CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



இந்திய அரசே... எனக்கும் வீங்குதே! என்ன செய்ய?

இந்த நிலைக்கு இந்தியா தள்ளப்படுமா?
அய்யா மத்திய அரசே, உங்களுக்கு கஜானா காலி ஆனாலும், நாட்டுல பண வீக்கம் ரொம்ப வீங்கினாலும், இன்டர்நேசனல் பேங்க் கடன் அதிகமானாலும் நீங்க கையை வைக்கறது எங்க அடி மடியில தானே, ஏன்னா உங்களுக்கு இளப்பம் நாங்கதானே. இவிங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டான்னு எங்க நெத்தியில போஸ்ட்டர் அடிச்சு எப்பவோ ஒட்டிட்டிங்களே. நாட்டை ஆள நீங்க மட்டுமல்ல, யாரு வந்தாலும் எங்கள அடிக்கறாங்கயா, எவ்வளவு தான் நாங்களும் தாங்குவோம்? எங்க புலம்பல், எங்க ஏழ்மை, எங்க குடும்ப பொருளாதார வீக்கம் (ஏன், அரசுக்கு மட்டும் தான் பொருளாதாரம் வீங்குமா?) என எதுவுமே உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு சுமை தாங்கியே நாங்க தான?

ரொம்ப  நல்லா ஆட்சி நடத்தி, எங்க வாழ்வாதாரத்தையும் முன்னேத்தி, நாட்டையும் சர்வதேச அளவுல முன்னேத்த உங்கள நம்பி கொண்டு வந்தோம். ஆனா நீங்க எங்கெல்லாம் ஓட்டை, ஓடிசல் இருக்குன்னு பாத்து அங்க போயி எல்லாத்தையும் காலி பண்ணி சுத்தமா தொடச்சு அவங்களோட பாக்கெட்டை நொப்பிக்கறாங்க(நொப்பிக்கிட்டாங்க). அது மட்டுமில்லாம என்னன்னமோல்லாம் நடக்குது. அட, என்னவேனாலும் நீங்க நடத்துங்க. ஆனா எங்களை ஏன் கஷ்டப்படுத்துறிங்க? நாங்க சம்பாதிக்கிற பணத்துக்கும் வரி காட்டுறோம். அதுல நாட்டை ஆள பணம் பத்தலையா? ஏன் பத்தலை? பல முதலைங்க வரி கட்டாம ஏப்பம் விடறாங்க. வெள்ளைப் பணத்தை கருப்பாக்கி உலகத்துல எங்கேயோ ஒரு மூலையில பதுக்குறாங்க. அட, அந்த கறுப்பை பதுக்க நம்ம நாடு கூட அவங்களுக்கு லாயக்கு இல்ல போல... சரி, இதெல்லாம் காலங்காலமா நடந்துட்டு வருது.

இப்ப  நமக்கு என்ன முக்கியம்? விலை வாசி கையை கடிக்க கூடாது. கொஞ்சமாச்சும் நம்ம வருமானத்துல சேமிக்கணும்னு ஆசை வரும். ஆனா நாளைக்கு எதுல விலை கூடப் போகுது? நாளான்னைக்கு எதுல கூடப்போகுதுன்னு தெரியாதுல. அதனால சேமிக்கிற ஆசையும் வேணாம் நமக்கு. பஸ் டிக்கட் ரேட் கூடுனதுல ஒரு லாபம் இருந்துச்சு. அதாவது ரெண்டு பேரு சேர்ந்து பைக்ல போனா கொஞ்சம் காசு மிச்சமாகும். நேரமும் மிச்சமாகும்னு இருந்துச்சு. ஆனா எப்போ பெட்ரோல் உரிமை அரசுக்கிட்ட இருந்து அந்த நிறுவனங்களுக்கு போச்சோ? அப்பவே பைக்ல சேர்ந்து போகறதுக்கும் ஆப்பு வச்சுட்டாங்கயா. ஆமா, அரசு கிட்ட பவர் இருக்குறப்போ வருசத்துல ரெண்டு மூணு வாட்டி பெட்ரோல், டீசல் விலையேத்துவாங்க. அதுவே நம்ம வருமானத்தை மீறி செலவுல வீங்கும். 
இந்தப் படத்துல உள்ள டீடெயில்ல பார்த்து மலைச்சு போயிராதிங்க?

ஆனா, இந்த நிறுவனத்துக்கு பவர் எப்போ போச்சோ? அப்பவே போச்சுங்க நம்ம நிம்மதி. எங்கேயோ சர்வதேசத்துல ரேட் கூடுதாம். அதனால இங்க செலவு கட்டுபடி ஆகலையாம். அப்படியும் மீறி செலவு பண்னுன்னா பண வீக்க விகிதம் ரொம்பவே வீங்குதாம். அதனால பெட்ரோல் ரேட் ஒரு கணக்கு போட்டு கூட்டுவாங்க. இங்க தாங்க அவங்க ஆட்டம் அடங்காம போக ஆரம்பிச்சுச்சு. அவங்க கையிக்கு பவர் போனதுல இருந்து சுமாரா பதினெட்டு தடவ ரேட் கூடியிருக்கு. அதனால நுகர்வோர் பொருட்களின் விலையும் பதினெட்டு தடவ கூடியிருக்கு(இப்படியும் எடுத்துக்கலாம்ல). ஆனா நம்மளோட வருமானம் மட்டும் கூடாது. ஏன்னா, அது நாம வேலை பாக்குறவங்க கையில இருக்கு. அப்படியும் அவங்க வருசத்துக்கு ஒரு தடவ வருமானத்தை கூட்டும் போதும் இந்த விலையேற்றத்தை கவனத்துல வைப்பாங்களா? ம்ஹும்.... ம்ஹும்....

பால் விலை, ஸ்கூல் பீஸ், பஸ் டிக்கட், நுகர்வோர் சாமான்கள் விலையேற்றம், ஆட்டோ,கார் வாடகை ரேட், நெடுந்தூர பேருந்து ரேட், என இப்படி எல்லாமும் விலையேறி சாமானிய மக்களும் நிம்மதியா குடும்பத்த ஓட்ட முடியால. இந்த ரெண்டு மூணு வருசத்துல எல்லா விலையுமே எவரெஸ்ட் மலை மாதிரி ஏறிப் போச்சு. ஆக, இந்த எவரெஸ்ட் மலையில் நாம தான் ஏறணும்? எத்தன பேரால அந்த மலையில ஏற முடியும்? ஏதாவது குறுக்கு வழியில சம்பாதிப்பவன், கறுப்பு பணத்தை பெருக்குறவன், பெரிய பெரிய பவர் இருக்குறவங்க தாராளமா விலையேற்ற எவரெஸ்ட் மலையில் ஏறலாம். ஆனா சாமானிய மக்களான நாம அதுல கண்டிப்பா ஏறித்தான் ஆகணும். ஆனா முடியாது? அதுக்குள்ள இன்னொரு ரூபத்துல ஏதாவது விலையேற்றம் வந்து நம்மள கீழ தள்ளி விட்டுரும். நாம கீழ விழுந்து அடிப்பட்டு நம்ம ஒடம்பு வீங்கும், அதாவது நம்ம குடும்ப வருமானத்தை மீறி செலவு வீங்கும். இந்த வீக்கத்துக்கு மருந்து போட யாரும் வர மாட்டாங்க. வேணும்ன்னா வீக்கத்தை கிள்ளிப் பாக்க வேணா வருவாங்க. அதுதான் இவங்கள நம்புனதுக்கு நமக்கு கெடச்ச பரிசு. 

எல்லா ரேட்டும் ஏறிப்போச்சுங்க, இன்னும் நம்மள எவ்வளவு தான் வீங்க வப்பாங்களோ? ஓட்டு பொட்டு இவங்கள உட்கார வச்சதுக்கு நமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்? சரி, விடுங்க ஏதோ பொலம்பிட்டேன் இன்னைக்கு.... (நான் மட்டுமா புலம்பறேன்? இந்தியாவே புலம்புது)
மேலும் வாசிக்க... "இந்திய அரசே... எனக்கும் வீங்குதே! என்ன செய்ய?"



மதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithirai exhibition 2012

மதுரையில் சித்திரை மாதத்தில் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் சித்திரைப் பொருட்காட்சி கோலாகலமாக ஆரம்பித்து ஒரு மாதமாக போகிறது. எங்களுக்கு இன்று தான் பொருட்காட்சிக்கு செல்ல நேரம் கிடைத்தது. கோரிப்பாளையதில் இருந்தே டிராபிக் அதிகமா இருக்கு. அங்க இருந்து தமுக்கம் போகவே எப்படியும் பத்து நிமிஷம் ஆச்சு. கூட்டம் ரொம்பவே அதிகம். மைதானத்தின் முன் பக்கம் கவுண்ட்டர் பக்கத்துல ஆரம்பிச்ச கியூ ராஜாஜி பார்க் இருக்குற ரோட்டுக்கு திரும்பி ரொம்ப நீளமாவே இருந்துச்சு. ஆனாலும் கியூ வேகமா மூவ் ஆச்சு, ஒரு டிக்கட் பத்து ரூபாய் மட்டுமே.
நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்தில் மக்கள் கூட்டம்

பெண்களுக்கான பேன்சி பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள்

மைதானத்திற்கு உள்ளே எங்க பாத்தாலும் கடைகள், கலர் கலர் லைட், பெரிய விளம்பர ஆர்ச் என ரொம்ப பிசியா களை கட்டி இருந்துச்சு. பஞ்சு மிட்டாய், பாப்கார்ன் என சாப்பிடும் அயிட்டங்களும், லேடிஸ்களுக்கான ஸ்டிக்கர் பொட்டு, ஹேர் பேன்ட், சமையல் அறைகளுக்கான சின்ன சின்ன பொருட்கள், என கடைகள் வரிசையாவே இருந்துச்சு, எல்லா கடைகளும் கியூவால் நிரம்பி இருந்துச்சு. ஒரு கடைக்கு பேரு வெங்காய வெட்டர் அப்படின்னு போட்டிருந்தாங்க. என்னான்னு நுழைஞ்சு பார்த்தா வெங்காயம் வெட்டுற கட்டருக்கு தான் அப்படி வெட்டர்ன்னு போட்டிருக்காங்கன்னு புரிஞ்சுச்சு. அப்படியே ஒவ்வொரு கடைகளா வேடிக்கை பார்த்துட்டு போனோம். 
கைத்தறி ஆடைகளின் ஸ்டால்

அம்மாவின் பெருமையை விளக்கும் ஸ்டால்

இன்னொரு பக்கம் அம்மா படங்கள் பொட்டு ரெண்டு மூணு ஸ்டால் போட்டிருந்தாங்க. வீட்டு வசதி வாரியம், அரசின் விலையில்லா பொருட்கள் உதவி, வடிகால் வாரியம் என அம்மா படங்கள் பொட்டு அவரது சாதனைகள் மற்றும் மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகளை பிளக்ஸ் பேனரில் போட்டிருந்தாங்க.கலையரங்கத்தில் ஆடல் பாடல் நடந்துட்டு இருந்துச்சு. ஆனா நிகழ்ச்சியை பாக்க கூட்டம் தான் இல்லை. 
ஜெயின்ட்வீல் ராட்டினம்


அப்பளம், மிளகாய் பஜ்ஜி ஸ்டால்
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்களை கவரும் விதவிதமான ராட்டினங்கள் நிறைய இருந்துச்சு. வனத்துறை சார்பா ஒரு ஸ்டாலும், பயங்கர பாம்பு திகில் செய்யும் ஸ்டால் என சில இருந்துச்சு. பானிப்பூரி, பாவபஜ்ஜி, சோலாபூரி, மசாலா பூரி, ஐஸ்க்ரீம், பால்கோவா, கூல்ட்ரிங்க்ஸ் என ஏகப்பட்ட கடைகள். எனக்கென்னமோ இந்த வருட பொருட்காட்சியில் நிறைய மிஸ் ஆனது போல இருந்துச்சு. பொதுவா கடைகள் குறைவாகவே இருந்துச்சு. வீட்டு உபயோக பொருட்களின் ஸ்டால்களும் குறைவே.
எந்தப்பொருள் எடுத்தாலும் ஏழு ருபாய்

எந்தப் பொருள் எடுத்தாலும் அஞ்சு ரூபான்னு இருந்தது எல்லாம் இந்த வருஷம் ஏழு ரூபாயா விலை ஏறி இருந்துச்சு. அடுத்த வருஷம் இந்த பொருட்கள் எப்படியும் பத்து ரூபாய்க்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. மதுரை மக்களுக்கு பொழுபோக்க சில இடங்களே இருப்பதால் தமுக்கம் மைதானத்தில் எந்த பொருட்காட்சி, கண்காட்சி போட்டாலும் கூட்டம் அலை மோதும். அதிலும் ஞாயிறு என்றால் சொல்லவே வேண்டாம். பயங்கர கூட்டம் இருக்கும். பொதுவாக பொருட்காட்சி, கண்காட்சி என தமுக்கத்தில் குடும்பத்துடன் நன்றாக என்ஜாய் செய்து பார்க்க திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களில் போகணும். 
மேலும் வாசிக்க... "மதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithirai exhibition 2012"



சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(chennai youth blogger meet live telecost)

இனிய சக வலைபதிவர்களே,


சென்னையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யூத் பதிவர்கள் சந்திப்பின் நேரலைக்கான லிங்க்:


http://www.justin.tv/selwin76?utm_campaign=post_live&utm_source=live&utm_medium=url#/w/3108118000


மேற்கண்ட லிங்க்-ஐ கிளிக் செய்து பதிவர்களின் அரட்டைகளுடன் நீங்களும் இணையுங்கள்.


பதிவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை நேரலையில் காண கீழே உள்ள ப்ளேயரில் ப்ளே(play) செய்யவும்....
(நண்பர்களே, சந்திப்பு நிறைவடைந்த படியால் கீழ்க்கண்ட லிங்க் வேலை செய்யாது. )


Watch live video from selwin76 on www.justin.tv
மேலும் வாசிக்க... "சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(chennai youth blogger meet live telecost)"

சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் புதிய முயற்சி

இனிய சக வலை பதிவர்களே,

சென்னையில் இன்று(20-05-2012) மாலை நான்கு மணியளவில் டிஸ்கவரி புக் பேலசில் சென்னை பதிவர்கள் ஒன்று கூடி நடத்தும் யூத் பதிவர்கள் சந்திப்பு இனிதே நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில் கலந்து கொள்ள தமிழகமெங்கும் உள்ள பதிவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தமிழ்வாசியின் வாழ்த்துக்கள்.


இந்த சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்க்கும் வண்ணம் நமது சக பதிவர்கள் நக்ஸ்+சுரேஷ் அவர்கள் ஓர் சிறப்பு ஏற்பாடு செய்ய இருக்கிறார்கள். சந்திப்பின் நேரலை www.justin.tv என்ற முகவரியில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒளிபரப்பிற்கான தனி லிங்க் நமது பதிவர்களின் முகநூல் மற்றும் டிவிட்டர் தளங்களில் மாலை நான்கு மணியளவில் வெளியிடப்படும். நமது தமிழ்வாசி தளத்திலும் நேரலை-யின் லிங்க் இணைக்கப்படும்.

மேலும் நேரலை வீடியோவாக ஒளிபரப்ப நமது தமிழ்வாசி தளத்தில் முயற்சி மேற்கொண்டுள்ளோம். நாம் மேற்கொண்டுள்ள தொழில்நுட்பங்கள் வெற்றி பெற்றால் நமது பதிவுலக வரலாற்றில் புதிய நேரலை நுட்பம் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் எல்லா பதிவர்கள் சந்திப்பிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

யூத் பதிவர்கள சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.


டிஸ்கி: எனது அலுவக வேலை காரணமாக யூத் பதிவர்கள் சந்திப்பிற்கு என்னால் செல்ல இயலவில்லை.
மேலும் வாசிக்க... "சென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் புதிய முயற்சி"



இந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன?

ஹாய் மக்காஸ்,
இந்த பொண்ணு ஏதோ ரிஸ்க்கான கணக்கு போட்டிருக்கு. ஆன்சர் யாருக்காச்சும் தெரியுமா? தெரியும்னா சொல்லுங்க. தெரியலைன்னா அடுத்த படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க. ஆனா அந்த ஆன்சரை உங்களுக்காக எடுத்துக்க கூடாது, ஆமா சொல்லிப்புட்டேன்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

இதான் அந்த கணக்குக்கு ஆன்சர்.....
(ஹி...ஹி..... என்ன மக்காஸ் பொண்ணு ஐலவ்யூ ஆன்சரா சொல்லியிருக்கு...)
மேலும் வாசிக்க... "இந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன?"



ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்கார்டு ஆபர்களுக்கும், சம்பந்தம் இருக்குமோ?

ஸ்பெக்ட்ரம்ல பெரும் ஊழல்ன்னு ஜெயிலுல பதினைஞ்சு மாசமா நம்ம ராசா தனிமையில குடும்பத்த விட்டுபுட்டு, ருசியா சாப்பிடாம, தலைவருக்கு ஆதரவா தேர்தல் மேடைகளில் ஏறாம ரொம்பவே இறுகிப் போயிட்டார். என்ன நெனச்சாரோ, ஜாமீன்ல வந்தா உயிருக்கு உத்திரவாதம் இல்லைன்னு சொல்லிட்டு இருந்தவரு, திடீர்னு ஜாமீனுக்கு அப்ளை பண்ணி, கோர்ட்டும் அவரை ஜாமீன்ல விட்டுடுச்சு. ஆனா தலைநகரத்தை விட்டு வெளியே போக முடியாதுன்னு நீதிபதி சொல்லிப்புட்டார். அதனால ராசா கொஞ்சம் நிம்மதியா இருப்பார்னு சொல்றாங்க. ஏன்னா, ஏற்கனவே உயிருக்கு உத்திரவாதம் இல்லைன்னு சொல்லி இருக்காரே, அப்போ தமிழகம் வந்தா?????? அதான் வரமுடியாம கோர்ட் தடை போட்டிருக்கு.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செஞ்ச எல்லோருமே ஜாமீனுல வெளிய வந்துட்டாங்க. திமுக எம்பி கனிமொழி, சித்தார்த் பெகுரா, என வழக்குல சிக்கிய எல்லோருமே ஜாமீனுல வந்ததுக்கு அப்புறமா நம்ம ராசா வந்திருக்கார். இனி இந்த வழக்குல என்ன நடக்கும்? ஸ்பெக்ட்ரம்ல பல கோடிகளுக்கு வித்த தொலைதொடர்பு அலைவரிசைகள் என்னாவாகும்? சில மொபைல் நிறுவனங்கள் ஆபர் மேல ஆபர் போட்டு, சிம் கார்டுகளை ரோட்டோரத்துல ஒரு நிழல்குடையை போட்டு விக்கராங்களே, அதெல்லாம் ஸ்பெக்ட்ரம்ல வாங்கினதா இருக்குமோ? என்னமோ போங்க, கம்மியான காசுல சிம் கார்டு, அதுல நம்ப முடியாத அளவுக்கு டாக்டைம் இருக்குல. அது போதுங்கன்னு சொல்றிங்களா? ஓகே... ரைட்டுங்க.... இருக்குற வரை என்சாய் பண்ணுங்க. 

இப்படித்தான் நானும் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி குடைக்கு கீழ வித்த டிவி நிறுவன சிம் கார்டு நல்லா ஆபர் (டெயிலி ஒரு மணிநேரம் பிரீ டாக் டைம்) இருக்குன்னேன்னு வாங்கி யூஸ் பண்ணிட்டு இருந்தேன். ஆனா, ஒரு மாசமா சரியா கவரேஜ் கிடைக்க மாட்டிங்குது. சிட்டிக்கு அவுட்டர்ல போனா வேற மொபைல் நிறுவன கவரேஜ் காட்டும். ஆனா, இப்போ அந்த நிறுவன கவரேஜ்ம் கிடைக்க மாட்டிங்குது. இந்த நிறுவன கவரேஜ்ம் கிடைக்க மாட்டிங்குது. அந்த ஏரியாவுல டவர் பிராப்ளமா இருக்கும்னு நெனச்சுட்டு இருந்தேன். அப்புறமா ரீசார்ஜ் கடையில கேட்டா, அந்த மொபைல் நிறுவனம் ஓட்ட போன் டவரை வாடகைக்கு எடுத்திருந்தாங்க, இப்போ அந்த டீலிங் முடிஞ்சிருக்கும்னு சொன்னார். சரி, கஸ்டமர்கேர் போன் போட்டு கேட்டா ஒன்னை அமுக்குங்க, ரெண்டை அமுக்குங்க, மூணை அமுக்குங்க அப்படித்தான் சொல்றாங்க. யாருமே பேச வர மாடிங்கறாங்க. அப்படியே லைன் கிடைச்சாலும் எல்லா சேவை அதிகாரிகளும் ரொம்ப பிசியா இருக்காங்கன்னு சொல்லி கட் பண்றாங்க. இந்த கவரேஜ் இல்லாத்ததுனால கம்பெனி வேலை விஷயமாவும், நண்பர்கள் கிட்டயும் தொடர்பு கொள்ள முடியாம போயிருச்சு.

அதுக்காக யார்கிட்டயும் பேசாம இருக்க முடியாதே, அதான் மறுபடியும் ஒரு குடைக்கு கீழ வித்த இன்னொரு கம்பெனி சிம் வாங்கிட்டேன். ஹி..ஹி... அதுலயும் கம்மியான காசுக்கு நிறைய பேசலாம். டாப்அப் பணத்துக்கும் அதிகமா டாக்டைம். நமக்கு அதானே வேணும். ஒரு ஏழெட்டு வருசமா டெல் நிறுவன நம்பர்தான் பெர்மணென்ட்டா வச்சிருந்தாலும், ஒரு கால் பேசவே கால்ரேட் அதிகம். அதனால தான் இன்னொரு சிம் கார்டு.... 

இப்ப என்ன சொல்ல வரேன்னா? ஸ்பெக்ட்ரம் ராசா ஊழலுக்கும் இந்த சிம் கார்டுகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடாது. ஆமாங்க, நாம யூஸ் பண்ணிட்டு இருக்குற சிம் கார்டுகள் திட்டீர்னு முடங்கி போகக்கூடாதுங்க..... இப்படியே எத்தனை சிம்கார்டு வாங்குறது???
மேலும் வாசிக்க... "ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்கார்டு ஆபர்களுக்கும், சம்பந்தம் இருக்குமோ?"



ப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணைப்புகளை அழகாக இணைக்க - vote buttons version 2

நாம் நமது வலைப்பூவில் எழுதி வரும் இடுகைகளை மற்றவர்கள் படிக்க ஏதுவாக திரட்டிகளிலும், சமூக தளங்களிலும் இணைக்கிறோம். அதோடு மட்டுமில்லாமல் நமது இடுகையை பலரும் ஓட்டு போடும் வகையில் திரட்டிகள் மற்றும் சமூக தளங்களின் ஓட்டு மற்றும் விருப்ப பட்டைகளை வைத்து பிரபலப்படுத்துகிறோம்.


அவ்வாறு நாம் ஓட்டுப்பட்டைகளை நமது தளத்தில் நிறுவும் போது பல சிக்கல்களுக்கு உள்ளாவோம். முதலில் பட்டைகளின் நிரலிகளை தேடி எடுக்க வேண்டும். பின்னர் நமது டெம்ப்ளேட்டில் சரியான இடத்தில் நிறுவ வேண்டும். அப்படி நிறுவினாலும் ஒழுங்கின்றி இல்லாமல் வரிசையாக வைக்க வேண்டும், என பல முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்கிறோம்.

முக்கியமான திரட்டிகள், மற்றும் சமூக தளங்களில் பட்டைகளை ஒரே இடத்தில் வரிசையாக இங்கே இன்ட்லி, தமிழ்10, யுடான்ஸ், பேஸ்புக் லைக், கூகிள்ப்ளஸ், டிவிட்டர், பேஸ்புக் ஷேர் நிரலிகளை எப்படி எங்கே நிறுவுவது என பார்ப்போம். அதோடு நமது பேஸ்புக் பக்கம், கூகிள்ப்ளஸ் பக்கம், டிவிட்டர், RSS FEED ஆகியவற்றின் இணைப்புகளையும், மற்றவர்கள் மெயில் மூலம் நமது இடுகைகளை தொடரும் வகையில் அவர்கள் மெயில் ஐடியை பதிய MAIL SUBSCRIPTION BOX ம் இணைத்து ஒரே தொகுப்பாக நமது பிளாக்கில் வைக்க கீழ்க்கண்ட வழிகளை கையாள வேண்டும்.

முக்கிய குறிப்பு: 
நண்பர்களே, எனது Automatic Read More With Thumbnails என்ற பதிவில் readmore வசதியை எவ்வாறு இணைப்பது என பகிர்ந்துள்ளேன், இதை முதலில் நீங்கள் உங்கள் தளத்தில் இணைத்த பின்னர் இந்த பதிவில் கீழே பகிர்ந்துள்ள ஓட்டுப்பட்டைக்கான நிரலிகளை இணைக்கவும். வெறும் ஓட்டுப்பட்டைக்கான நிரலிகள் மட்டும் இணைத்தால் சில தவறுகள் வரும். எனவே, தவறுகளை தவிர்க்க readmore வசதியை இணைத்த பின் ஓட்டுபட்டையை இணைக்கவும்.


demo image
1. முதலில் DASHBOARD > DESIGN > EDIT HTML செல்ல வேண்டும்,

2. DOWNLOAD FULL TEMPLATE என்பதை கிளிக் செய்து அப்போதைய டெம்ப்ளேட்டை தரவிறக்கம் செய்ய வேண்டும். நாம் மாற்றம் செய்கையில் ஏதேனும் தவறு நேர்ந்தால் நமது வலைப்பூவை பழைய படி மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.

3. EXPAND WIDGET TEMPLATES டிக் செய்த பின்னர் ஏற்கனவே உள்ள இன்ட்லி, TAMIL10, உலவு, யுடான்ஸ், பேஸ்புக், கூகிள் ப்ளஸ், டிவிட்டர் நிரலிகளை நீக்கி விடவும்.

4. CTRL+F கொடுத்து </head> என்ற வரியை கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்த பின்னர் கீழ்க்கண்ட நிரலிகளை </head> முன்பாக இணைக்கவும்.

<style type='text/css'>.sub-box{width: 600px;background: #fff;padding: 2px 5px 7px 7px;border: 2px solid #000;border-radius: 15px;}.sub-box:hover{border-style:dashed; 2px solid: #389af2;}.followlinks h1{font-family:Cabin Condensed;font-weight: bold;color: #000;padding: 0px 0px 2px 40px;;font-size:17px;}.followlinks ul{font-family:Cabin Condensed;font-weight: bold;}.followlinks ul li{float:left;width:90px;padding-left:40px;margin:0 0 0 5px !important;line-height:35px !important;}.followlinks ul li a{font-size:20px !important;text-decoration:none;font-weight:normal;}.followlinks ul li.otrss{background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQU9Drg8USI7xAOfsfWYRfGSdrIDB3NEZd3mG_AN3O0iSZbjALQAeioM1JewUAFcNjqd9Aq8ilFvt8FjVclIed1I3yd8Wb9p5nqL2GD7tuxRQNG0IqcdMJrcQ2mcmCVmvrKwNf_KQXHJxt/s1600/rss-ot.png) no-repeat scroll left center transparent;}.followlinks ul li.otgoogleplus{background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtUqoTirM_mJ7jIc8NWszhu6dhr1yTlhQ495lz922OnLsYPT3KVEFdaZzRb-JWCrs5a08HwlYhyCcoLiyR1-8i2mkGgz6OoerFrYXZVTeWrZLb274d1E4WPwvhLSw9dsLHXJRXPAncVFUJ/s1600/googleplus-ot.png) no-repeat scroll left center transparent;}.followlinks ul li.ottwitter{background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbkJJEOCKk6E8xTmRFhsyQrNKF9-RkhK4TcTPSbJi_Ykee5VeA39TZvYyLG_0Ht_9k6akX6ehhstXKj3-zCrB_Rsf9p_w6gUH8TrMmGW4kjfHaRXiRzhTNNdGrTHbCftipocB_n-o8UAkp/s1600/twitter-ot.png) no-repeat scroll left center transparent;}.followlinks ul li.otfacebook{background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_TajpXU7b68DbE3ooSbysO7TT5E_M0PU_ZHJWR6u1oDDwgIZAAjtEbs24Rch2WJZib6mHJjqg5b9jd0SxZtl_iszaqL8Lz1iNHqBu8A-TLf6lqu0eUYntxrwnDtJlvv2RFYWpivE2ohGn/s1600/facebook-ot.png) no-repeat scroll left center transparent;}form.emailform{margin:5px 0 0;display:block;clear:both;}.emailtext{background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPLvHJ8Ll1NTM6M4VXOUOsPdWXZ5YPlGAAVce2-qclLs1g9sliaIGWX6654-A0XYwxWp8c3gs_Sy9DRVTDpsiYYrtiN2-Fj2k3IXEoxp1kLlSsYf_oIcj6BC4x2ObS6iBfFzxY8qTB2xT7/s1600/ot-mail.png) no-repeat scroll 4px center transparent;padding:7px 15px 7px 35px;color:#444;font-weight:bold;text-decoration:none;border:1px solid #D3D3D3;-moz-border-radius: 4px;-webkit-border-radius: 4px;border-radius: 4px;-moz-box-shadow: 1px 1px 2px #CCC inset;-webkit-box-shadow: 1px 1px 2px #CCC inset;box-shadow: 1px 1px 2px #CCC inset;width: 550px;}.emailtext:focus{outline: none;}.sub-button{color:#444;font-weight:bold;text-decoration:none;padding:6px 10px;border:1px solid #D3D3D3;cursor: pointer;-moz-border-radius: 5px;-webkit-border-radius: 5px;-goog-ms-border-radius: 5px;border-radius: 5px;background: #fbfbfb;background: -moz-linear-gradient(top, #fbfbfb 0%, #f4f4f4 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#fbfbfb), color-stop(100%,#f4f4f4));background: -webkit-linear-gradient(top, #fbfbfb 0%,#f4f4f4 100%);background: -o-linear-gradient(top, #fbfbfb 0%,#f4f4f4 100%);background: -ms-linear-gradient(top, #fbfbfb 0%,#f4f4f4 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr=&#39;#FBFBFB&#39;, endColorstr=&#39;#F4F4F4&#39;,GradientType=0 );background: linear-gradient(top, #fbfbfb 0%,#f4f4f4 100%);}.sub-button:hover{background: -moz-linear-gradient(top, #e7e7e7 0%, #f4f4f4 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#e7e7e7), color-stop(100%,#f4f4f4));background: -webkit-linear-gradient(top, #e7e7e7 0%,#f4f4f4 100%);background: -o-linear-gradient(top, #e7e7e7 0%,#f4f4f4 100%);background: -ms-linear-gradient(top, #e7e7e7 0%,#f4f4f4 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr=&#39;#e7e7e7&#39;, endColorstr=&#39;#F4F4F4&#39;,GradientType=0 );background: linear-gradient(top, #e7e7e7 0%,#f4f4f4 100%);}</style><script type='text/javascript'>  WebFontConfig = {    google: { families: [ &#39;Cabin+Condensed::latin&#39; ] }  };  (function() {    var wf = document.createElement(&#39;script&#39;);    wf.src = (&#39;https:&#39; == document.location.protocol ? &#39;https&#39; : &#39;http&#39;) +      &#39;://ajax.googleapis.com/ajax/libs/webfont/1/webfont.js&#39;;    wf.type = &#39;text/javascript&#39;;    wf.async = &#39;true&#39;;    var s = document.getElementsByTagName(&#39;script&#39;)[0];    s.parentNode.insertBefore(wf, s);  })(); </script>

5. மேற்கண்ட நிரலிகளை இணைத்த பின் மீண்டும் CTRL+F கொடுத்து <data:post.body/> என்ற வரியை கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்த பின்னர் அதற்கு கீழாக கீழ்க்கண்ட நிரலிகளை இணைக்கவும்.
குறிப்பு: சில பிளாக் டெம்ப்ளேட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட <data:post.body/>  இருக்கும். எனவே ஒவ்வொரு<data:post.body/> கீழ் இணைத்து முயற்சிக்கவும். என்னுடைய டெம்ப்ளேட்டில் மூன்றாவதாக இருந்த <data:post.body/> யில் தான் ஓட்டு பட்டைகள் ஓகே ஆனது.


<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div class='sub-box'>
<div class='followlinks'>
<center><table border='0' bordercolor='#000000' cellpadding='4' cellspacing='4' style='background-color:#FFFFFF' width='400'>
<tr><td><script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.canonicalUrl/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'/></td>
<td><script src='http://tamil10.com/submit/evb/button.php' type='text/javascript'>
</script> </td>
<td> <script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.canonicalUrl + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/></td>
<td><b:if cond='data:blog.pageType != &quot;static_page&quot;'>
<div style='padding: 10px 0px 5px 0px;'>
<iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.url + &quot;&amp;layout=box_count&amp;show_faces=false&amp;width=55&amp;action=like&amp;font=arial&amp;colorscheme=light&amp;height=65&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:55px; height:65px;'/>
</div>
</b:if></td>
<td>

    <div style='float:left'>
    <g:plusone expr:href='data:post.url' size='tall'/>
    </div>
</td>
<td><a class='twitter-share-button' data-count='vertical' data-via='tamilvaasi' href='http://twitter.com/share'>Tweet</a><script src='http://platform.twitter.com/widgets.js' type='text/javascript'/>
</td></tr><center><script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
</script>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->
<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
</script>



<script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.canonicalUrl + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + &quot;http://tamilvaasi.blogspot.com&quot; + &quot;&amp;photo=&quot; + data:photo.url' language='javascript' type='text/javascript'>
</script>


<!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->
</b:if></center>
</table></center>
<h1>Get Free Email Updates or Like us on your favourite Social networking site</h1>
<ul>
<li class='otrss'><a href='http://feeds.feedburner.com/tamilvaasi' target='_blank'>RSS</a></li>
<li class='otgoogleplus'><a href='http://plus.google.com/106412922467461633842' target='_blank'>Google+</a></li>
<li class='ottwitter'><a href='http://twitter.com/tamilvaasi' target='_blank'>Twitter</a></li>
<li class='otfacebook'><a href='https://www.facebook.com/tamilvaasi
' target='_blank'>Facebook</a></li>
</ul>
</div>
<br/>
<div style='text-align: left; display: inline-block;'>
<form action='http://feedburner.google.com/fb/a/mailverify' class='emailform' method='post' onsubmit='window.open(&apos;http://feedburner.google.com/fb/a/mailverify?uri=tamilvaasi&apos;, &apos;popupwindow&apos;, &apos;scrollbars=yes,width=550,height=520&apos;);return true' target='popupwindow'>
<input name='uri' type='hidden' value='tamilvaasi'/>
<input name='loc' type='hidden' value='en_US'/>
<input class='emailtext' name='email' onblur='if (this.value == &quot;&quot;) {this.value = &quot;Enter your email...&quot;;}' onfocus='if (this.value == &quot;Enter your email...&quot;) {this.value = &quot;&quot;}' type='text' value='Enter your email...'/>
<input alt='' class='sub-button' title='' type='submit' value='SignUp'/>
</form></div></div></b:if>


முக்கிய  குறிப்பு: தமிழ்மணம் நிரலியில்
http://tamilvaasi.blogspot.com 
(மேலே உள்ள நிரலியில் இந்த கலர் உள்ள இடமே தமிழ்மணம் நிரலி)
என்ற இடத்தில் உங்கள் பிளாக் முகவரி தரவும். அதாவது http://xxxxxxx.blogspot.com என வர வேண்டும்.
 
6. மேற்கண்ட நிரலிகளை இணைத்த பின்னர் SAVE TEMPLATE கொடுத்து நமது வலைப்பூவை புதுப்பித்து பார்த்தால் அழகிய, வரிசையாக திரட்டிகளின் பட்டைகளும், சமூக தளங்களின் பட்டைகளும் இருக்கும்.


7. மேற்கண்ட நிரலிகளில் சில மாற்றங்கள் செய்தால் உங்கள் சமூக தளத்திற்கான இணைப்பு கிடைக்கும். அவை என்னவென்று பார்ப்போமா?
<li class='otrss'><a href='http://feeds.feedburner.com/tamilvaasi' இந்த வரியில் tamilvaasi க்கு பதிலாக உங்கள் RSS FEED முகவரி கொடுக்கவும்.
http://feedburner.google.com/ முகவரியில் சென்று உங்கள் பிளாக்கின் edit feed details சென்றால் உங்கள் RSS FEED முகவரி கிடைக்கும்.

<li class='otgoogleplus'><a href='http://plus.google.com/106412922467461633842' இங்கே, 106412922467461633842 எங்களுக்கு பதிலாக உங்கள் கூகிள்ப்ளஸ் முகவரி தரவும். கூகிள் ப்ளஸ்-ல் உங்கள் ப்ரோபைல் பக்கத்திற்கு சென்றால் இந்த எண் url-ல் இருக்கும்.


<li class='ottwitter'><a href='http://twitter.com/tamilvaasi' இந்த வரியில்tamilvaasi க்கு பதிலாக உங்களின் டிவிட்டர் முகவரி தரவும்.


<li class='otfacebook'><a href='https://www.facebook.com/tamilvaasi' இந்த வரியில் tamilvaasi க்கு பதிலாக உங்கள் பேஸ்புக் பக்க முகவரி தரவும்.

uri=tamilvaasi&apos;, &apos;popupwindow&apos;, &apos;scrollbars=yes,width=550,height=520&apos;);return true' target='popupwindow'>
<input name='uri' type='hidden' value='tamilvaasi'/> இந்த வரிகளில் tamilvaasi என்று வரும் இடங்களில் உங்கள் ப்ளாக் முகவரி தரவும்.
8. நிரலிகளில் மேற்கண்ட மாற்றங்கள் செய்த பின் save template தரவும். முழுமையாக உங்கள் ப்ளாகிற்காக அனைத்தும் மாறிவிடும்.


குறிப்பு: மேற்கண்ட நிரலிகளை உங்கள் பிளாக்கில் நிறுவிய பின்னர் ஒட்டுப்பட்டைகளில் ஏதேனும் தவறு ஏற்படின் பின்னூட்டத்தில் குறிப்பிடவும். பெரும்பாலும் </div> or </b:if> போன்ற தவறுகளே வரும்.  ஏதாவது நிரலிகள் முழுமையாக மூடப்படாமல் இருந்தால் இத்தகைய தவறுகள் வரும். இதனை எளிதாக சரி செய்து விடலாம்.
மேலும் வாசிக்க... "ப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணைப்புகளை அழகாக இணைக்க - vote buttons version 2"



மதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அப்பப்பா?

டிஸ்கி: கூடல்நகர்ல கிளம்பி சிம்மக்கல் புது மண்டபம், அண்ணாநகர், மேல மாசி வீதி, மாநகராட்சி ஆபீஸ் போயிட்டு வந்த அனுபவங்களே கீழ்க்கண்ட வரிகள்.

சிம்மக்கலுக்கு புது மண்டபம் பக்கம் போகனும்னு யானைக்கல் வழியா வந்தேன். கொஞ்சம் பணம் தேவைக்காக நாம அக்கௌன்ட் வச்சிருக்குற பேங்க் ஏடிஎம் தேடி பணம் எடுக்கலாம்னா அங்க சர்விஸ் டேம்ப்ரவர்லி நாட்அவைலேபிள் அப்படின்னு மானிட்டர்ல பெரிசா எழுத்து காட்டுச்சு. நொந்து போயி வேற ஏடிஎம் தேடி போகணும், பக்கத்துல என் அக்கௌன்ட் இருக்குற பேங்க் இல்லை, அதனால வேற பேங்க் ஏடிஎம்ல அகௌன்ட்ல இருக்குற பணத்தை எடுத்துட்டு, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்கமா கீலமாசி வீதியில வந்தா திடீர்னு ட்ராபிக் போலிஸ் இது நோ என்ட்ரின்னு கை காட்டுனாங்க. இந்த வழியா தானே புது மண்டபம் போக முடியும்னு கேட்டா, இப்போ வழி மாறிப்போச்சு. அந்தப்பக்கமா போங்கன்னு திருப்பி விட்டுட்டாங்க. 

புது மண்டபம் பக்கம் கெஸ் ஸ்டவ் ஸ்பேர்ஸ் கடை நிறைய இருக்கு. ஆமாங்க ஒரு லைட்டரும், பர்னரும் வாங்க கோயிலை சுத்தி வரணுமானு யோசிச்சு அங்க பக்கத்துல வண்டிய நிறுத்தலாம்னு போனா அது ஆட்டோ ஸ்டாண்டுக்கு சொந்தமான இடம், வண்டிய நிறுத்தக்கூடாதுன்னு ஆட்டோக்காரர் தடுக்க, வண்டி நிறுத்த இடம் தேடி... தேடி.... ஒரு இடத்துல எப்படியோ நுழைச்சுட்டேன். கொஞ்சம் தூரம் நடந்து போயி ஸ்பேர் வாங்க வேண்டியது வாங்கிட்டு வண்டிய எடுத்துட்டு இன்னொரு வேலையா மேலமாசி வீதி பக்கமா போனேன். 

ரொம்ப தாகமா இருக்குன்னு ஒரு ஜூஸ் கடைப்பக்கமா ஒதுங்கி சில்லுன்னு ஒரு லேமன் ஜூஸ் சாப்பிடலாம்னு வண்டிய நிறுத்த இடம் தேடியே நாக்கு வறண்டு போயிருது. ஹி...ஹி.... அம்புட்டு வெயிலுங்கோ, திரும்புற இடமெல்லாம் பைக் கூட்டமா இருக்கு. நடுவுல கொஞ்சம் இடம் பிரீயா இருக்கேன்னு ஒரு ஆர்வத்துல போயி பாத்தா, கடைக்காரங்க இரும்புல பிளாட்பாரம் போட்டு ஆக்கிரமிச்சு வச்சிருக்காங்க. சரி, அடுத்து கொஞ்சம் தள்ளி கொஞ்சம் கேப் இருக்குன்னு அங்க போயி பாத்தாலும் அங்கேயும் இரும்பு பிளாட்பாரம் ஆக்கிரமிப்பு. ஐயா, கடைக்காரங்க புண்ணியவான்களே, நாங்க எங்கதான்யா வண்டிய நிறுத்தறதுன்னு மனசுக்குள புலம்பிட்டே, வேற இடம் தேடி, ஒரு இடத்துல நிறுத்திட்டு நாம நிமுந்து பாத்தா அங்க நோ பார்க்கிங் போர்டு பெரிசா தொங்கிட்டு இருக்கு.

ஐயோன்னு மிரண்டாலும் மனசு, "தம்பி இந்த இடம் கிடைச்சதே பெரிசு. வண்டிய பார்க் பண்ணிட்டல்ல, கம்முன்னு போயி ஜூஸ் குடின்னு" சொல்ல, ஜூஸ் கடைக்கு போனா, அங்க ஈ.. ஈ... யா கூட்டம் கூட்டமா மொச்சுட்டே இருக்கு. எந்த ஜூஸ் கடைக்கு போனாலும் இப்படித்தான்னு, மனச தேத்திட்டு ஜூஸ் வாங்கி கொஞ்சம் வயிறை குளிர வச்சுட்டு அடுத்து அங்க பக்கத்துல பாக்க வேண்டிய வேலையை முடிச்சுட்டு திரும்ப கோரிப்பாளையம் வழியா அண்ணாநகர் போயிட்டு அங்க ஒருத்தர பாத்துட்டு, மறுபடியும் பெரியார் வந்து, மாப்பாளையம் போற பாலம் பக்கத்துல இருக்குற மாநகராட்சி ஆபீஸ்ல அப்ரூவல் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து ஹெல்மெட் கழட்டுனா தலைக்கு குளிச்சுட்டு வந்த மாதிரி அம்புட்டு ஈரமா இருந்துச்சு. வீட்டுல ரெண்டு வாட்டர்கேன் தண்ணி குடிச்சதுக்கு அப்புறம் தான் உடம்புல வெக்கை கொஞ்சமா தனிஞ்சுச்சு.

ஸ்ஸ்ஸ்ஸ்அப்பப்பா என்னா வெயிலு.... என்னா வெயிலு.... அக்னி நச்சத்திரம்ங்கறது சரியாதான் இருக்கு. ஹெல்மெட் (போலீஸ் ரூல்ஸ்) போட்டுட்டு பைக் ஓட்ட முடியல...... தலைமுடி எல்லாம் வேர்த்து விறுவிறுத்து போயிருது. ரோடெல்லாம் தூசியும் குப்பையுமா இருக்கு. எந்த பக்கமா போனாலும் இப்படித்தான் இருக்கு. இதுல ரைட், லெப்ட் திரும்புறவங்க யாருமே இன்டிக்கேட்டர் இருந்தும் பெரும்பாலும் போடறது இல்லை. அட, சொந்தமா கை இருக்குல, அதையாவது எந்தப் பக்கம் திரும்பறதுன்னு காட்டறாங்களா? ம்ஹும்... அதுவும் இல்லை. முன்னாடி போறவன் எப்போ திரும்புவான்னு ஒரு எதிர்பார்ப்பிலேயே வண்டி ஓட்ட வேண்டியிருக்கு. ம்ஹும், அவங்கவங்களுக்கு என்னென்னா அவசர வேலை இருக்கோ?


நமது இணையப்பூங்கா தளத்தில்:

மேலும் வாசிக்க... "மதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அப்பப்பா?"



முயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம்! சூட்டிங் ஸ்பாட், muyal tamil movie

முயல் திரைப்படம் S.P.S. குகன் அவர்களால் ஒளிப்பதிவு மற்றும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் படம். இந்த திரைப்படத்தை P & V Media Production, SPS Media Works என்ற பேனரால் தயாரிக்கப்படுகிறது. சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான புகைப்படக்கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் இந்த படத்தின் தயாரிப்பில் பங்கு பெற்றிருப்பதால் இந்த முயல் திரைப்படம் உலக சாதனை படைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்த அளவுக்கு அதிகமான நபர்கள் ஒரு திரைப்பட தயாரிப்பில் பங்கு பெற்றது இல்லை. 
முயல் இயக்குனர் குகனுடன் நான்
மேலும் பொது மக்களும் இந்த படத்தின் தயாரிப்பில் இணைய வேண்டும் என குகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.குகன் ஏற்கனவே மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி, சனிக்கிழமை சாயிந்திரம் அஞ்சு மணி போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார். 
முயல் படத்தில் ஒரு காட்சி
ஜீ. வி. பிரகாஷ் இசையமைக்கும் முயல் படத்தில் முரளி, சரண்யா, ராஜ்குமார், பிரபு, சிவானி, ஐஸ்வர்யா, மீரா கிருஷ்ணன், சிங்கமுத்து, முத்துக்காளை மற்றும் ரஞ்சனி ஆகியோர் நடிக்கிறார்கள்.
சூட்டிங் ஸ்பாட்: 
இந்த படத்தின் சில காட்சிகள் எனது வீட்டிற்கு அருகே உள்ள வீட்டில் எடுத்தார்கள். ஐஸ்வர்யாவை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருகிற நிகழ்ச்சி எடுக்கப்பட்டது. இந்த சூட்டிங் நடந்துட்டு இருக்கும் பொது கேமரா பிளாஷ் ஆப் செய்து போட்டோஸ் எடுத்துட்டு இருந்தேன். அப்புறமா கேமராவில் செட்டிங் மாத்தி போட்டோ எடுக்கும் போது பிளாஷ் ஆப் செய்ய மறந்து ஒரு ஸ்டில் எடுத்து விட்டேன். அப்போது பிளாஷ் லைட் அடித்தவுடன் டைரக்டர் குகன் கட், கட், கட் யார் அது, யார் அது பிளாஷ் அடிச்சது என கேட்க அசடு வழிஞ்சுட்டே நான் தான்னு சொல்ல, குகன் சார் ஒண்ணுமே சொல்லாம அடுத்த ஷாட்டுக்கு ரெடி சொல்ல நான் ஸ்ஸ்ஸ்அபா என்றேன். 
நடிகை ஐஸ்வர்யாவுக்கு காட்சியை விளக்குகிறார் இயக்குனர் குகன்
 அதுவரை திரும்ப திரும்ப ஒரே ஷாட் எடுத்துட்டு இருந்தாங்க. ஆனா அடுத்த ஷாட் ஓகே பண்ணிட்டார். அப்புறம் சூட்டிங் இடைவேளையில் குகன் சாரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அப்போ போட்டோ பிளாஷ் ஆப் பண்ணிட்டு எடுங்கன்னு சொன்னார். அசடு வழிஞ்சுட்டே ஹி..ஹி.. என்றேன். பின்னர் அவருடன் இணைந்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம். 
மேலும் வாசிக்க... "முயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம்! சூட்டிங் ஸ்பாட், muyal tamil movie"



ஜவ்மிட்டாய் வாங்கலியோ ஜவ்மிட்டாய்

ஜவ்மிட்டாய், நாம சிறு வயதில் பார்த்த மிட்டாய். இப்போ இந்த மிட்டாய் எங்க இருக்குன்னே தெரியாத அளவுக்கு அழிஞ்சு போச்சு. நீளமான மூங்கில் கொம்பில் அதன் உச்சியில் ஒரு அழகான பொம்மை கையில் சிங்க்ச்சாவை தட்டிக் கொண்டு பார்க்க அழகாக இருக்கும். அந்த பொம்மைக்கு அடியில் இருந்து ஜவ்மிட்டாய் அந்த மூங்கில் கொம்பில் சுத்தி வச்சிருப்பாங்க. 

ஜவ்மிட்டாய் பொம்மை
பையன்களுக்கு வாட்ச் டிசைனும். பொண்ணுங்களுக்கு நெக்லஸ் டிசைனும் ஜவ்மிட்டாயில் செஞ்சு தருவாங்க. இப்ப மதுரையில நடந்த சித்திரை திருவிழாவில ஜவ்மிட்டாய் வித்துட்டு வந்தாரு ஒரு பெரியவர். சின்னப் பசங்களுக்கு அதைப் பார்த்ததும் ஆச்சர்யங்கள். ஒரு பொம்மையில் இருந்து மிட்டாய் டிசைன் செஞ்சு தர்றாங்களே என ஆச்சர்யப்பட்டார்கள். அந்த ஜவ்மிட்டாய் விற்பவர் இனி அடுத்த திருவிழாவுல தான் பாக்க முடியும் இந்த ஜவ்மிட்டாய், பசங்களே, வாங்கிக்கங்க என கூவி கூவி விற்பனை செய்தார். 

ஜவ்மிட்டாயில் நெக்லஸ்
வாட்ச் அஞ்சு ரூபாய் எனவும், நெக்லஸ் பத்து ரூபாய் எனவும் விலை வச்சிருந்தார். அண்ணன் பசங்களுக்கு வாங்கி தந்ததும் ரொம்ப ஆர்வமா சாப்பிட்டாங்க. டிபரன்ட் டேஸ்ட்டா இருக்குன்னு சொன்னாங்க பசங்க. நீங்களும் ஜவ்மிட்டாய் பொம்மையை பார்த்துக்கங்க.
மேலும் வாசிக்க... "ஜவ்மிட்டாய் வாங்கலியோ ஜவ்மிட்டாய்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1