பிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி 64 வயசுல டைரக்டர் ஆகியிருக்கிறார். இவர் இயக்கப் போகும் புதிய படத்தின் பெயர் வேலிக்காத்தான். அவர் மீடியாவுக்கு எழுதிய கடிதம் இங்கே....
அன்றைய பாரதிராஜாவிலிருந்து இன்றையபாண்டியராஜன் வரை எல்லா இயக்குனர்களுடனும் இணக்கமான பழக்கம் உண்டு.இருந்தாலும் நான் இயக்குனர் ஆகவில்லை. “24” வயதில் இயக்குனராக வேண்டுமென்று வேட்கையோடு இருந்த நான் “64” வயதில் வேகமுள்ளஇயக்குனராய் அறிமுகமாகிறேன்.எழுதப்பட்டது அதுவென்றால் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். வருங்கால இளம்இயக்குனர்களே..“20”-ல் ஆசைப்பட்டு“20” லியே இயக்குனராகிவிட்டால் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.“20”-ல் ஆசைப்பட்டு“60” ல் வாய்ப்பு கிடைத்தாலும் ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள். மூச்சு உள்ளவரைமுயற்ச்சியை கைவிடாதீர்கள்.வெற்றி நிச்சியம்
“64” வயதில் இயக்குனராகி நானே கம்பெனி ஆரம்பித்துஇசைஞானி இளையராஜாவின்வாழ்த்துக்களோடு என் இயக்குனர் பயணத்தை ஆரம்பிக்கிறேன். “வண்டிச்சக்கரம்”வாழ்வு அளித்ததால் சக்கரத்தை நம்பி “சக்கரா கின்¢யேஷன்ஸ்” அதாவது சக்கரா படைப்புகள் என்ற பெயா¢ல் படக் கம்பெனி ஆரம்பித்து என் எழுத்து, இயக்கத்தில் வினுசக்கரவர்த்தியின் “வேலிக்காத்தான்” என்று விளம்பரப்படுத்தியிருக்கிறேன்.
எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிய முறையில்பூஜை போட்டு ஆரம்பித்துவிட்டோம். பத்திரிகை நண்பர்கள், ஊடக நண்பர்கள், சினிமாத்துறையின் எல்லா துறை நண்பர்கள், எல்லா சங்க சக நண்பர்களின் மானசீக ஆசீர்வாதத்தோடு பூஜை போட்டு ஆரம்பித்துவிட்டோம். விரைவில் பாடல்கள் பதிவாகி வந்துவிடும். அடுத்து படபிடிப்பு ஆரம்பித்துவிடும்.முதலில் எல்லா பாடல் காட்சிகளையும்பதிவு செய்வதாக முடிவு.அடுத்து கதை காட்சிகளின் பதிவு ஆரம்பித்து நல்ல முறையிலே முடியும்.
வினுசக்கரவர்த்தியின் "வேலிக்காத்தான்' என்பது என் சொந்தக் கம்பெனி,"சக்கரா கின்¢யேஷன்சின்” சொந்தப் படம்.கதையை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி இந்த படத்தை செய்துமுடிக்கிறேன்.என் பக்க பலம் இசைஞானியின்இனிய பாடல்கள். கதை, திரைக்கதை,வசனம், தய£ரிப்பு, இயக்கம் வினுசக்கரவர்த்தி.
இசை இசைஞானி இளையராஜா.ரோசாப்பூ ரவிக்கைக்காரியிலிருந்துஇன்றைய என் "வேலிக்காத்தான்” வரை ஒரு முப்பத்துமூன்று வருடம் மரியாதைக்குரிய தொடர்பு தொடர்கிறது. ஆழ்ந்த தியானத்தோடு, ஆழ்ந்த ஞானத்தோடு அற்புதமான ஆறு பாடல்களை இசையமைத்து கொடுத்திருக்கிறார். நா. முத்துகுமார், கவிஞர் முத்துலிங்கம், பழனிபாரதி, கபிலன், சினேகன்என்று கவிஞர்கள் தங்கள் பாடல் வரிகளை என் படத்திற்க்காக பதிவு செய்கிறார்கள்.
கதாநாயகன், கதாநாயகி இருவரும் புது முகங்கள்.ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.என் அன்புக்காகவும், நட்புக்காகவும் பல இயக்குனர்கள், பல படைப்பாளிகள், பல பண்பட்ட நடிகர்,நடிகைகள் எனக்காக உழைத்துத்தர உறுதி அளித்திருக்கிறார்கள். எல்லா தரப்பு மக்களும், ரசிகர்களும்"வேலிக்காத்தான்” வெற்றியடைய வாழத்துங்கள், ஆசிர்வதியுங்கள். இவ்வாறு தனது பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார் வினு சக்கரவர்த்தி.
2 கருத்துரைகள்:
http://ulavan.net/topsite/
தமிழ் சினிமா உழவன்۞நமக்காக நாம்
அன்பின் பிரகாஷ் - இன்னும் ஒரு இயக்குனர் - நல்வாழ்த்துகள் அவருக்கு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா