எப்படி இருந்தது என இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

1985 - Windows 1.0 
      அந்த காலத்தில் கணினி உபயோகம் கடினமாக இருந்த சமயத்தில் விண்டோஸ் 1.0 பதிப்பு வெளியானது. அது ஓரளவு எளிமையாகவும், பல விசயங்களை உள்ளடக்கியும் இருந்தது.


1987 - Windows 2.0
      முதல் பதிப்பில் இருந்து கண்ட்ரோல் பேனலில் சில திருத்தங்களுடன் 1987-இல் இரண்டாம் பதிப்பு வெளியானது.


1988 - Windows 2.1
    இரண்டாம் பதிப்பில் இருந்து புதியதாக பெயிண்ட் மென்பொருள் இணைத்து மேலும் சில மேம்பட்ட வசதிகளுடன் மூன்றாம் பதிப்பு வெளியானது.


1990 - Windows 3.0
     இந்த மூன்றாம் பதிப்பில் FILE MANAGERஆனது MS DOS முறையிலிருந்து மேம்படுத்தப்பட்டு புதிய FILE MANAGER மற்றும் PROGRAM MANAGER உருவாக்கப்பட்டது.


1992 - Windows 3.1
    இந்த பதிப்பில் HARD DISKஇல் 32 BIT சப்போர்ட் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல் முறையாக Minesweeper game உருவாக்கி செயல்படுத்தப்பட்டது.


1995 - Windows 95
     GRAPICS SUPPORT மற்றும் COMMUNICATION PROGRAMS உடன் DESKTOP பார்க்க சிம்பிளாக அழகாக இந்தப் பதிப்பு வெளியானது.


1998 - Windows 98
       இப்போது வரை விண்டோஸ் 98 மிகவும் வெற்றிகரமான பதிப்புகள் ஒன்று, இந்த பதிப்பு இன்னும் கூட சில கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரிவாக்கப்பட்ட மென்பொருள்கள், சிறந்த செயல்திறன் கொண்ட, இந்த பதிப்பு விண்டோஸ் வளர்ச்சி பாதையில் முதல் மைல்கல்லாக இருந்தது.


2000 - Windows ME
    இந்த பதிப்பு "விண்டோஸ் மீ" அல்லது "விண்டோஸ் மில்லினியம்" என அழைக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்தப் பதிப்பு தற்போதைய விண்டோஸின் சில செயல்பாடுகளை விட சிறந்த செயல்பாட்டைக் கொண்டு இயங்குகிறது. (இன்றும் நான் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு கணினியில் இந்த பதிப்பு தான் உள்ளது)


2001 - Windows XP
   விண்டோஸின் அனைத்து பதிப்புகளின் தந்தை என இது அழைக்கப்படுகிறது. இன்றும் இந்தப் பதிப்பு மிக பிரபலமாக உபயோகப்படுத்தபடுகிறது. இதற்குக் காரணம் இதன் எல்லையில்லா செயல்திறன், முகப்பு பக்க வடிவமைப்புகள், மற்றும் சிறந்த டூல்ஸ்களை கொண்டுள்ளது. விண்டோஸ் 7 வரும் வரை இந்தப் பதிப்பே சிறந்த பதிப்பாக இருந்தது.


2006 - Windows Vista
       இந்தப் பதிப்பின் முகப்பு மட்டும் பிரபலம். ஆனால் சிறந்த பதிப்பாக அனைவராலும் அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும் முந்தைய பதிப்பில் இருந்து நிறைய மாறுபாடுகள் கொண்டிருந்தது.


2009 - Windows 7
      இன்றைய தேதிக்கு விண்டோஸின் சிறந்த பதிப்பு இது. பக்க இணைப்புகள் மற்றும் நிறைய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இந்த பதிப்பில் புதிதாக இணைக்கப்பட்டன. இதனால் விண்டோஸ் 98 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி க்கு அடுத்த மைல் கல்லாக இந்தப் பதிப்பு உள்ளது. 


2012 - Windows 8
     அநேகமாக அடுத்த ஆண்டு இறுதியில் வெளிவரும் என நினைக்கிறேன். முந்தய பதிப்புகளை காட்டிலும், தோற்றம், செயல்பாடுகள், வேகம் போன்றவற்றில் மேம்பட்டு இருக்கும் வகையில் இருக்கும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
images and contents: google search

இன்றைய பொன்மொழி:
ஆயிரம் உபதேசங்கள் சொல்பவர்களை விட ஒரு ஆசிரியரே மேல்!

இன்றைய விடுகதை:
மங்கை வந்து குளிப்பாட்டி
அமுதூட்டி எழுந்தாள்
நாணிக்கோணி இடையில் வைத்து 
அனைத்துக் கொண்டு நடந்தாள். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வெடி
முந்தைய விடுகதைக்கான இடுகை: 

போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)



மேலும் வாசிக்க... "மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0"



போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)

       அனுபவத்தில், வயதில் மூத்த பெண் காரை மிக வேகமாக ஒட்டி போலீஸ் அதிகாரியிடம் மாட்டிக்கொண்ட போது நடந்த வேடிக்கையான உரையாடல் இது.
பெண்: என்னிடம் பிரச்சனையா?, என்ன சார் அது?
அதிகாரி: நீங்க காரை வேகமா ஓட்டிட்டு வந்திங்க. அதான் பிரச்சனை.


பெண்: ஓ... அப்படியா....
அதிகாரி: உங்க டிரைவிங் லைசன்ஸ் தயவு செஞ்சு நான் பார்க்கலாமா?


பெண்: நான் தந்திருவேன். ஆனா அது இப்போ என்கிட்டே இல்லை.
அதிகாரி: என்னது... இல்லையா? ஏன்?


பெண்: குடித்து விட்டு வாகனம் ஒட்டியதுக்காக நாலு வருசத்துக்கு முன்னாடியே அதை பறிமுதல் செஞ்சுட்டாங்க.
அதிகாரி: அப்படியா? அப்போ உங்க காரின் உரிமம், ரெஜிஸ்டர் பேப்பர்ஸ் இருக்கா? நான் பார்க்கலாமா?


பெண்: ஓ... அதுவா? அதுவும் என்கிட்டே இல்லை.
அதிகாரி: ஏன் இல்லை?


பெண்: இந்தக் காரே நான் ஒருவரிடமிருந்து திருடியது. அதான் இல்லை
அதிகாரி: என்ன? இது திருடிய காரா?


பெண்: ஆமா, இந்தக் காரோட ஓனரை நான் கடத்தி கொலை செய்துட்டேன்.
அதிகாரி: (அதிர்ந்து) நீங்க என்ன சொல்றிங்க?


பெண்: அவர நீங்க பாக்கணுமா? இந்த கார் டிக்கியில பிளாஸ்டிக் பையில அவரை கூறு போட்டு கட்டி வச்சிருக்கேன்.


(அந்த அதிகாரி அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் மற்ற போலீஸ் அதிகாரிகளை சைகை மூலம் கூப்பிடுகிறார். உடனே ஐந்து நிமிடத்தில் ஒரு போலீஸ் பட்டாளமே அவர்கள் பக்கத்தில் கூடுகிறது. அந்த போலீஸ் அதிகாரி நடந்த உரையாடலை மற்றொரு அதிகாரியிடம் சொல்கிறார். அவர் அந்தப் பெண்ணை நோக்கி வருகிறார்.)


அதிகாரி 2: அம்மா உங்கள் காரை நாங்க சந்தேகப் படறோம். அதனால சோதனை போடணும். வழி விடறிங்களா?
பெண்: சோதனை போடணுமா? என்ன பிரச்சனை சார்?


அதிகாரி 2: என் அதிகாரி ஒருத்தர், நீங்கள் இந்தக் காரின் ஓனரை கொலை செய்து, அவரை கூறு போட்டு பிளாஸ்டிக் பையில் கட்டி காரின் டிக்கியில் மறச்சு வச்சிருப்பதாக சொன்னார். அதான் சோதனை போடணும்.
பெண்: ஓ... தாராளமா நீங்க சோதனை போடலாம்.


( கார் டிக்கியை திறந்து காட்டுகிறார். அங்கே எதுவும் இல்லை. அதிகாரிகள் ஏமாற்றம் அடைகிறார்கள்.)


அதிகாரி 2: அம்மா, இது உங்கள் கார் தானா? எவிடன்ஸ் இருக்கா?
பெண்: ஆமா, என்னுடையது தான். இதோ காரின் ரெஜிஸ்டர் பேப்பர்ஸ். செக் பண்ணி பாருங்க.
(அதிகாரி பார்வையிடுகிறார். எல்லா பேப்பர்ஸ்ம் சரியாக இருந்தது)


அதிகாரி 2: உங்களிடம் டிரைவிங் லைசன்ஸ் இல்லை என அந்த அதிகாரி சொன்னார். அது உண்மையா?
(அந்தப் பெண் தன் கைப்பையில் சிறிது நேரம் தேடி அவரின் டிரைவிங் லைசன்ஸ்ஐ காட்டுகிறார். அந்த அதிகாரி அதை பார்க்கிறார். அதுவும் சரியாக இருந்தது.)


அதிகாரி 2: எனது அதிகாரி, தாங்கள் இந்தக் காரின் ஓனரை கொலை செய்து விட்டு காரை திருடிக் கொண்டு வந்ததாக சொன்னார். அதான் உங்களையும், காரையும் சோதனை செய்தோம். எல்லாமே சரியா இருக்கு. ஆனா, ஏன் அவர்கிட்ட பொய் சொன்னிங்க?
பெண்: நீங்க மட்டும் நான் வேகமா கார் ஓட்டறேன்னு பொய் சொன்னா எப்புடி ஏத்துக்க முடியும்?


       பாருங்க நண்பர்களே, வேகமா ஒட்டியதும் இல்லாம விவேகமா பேசி போலீஸ் அதிகாரிகள் கிட்டயிருந்து அந்தம்மா எஸ்கேப் ஆயிட்டாங்களே!
டிஸ்கி: 
இது ஆங்கில உரையாடல், உங்களுக்காக மொழி பெயர்த்துள்ளேன். படம் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டது.

இன்றைய பொன்மொழி:
அணுகுண்டு ஒருமுறை தான் வெடிக்கும். நல்ல புத்தகங்கள் பக்கத்திற்கு பக்கம் வெடிக்கும்!

இன்றைய விடுகதை:
துடிதுடித்து இடி இடிக்கும்
சடசடவென்று படபடக்கும். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வாழைப்பழம்
முந்தைய விடுகதைக்கான இடுகை: 

ஷேர் ஆட்டோவும், ஹெல்மெட்டும்



மேலும் வாசிக்க... "போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1