வணக்கம் வலை நண்பர்களே,
நமது வலை நண்பர்கள், உலகில் உள்ள ஏனைய தமிழ் வலைப்பதிவர்களுடன் இணைந்து ஒரு மாபெரும் வலைபதிவர்கள் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு வரும் 26-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் மூலம் முகமறியா நண்பர்கள் முகமறிந்து மகிழ உள்ளார்கள். காலை முதல் மாலை வரை இடைவிடாமல் நடக்கும் இந்த மாபெரும் விழாவின் அழைப்பிதழை இங்கே இணைத்துள்ளேன்.
இந்த அழைப்பினை ஏற்று அனைத்து வலை நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இனி வருகை தர முடிவெடுத்துள்ள நண்பர்கள், வருகையை கீழ்க்கண்ட நண்பர்களிடம் தெரிவித்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தோழர் மதுமதி (98941 24021),
மின்னல் வரிகள் கணேஷ் (7305836166),
மெட்ராஸ்பவன் சிவா (9841611301),
சென்னைப்பித்தன் (9444512938),
புலவர் சா. இராமாநுசம் (9094766822),
தென்றல் சசிகலா (9941061575)
வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய மிக ஏதுவாக இருக்கும்.
இந்த விழாவில் நீங்கள் பங்கு பெறுவதன் மூலம் அறியாத விஷயங்கள் சிலவற்றை அறிந்து கொள்ள இருக்கிறீர்கள். அதாவது இன்றைய காலத்தில் ஆங்கில வலைப்பூக்கள் மூலமாகவே விளம்பரம் வைத்து சம்பாதிக்கும் முறை உள்ளது. இம்முறை தமிழுக்கோ, இந்திய மொழிகளுக்கோ இல்லை. ஆனால் மக்கள் சந்தை டாட் காம் நிறுவனத்தினர் தமிழ் மொழி வலைப்பூவில் எவ்வாறு விளம்பரம் அமைத்து சம்பாதிப்பது என்ற வழிமுறையை நமக்கு தெரியப்படுத்த இருக்கிறார்கள். ஆகவே, நண்பர்களே, சென்னை பதிவர்கள் விழாவுடன் இணைந்திருங்கள்.
நன்றி,
பதிவர் விழாக் குழுவினர் சார்பாக, தமிழ்வாசி பிரகாஷ்.
31 கருத்துரைகள்:
திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்.
அனைவரையும் சந்திக்க ஆவலாய் உள்ளேன்...
தலைப்பை பார்த்தல் பதிவர் திருவிழாவிற்கு அழைப்பது போல் தெரியலையே ?
குறிப்புரைனா என்ன தம்பி செய்வீங்க ?
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு தேத்திட்ட மாமு,,,,
வணக்கம் சகோ இந்நிகழ்வு சிறப்பாக அமைய எனது நல் வாழ்த்துக்கள் .
தங்கள் ஆர்வமான பங்களிப்புக்கு நன்றி பிரகாஷ். விழாவிற்கு முதல் நாள் சந்திப்போம்
நீண்ட நாள் இடைவெளியில் தமிழ்வாசி தளத்தில் அழைப்பிதழ் வெளியானது மகிழ்ச்சியைத்தருகிறது..
வாழ்த்துக்கள் பாஸ்
வாழ்த்துக்கள் நண்பரே...
ரெண்டு வருசத்துக்கு பிறகு நான் போடப் போகும் பதிவும் இந்த அழைப்பிதழுக்காகதான்...
எங்க பாஸ் திரும்ப வந்துட்டாரு.. இனி டரியல் ஆரம்பம் ஹி ஹி ஹி!
சந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள் பாஸ்!
சந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள் பாஸ்!
501 ஆரம்பம்..
பார்க்கவே ஆசையா இருக்கு.. பட்டைய கிளப்புங்க அண்ணே
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!
நன்றி சகோ வருக வருக.
மிக்க நன்றி! அழகான அறிவிப்பு!
சா இராமாநுசம்
சந்திப்போம் பிரகாஷ்.
காத்திருக்கிறேன்
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!
வருகிறோம்..
எதைச் செய்தாலும் சிறப்புடனும்
தனித்தன்மையுடம் செய்யும்
உங்களுக்கு என மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
பிரகாஷ் சென்னையில் சந்திக்கலாம்
சந்திப்போம் நண்பர்களே..
விழா சிறப்புடன் நடக்க வாழ்த்துக்கள் மக்கா...
கலக்குங்க..
விழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் மக்கா...!
எங்களையெல்லாம் வரவழைக்க இப்படியும் ஒரு வழி இருக்கா?
தமிழ்த்தளங்களுக்கு விளம்பரங்களைக் கொடுக்க முன் வந்திருக்கிற மக்கள்சந்தை.காம் நிறுவனத்தாருக்கு எனது நன்றி..!
சென்னைப் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்புற அமைய எனது வாழ்த்துகள்..!
வாழ்த்துக்கள்
நல்லா வைக்கிறீங்க தலைப்பு...
தமிழ்வாசி நீங்க அரசியலில் குதிக்கலாமே.. ஹி ஹி ஹி
திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்.
வலைப்பதிவாளர்கள் சங்கமிக்கும் விழா இனிது நடைபெற வாழ்த்துக்கள்.