ஹிந்தியில் வெளிவந்த பா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படவுள்ளது. பால்கி என்னும் பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.3-வது முறையாக தேசிய விருது அமிதாப்புக்கு கிடைத்துள்ளது. அவர் ஏற்கெனவே அக்னி பாத், ஹம் படங்களுக்காக தேசிய விருதை வென்றுள்ளார்.
சிறந்த பின்னணி இசை:
சிறந்த பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. மலையாளத்தில் மம்முட்டி, சரத்குமார் நடித்த பழஸிராஜா படத்தில் சிறந்த பின்னணி இசைக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.தேசிய விருதை 4-வது முறையாக தட்டிச் சென்றுள்ளார் இளையராஜா. ஏற்கெனவே சாகர சங்கமம் (தெலுங்கு), சிந்து பைரவி (தமிழ்), ருத்ர வீணை (தெலுங்கு) படங்களுக்காக அவர் தேசிய விருதை வென்றுள்ளார்.
சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது:
பசங்க படம் தேசிய விருதுகளை அள்ளியது. சிறந்த மாநில மொழித் திரைப்படமாக பசங்க படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த சிறுவர்கள் ஜீவா, அன்புக்கரசு ஆகியோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது கிடைத்துள்ளது.இதே படத்துக்கு சிறந்த வசனகர்த்தா விருதும் கிடைத்துள்ளது. படத்தின் இயக்குநர் பாண்டிராஜ்தான் இந்த படத்துக்கு வசனம் எழுதினார். அவருக்கு ரூ.50 ஆயிரம் சிறப்புப் பரிசு வழங்கப்படவுள்ளது. பாண்டிராஜுக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த படத்துக்கான விருது:
மலையாளத்தில் வெளிவந்த குட்டி ஸ்ராங் படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. மேலும் இந்தப் படம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வசப்படுத்தியுள்ளது. படத்தின் நாயகன் மம்முட்டி. படத்தை ஷாஜி என். கருண் இயக்கியிருந்தார்.
சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான விருது:
ஆமீர் கான், மாதவன் நடித்திருந்த த்ரீ இடியட்ஸ் படத்துக்கு சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதும் அந்த படத்துக்குக் கிடைத்துள்ளது.
சிறந்த இசையமைப்பாளர்:
சிறந்த இசையமைப்பாளருக்கான (பாடல்கள்) விருது தேவ் டி படத்துக்கு இசையமைத்த அமித் திரிவேதிக்கு கிடைத்துள்ளது.சிறந்த நடிகை: பெங்காலி மொழிப் படமான அபோ ஹவா படத்தில் சிறப்பாக நடித்திருந்த அனன்யா சட்டர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்படவுள்ளது.
சிறந்த இயக்குநர்:
படத்தை இயக்கிய ரிதுபர்ணா கோஷ், சிறந்த இயக்குநராக தேர்வாகியுள்ளார்.பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் இயக்கத்தில் வெளிவந்த வெல் டன் அபா படம் சமூக அக்கறையை சிறப்பாக பிரதிபலிக்கும் படமாக தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த பின்னணி பாடகி:
சிறந்த பின்னணி பாடகிக்கான விருது (படம்: ஹவுஸ்புல்) நிலாஞ்சனாவுக்கும்,
சிறந்த பாடகருக்கான விருது:
(படம்: மகாநகர்) ருபம் இஸ்லாமுக்கும் வழங்கப்படவுள்ளது.
சிறந்த பாடலாசிரியர்:
சிறந்த பாடலாசிரியருக்கான விருது ஸ்வானந்த கிக்கரேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.துணை நடிகர், நடிகை: லாகூர் படத்தில் நடித்ததற்காக பரூக் ஷேக்குக்கு சிறந்த துணை நடிகர் விருதும், பா படத்தில் நடித்ததற்காக அருந்ததி நாகுக்கு சிறந்த துணை நடிகை விருதும் வழங்கப்படவுள்ளது.
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - பசங்க - பா - படங்கள் நல்ல படங்கள் - விருதுக்குத் தகுதியானவையே - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா