
மைக்ரோசாப்ட் விண்டோஸ் முதல் பதிப்பில் இருந்து அண்மைய பதிப்பு (Windows version 1.0 to 8.0) வரை எப்படி இருந்தது என இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
1985 - Windows 1.0 அந்த காலத்தில் கணினி உபயோகம் கடினமாக இருந்த சமயத்தில் விண்டோஸ் 1.0 பதிப்பு வெளியானது. அது ஓரளவு எளிமையாகவும், பல விசயங்களை உள்ளடக்கியும் இருந்தது.
1987 - Windows 2.0
முதல் பதிப்பில் இருந்து கண்ட்ரோல் பேனலில் சில திருத்தங்களுடன் 1987-இல் இரண்டாம் பதிப்பு வெளியானது.
1988 - Windows 2.1
இரண்டாம் பதிப்பில் இருந்து புதியதாக பெயிண்ட் மென்பொருள் இணைத்து மேலும் சில மேம்பட்ட வசதிகளுடன் மூன்றாம் பதிப்பு வெளியானது.
1990 - Windows 3.0
இந்த மூன்றாம் பதிப்பில் FILE MANAGERஆனது MS DOS முறையிலிருந்து மேம்படுத்தப்பட்டு புதிய FILE MANAGER மற்றும் PROGRAM MANAGER உருவாக்கப்பட்டது.
1992 - Windows 3.1
இந்த பதிப்பில் HARD DISKஇல் 32 BIT சப்போர்ட் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல் முறையாக Minesweeper game உருவாக்கி செயல்படுத்தப்பட்டது.
1995 - Windows 95
GRAPICS SUPPORT மற்றும் COMMUNICATION PROGRAMS உடன் DESKTOP பார்க்க சிம்பிளாக அழகாக இந்தப் பதிப்பு வெளியானது.
1998 - Windows 98
இப்போது வரை விண்டோஸ் 98 மிகவும் வெற்றிகரமான பதிப்புகள் ஒன்று, இந்த பதிப்பு இன்னும் கூட சில கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரிவாக்கப்பட்ட மென்பொருள்கள், சிறந்த செயல்திறன் கொண்ட, இந்த பதிப்பு விண்டோஸ் வளர்ச்சி பாதையில் முதல் மைல்கல்லாக இருந்தது.
2000 - Windows ME
இந்த பதிப்பு "விண்டோஸ் மீ" அல்லது "விண்டோஸ் மில்லினியம்" என அழைக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்தப் பதிப்பு தற்போதைய விண்டோஸின் சில செயல்பாடுகளை விட சிறந்த செயல்பாட்டைக் கொண்டு இயங்குகிறது. (இன்றும் நான் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு கணினியில் இந்த பதிப்பு தான் உள்ளது)
2001 - Windows XP
விண்டோஸின் அனைத்து பதிப்புகளின் தந்தை என இது அழைக்கப்படுகிறது. இன்றும் இந்தப் பதிப்பு மிக பிரபலமாக உபயோகப்படுத்தபடுகிறது. இதற்குக் காரணம் இதன் எல்லையில்லா செயல்திறன், முகப்பு பக்க வடிவமைப்புகள், மற்றும் சிறந்த டூல்ஸ்களை கொண்டுள்ளது. விண்டோஸ் 7 வரும் வரை இந்தப் பதிப்பே சிறந்த பதிப்பாக இருந்தது.
2006 - Windows Vista
இந்தப் பதிப்பின் முகப்பு மட்டும் பிரபலம். ஆனால் சிறந்த பதிப்பாக அனைவராலும் அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும் முந்தைய பதிப்பில் இருந்து நிறைய மாறுபாடுகள் கொண்டிருந்தது.
2009 - Windows 7
இன்றைய தேதிக்கு விண்டோஸின் சிறந்த பதிப்பு இது. பக்க இணைப்புகள் மற்றும் நிறைய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இந்த பதிப்பில் புதிதாக இணைக்கப்பட்டன. இதனால் விண்டோஸ் 98 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி க்கு அடுத்த மைல் கல்லாக இந்தப் பதிப்பு உள்ளது.
2012 - Windows 8
அநேகமாக அடுத்த ஆண்டு இறுதியில் வெளிவரும் என நினைக்கிறேன். முந்தய பதிப்புகளை காட்டிலும், தோற்றம், செயல்பாடுகள், வேகம் போன்றவற்றில் மேம்பட்டு இருக்கும் வகையில் இருக்கும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
images and contents: google search
இன்றைய பொன்மொழி:
ஆயிரம் உபதேசங்கள் சொல்பவர்களை விட ஒரு ஆசிரியரே மேல்!
இன்றைய விடுகதை:
மங்கை வந்து குளிப்பாட்டி
அமுதூட்டி எழுந்தாள்
நாணிக்கோணி இடையில் வைத்து
அனைத்துக் கொண்டு நடந்தாள். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வெடி
முந்தைய விடுகதைக்கான இடுகை:
26 கருத்துரைகள்:
அருமையான தொகுப்பு நண்பரே..
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..
ம்ம்ம்... ஃபார்வர்ட் மெயில் பதிவு போல இருக்கு...
நேற்று தான் பழைய விண்டோஸ் எப்படி இருக்கும் என்று நினைத்தேன் இன்று பார்த்து விட்டேன் ,
நன்றி தோழா
பி.கு.
முதன் முதலில் விடுகதைக்கு சரியான பதில் அனுப்பியுள்ளேன், சரிபார்த்து தீர்ப்பு சொல்லுங்க;
பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றி
பார்ரா...இம்புட்டு படி தாண்டி வந்து இருக்கா...விஷயம் அறிந்து கொண்டேன் நன்றி!
அருமையான தகவல் நண்பரே
சிறபான தொகுப்பு பாஸ் உங்கள் பதிவின் மூலம் தான் விண்டோஸ் மீ பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி பாஸ்
தெரியாத தகவல்கள் பல தெரிந்து கொண்டேன் நன்றி
மாப்ள, நமீதாவும் முதல் பதிப்பில் இருந்து இப்போ வரைக்கும் எப்படி இருக்குன்னு ஒரு பதிவு கலர்ஃபுல்லாப் போடும்யா..
படிப்பாளீகளூக்கானது
நிறைய தேடி இருக்கீங்க நண்பரே அருமை
விண்டோஸ் பற்றிய செய்தி பகிர்வுக்கு நன்றி நண்பா....
விண்டோஸ் வளர்ச்சி பற்றிய நல்ல தொகுப்பு.பகிர்வுக்கு நன்றி.
நண்பரே மலரும் நினைவுகள். நான் விண்டோஸ் 2.1 இல் இருந்து பயன் படுத்தி இருக்கிறேன்.
பின்னிடாருய்யா பில்கேட்ஸ் ,கீழிருந்து மேல பாக்க சுவாரஸ்யமா இருக்கு.
எல்லாமே எனக்கு புதுசா இருக்கு, ஹி ஹி மண்டையில ஏறலை....!!!
அருமை...
விண்டோஸ் பற்றிய செய்தி பகிர்வுக்கு நன்றி நண்பா...
அருமையான தகவல்
அன்புடன் :
ராஜா
அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்
அருமையான தொகுப்பு.. இப்போ தான் என் பக்கத்துக்கு வீட்டு பையன் விண்டோஸ் ஹிஸ்டரி வருடம் தேதியோட வேணும் தேடி குடுங்கன்னு வந்தான் ........... லட்டு மாதிரி பதிவு போட்டு இருகிங்க ... ஆனால் லாஞ்சிங் தேதி கிடைக்குமா சார் .............................
கூடவே லினக்ஸ் , mac இதை பத்தியும் எழுதுங்க .. தெரிஞ்சுக்கிறோம்
தகவலுக்கு நன்றி நண்பரே
அருமை...!
நான் 3.0 விலிருந்து பயன்படுத்தி வருகிறேன்...!
நன்றிகள்...!
அருமையான தொகுப்பு,
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
அருமையான தகவல் பாஸ். இன்றுதான் இவற்றை அறிந்து கொண்டேன்.