வணக்கம் நண்பர்களே,
தீபாவளி இந்த மாசம் தான், இன்னும் மூணு வாரங்கள் தான் இருக்கு. இப்ப தான் சம்பளம் வாங்கி எப்பவும் போல செலவுகளை பட்ஜெட் போட்டுட்டு இருப்போம். எப்பவும் பட்ஜெட்க்கு துணையா இருக்கிற மனைவிமார்கள் இந்த மாசம் கொஞ்சம் கிராக்கி பண்ணுவாங்க. ஆமாங்க, தீபாவளிக்கு புது துணிமணிகள் வாங்கணும் தான். ஆனாலும் நம்ம வீட்டுல அதுக்குனே தனியா பட்ஜெட் போட்டு தருவாங்க. அந்த லிஸ்ட் பார்த்தாலே நமக்கு தலை சுத்திரும். அதுல பாத்திங்கனா, நமக்கு ஒரு சட்டை, ஒரு பேன்ட் அப்படின்னு லிஸ்ட் போட்டிருக்கும். ஆனா, மனைவி போட்டிருப்பாங்களே லிஸ்ட், சுடிதார், சேலை அப்படின்னு எண்ணிக்கையில ஒன்னுன்னு இருக்காது. அப்போதைக்கு மனசுல தோணின எண்ணிக்கை தான் போட்டிருப்பாங்க, அதுலயும் ரேட் இவ்ளோல இருந்து தான் ஸ்டார்ட் பண்ணனும்னு போட்டிருப்பாங்க. அப்போ நெலமைக்கு நம்ம சம்பளமோ, வரிசையா இருக்கிற லோனோ அவங்களுக்கு தெரியாது. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் தீபாவளி அன்னைக்கு மினுக்கணும். நம்ம மனைவி மினிக்கிரதுல நமக்கு உள்ளுக்குள்ள சந்தோசம் தான் என்றாலும், அவங்க வாங்க துணிகளை நெனச்சாத்தான் அந்த மிணுக்கள் அவசியமானு தோணுது.....
தீபாவளி இந்த மாசம் தான், இன்னும் மூணு வாரங்கள் தான் இருக்கு. இப்ப தான் சம்பளம் வாங்கி எப்பவும் போல செலவுகளை பட்ஜெட் போட்டுட்டு இருப்போம். எப்பவும் பட்ஜெட்க்கு துணையா இருக்கிற மனைவிமார்கள் இந்த மாசம் கொஞ்சம் கிராக்கி பண்ணுவாங்க. ஆமாங்க, தீபாவளிக்கு புது துணிமணிகள் வாங்கணும் தான். ஆனாலும் நம்ம வீட்டுல அதுக்குனே தனியா பட்ஜெட் போட்டு தருவாங்க. அந்த லிஸ்ட் பார்த்தாலே நமக்கு தலை சுத்திரும். அதுல பாத்திங்கனா, நமக்கு ஒரு சட்டை, ஒரு பேன்ட் அப்படின்னு லிஸ்ட் போட்டிருக்கும். ஆனா, மனைவி போட்டிருப்பாங்களே லிஸ்ட், சுடிதார், சேலை அப்படின்னு எண்ணிக்கையில ஒன்னுன்னு இருக்காது. அப்போதைக்கு மனசுல தோணின எண்ணிக்கை தான் போட்டிருப்பாங்க, அதுலயும் ரேட் இவ்ளோல இருந்து தான் ஸ்டார்ட் பண்ணனும்னு போட்டிருப்பாங்க. அப்போ நெலமைக்கு நம்ம சம்பளமோ, வரிசையா இருக்கிற லோனோ அவங்களுக்கு தெரியாது. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் தீபாவளி அன்னைக்கு மினுக்கணும். நம்ம மனைவி மினிக்கிரதுல நமக்கு உள்ளுக்குள்ள சந்தோசம் தான் என்றாலும், அவங்க வாங்க துணிகளை நெனச்சாத்தான் அந்த மிணுக்கள் அவசியமானு தோணுது.....
சரிங்க அவங்களோட பட்ஜெட்க்கு ஒத்து போயி கடைக்கு போனோம்னா, கடைக்காரன் சோர்ந்து போற அளவுக்கு தேடுவாங்க, தேடுவாங்க, தேடிட்டே இருப்பாங்க. ஒண்ணு கலர் நல்லா இல்லைன்னு சொல்வாங்க, அப்புறம் கலர் அமைஞ்சா பார்டர் நல்லா இல்லைன்னு சொல்வாங்க, எல்லாமே அமைஞ்சா ரேட் கொறச்சலா இருக்குன்னு ஒதுக்கி தள்ளிருவாங்க. அப்புறம் ஒரு வழியா புடவை அமஞ்சிரும். அப்ப பாத்து பக்கத்துல நிக்கிற லேடி ஒரு சேலை நல்லா இருக்குன்னு சொல்லி எடுப்பாங்க, உடனே நம்ம வீடு கையில வச்சிருக்றத தூக்கி போட்டுட்டு அவங்க வச்சிருக்கிற மாதிரி இருக்கானு கடைக்காரரை கேட்பாங்க. அவரு ரெண்டு நிமிஷம் தேடிட்டு அதுமாதிரி இல்லைன்னு சொல்லிருவாரு. சரி, செலக்ட் பண்ணின புடவை எங்கேன்னு மறுபடியும் தேடினா இந்தப் பக்கத்து லேடி அதை தூக்கி பில்லு போட கொடுத்திருக்கும். அந்த நிமிஷம் நாமளும் டென்சன் ஆயிருவோம். சரிம்மா, வேற செலக்ட் பண்ணிக்கன்னு சொன்ன அடுத்த நொடி, இந்த கடையில ஒண்ணுமே இல்லை,
வாங்க வேற கடைக்கு போலாம்னு ஈசியா சொல்வாங்க. இப்படி பாதி நாளை ஒரு கடைக்கே செலவு பண்ணியிருப்பாங்க. சரி எனக்காவது புது துணி எடுத்துக்கலாம்னு சொன்னா போதும், எனக்கு அமையட்டும். உங்களுக்கென்ன ரெண்டு நிமிசத்துல எடுதுறலாம்னு சொல்லி நம்மள ஆப் பன்னிருவாங்க. அடுத்த கடை, மொத கடையில என்ன கூத்து நடந்துச்சோ, அதே கூத்து இங்கேயும் நடக்கும். அப்புறம் ஒரு வழியா தேடி தேடி களைச்சு போயி அதிக ரேட்டுல அரைகுறை மனசோட ரெண்டு மூணு எடுத்துக்கிருவாங்க. சரி அவ்ளோதானு நெனச்சோம்னா, அடுத்து சுடிதார் பக்கம் போயி நிப்பாங்க பாருங்க, நமக்கு தலையே சுத்தியிரும். அப்பிடி இப்பிடின்னு அதுலயும் ரெண்டு எடுத்துட்டு, அப்புறமா நம்மள பத்தி யோசிப்பாங்க. வாங்க. உங்களுக்கு டிரஸ் எடுக்கலாம்னு சொல்லி ஜென்ட்ஸ் பக்கம் கூட்டிட்டு போவாங்க. அப்புறம் செலக்ட் பண்றதுல இருந்து எல்லாமே அவங்க சாய்ஸ் தான். நாம அப்படியே எல்லாத்துக்கும் பொம்மை மாதிரி நிக்க வேண்டியது தான். எப்படியோ, நமக்கு ஒண்ணு செலக்ட் பன்னிருவாங்க. நமக்கு பிடிக்குதோ, இல்லையோ... அதெல்லாம் கேட்கவே மாட்டாங்க. ரைட்டுங்க, நமக்கு எப்படியோ ஒரு புது ட்ரெஸ் கிடச்ச திருப்தியில இருக்க வேண்டியது தான்.
அடுத்து குழந்தைகளுக்கும் எடுக்கணும்ல? பெரியவங்களுக்கு கூட எடுத்திடலாம் போல, ஆனா குழந்தைகளுக்கு டிரஸ் ரேட் ரொம்ப அதிகமாவே இருக்கும். குழந்தைகள் விரும்பற மாதிரி எடுத்து தர்றதுக்குள்ள மனைவிக்கு ஒரு சேலையே வாங்கிரலாம், அம்புட்டு நேரம் ஆகும் பசங்களுக்கு எடுக்க. ஒரு வழியா ரெண்டு மூணு கடை ஏறி இறங்கி, கூட்ட நேரிசல்ல சிக்கி வேர்த்து விறுவிறுத்து எல்லோருக்கும் ட்ரெஸ் எடுத்துட்டு வீட்டுக்கு போலாம்னு வண்டிய ஸ்டார்ட் பண்ணுவோம். அப்ப மனைவிகிட்ட இருந்து ஒரு வேண்டுகோள் வரும் பாருங்க, வேறென்ன வேண்டுகோள்?
நீங்க யூகிச்சதே தான்....
தொடரும்...
டிஸ்கி:
மேற்கண்ட கருத்துக்களை என் பார்வையில் பதிவிட்டிருக்கிறேன். எதிர்மறையான கருத்துகளுக்கு நீங்களே பொறுப்பு.
29 கருத்துரைகள்:
//அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் தீபாவளி அன்னைக்கு மினுக்கணும்.//
நீங்க மொதல்லயே லோன் வெவரமெல்லாம் சொல்லி வெச்சிரனும்... அத வுட்டுட்டு தங்கச்சியள கொற சொல்லிக்கிட்டு.
// நம்ம மனைவி மினிக்கிரதுல நமக்கு உள்ளுக்குள்ள சந்தோசம் தான்..//
சொன்னதையும் சொல்லிட்டு அப்டியே “ஐஸ்” வேற வெச்சி வுடறது... என்னா டெக்னிக்கி!
//நாம அப்படியே எல்லாத்துக்கும் பொம்மை மாதிரி நிக்க வேண்டியது தான். //
எந்த மாதிரி வாங்கி மாட்டி வுட்டா, இந்தக்கழுதைய எந்தக்கழுதையும் சீண்டாதுன்ற வெவரம் “அவங்க”ளுக்கு தானே தெரியும்.!
அதெல்லாம் ஒரு சேஃப்டி ஃபார்முலா.
தீபாவளிக்கு துணியெடுத்து விட்ட கதையினை வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோங்கிற மாதிரி சொல்லியாச்சு. ஆனால் வான் ஹுசேனுக்கும், பீட்டர் இங்கிலாண்டிற்கும், லூயி பிலிப்ஸுக்கும் அலைகிற கதையினை எங்களால் போடமுடியாதே! மினுமினுப்பது இப்போது பொதுவுடமை ஆகிவிட்டது பிரகாஷ்.
தீபாவளி பதிவு நல்லா இருக்கு.
மாப்ள இந்த விஷயத்துல நான் அதிர்ஷ்டசாலி ஹிஹி...ஏன்னா எங்க வீட்ல ஒரு வழக்கம் உண்டு...அது என்னன்னா ஆண்கள் போடுறது பெண்கள் பார்க்கத்தான்...அதே போல பெண்களும்...இதனால விசேஷ நாட்கள்ல நான் என் மனைவிக்கு செலக்ட் பண்ணுவேன்...அவங்க எனக்கு பண்ணுவாங்க....அதுவும் அதிக பட்சம் 20 நிமிழத்துல...இன்னைக்கி வரைக்கும் எங்களுக்குள்ள கருத்துவேறுபாடு வந்ததில்ல...இந்த விஷயத்துல...ஹிஹி!
தீபாவளி வந்துருச்சா?
தீபாவளிக்கான அவசியமான அலசல் பிரகாஷ்!
என்னது? தீபாவளி வந்துடுச்சா?
நான் பர்ச்சேஸ் பண்ணிட்டு வந்துட்டேங்க
ஒரு நாள் ஆச்சு ,ஹா ஹா என்ன செய்ய ?
சரவெடி ...
எல்லாத்தையும் சமாளிக்கிறவன் தான் சரியான புருஷன் ஹா ஹா ஹா
தீபாவளி அனுபவம் பேசுகிறது அருமையாய்.
அண்ணே அனுபவம் பேசுதோ
மாப்ள ரைட்டு.,
புரியுது..
என்னது....?
பரவாயில்லையே...ஒரே நாள்ள குடும்பத்துக்கே எடுத்துடுவீங்களா??? ரொம்ப குடுத்து வச்சவர்சார் நீங்க. உங்க மனைவி ரொம்ப அப்பிராணினு நினைக்கிறேன். நாங்கள்ளாம் 2 புடவை எடுக்கவே 1 நாள் ஆக்கிடுவோம். தீபாவளிக்கு துணிமணி எடுக்க குறைந்தது 4 நாள் ஆக்கிடுவோம்.
ஒரு நாள் உங்க வொய்ஃப் பார்த்து பேசறேன், எப்படி தீபாவளிக்கு நாங்கள் துணிஎடுப்போம்னு சொல்லிக்கொடுத்துட்டு வற்றேன்.
பிரகாஷ் ரொம்ப பட்டிருப்பார் போலிருக்கே...
மினுக்கிரது - மாதிரி வார்த்தைகளைத் தவிர்க்கலாம்..
இந்த ஆளு சொம்பை ஏன் நெளிக்காம விட்டிருக்காங்க.............?
///////செங்கோவி said...
இந்த ஆளு சொம்பை ஏன் நெளிக்காம விட்டிருக்காங்க.............?////////
நெளிஞ்ச சொம்பையே எதுக்கு மறுக்கா மறுக்கா நெளிக்கனும்னுதான்.....
யோவ் சொம்பு நசுங்காகம நடந்துக்கொங்க, இல்லைன்னா நெளிச்சிரப் போறாயிங்க....ஹி ஹி....
நொந்த அனுபவம் கொடுத்த பாடம் பதிவாக... ரொம்ப நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் பிரகாஷ்.
தீபாவளி வந்திடுச்சு,சரி.தீபாவளி வரை அதைப்பற்றியே ,அதாவது அரைத்த மாவையே, அரைக்கப் போகின்றாரோ? என்னையா தீபாவளி? ஒருநாள் கூத்து.இதற்கு ஏன் இப்பவே...ம்....,ம்?
காலம் மாறிட்டு பிரகாஸ்...உங்க அனுபவம் இப்பம் மோஸ்ட்லி பெண்களுக்கு தான்...
நல்லதோர் பதிவு பாஸ்,
ஆனாலும் வருடத்தில் ஒரு தடவை தானே இவ்வாறான பண்டிகையினைக் கொண்டாடுகின்றோம், சிறுகச் சேமித்தாவது விரலுக்கேற்ற வீக்கமாய் குடும்ப அங்கத்தவர்களின் உணர்வுகளை மதித்து அனைவர் மனங்களும் திருப்தி கொள்ளும் வகையில் ட்ரெஸ் எடுத்து, அவரவர் விருப்பங்களைப் பூர்த்தி செய்வது தவறில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.
நமக்கு இந்த அனுபவம் கிடைக்க இன்னும் நாளிருக்கு.
நீங்க ரொம்ப அனுபவ சாலி!
கொடுத்து வைச்சவங்க நீங்க!
அன்பின் பிரகாஷ் -- நல்லர்ருக்கு - ஊட்டுக்காரம்மாவுக்குத் துணி வாங்கிக் குடுக்கறதுக்கே அழுவுறியா ? அவங்க கிட்டே பேசறேன் - கவனிக்கச் சொல்லி - ..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
கொடுமை தான்........................
தீபாவளி அனுபவம் ரொம்ப நல்ல இருக்கு